Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்ந்து தகர்க்கப்படும் தங்கவேலாயுதபுரம்

Featured Replies

அம்பாறை மாவட்டம் - திருக்கோவிலுக்கு தென்மேற்கேயுள்ளது தங்கவேலாயுதபுரம். பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னனான முதலாம் விஜயபாகுவின் படையெடுப்புக்குள் அகப்பட்டு அழிந்து போன இந்த பிரதேசம் இன்றும் சிங்கள ஆட்சியாளர்களின் அடக்குமுறையிலிருந்து மீளவில்லை.

தூர்ந்து போய்க் கிடக்கும் பத்துக்கும் மேற்பட்ட நீர்ப்பாசன குளங்களும் முருக வழிபாடுகள் நடைபெற்ற மலைகளும் இப்பிரதேசத்தில் ஆட்சியாளர்களால் அட்டவணை போட்டு நடத்தப்பட்ட தமிழின அழிப்புகளை பறைசாற்றி நிற்கின்றன.

அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவில் நோக்கிச் செல்லும் பாதையில் பிரயாணம் செய்யும் ஒருவர் தங்கவேலாயுதபுரத்தை அடைய தாண்டியடி என்னும் கிராமத்தை முதலில் சென்றடைய வேண்டும். தாண்டியடியிலிருந்து மேற்குத் திசை நோக்கி 5 கிலோமீற்றர் தூரம் சென்றால் தங்கவேலாயுதபுரத்தை அடையலாம்.

1985 ஆம் ஆண்டு தங்கவேலாயுத புரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்தனர். அறுநூற்றுக்கு அதிகமான குடும்பங்கள் நிரந்தரமாக வசித்து வந்தனர். 5,180 ஏக்கரில் விவசாயிகள் நெல், சோளம், குரக்கன், பயறு, சோயா, மரவள்ளி, வத்தாளை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களையும், தங்கள் குடியிருப்பு நிலங்களில் மா, பலா, வாழை, பனை, தென்னை, போன்றவைகளையும் நட்டுப் பயிரிட்டனர். கால்நடைகளையும் வளர்ப்பதிலும் ஈடுபட்டு வெற்றி கண்டனர்.

1985 ஆம் ஆண்டின் பெரும்போக விவசாய நடவடிக்கைகள் அவ்வருடம் ஐப்பசி மாதம் ஆரம்பமானது. 1986 ஆம் ஆண்டில் தைப்பொங்கலின் பின்னர் அறுவடைகள் ஆரம்பமானபோது, மட்டக்களப்பு - அம்பாறை மாவட்டங்களின் பல கிராமங்களிலிருந்தும் தொழிலாளர்கள் அறுவடைக்கென்று தொழில் தேடிவந்து சேர்ந்தனர். 1750 ஏக்கர் நெல் வயல் அறுவடைக்குத் தயாராக இருந்தது.

நெல் அறுவடையும் சூடு மிதிப்பும் ஒழுங்கு சீராக மாசி மாதம் 18 ஆம் திகதி வரை நடைபெற்றது. 19 ஆம் திகதி அதிகாலையில் வயலில் அறுவடை ஆரம்பமானது. அன்று காலை 10 மணி அறுவடையிலும் சூடு மிதிப்பதிலும் வியர்வை சிந்த விவசாயிகளும் தொழிலாளர்களும் மும்முரமாக வெயிலை பொருட்படுத்தாது ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இலங்கை அரச படையினர் சத்தமின்றிக் கவச வாகனங்களில் வயல் நிலத்தை சுற்றி வளைத்தனர். வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எவரும் இச்சுற்றிவளைப்பை கண்டுகொள்ளவில்லை. வீடுகளில் வேலை செய்பவர்களுக்காக உணவு தயாரித்துக் கொண்டிருந்த பெண்களும் கண்டு கொள்ளவில்லை.

