Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் பூரண ஹர்த்தால் : மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள்)

Featured Replies

கிழக்கில் பூரண ஹர்த்தால் : மட்டக்களப்பில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (படங்கள்)

 

 

கிழக்கு மாகாணத்தில்  இன்று  (27) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுன்றது.இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வர்த்தக நிலையங்கள் யாவும் மூடப்பட்டுள்ளன.

unnamed__1_.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியன இந்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளன.

unnamed__2_.jpg

தமிழ், முஸ்லிம் மக்களின் பூர்வீக இடங்கள் ஆக்கிரமிப்பு, வடக்கு கிழக்கு  வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் மற்றும் காணமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கின் பல்வேறு பிரதேசங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்டங்களில் குதித்துள்ள நிலையில், வடக்கு, கிழக்கு மாணங்களில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

unnamed__3_.jpg

இதனால் வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் அலுவலகங்கள் மூடப்பட்டிருந்தன.

தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவைகளும் இடம்பெறவில்லை. அரச போக்குவரத்துச் சேவைகள் இடம்பெறுகின்றன. ஹர்த்தால் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.

unnamed__4_.jpg

unnamed__5_.jpg

unnamed__6_.jpg

unnamed__7_.jpg

unnamed.jpg

Untisfasftled-1.jpg

 

http://www.virakesari.lk/article/19448

  • தொடங்கியவர்

வவுனியாவில் பூரண ஹர்த்தால்! (படங்கள்)

 

 

வவுனியாவில் இன்று 27 பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வியாபார நிலையங்கள் அனைத்தும் மூடியுள்ளதுடன், தினச்சந்தை, பஸ் நிலையம், பிரதான வீதிகள், வங்கிகள் அரச நிறுவனங்கள் பொது மக்கள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. 

unnamed__1_.jpg
பொலிஸார் வீதிகளில் கடமைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.  இ.போ. ச மற்றும் தனியார் பஸ்கள் வெளியூர் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீதிகளில் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகின்றது. வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மேற்கொள்ளப்பட்டு வரும் பூரண ஹர்ததாலுக்கு பல தரப்பினரிடமிருந்தும் பூரண ஆதரவு வவுனியாவில் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

unnamed__2_.jpg

unnamed__3_.jpg

http://www.virakesari.lk/article/19459

  • தொடங்கியவர்
வடக்கு, கிழக்கு முடங்கின
 
 

article_1493267304-image-0-02-06-535bccc 
காணாமலாக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிடவேண்டும், காணி விடுவிப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து, இம்மாகாணங்கள் முழுவதும், இன்று வியாழக்கிழமை (27) ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

பல்வேறு தரப்பினராலும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு, குறித்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம்: எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த், சுப்பிரமணியம் பாஸ்கரன்

article_1493267333-unnamed%20%283%29.jpgarticle_1493267344-IMG20170427091011.jpgarticle_1493267353-image-0-02-06-a35bba1article_1493267365-unnamed%20%285%29.jpg

வவுனியா:  (படப்பிடிப்பு: ரொமேஸ் மதுசங்க)

article_1493269467-IMG_6483.JPG

article_1493269476-IMG_6488.JPG

article_1493269485-IMG_6521.JPG

article_1493269497-IMG_6540.JPG

article_1493269507-IMG_6542.JPG

article_1493269519-IMG_6555.JPG

article_1493269539-IMG_6562.JPG

article_1493269548-IMG_6562.JPG

article_1493269557-IMG_6572.JPG

மட்டக்களப்பு: பேரின்பராஜா சபேஷ், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான், எஸ்.பாக்கியநாதன், எம்.எஸ்.எம்.நூர்தீன்

article_1493269704-1.jpg

article_1493269722-2.jpg

article_1493269738-3.jpg

article_1493269753-4.jpg

அம்பாறை; எஸ்.கார்த்திகேசு

article_1493269978-5.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/195528/வடக-க-க-ழக-க-ம-டங-க-ன#sthash.bGoPXy3j.dpuf

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் ஏ9 வீதியை மறித்து போராட்டம்..!

