Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாண சபையின் வாதப் பிரதிவாதங்கள் நிறைந்த 90 ஆவது அமர்வு

Featured Replies

வடக்கு மாகாண சபையின் வாதப் பிரதிவாதங்கள் நிறைந்த 90 ஆவது அமர்வு
 
 
வடக்கு மாகாண சபையின் வாதப் பிரதிவாதங்கள் நிறைந்த 90 ஆவது அமர்வு
வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு நிய­மிக்­கப்­ப­டும் ஆசி­ரி­யர்­கள் மற்­றும் அதி­பர்­கள் நிய­ம­னங்­க­ளில் உள்ள பிரச்­சி­னை­கள் தொடர்­பாக மாகாண சபை ஆரம்­பிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இன்­று­வரை உறுப்­பி­னர்­கள் கதைத்­துக்­கொண்டு இருக்­கின்ற போதி­லும் அவற்­றுக்கு ஒரு தீர்க்­க­மான தீர்­வைக் கண்­ட­தாக இல்லை.
 
வடக்கு மாகாண சபை­யின் ஒவ்­வொரு அமர்­வி­லும் ஏதோ­வொரு வகை­யில் நிய­ம­னங்­கள் தொடர்­பா­கக் பேசப்­ப­டு­கின்ற போதி­லும் அதில் அக்­கறை செலுத்தி தீர்­வைக் காணமுடி­யாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.
 
சுகிர்­த­னின் கோரிக்கை
 
நேற்று முன்­தி­னம்­ இ­டம்­பெற்ற வடக்கு மாகாண சபை­யின் 90ஆவது அமர்­வி­லும் ஆசி­ரி­யர் மற்­றும் அதி­பர்­க­ளின் நிய­ம­னங்­கள் தொடர்­பான பிரச்­சி­னை­கள்  பேசப்­பட்­டன.
 
வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சுகிர்­தன் வடக்கு மாகா­ணத்­தில் உள்ள வேலை­யில்­லாப் பட்­ட­தா­ரி­களை மாகாண சபை­யின் ஊடாக இருக்­கின்ற வெற்­றி­டங்­க­ளுக்கு உள்­வாங்கி அவர்­க­ளின் பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு காண­வேண்­டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்­தார். இந்த விட­யம் பேசப்­ப­டும்­போது மாகா­ணத்­தின் கல்வி நிலைமை மற்­றும் நிய­ம­னங்­கள் தொடர்­பா­க­வும் கதைக்­க­பட்­டது.
 
“யாழ்ப்­பா­ணத்­தில் நீண்­ட­கா­ல­மா­கப் பணி­யாற்­றிய ஆசி­ரி­யர்­க­ளுக்கு இட­மாற்­றம் வழங்­கி­னா­லும் அவர்­கள் அதை ஏற்­றுக்­கொள்­வ­தில்லை. எவ­ரை­யா­வது பிடித்­துத் தங்­க­ளுக்கு ஏற்ற இடங்­க­ளைத் தெரிவு செய்து கொள்­கின்­ற­னர்.பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லத்­தைப் பார்த்தே நிய­ம­னங்­களை வழங்க வேண்­டும். 
 
புவி­யி­யல் பாடத்­தில் சிறப்­புப் பட்­ட­தா­ரி­யாக இருக்­கும் ஒரு ஆசி­ரி­ய­ருக்கு அந்­தத் துறை சார்ந்த பாடத்தை கொடுக்­கா­மல் வேறு பாடம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றான நிலை­மை­தான்  தற்­போது காணப்­ப­டு­கின்­றது என்­றார் சுகிர்­தான். 
 
“மாவட்ட ரீதி­யாக ஆசி­ரி­யர்­களை நிய­மனம் செய்­யுங்­கள் அப்­போ­து­தான் நிய­மிக்­கப்­ப­டும் ஆசி­ரி­யர்­கள் எந்­த­ வி­த­மான பிரச்சினை­க­ளு­மின்­றிக் கட­மைக்­குச் செல்­வார்­கள். வெட்­டுப்­புள்­ளி­களை மாவட்ட ரீதி­யா­கக் கணித்து நிய­ம­னங்­களை வழங்­குங்­கள். 
 
நான் கதைத்­துக்­கொண்­டி­ருக்­கி­றேன். ஆனால் கல்வி அமைச்­சர் அதைக் கவ­னிக்­கா­மல்  இருக்­கி­றார். கல்வி அமைச்­சரே! உங்­க­ளின்  கவ­னத்­துக்கு இது வர­வேண்­டும் என்­ப­தற்­கா­கவே இதைக் கூறு­கி­றேன். அமைச்­சர் இந்த விட­யத்தைக் கருத்­தில் எடுக்க வேண்­டும் என உறுப்­பி­னர் தியா­க­ராசா அமைச்­சரை அழைத்­தார். அதன்­பின்­னர் அமைச்­சர் அவ­ரது கருத்­தைச் செவி­ம­டுத்­தார்.
 