தன்னியக்க துப்பாக்கிகளை ஏந்திய இராணுவத்தினர், நெல் அறுவடையிலுஞ் சூடு மிதிப்பிலும் ஈடுபட்டிருந்தோரைச் சப்தமின்றி நெருங்கினர். வேலை செய்து கொண்டிருந்த அத்தொழிலாளர்களின் உடல்கள் கணப்பொழுதில் சல்லடையாக்கப்பட்டன. அறுவடையில் ஈடுபட்டோரும் சூடுமிதிப்பில் ஈடுபட்டிருந்தோரும் சுருண்டு விழுந்தனர். சிலர் உயிரிழந்தனர், சிலர் கடுமையாக காயப்பட்டனர். பலர் ஓலமிட்டழுதனர், இரத்த வெள்ளம் ஓடியது.

சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண்கள், துப்பாக்கி வேட்டுச் சத்தங்களையும் மரண ஓலங்களையும் கேட்டு கதிகலங்கி சத்தம் கேட்ட இடத்துக்கு ஓடினார்கள். அவர்களும் கொல்லப்பட்டனர், குற்றுயிராய் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தொழிலாளிகளை இராணுவத்தினர் மிருகத்தனமாக் தடிப்பான கம்புகளால் தலையில் அடித்து கொன்றார்கள். கயிறு கொண்டு கைகளையும், கால்களையும் கட்டி இழுத்து உடல்களை ஒன்றாக குவித்தனர். கயிறு போதாமற் போகவே முட்கம்பிகளால் சடலங்களைக் கட்டி இழுத்து ஒன்றாகப் போட்டனர். குவிக்கப்பட்ட சடலங்கள் அறுவடை செய்து கிடந்த நெற்க்கதிர்கற்றைகளாலும் வைக்கோலாலும் மூடப்பட்டன. அவர்கள் கொண்டு வந்திருந்த `டீசலை' அப்பிணக்குவியல் மீது ஊற்றித் தீயிட்டனர். சூடடிப்புக்கென்று விவசாயிகளால் கொண்டுவரப்பட்ட உழவு இயந்திரங்கள், படங்குகள், சாக்குகள் எல்லாந் தீக்கிரையாக்கப்பட்டன. உடல்களையும், அவர்களின் உடமைகளையும் தீக்கிரையாக்கிய பின்னர் இராணுவத்தினரின் கவனம் வாழ்மனைகள் மீது திரும்பியது.

தங்கவேலாயுதபுரத்தில் மக்களின் வாழ்மனைகள் கொளுத்தப்பட்டன. கொல்லப்பட்டோரில் அளிக்கம்பைக் கிராமத்திலிருந்து வந்திருந்த `குரவர்' சமூகத்தை சேர்ந்த 14 பேரும் அடங்குவார்கள்.

தங்கவேலாயுதபுரத்தில் `தலைவர்' என்று அழைக்கப்பட்டவர் ஆறுமுகம் நல்லதம்பி என்னும் முதியவர். அவரின் ஏழு மகன்மாரும் ஒரு மகளும் அவருடன் சேர்த்துக் கொல்லப்பட்டனர். அவரின் மருமகள் `காந்தி' இச்செய்தியை வெளி உலகிற்கு வெளிப்படுத்தினார். அங்கு நடந்த மனிதப்படுகொலையில், தங்கவேலாயுதபுரத்தில் இருந்து உயிர்தப்பிய வேல்முருகு மனோகரன் என்பவரும் ஒரு சிறுவனும் காட்டிற்குள் புகுந்து ஒளிந்து கொண்டதால் நிகழ்வுகள் அவர் மூலம் வெளியாயின.

சென்னையிலிருந்து வெளிவரும் `மட்ராஸ் ஹிந்து' என்ற பத்திரிகை, இலங்கை அரச படைகள் நிகழ்த்திய மனிதப்படுகொலைகளை உலகிற்கு அறிவித்தது. 150 தமிழ் விவசாயிகளை கிழக்கிலங்கையின் தங்கவேலாயுதபுரத்தில், அரச படையினர் சுட்டுக்கொன்றனர் என்ற செய்தியால் திகிலடைந்த அத்துலத் முதலி (தேசிய பாதுகாப்பு அமைச்சர்) விடுத்த ஓர் அறிக்கையில், "ஹிந்து"வின் செய்தியை அப்பட்டமாக மறுதலித்து பொதுமக்கள் கொலை செய்யப்படவில்லை என்றும், சட்டவிரோதமாக கஞ்சா பயிரிட்ட பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரைச் சுட்டதன் காரணமாக எழுந்த பதில் தாக்குதலில் நாற்பது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்றும் அறிவித்தார். தமிழ் பொது மக்கள், பெண்கள், குழந்தைகள் கொல்லப்படவில்லை என்றும் சடைந்தார்.

