Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே மாதம் 15 ஆம் திகதியளவில் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை கிடைக்கும்

Featured Replies

மே மாதம் 15 ஆம் திக­தி­ய­ளவில் ஜி.எஸ்.பி.பிளஸ் சலுகை கிடைக்கும்

Harsh-de-Silva2-4140eac46eef46abac202b9a3c4b12d6ad0f4118.jpg

 

சர்­வ­தேச மட்­டத்தில் மிகப்­பெ­ரிய வெற்றி என்­கிறார் ஹர்ஷ 

(ஆர்.யசி )

நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுத்­து­வரும் ஜன­நா­யக நகர்­வுகள் மற்றும் சர்­வ­தேச நாடு­க­ளுடன் ஏற்­ப­டுத்­திக்­கொண்­டுள்ள நட்­பு­றவின் விளை­வா­கவே எமக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண்டும் பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது. மே மாதம் 15ஆம் திகதி அளவில் எமக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்­ச­லு­கையை பெற்­ றுக்­கொள்ள முடியும் என வெளி­வி­வ­கார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்தார்.  

எனினும் இன்னும் மூன்று ஆண்­டு­கால பகு­திக்கு மட்­டுமே எமக்கு ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்­ச­லுகை வழங்­கப்­படும். இதை நீடித்­துக்­கொள்ள வேண்டும் என்றால் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் நாம் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை ஒன்­றினை மேற்­கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். வெளி­வி­வ­கார அமைச்சில் நேற்று

இடம்­பெற்ற விசேட செய்­தி­யாளர்  சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.   அவர் மேலும் கூறு­கையில்,  ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையை மீண்டும் பெற்றுக் கொள்ளும் இறு­திக்­கட்ட நகர்­வு­களை நாம் அடைந்­துள்ளோம். முன்­னைய அர­சாங்­கத்தின் ஆட்­சியில் எமக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை நிரா­க­ரிக்­கப்­பட்­டது. ஆனால் ஆட்சி மாற்­றத்தின் பின்னர் நாம் மீண்டும் ஜி. எஸ்.பி வரிச்­ச­லு­கையை பெற்­றுக்­கொள்ள எடுத்த முயற்­சியில் வெற்றி கண்­டுள்ளோம். இப்­போது எமக்கு கிடைக்­க­வுள்ள இந்த வாய்ப்பு மூலம் நாட்டில் வேலை வாய்ப்­பு­களை அதி­க­ரித்தல், தொழிற்­சா­லைகள் உரு­வாக்கல் மற்றும் நாட்டின் பொரு­ளா­த­ரத்தை முன்­னோக்கி கொண்­டு­செல்லல் என்­ப­ன­வற்­றுக்கு பல­மாக அமையும்.  

இதை அனை­வரும் ஏற்­று­கொள்ள வேண்டும். இந்த ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்­ச­லுகை எமக்கு கிடப்­பதன் மூலம் 9 தொடக்கம் 10 வீத­மான தீர்வை வரி முழு­மை­யாக நீக்­கப்­படும். ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இப்­போது வரையில் 28 நாடுகள் உள்­ளன. இந்த அனை த்து நாடு­க­ளுக்கும் எந்­த­வித தீர்வை வரியும் இல்­லாது எமது ஏற்­று­ம­தியை வழங்க முடியும். குறிப்­பாக எமது நாடு மீன் ஆடைகள் உள்­ளிட்ட உற்­பத்­தி­களை ஏற்­று­மதி செய்­கின்றோம். எனினும் இப்­போது உள்ள சலுகை மூலம் 6600 உற்­பத்­தி­களை எந்­த­வித தீர்வை வரியும் இல்­லாது ஏற்­று­மதி செய்ய முடியும். ஆசி­யாவில் பாகிஸ்தான், பிலிப்பைன் நாடு­களை அடுத்து எமக்கு இப்­போது ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை கிடைக்கும் வாய்ப்­புகள் நெருங்­கி­யுள்­ளன.

