Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களத்தில் பிரபலமான எனது கவிதை. . வசந்தகாலம் 1971 - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களத்தில் பிரபலமான எனது கவிதை.
.
வசந்தகாலம் 1971
.
இலங்கைத் தீவில் 1971 ஏப்பிரல் 5ல் ஆரம்பித்த சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி ஜூன் மாதம் பல்லாயிரம் சிங்கள இளைஞர்களின் படுகொலையுடன் முடித்து வைக்கப்பட்டது.
1971 ஏப்பிரல் கிளற்ச்சியின்பின்னர். ”தமிழ் இளைஞர்கள் அமைதியானவர்கள். சிங்கள இளைஞர்கள் பயங்கர வாதிகள்” என சிங்கள அதிகாரிகள் பலர் சொன்னதை நான் கேட்டிருக்கிறேன்.
.
சிங்கள இளைஞர்கள் சிங்கள மக்களின் பங்குபற்றுதலோ தமிழ் முஸ்லிம் மலையக (தமிழ் பேசும்) மக்கள் பற்றிய அக்கறை இல்லாமலும் ”சிங்கள சமூக நீதி” அடிப்படையில் இக்1970ல் ஜெவிபி (Janatha Vimukthi Peramuna ) கிளற்சித் தலைவர் ரோகண விஜயவீர இதயநோய் சம்பந்தமாக வைத்திய சாலையில் இருந்தபோது சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினேன். என்னோடு இன்று ஜெர்மனியில் தங்சமடைந்திருக்கும் எனது மைத்துணன் வேலாயுதபிள்ளை உடனிருந்தார். தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைத்தால் மட்டுமே தமிழ் மக்களை இணைத்து செயல்படமுடியும் என்பதை அவரிடம் வலியுறுத்தினேன். ஒரு தொழிலாலர் வர்க்கப் புரட்ச்சிக் கட்ச்சி இலங்கை தீவின் மாபெரும் தொழிலாளர் அமைப்பான மலையக மக்களை இந்திய விஸ்தரிப்பு வாத்த்தின் கருவி என நிராகரிப்பது அடிபடை கொள்கைகளுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக் காட்டினேன். இறுதியில் விஜயவீர வடகிழக்கு இணைப்பாட்ச்சி பற்றி ஜெவிபி கட்ச்சி தலைவர்களுள் ஒருவரும் மாவோ வாதியுமான எஸ்.டி பண்டாரவோடு பேசி முடிவுக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். இன்றைய நிலமையில் தமிழருக்கு இணைபாட்ச்சியை ஏற்றுக்கொள்வதுசிங்கள பெரும்பாண்மை மக்கள் மத்தியில் ஜெவிபி அமைப்பை தனிமைப் படுத்திவிடும் என்றார், ஜெவிபி தலமையில் இணைந்து புரட்ச்சி வெறிபெற போராடுங்கள் வெற்றி பெற்றதும் கொம்முயூன் முறையை அமுலாக்குவோம். அப்போது தமிழ், முஸ்லிம் மலையக கொம்யூன்கள் அமையும். அதுவே சிறந்த தீர்வாகும் என அவர் வாதிட்டார். கொம்மூன் அடிப்படையிலான இணைப்பாட்சியை ஏற்றுக் கொள்ளலாம் என்பது எங்கள் வாதமாக இருந்த்து. இணைப்பாட்ச்சியை ஏற்றுக் கொள்ளாத எஸ்.டி.பண்டா இயக்க பொலிட்பீரோவில் இக்கோரிக்கையை ஆராய்வதாக சொன்னார். பேச்சுவார்த்தை முறிவடைந்தது. ஜெவிபி புரட்சி பேசும் தமிழ்ர் விரோத இனவாத தன்மையுள்ள அமைப்பாகவே இருந்தது. எனினும் அவர்களுது மாவோஇச நிலைபாடு கேரளாவிலும் வங்காளத்திலும் சில இட்துசாரிகளின் தொடர்புக்கு வழிவகுத்தது. வெகு அண்மைக்காலம் வரைக்கும் ஒரு இந்திய கம்யூனிச கட்ட்சி தமிழர் விரோத ஜெவிபி அமைப்பை தன் தோழமை இயக்கமாக அங்கீகரித்திருந்த்து. இதனால் அவர்களது இலங்கைக் கொள்கை சிங்கள பேரினவாத்த்தால் திரிவுபட்டிருந்த்து,
.
1978ல் இலங்கை இட்துசாரி அமைபொன்று ரோகணவியவீராமீது யாழ்ப்பாணத்தில் வைத்து கொலைத் தாக்குதலை மேற்கொள்ள முயன்றது. அது நான் யாழ்பான பல்கலைக் கழக மாணவர் தலைவனாக இருந்த தருணம். அந்த நாட்களில் ரோகண விஜயவீர முதன்முறையாக தமிழரின் பிரிவினை தவிர்த்த சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாகக் கூற ஆரம்பித்திருந்தார். இதனால் அவரை நாங்கள் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருந்தோம். அதனால் விஜயவீரவை தாக்கும் இடது சாரி அமைப்பின் முயற்ச்சியை இறுதித் தருணத்தில் அறிந்த நானும் எனது தோழர்களும் உடனடியாகச் செயல்ப்பட்டோம். பல்கலைக் கழக மாணவர்கள் சிலரதும் (லோகன் கணபதி. மார்க்கம் கவுண்சிலர். கனடா, குட்லக் கோட்டல் நாதன்) துணையோடும் யாழ்ப்பாணத்தைச் சேர்த சில சண்டியர்களது உதவியோடும் ரோகண பேசும் பொதுக்கூட்டத்துக்கு பாதுகாப்பு அளித்தோம். குறிப்பிட்ட இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனக்கு நெருங்கிய தோழர்கள் என்பதால் அவர்கள் எங்களுடன் மோதவில்லை. . ஆனால் எங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக இருந்த மேடையின் பின்புறம் வழியே வந்து மேடையில் பேசிக்கொண்டிருந்த ரோகன விஜயவீர மீது சிறு கல் ஒன்றை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள். வியவீர யாழ்ப்பாணத்தில் படுகாயபட்டோ கொலையுண்டோ இருந்திருந்தால் 1983 விட பயங்கரமான தமிழர் படுகொலை தென்னிலங்கையில் அரங்கேறி இருந்திருக்கும்.
.
ஜெவிபியின் ”சிங்கள கொம்யூனிடம்” என்கிற இனவாத சோசலித்த்தை தீவிரமாக எதிர்த்தபோதும் சிங்கள இளைஞர்கள்மீது எப்பவும் அனுதாபமாகவே இருந்தேன். 1978ல் அவர்களது கருத்தில் இனவாதமற்ற போக்கு உருவானபோதும் அது பலபட்டு நிலைக்கவில்லை என்பது வேதனை.
.
 