கொலை நடந்த இடத்திற்குச் சென்ற கொலையுண்டோரின் உறவினர்கள் எரிந்த நிலையில் கிடந்த 128 சடலங்களை எடுத்து, அடையாளங்கண்டு இறுதிச் சடங்குகளைச் செய்தனர். உழைப்பாளிகளை இழந்த குடும்பங்கள் அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்டன. மரணத்திலிருந்து தப்பிக்கொண்ட குடும்பங்கள் அகதிமுகாம்களில் தஞ்சம் புகுந்தனர். விளைந்த பயிர், வளர்த்த கால்நடைகள், உடைமைகளையும் இழந்த தமிழர்கள் நடுத்தெருவிற்குத் துரத்தப்பட்ட சோக வரலாற்றை ஷ்ரீ லங்கா அரச படைகள் படைத்தன.

ஜே.ஆர்.ஜயவர்த்தனவினது அரசின் தேசிய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கையின் படி, கஞ்சா செய்கையில் ஈடுபட்டிருந்தோர் 40 பேர் கொல்லப்பட்டால் அவர்கள் பயிரிட்ட கஞ்சாவை என்ன செய்தார்கள்? அவர்களின் உடைமைகள், ஆயுதங்கள் இயந்திரங்களுக்கு என்ன ஆயிற்று என்பதை அறிவிக்கவில்லை. இராணுவத்தினர், எத்தனைபேர் "பயங்கரவாதத் தாக்குதலால்" அன்று கொல்லப்பட்டனர்?

இதேவேளை தங்கவேலாயுதபுரம் உருவாக முன்னோடியாய் இருந்த ஏரம்பு ஞானமுத்து உடைய தோட்டம், வீடு, கடை உடைமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டன. தாண்டியடியில் இருந்த அவருடைய சொத்துகள் தரை மட்டமாக்கப்பட்டன. இந்திய அமைதிப்படை நிலை கொண்டிருந்த காலத்தில் அவரது புத்திரனும் சுட்டுக் கொல்லப்பட்டான். ஞானமுத்து உயிர்தப்பி பல்வேறு இடங்களில் மறைந்து வாழ்ந்தார். அகதியாக இருந்து அண்மையில் இறையடி எய்தினார். நூற்றாண்டுகளுக்கு முன் படை எடுப்பால் அழிந்த தாயகம் மீண்டும் ஜே.ஆர்.உடைய ஆட்சியில் இராணுவத்தால் சுட்டெரிக்கப்பட்ட போது அங்கு தமிழர்கள் உயிர்கள் பறிக்கப்பட்டன. உடைமைகள் அழிக்கப்பட்டன! நாடு காடானது.

இந்த ஆக்கிரமிப்பு அராஜகம் 20 வருடம் சென்றும் தொடர்கதையாகவேயுள்ளது. தங்கவேலாயுதபுரத்தில் 2002 ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின்னர் மீண்டும் மக்கள் குடியேறினர். பின்பு 2007 ஆம் ஆண்டு கஞ்சிக்குடியாறு படை நடவடிக்கையினால் மீண்டும் தமது உடைமைகளை இழந்து அகதிவாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் தன்னினத்தை அழித்த சிங்களப் படைகளுடன் இணைந்து தன்னினத்தையே சில தமிழ் இளைஞர்கள் தின்று வருவது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதைப் போன்றுள்ளது. உணர்வீர்களா இளைஞர்களே?

http://www.thinakkural.com/news/2007/2/18/...s_page21639.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.