நாட்டை பொரு­ளா­தார ரீதியில் உல­குடன் இணைத்­துக்­கொள்ள வேண்டும். அவ்­வாறு செல்ல வேண்டும் என்றால் ஏற்­று­மதி இல்­லாது எமது நாட்டை முன்­னெ­டுத்து செல்ல முடி­யாது. இலங்­கையின் பொரு­ளா­தார வெற்­றி­யா­னது இலங்கை சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து செயற்­படும் வேலைத்­திட்டம் மூலமே தங்­கி­யுள்­ளது. சர்­வ­தேச வியா­பார உடன்­ப­டிக்­கைகள் மூலமும் அதி­க­ரித்த ஏற்­று­மதி மூல­முமே எமக்கு வெற்­றி­கொள்ள முடியும்.

ஆகவே மொத்த தேசிய உற்­பத்­தியும் ஏற்­று­ம­தியின் வீத­முமே எம்மை முன்­னோக்கி கொண்­டு­செல்லும். 2004ஆம் ஆண்டு எமது மொத்த தேசிய உற்­பத்­தி­யா­னது 34ஆக இருந்­தது. இன்று அது 17ஆக குறை­வ­டைந்­துள்­ளது. முன்­னைய அர­சாங்கம் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை தவ­றான விதத்தில் கையாண்­டுள்­ளது. இன்று சிங்­கபூர் உள்­ளிட்ட சில நாடுகள் 100இற்கு 150 வீத ஏற்­று­ம­தி­களை மேற்­கொள்­கின்­றன . ஆனால் கடந்த காலத்தில் நாம் வீழ்ச்­சி­கண்­டுள்ளோம்.

ஆகவே ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பொரு­ளா­தார பெறு­ம­தியை நாம் நன்­றாக விளங்­கிக்­கொள்ள வேண்டும். இப்­போது நாம் மீண்டும் அதை வெற்­றி­கொண்­டுள்ளோம். ஆனால் நாம் வெற்றி கொண்­ட­துக்கு ஒரே சரா­ச­ரியில் எம்மால் செல்ல முடி­யாது. நாம் இருக்கும் தன்­மைக்கு அமைய போட்­டி­க­ர­மான நகர்­வு­களை பெற்­றுக்­கொள்ள வேண்டும். இன்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் ஏனைய நாடு­களின் போட்­டித்­தன்மை அதி­க­ரித்து உள்­ளது. அத­னுடன் நாமும் போட்­டி­போட்டு செயற்­பட வேண்டும். அதற்கு அர­சாங்­க­மாக நாம் தயா­ராக வேண்டும். கடந்த காலத்தில் நாம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை பெற்­றுக்­கொள்ள முயற்­சித்த போது எமக்கு இந்த சலுகை கிடைக்­காது என பலர் தெரி­வித்­தனர். அதேபோல் நாம் பல உடன்­ப­டிக்­கை­களை மேற்­கொண்டு அதற்கு அமை­வா­கவே ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையை பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கின்றோம் என தெரி­வித்­தனர். ஆனால் நாம் தவ­றான வகையில் நக­ர­வில்லை. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கை­யா­னது ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­து­வதன் மூலமும் சட்­டத்­தையும் நீதி­யையும் கையாளும் விதத்தின் அடிப்­ப­டையில் ஏனைய நாடுகள் கொடுக்கும் சான்­றி­த­ழுக்கு அமை­வா­கவே கிடைக்கும்.