என் வாழ்நாள் முழுவதும் இனவாதமற்ற சிங்கள முற்போக்குவாதிகளின் அன்பும் தோழமையும் பலமாகத் தொடர்கிறது. அவர்களுள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தமிழ் இனப் படுகொலை தொடர்பான ஆவணங்களையும் ஒளிபடங்களையும் கட்ததிய சிங்கள ஊடகவியலாளர்களும் அடங்குவர். அவர்களது தியாகத்தால்தான் தமிழரது இனக்கொலை, தமிழ் பெண் போராளிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை வெளியில் கொண்டுவர முடிந்தது. இதனால்தான் தமிழரது நெருங்கிய தோழனும் வன்னியின் நண்பனுமான சிங்கள திரைப்பட நெறியாளர் தோழர் பிரசன்ன விதானகேயை அவரது பின்னணி தெரியாமல் ஈழத் தமிழர் ஆதரவு இளஞர்கள் சிலர் எதிர்த்தபோது நான் கோபம்கொள்ள நேர்ந்தது.
.
சிங்கள இளைஞர் படுகொலையுடன் தோல்வியில் முடிந்த 1971 ஏப்பிரல் கிளற்ச்சிபற்றி 1980ல் வசந்தகாலம் 1971 என்கிற கவிதையை எழுதினேன். அக்காலத்தில் 3ம் உலக நாடுகளில் நடந்த பல இடதுசாரிக் கிளற்சிகளுக்கு இக்கவிதை பொருந்திப் போகும். இக்கவிதை தோழர் டோமினிக் ஜீவா அவர்களால் மல்லிகையில் பிரசுரிக்கப் பட்ட்து, இக்கவிதையை நிலார் எம்.காசிம் சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார். ” எங்கள் கிராமங்கள் மண்வளம் மிகுந்தவை
எதைப் புதைத்தாலும் தோப்பாய் நிறையும்.” என்பது எனது கவிதியின் இறுதி வரிகளாகும். இதன் சிங்கள மொழிபெயர்ப்பு ஜெவிபி அமைப்பின் சுவரொட்டிகளில் இடம் பெற்றுள்ளது,
.
வசந்தகாலம் 1971
- வ.ஐ.ச.ஜெயபாலன்
.
 
காடுகள் பூத்தன.
குயில்கள் பாடின.
எந்த வசந்தமும் போலவே இனிதாய்
எழுபத் தொன்றிலும் வசந்தம் வந்தது.
.
இராமன் ஆளினும் இராவணன் ஆளினும்
ஊர் ஊராக என்றும் போலவே
எந்த ஓர் பெரிய சவால்களுமின்றி
அதே அதே பெரிய குடும்ப ஆதிக்கம்
அந்த வசந்த நாளிலும் தொடர்ந்தது.
.
சேற்றில் உழல்வதை இயல்பாய்க் கொள்ளும்
எருமைகள் போலச் சொரணைகள் செத்த்
'விதியே' என்னும் கிராமியப் பண்பை
அந்த வசந்த நாட்களில் புதிதாய்
எந்த ஓர் விசயமும் உலுப்பிடவில்லை.
எந்த வசந்த நாட்களும் போலவே
அந்த வசந்த நாட்களும் நடந்தன.
.
எனினும் எனினும் இலங்கைத் தீவில்
சிங்களக் கிராமப் புறங்களில் மட்டும்
இளைஞர்கள் சிலபேர் ஒருவரை ஒருவர்
இரகசியமாகத் தட்டி எழுப்பினர்.
நீண்ட நீண்ட இரவுகள் விழித்து
இருளில் தூங்கும் மக்களுக்காக
மலைகளை அகற்றும்
பரம ரகசியம் பேசிக் கொண்டனர்.
.
திடீரென அந்த வசந்த நாட்களில்
தெருக்கள் தோறும் துப்பாக்கிச் சன்னதம்
குடியானவரைத் திடுக்கிட வைத்தது.
வீதி மருங்கெலாம் இரத்தப் பூக்கள்,
.
இருண்ட அந்தக் கிராமங்கள் தோறும்
எத்தனை எத்தனை இள ஞாயிறுகள்
கரிசல் மண்ணுள் புதைக்கப்பட்டன.
குயில்கள் பாட
திருமண ஊர்வலம் போல வந்த
எழுபத் தொன்றின் வசத காலம்
ஆந்தைகள் அலற
மரண ஊர்வலமாகக் கழிந்தது.
.
எங்கள் கிராமங்கள் மண்வளம் மிகுந்தவை
எதைப் புதைத்தாலும் தோப்பாய் நிறையும்.
 
1980.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.