 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் கிளிநொச்சியும் முழுமையாக முடங்கியதோடு வெறிச்சோடி காணப்பட்டது.

qqqq.jpg

கிளிநொச்சியில் இன்று பாடசாலைகள், வியாபார நிலையங்கள், போக்குவரத்துகள், சந்தை நடவடிக்கைகள் என எவையும் இயங்கவில்லை, மத்திய அரசின் கீழ் இயங்குகின்ற அரச திணைக்களங்கள் திறந்திருந்த போதிலும் மக்கள் எவரும் செல்லாத நிலையில் செயற்பாடின்றி காணப்பட்டதோடு, பெரும்பாலான உத்தியோகத்தர்களும் பணி சமூகமளித்திருக்கவில்லை. மாகாண  அரசின் கீழ் இயங்குகின்ற  நிறுவனங்கள் மூடபட்டிருந்தன. இதனால் இன்றைய தினம் அனைத்துச் செயற்பாடுகளும் செயலிழந்து காணப்பட்டன.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்னறில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு மணித்தியாலயம் ஏ9 பிரதான  வீதியை மறித்து  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு தீர்வை  வழங்கு என கண்ணீருடன் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 67 வது நாளாக தங்களது  கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். இந்த 67 நாட்களில் தங்களது போராட்டம் குறித்து அரசு  எவ்வித  அக்கறையும் இன்றி இருக்கிறது என்றும் எனவே தாங்கள் இனி தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றி தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை  அகிம்சை வழியில் போராட போவதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி உண்மையை கண்டறியுமாறு வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் தொடராக போராட்டங்கள் தமிழ்  மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களுக்குச் சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரியும் பல நாட்களாக இம் மக்கள் சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனினும்  மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வருவது கவலைக்கும் கண்டனத்துக்கு உரியதாகும் எனக் குறிப்பிடும் உறவினர்கள் இன்றைய முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்ப தந்த பொது அமைப்புக்கள், வர்த்தக சமூகங்கள் கல்விச் சமூகம், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.virakesari.lk/article/19468

  • தொடங்கியவர்

கதவடைப்பால் கிளிநொச்சியும் முடங்கியது – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏ9 வீதியில் போராட்டம்

 

IMG_7192.jpg

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால் கிளிநொச்சியும் முழுமையாக முடங்கியதோடு வெறிச்சோடி காணப்பட்டது.

கிளிநொச்சியில் இன்று (27)  பாடசாலைகள், வியாபார நிலையங்கள், போக்குவரத்துகள், சந்தை நடவடிக்கைகள்   என எவையும் இயங்கவில்லை, மத்திய அரசின் கீழ் இயங்குகின்ற அரச திணைக்களங்கள்  திறந்திருந்த போதிலும் மக்கள் எவரும் செல்லாத நிலையில் செயற்பாடின்றி காணப்பட்டதோடு, பெரும்பாலான உத்தியோகத்தர்களும் பணி சமூகமளித்திருக்கவில்லை. மாகாண  அரசின் கீழ் இயங்குகின்ற  நிறுவனங்கள் மூடபட்டிருந்தன. இதனால்  இன்றைய தினம் அனைத்துச் செயற்பாடுகளும் செயலிழந்து காணப்பட்டன.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்னறில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு மணித்தியாலயம் ஏ9 பிரதான  வீதியை மறித்து  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு தீர்வை  வழங்கு என கண்ணீருடன் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 67 வது நாளாக தங்களது  கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர். இந்த 67 நாட்களில் தங்களது போராட்டம் குறித்து அரசு  எவ்வித  அக்கறையும் இன்றி இருக்கிறது என்றும் எனவே தாங்கள் இனி தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றி தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை  அகிம்சை வழியில் போராட போவதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் விசாரணைகளை நடாத்தி உண்மையை கண்டறியுமாறு வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் தொடராக போராட்டங்கள் தமிழ்  மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோன்று அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களுக்குச் சொந்தமான ஆயிரக் கணக்கான ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கோரியும் பல நாட்களாக இம் மக்கள் சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். எனினும்  மக்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து வருவது கவலைக்கும் கண்டனத்துக்குமுரியதாகும்.    எனக் குறிப்பிடும்  உறவினர்கள்