ஆகவே எமது வேலைத்­திட்டம் சரி­யான வகையில் அமையும் பட்­சத்தில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் எம்­மைப்­பற்றி முன்­வைக்கும் நற்­சான்­றி­த­ழுக்கு அமை­வா­கவே வழங்­கப்­படும். அதேபோல் 27 உடன்­ப­டிக்­கை­க­ளுக்கு அமைய நாம் செயற்­பட வேண்டும் என்­பது ஆரம்­பத்தில் இருந்தே பின்­பற்­றப்­ப­டு­கின்­றது . இதில் பிர­தா­ன­மா­னது ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்த வேண்டும் என்­ப­தாகும். ஜன­நா­ய­கத்தை கையாளும் உய­ரிய மட்­டத்தின் பிர­தி­ப­லிப்­பா­கவே எமக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லுகை கிடைக்­கின்­றது. கடந்த 2010ஆம் ஆண்டு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை எம்­மிடம் இருந்து பறிக்­கப்­பட்­டது. அதன் பின்னர் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் நாம் ஜன­நா­ய­கத்தை பலப்­ப­டுத்­திய நிலையில் எமக்கு இப்­போது மீண்டும் இது கிடைக்கும் வாய்ப்­புகள் அதி­க­ரித்­துள்­ளன என்­பதை அனை­வரும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.

எனினும் உட­ன­டி­யாக எமக்கு இந்த சலுகை கிடைக்­கப்­பெ­றாது. எனது கணிப்பின் பிர­காரம் மே மாதம் 15ஆம் திகதி அளவில் எமக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையை பெற்­றுக்­கொள்ள முடியும்.

 ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையை குறு­கிய காலத்­திற்கு மட்­டுமே பெற்­றுக்­கொள்ள முடியும். இன்னும் மூன்று ஆண்­டு­கால பகு­திக்கு மட்­டுமே எமக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையை கொடுப்­பார்கள். இதை நாம் நீடித்­துக்­கொள்ள வேண்டும் என்றால் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துடன் நாம் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை ஒன்­றினை மேற்­கொள்ள வேண்டும். ஜி. எஸ்.பி வரிச்­ச­லு­கையை மட்டும் அல்ல அதன் பின்னர் நாம் வர்த்­தக உடன்­ப­டிக்­கையை மேற்­கொள்ள பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்ள வேண்டும். இப்­போதே அதற்­கான பேச்­சு­வார்­தை­களை மேற்­கொள்­ள­வேண்டும் என வலி­யு­றுத்­தி­யுள்ளேன். பிர­த­ம­ரு­டனும் இது தொடர்பில் பேச்­சு­வார்த்தை மேற்­கொள்­ள­வுள்ளேன். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்­ச­லு­கையை தக்­க­வைக்க இதுவே வழி­மு­றை­யாகும். பொது­ந­ல­வாய நாடு­க­ளுடன் நாம் சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்கை ஒன்றை மேற்­கொள்ளும் முதற்­கட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். இதற்கு முன்னர் அர­சியல் பேச்­சு­வார்த்­தைகள் மட்­டுமே முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இப்­போது இது வர்த்­தக பேச்­சு­வா­ர­ஙத்­தை­யா­கவும் மாறி­யுள்­ளது.

நாம் கடக்க வேண்­டிய கடி­ன­மான பாதையை கடந்­து­விட்டோம். இறு­திக்­கட்ட வேலைத்­திட்ட நகர்­வு­களை மேற்­கொள்­ள­வுள்­ளதால் அவற்றை நிறைவு செய்ய வேண்டும். எனினும் இறுதி சந்­தர்ப்­பத்­திலும் எமக்கு எதிராக பல தடைகள் ஏற்பட்டன. ஆனால் நாம் எமது முழு முயற்சியின் மூலம் வெற்றிபெற்றுள்ளோம். இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி இதுவாகும். ஏற்றுமதியை மேற்கொள்ளும் பலமான அடித்தளத்தை நாம் மேற்கொள்ள வேண்டும். ஜனாதிபதி அந்த சந்தர்ப்பத்தில் எனக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு எமது வேலைத்திட்டம் தொடர்பில் வாழ்த்து தெரிவித்தார். இதுவரை சர்வதேச மட்டத்தில் நாம் பெறாத ஒரு வெற்றியை இப்போது பெற்றுள்ளோம். ஆகவே இலங்கை தொடர்பில் சர்வதேசம் கொண்டுள்ள நம்பிக்கை இதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. கட்சி பேதம் இன்றி அனைவரும் பெற்றுக்கொண்ட ஒரு வெற்றியாகவே இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-29#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.