Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.பி.சி. யின் மெலேனிய மாலை

Featured Replies

ஐ.பி.சி. யின் மெலேனிய மாலை - பிறிமன்

இந்த மாதம் 24 ந்திகதி இடம்பெறும் இந்நிகழ்வு பிறிமன் நகரில் நடக்க இருக்கின்றது.

எந்த மண்டபத்தில் நடக்க இருக்கின்றது என்பது போன்ற விபரங்களை அறித்தருவீர்களா . . . ? ? ?

நிகழ்வுக்கு போகலாம் என்று இருக்கிறேன்.

யாழ்கள உறவுகள் வந்தால் அவையளையும் சந்திக்கலாம் என்ற ஆவலுடன். . .

ஈழத்தில் சனம் சாகுது ஜபிசி காசுக்காக நாயாய் பேயாய் அலையுது :P

நானும் வடை முறுக்கு என்று பல் பலகாரம் செய்து கொண்டு போய் கொடுக்க போறேன்

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் சனம் சாகுது ஜபிசி காசுக்காக நாயாய் பேயாய் அலையுது :P

நானும் வடை முறுக்கு என்று பல் பலகாரம் செய்து கொண்டு போய் கொடுக்க போறேன்

ஏனுங்கோ வடை முறுக்கு சாப்பிடுறதுக்குத்தான் அங்க போவினமா

  • கருத்துக்கள உறவுகள்

நிகழ்வுக்கு போகலாம் என்று இருக்கிறேன்.

யாழ்கள உறவுகள் வந்தால் அவையளையும் சந்திக்கலாம் என்ற ஆவலுடன். . .

மாமி, இருந்தாலும் உங்களுக்கு செம தில்லுங்கோ... :icon_idea::lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐ.பி.சி. யின் மெலேனிய மாலை - பிறிமன்

நானும் சென்றேன் நிகழ்ச்சிகள் யாவும் அருமை ஆனாலும் சில குறைகள்

சிறுவர் நடணங்கள் கூடிவிட்டது அதுவும் ஒரே முகங்கள் மீண்டும் மீண்டும் வந்தது குறைத்திருக்கலாம், வில்லுப்பாட்டு நன்றாகவே இருந்தது லூஸ் மாஸ்டரின் நகைச்சுவை அருமை, ஐ பி சி அறிவிப்பாளரின் நிகழ்ச்சிகளும் நன்றகவே இருந்தது

எம்மவர் கத்திக்குத்தில் வல்லவர் என்பதை இப்படியான பொது நிகழ்ச்சியில் தானா காட்டவேண்டும் இவர்களது வீரத்தை தாயகத்தில் காட்டலாமே

  • தொடங்கியவர்

ஐ.பி.சி. யின் நிகழ்ச்சிகள் எல்லாம் சிறப்பாக அமைந்திருந்தது.

மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டம், கரகோஷங்கள் மகிழ்ச்சியைத்தந்தாலும், இருக்க இடமில்லாமல் நிகழ்ச்சிகளை நின்றபடியே ரசித்த காட்சி மனதினி்ல் சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சிகள் அனைத்தும் மிக மிக சிறப்பாக அமைந்திருந்தது. நடனங்கள், லூஸ் மாஸ்டரின் நகைச்சுவை, வில்லுப்பாட்டு, பஞ்சாயத்து இன்னும் பல....

இறுதியாக இடம்பெற்ற பாரதி இசைக்குழுவினரின் இசைநிகழ்ச்சி மெல்லினிய மாலை நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தாற்போல் அமைந்திருந்தது.

பரத் குறிப்பிட்டது போல் நிகழ்ச்சிகள் சற்று அதிகமாகி விட்டதுதான்.

சில நிகழ்ச்சிகளின் இடையில் ஏற்பட்ட இடைவெளி சற்று அதிகமாகி விட்டது போன்ற உணர்வினை ஏற்படுத்தியது.

இடவசதி முக்கியமாய் கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் மெல்லினிய மாலை நடைபெற இருப்பதால் பல பல விடயங்களை கவனத்தில் கொண்டு சிறப்பித்தால் மேலும் சிறப்பாக அமையும்.

முதன்முதலாய் பெண்களாக சேர்ந்து நடத்திய வில்லுப்பாட்டு மிகச் சிறப்பாய் அமைந்திருந்தது. நேரம் தான் சற்று கூடிவிட்டது போன்ற உணர்வு ஏற்பட்டது. வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை வேறு சில இடங்களிலும் அரங்கேற்ற அனுமதி கிடைத்த செய்தியும் மகிழ்ச்சிக்குறியதாகும்.