இன்றை முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த பொது அமைப்புக்கள், வர்த்தக சமூகங்கள் கல்விச் சமூகம், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்

IMG_7102.jpgIMG_7103.jpgIMG_7107.jpgIMG_7117.jpgIMG_7145.jpgIMG_7175.jpg IMG_7204.jpgIMG_7213.jpgIMG_7225.jpg

 

https://globaltamilnews.net/archives/25207

  • தொடங்கியவர்
யாழில் கடையடைப்பு
 
 
யாழில் கடையடைப்பு
வடக்கு கிழக்கு முழுவதும் இன்றைய தினம் பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், யாழ் மாவட்ட வர்த்தக சங்கமும் கர்த்தாலுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் கடையடைப்புச் செய்யப்பட்டுள்ளது.
 
1493277101_unnamed%20%282%29.jpg
 
 
1493277116_unnamed%20%281%29.jpg
 
1493277135_unnamed%20%284%29.jpg
 
 
 
பருத்தித்துறை கடையடைப்பு
 
 
பருத்தித்துறை கடையடைப்பு
வடக்கு கிழக்கு முழுவதும் இன்றைய தினம் பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், பருத்தித்துறை வர்த்தக சங்கமும் கர்த்தாலுக்கு ஆதரவழக்கும் விதத்தில் கடையடைப்புச் செய்யப்பட்டுள்ளது.
 
1493275884_unnamed%20%281%29.jpg
 
1493275899_unnamed.jpg
 
 
நெல்லியடி கடையடைப்பு
 
 
நெல்லியடி கடையடைப்பு
வடக்கு கிழக்கு முழுவதும் இன்றைய தினம் பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
 
நெல்லியடி வர்த்தக சங்கமும் கர்த்தாலுக்கு ஆதரவழக்கும் விதத்தில் கடையடைப்புச் செய்யப்பட்டுள்ளது.
 
1493275616_unnamed.jpg
 
1493275629_unnamed%20%282%29.jpg
 
1493275644_unnamed%20%281%29.jpg

 
 

சங்கானை கடையடைப்பு
 
 
சங்கானை கடையடைப்பு
வடக்கு கிழக்கு முழுவதும் இன்றைய தினம் பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
 
யாழ் சங்கானையில் சந்தைப்பகுதி , கடைத்தொகுதிகள் என்பன கர்த்தாலுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் கடையடைப்புச் செய்யப்பட்டுள்ளது.
 
1493275130_unnamed.jpg
 
1493275146_unnamed%20%282%29.jpg
 
1493275160_unnamed%20%281%29.jpg

 
 
மன்னாரில் கடையடைப்பு
 
 
மன்னாரில் கடையடைப்பு
வடக்கு கிழக்கு முழுவதும் இன்றைய தினம் பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
 
மன்னார் சந்தைப்பகுதி , கடைத்தொகுதிகள் என்பன கர்த்தாலுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் கடையடைப்புச் செய்யப்பட்டுள்ளது.
 
1493274286_unnamed%20%281%29.jpg
 
1493274301_unnamed%20%285%29.jpg
 
1493274316_unnamed%20%284%29.jpg
 
 
1493274333_unnamed%20%287%29.jpg
 
1493274349_unnamed%20%2810%29.jpg
 
1493274361_unnamed.jpg
 
 
சாவகச்சேரி கடையடைப்பு
 
 
சாவகச்சேரி கடையடைப்பு
வடக்கு கிழக்கு முழுவதும் இன்றைய தினம் பூரண கர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
 
சாவகச்சேரி சந்தைப்பகுதி , கடைத்தொகுதிகள் என்பன கர்த்தாலுக்கு ஆதரவளி க்கும் விதத்தில் கடையடைப்புச் செய்யப்பட்டுள்ளது.
 
1493272131_unnamed.jpg
 
 
1493272149_unnamed%20%282%29.jpg
 
1493272259_unnamed%20%284%29.jpg
 
http://www.onlineuthayan.com/news/25860

  • தொடங்கியவர்

இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு)

 

இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்பு கூற வேண்டும் எனவும் தமிழ் அரசியல் கைதகிளை விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் வியாழனன்று முழு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் புகைப்படத் தொகுப்பு.