இங்­கி­ருக்­கின்ற அமைச்­சர்­கள் அவர்­கள் சார்ந்த அமைச்­சுக்­க­ளின் ஊடாக இருக்­கின்ற பிரச்­சி­னை­க­ளைச் சுட்­டிக்­காட்டி அத­னைத் தீர்க்க வேண்­டும் என நாங்­கள் சபை­யில் கதைக்­கும் போது அவர்­கள் ஏதோ தங்­க­ளுக்கு தொடர்பில்லாதது போல் நடந்து கொள்­கின்­ற­னர். என்­று­கூ­றி ­விட்­டுத் தியா­க­ராஜா  அமர்ந்­தார்.
 
“முல்­லைத்­தீவு மாவட்­டத்தை வறு­மை­யான மாவட்­டம் என்று பேர­ள­வில் சொல்­லிக்­கொண்டு அந்த மாவட்­டத்தை ஒதுக்கி வைக்­கின்ற நிலை­மை­தான் காணப்­ப­டு­கி­றது என ரவி­க­ர­னும் தனது மாவட்ட நிலை­மையை சொல்லி ஆதங்­கப்­ப­டார்.
 
உறுப்­பி­னர் கஜ­தீ­பன் ரவி­க­ர­னின் கருத்­துக்கு அப்­பால் சென்று “வலி­கா­மத்­தி­ல்­தான் அதி­க­ள­வான வெற்­றி­டங்­கள் காணப்­ப­டு­கின்­றன. அது இன்­றை­வ­ரைக்கும்  நிரப்­பப்­ப­ட­வில்லை.முன்­னைய காலத்­தில் இருந்த ஒரு­சில அர­சி­யல்­வா­தி­கள் தங்­க­ளுக்கு ஏற்­ற­மா­திரி ஆசி­ரி­யர்­களை நிய­மித்­த­னர்” என்று சொல்­லிக்­கொண்­டி­ருக்க, அதற்­கும் எமது கட்­சி­யி­னர்­தான்  காரணம் என்றா கூறு­கி­றீர்­கள் என்று தவ­நா­தன் முணு­மு­ணுக்க, “நான் அப்­ப­டிச் சொல்­ல­வில்லை ஆனா­லும் ஈ.பி.டி.பி தான் செய்­தவை என்று சொல்­வ­தற்­கும் இந்த இடத்­தில் ஒரு துணிவு வேண்­டும்” என்­றார்.
 
இப்­ப­டிச் சிறிது நேரம் இரண்டு பகு­தி­யும் தங்­க­ளுக்­குள் கருத்­து­களை கூறிக்­கொண்டு இருக்க உறுப்­பி­னர் சிவா­ஜி­லிங்­கம் சடு­தி­யாக எழும்பி அந்த ஆட்­க­ளைப் பற்­றிக் கதைக்க எங்­க­ளுக்கு ஒரு நாள் போதாது என்­றார்.
“என்­னைய்யா இங்கே என்ன நடக்­கி­றது? ஒரு நிகழ்ச்சி நிர­லுக்கு அப்­பால் கதைத்­துக்­கொண்டு இருந்­தால் மற்­றைய விட­யங்­க­ளைப் பற்றி பேசு­ற­தில்­லையா?” எனச் சடு­தி­யாக தவ­ராசா எழுந்து சி.வி.கேயை பார்த்து கேட்க, “ஓம் ஓம் தவ­ராசா இன்று நீங்­கள் முத­ல­மைச்­ச­ரிட்ட கேட்க இருக்­கின்ற கேள்வி தொடர்­பான விட­யம் நிச்­ச­ய­மாக எடுக்­கப்­ப­டும்.முத­ல­மைச்­ச­ரு­ட­னும் கதைத்­துள்­ளேன் என்­றார் சீ.வி.கே. 
 
எனது கேள்­விக்­கா­கச் சொல்­ல­வில்லை நிகழ்ச்சி நிர­லில் இருக்­கின்ற விட­யங்­களை மட்­டும் கதை­யுங்­கள் என்­று­தான் சொல்­கி­றேன்” என்­றார் தவ­ராசா.
 