மேலும் யாழ்கள உறவு சோழியனை சந்தித்து, உரையாடியதில் பெருமகிழ்ச்சி. சிறந்த கருத்தாளமிக்க சிந்தனைகளும், அமைதியாய் உரையாடுவதற்கும் கிடைத்த மிக நல்ல சிறந்த நண்பராய் பரிணமித்தார்.

அவருக்கும் என் நன்றிகள். மேலும் அவரின் எண்ணக்கருத்துக்கள்... மனக்குவியல்கள் கதைகளாய்.... கவிதைகளாய் மீண்டும் யாழ்களத்தில் மலர்ந்து மணம்பரப்பவேண்டும் என்று இந்தத் தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

பரத் அறிவது... யாழ்கள உறவான உங்களையும் சந்திக்கத் தவறியபோதும், பிறிதொரு விழாவில் சந்திப்போம் என்ற நம்பிக்கையின் எதிர்பார்ப்புடன்...

நிகழ்வினை எங்களுடனும் - பகிர்ந்து கொண்டதற்கு நன்றி - சண்முகி!

விசேடமாக- பரா பிரபா- சுதர்சன் - ஆக்கங்கள் - நிறைய பிடிக்கும்!! :icon_idea:

மேலும் யாழ்கள உறவு சோழியனை சந்தித்து, உரையாடியதில் பெருமகிழ்ச்சி. சிறந்த கருத்தாளமிக்க சிந்தனைகளும், அமைதியாய் உரையாடுவதற்கும் கிடைத்த மிக நல்ல சிறந்த நண்பராய் பரிணமித்தார்.

அவருக்கும் என் நன்றிகள். மேலும் அவரின் எண்ணக்கருத்துக்கள்... மனக்குவியல்கள் கதைகளாய்.... கவிதைகளாய் மீண்டும் யாழ்களத்தில் மலர்ந்து மணம்பரப்பவேண்டும் என்று இந்தத் தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.

பரத் அறிவது... யாழ்கள உறவான உங்களையும் சந்திக்கத் தவறியபோதும், பிறிதொரு விழாவில் சந்திப்போம் என்ற நம்பிக்கையின் எதிர்பார்ப்புடன்...

நன்றி ஷண்முகி! தங்களை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியே! யாழில் எழுதவேண்டும் என்பது என் மனதில் உள்ள ஆசைதான்.. இன்று ஒரு தளத்தை ஓரளவு நடாத்துவதற்கும் யாழ்தானே அடிப்படைக் காரணம்.. உண்மையை சொல்வதானால் கணனி என்னை ஓரிடத்தில் கட்டி வைத்துள்ளது. அதனால் எழுத்து பாதித்துவிட்டதோ என்றும் எண்ணுவதுண்டு.. எனினும் யாழில் எழுதுவேன்.. ஆனால் எப்போது என்று குறிப்பிட்ட மறுபடியும் உறவுகளிடம் வாங்கிக் கட்டிக்கொள்ளத் தயாரில்லை. :rolleyes:

பரத்தை சந்திக்க முடியவில்லை.. இனி ஒரு சந்தர்ப்பம் வராமலா போய்விடும்.

பிறேமன் பெண் கலைஞர்களது முதலாவது மேடையேற்றம் அந்த வில்லிசை நிகழ்ச்சி. திருமதி குணவதி சிவராஜா தலைமையில் நிகழ்ந்தது. அவருக்கு தாயகத்தில் வில்லிசை நிகழ்த்திய அனுபவம் இருப்பினும், ஏனையவர்கள் புதுமுகங்களே. அதனால், சில இடங்களில் தளர்வு ஏற்பட்டதாயினும், நிச்சயமாக பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு.