 

இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) Image captionஇலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசு பொறுப்பு கூற வேண்டும் என கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் வியாழனன்று முழு கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) Image captionவவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்ட நகரங்களில் கடைகள் மூடப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் முடங்கிப் போயின. இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) Image captionதனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) Image captionஅரச பேருந்துகள் சில குறுகிய தூர சேவையில் ஈடுபட்டிருந்த போதிலும் பயணிகளின்றி வெறுமனே ஓடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) Image captionபோக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதனால் பாடசாலை செல்லும் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லவில்லை. இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) Image captionகடந்த 63 தினங்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஏ9 வீதியில் வீதிமறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) Image captionகிளிநொச்சியில் பேராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு ஆதரவாக கிளிநொச்சி வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) Image captionஏ9 வீதியில் சாலை மறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள். இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு) இலங்கை : கடையடைப்பு போராட்டத்தால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை (புகைப்படத் தொகுப்பு)

 பிபிசி தமிழ் :

  • தொடங்கியவர்

இலங்கையில் கடையடைப்பு: கிழக்கிலும் இயல்பு நிலை பாதிப்பு

வெறிச்சோடிய மட்டக்களப்பு நகர் Image captionவெறிச்சோடிய மட்டக்களப்பு நகர்

இலங்கையில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அனுசரிக்கப்படும் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் காரணமாக கிழக்கு மாகாணத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உண்மை நிலையை வெளிப்படுத்தப்பட வேண்டும். அரச படையினர் நிலை கொண்டுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்து காணாமல் போனவர்களின் உறவினரும், காணிகளின் உரிமையாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மூடப்பட்டுள்ள கடைகள், சந்தைகள் Image captionஇயங்காத சந்தை

இந்தப் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஏற்பாட்டாளர்களினால் கடையடைப்பு மற்றும் ஹர்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

 

கிழக்கு மாகாணத்தில் கடையடைப்பு மற்றும் ஹர்த்தால் அனுசரிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களில் மாணவர்கள் வராததால் அரச மற்றும் தனியார் பள்ளிக் கூடங்கள் வெறிச்சோடிச் காணப்படுகின்றன. அரச, தனியார் அலுவலகங்களிலும் வழமை நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

மூடப்பட்டுள்ள கடைகள் Image captionமூடப்பட்டுள்ள கடைகள்

போக்குவரத்து சேவைகளை பொறுத்தவரை ஆட்டோ சேவை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. அரச, தனியார் உள்ளுர் பேருந்து சேவைகள் தடைப்பட்டுள்ளன. தூர இடங்களுக்கு செல்லும் போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

 

பயணிகள் இன்றி காணப்படும் மட்டக்களப்பு பேருந்து நிலையம் Image captionபயணிகள் இன்றி காணப்படும் மட்டக்களப்பு பேருந்து நிலையம்

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இன்று வியாழக்கிழமை அனுசரிக்கப்படும் ஹர்த்தாலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஈ.பி.டி.பி, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தன.

http://www.bbc.com/tamil/sri-lanka-39732024

  • தொடங்கியவர்

கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நன்றி

IMG_7175.jpg

இன்றைய முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்ப தந்த பொது அமைப்புக்கள், வர்த்தக சமூகங்கள் கல்விச் சமூகம், தொழிற்சங்கங்கள், அரசியற் கட்சிகள், ஊடகங்கள் அனைத்துக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் முகமாக மேற்கொள்ளப்பட்ட முழுகதவடைப்பு போராட்டத்தினால்  இன்று வடக்கு கிழக்கில் அனைத்துச் செயற்பாடுகளும் செயலிழந்து காணப்பட்டன.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்னறில்  போராட்டம் நடத்திய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒரு மணித்தியாலம் ஏ9 பிரதான  வீதியை மறித்து  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்கு தீர்வை  வழங்கு என கண்ணீருடன் கதறி அழுது ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

மேலும்  இனி தங்களின் போராட்ட வடிவத்தை மாற்றி தங்களுக்கான தீர்வு கிடைக்கும் வரை  அகிம்சை வழியில் போராட போவதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/archives/25241

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.