“வேலை­யில்­லாப்­பட்­ட­தா­ரி­க­ளுக்கு வடக்கு மாகாண அமைச்சு மற்­றும் திணைக்­க­ளங்­க­ளில் என்­னென்ன வெற்­றி­டங்­கள் இருக்­கின்­றன என்­பதை ஆளு­ந­ருக்கு அனுப்பி உட­ன­டி­யாக அதனை நிரப்ப நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்” என்று அவைத்­ த­லை­வர் கூறி, “முத­ல­மைச்­ச­ரி­டம் கேட்­க­வேண்­டிய கேள்­வி­க­ளைத் தவ­ராசா கேளுங்­கள்” என்­றார்.
 
முத­ல­மைச்­ச­ரி­டம் கேள்­வி­கள்
 
முத­ல­மைச்­ச­ரி­டம் தவ­ராசா வரி­சை­யா­கக் கேள்­வி­க­ளைக் கேட்­டார்.அதற்கு முத­ல­மைச்­சர் பரிந்­துரை செய்­ய­வில்லை, எனக்கு அறி­யத்­த­ரப்­ப­ட­வில்லை எனச் சர்­வ­சா­த­ர­ண­மா­கப் பதில்­களை வழங்­கி­னார்.
 
இங்கே என்ன நடக்­கின்­றது? ஒரு கேள்­வியை கேட்க முன்னர் முத­ல­மைச்­சர் ஐயா­வும் இல்லை,அறி­யத்­த­ர­வில்லை என்று சொல்ல தவ­ரா­சா­வும் பேசாம இருக்­கி­றார். இப்­படி இரண்டு பேருக்­கும் இடை­யில் மட்­டும் விளங்­கக்­கூ­டிய வகையில் கதைத்­தால் எங்­க­ளுக்கு ஒன்­றும் தெரி­யக்­கூ­டாதா? 
 
அப்­ப­டி­யென்­றால் இரண்டு பேரும் சபைக்கு வெளி­யில சந்­தித்­துக் கதைத்­தி­ருக்­க­லாம். காலை­யில் இருந்து இதற்­கா­கவா இவ்­வ­ளவு பில்­டப் கொடுத்­துக்­கொண்டு இருந்­த­வர்? என்று லிங்­க­நா­தன் கேள்­வி­யெ­ழுப்­பி­னார். “இந்­திய அர­சின் உத­வி­யு­டன் ஒட்­டு­சுட்­டா­னில் பயிற்­சிப் பாட­சாலை ஒன்றை அமைப்­பது தொடர்­பா­கக் கதைக்­கப்­பட்ட சம்­ப­வம் உண்மை. 
 
இது முத­ல­மைச்­ச­ருக்­குத் தெரி­யா­மல் இருக்­க­லாம். ஆனால் நம்­பத்த­குந்த வட்­டா­ரங்களால்  எனக்­கும் சொல்­லப்­பட்­டது.” என்று சிவாஜி கூற அதன் பின்­னர் அவைத்­த­லை­வர் இந்த விட­யத்­துக்கு ஏன் இந்­தக் கருத்து மோதல் கள்? மாகாண சபை­யின் ஊடாக இந்­திய துனைத்­தூ­து­வ­ருக்கு இது தொடர்­பா­கக் கடி­தம் ஒன்றை அனுப்­பு­வோம் அவர்­கள் பதி­ல­ளிக்­கட்­டும் என கூறி­ய­வாறு, ஏனைய உறுப்­பி­ன­ரான அஸ்­மி­னின் பொது­முக்கி­ய­து­வம் வாய்ந்த பிரே­ர­ணைக்குச்  சென்­றார். 
 
இதன்­போது அவைத்­த­லை­வர், இதைப் பிரே­ரணை என்று சொல்ல இய­லாது. பொது­முக்­கி­ய­த்து­வம் என இழுக்க, “அப்ப இதனை என்­ன­வென்று சொல்­லப்­போ­கி­றீர்­கள்? என அஸ்­மின் கேள்வி கேட்க சரி என்­னவோ பிரே­ர­ணையாகச் சரி சபை­யில் முன்­மொழி­யுங்கோ என்று கூற சபை­யில் வர்த்­த­மானி அறி­வித்­தலை மீளப் பெறுமாறு கோரும்  பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு சபை அடுத்த அமர்­வுக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. 
 
மன்­னா­ரில் முச­லிப் பிர­தே­சத் தின் பல பகு­தி­க­ளை­யும்  பாது­காப்­புப் பிர­தே­ச­ மா­க­ அ­றி­விக்­கும் அர­ச­த­லை­வ­ரின் வர்த்­த­மா­னிப் பத்­தி­ரத்தை மீளப் பெறு­மாறு கோரி­ய­தாக அந்­தப் பிரே­ரணை அமைந்­தி­ருந்­தது.
- தி.சோபிதன்

http://www.onlineuthayan.com/article/279

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.