நடனங்களைப்பற்றி கூறுவதானால்.. தற்போது பெரும்பாலான மேடைகளை றீமிக்ஸ் பாடல்களே ஆட்கொள்ளுகின்றன. திரையில் ஒரு பாட்டுக்கு துண்டு துண்டாக ஆடிப் பொருத்தும் நடனங்களை.. துண்டு துண்டு பாடல்களை பத்து பதினைந்து நிமிடங்களுக்கு கணனிமூலம் கலந்து பிசைந்து.. ஒரே மூச்சில் அதி அற்புதமாக ஆடி அவையோரின் கண்களைத் தம் வசம்வைத்திருந்த நடனக் கலைஞர்களான இளைஞர்களை பாராட்டாமலிருக்க முடியாது. அவர்களுள் பலர் வீதியால் போகும்போது ஒரு புன்னகையோடு மெளனமாகப் போவார்கள். அட பாவிகளா.. அவங்களா மேடைல இப்படி விசபரூபமெடுத்த ஆடுறாங்க என்று ஆச்சரியப்பட்டுப் போன சம்பவங்கள் ஏராளம்.. நான் நினைக்கிறேன்.. இந்த பெரிசுகள் எல்லாம் தமது தலைவர் போன்ற பதவிகளை இளைஞர்களிடம் கொடுத்தா.. பற்பல சாதனைகளை தமிழ் அமைப்புகள் செய்ய வழி தோன்றும். ஆனால் பெரிசுகள் பதவிகளை விட்டுத் தொலைக்குமா?! :P

பரா பிரபா.. அன்றுதான் நேரில் பார்த்தேன்.. ஏற்கெனவே தொலைக்காட்சியில் பார்த்திருந்தாலும், மேடையில் அவர் பார்வையாளரைப் பரவசப்படுத்த மேற்கொண்ட செய்கைகளுக்காக பாராட்டுக்கள். அவர் மேடையில் தோன்றியபோது.. மேடை பார்வையாளரிடம் பதிந்து வந்தது. :lol:

ஆனால் ஒரேயொரு குறை.. இளைஞர்கள் சிறுவர்கள் என்று பலர் பங்குபற்றினார்கள். ஆகக் குறைந்தது ஒரு நன்றி மடலாவது கணனியில் பதித்து அவர்களுக்கு வழங்கி, அவர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கலாம். ஏற்கெனவே சில வருடங்களுக்கு முதல் ஐபிசியின் ஒரு நிகழ்வு பிறேமனில் நடந்தபோது, அப்படி செய்தார்கள். அதனால் அப்படியான எதிர்பார்ப்பு பங்குபற்றியவர்களது மனங்களிலும் ஏற்பட்டிருக்கலாம். தொடரும் நிகழ்வுகளில் இதை ஐபிசி நிர்வாகம் கவனிக்க வேண்டும் என அன்புடன் கோருகிறேன்.

நேரத்தை வீணாக்கி, பல நூறு கிலோமீட்டர் பிரயாணம் செய்து, இப்படியான விழாக்களை குழப்பி, சிலவேளை இரத்தக்கறைகளையும் காணவென கூட்டமாக சிலர் இருப்பார்கள். அவர்களை இனம்கண்டவர்கள் பொலிசாருக்கு தகவல்கொடுத்து முதலிலேயே அவர்களை சோதனையிட வைத்திருப்பார்கள். தங்களைப்பற்றி பொலிசுக்கு தகவல் கொடுத்தது யார் என்று அவர்களும் அதையே பிரச்சினைக்கு காரணமாக்கி, கத்திய அரைகுறையாக காட்டுவார்கள். அதைக்கண்டு பிறேமனிலும் ஒரு சிலர் போத்தலை உடைத்து வீரம் காட்டுவார்கள்.. 'ஹம் கோயில் தேரில பியர் கேசை காருக்கு மேல வைச்சு ஆடினதுகள்.. அங்கை இருந்து இங்சை குழப்ப வந்துட்டுதுகள்' என்று சிலரும் பற்களை நறும்புவார்கள்..

இப்படி பல்சுவையாக மெல்லினிய மாலை நிறைவுற்றது. :lol:

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்டு விரலைக்காட்டேக்க மிச்ச விரல் எல்லாம் .................

அதுபோல பெரிசுகள் சொல்லுறதில மட்டும் கில்லாடிகள்.

புதுசா ஆரும் வரேக்க தட்டிக்கொடுக்கிறமாதிரி தட்டி வடுவதிலும் கெட்டிக்காரப்பெரிசுகள் இருக்கும் வரைக்கும் ....... இது சாபக்கேடுதான்.

ஆனாலும்,

தங்களால முடியும் எண்டு நினைக்கிற ஆரையும் ஆரும் ஒண்டும் எப்பவும் எதுவும் செய்யேலாது.

உண்மைத்திறமை, தூயஉள்ளக்கலை வெல்லும் வென்றே தீரும்.

குழுப்பவாதிகள் பல வடிவிலும் வருவீனம்.

அதிலும் பாராட்டிக்கொண்டே படு குழியிலும் தள்ளிப்போட்டு ஒண்டுமே தெரியாத நல்ல மனிசரா திரிவினம்.

தொப்பி யாருக்கு அளவோ?????????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.