Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இதுவும் கடந்து போகும்'... தற்போதையை அரசியல் சூழல் குறித்து நமது எம்.ஜி.ஆரின் அடடே கட்டுரை

Featured Replies

'இதுவும் கடந்து போகும்'... தற்போதையை அரசியல் சூழல் குறித்து நமது எம்.ஜி.ஆரின் அடடே கட்டுரை

 
 

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, பன்னீர்செல்வம் அணி சசிகலா அணி இரண்டாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். பின், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே அ.தி.மு.க-வின் ஆயுள் முடிந்து விட்டது, விரைவில் ஆட்சி கவிழும் என்று பா.ஜ.க தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Namadhu MGR


குறிப்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடத்தியதையடுத்து, அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில், 'ஆட்சியைக் கவிழ்க்க நினைத்தால், மக்களாட்சி என்பதே இல்லாமல் போய்விடும்' என்று கடந்த சில வாரத்துக்கு முன்பு காரசாரமான விமர்சனக் கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை குறித்து, நமது எம்.ஜி.ஆர் நாளேடு, 'இதுவும் கடந்த போகும்' இன்று ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. சம காலத்து அரசியல் சூழ்நிலைக்கு சரபோஜி காலத்து நிகழ்வு ஒன்றை கட்டுரையாக வெளியிட்டுள்ளனர். இந்த கட்டுரையின் விவரம்:

மராட்டியத்திலிருந்து வந்து, தஞ்சையை ஆட்சி செய்த சரபோஜி அங்குள்ள புராதானச் சின்னங்களையும், வழிபாட்டு தலங்களையும் சிறப்பான முறையில் பராமரிப்பு செய்து, மக்களின் நன் மதிப்பையும், பேராதரவையும் பெற்று ஆட்சி செய்தார். சரபோஜியின் ஆட்சி காலத்தில், ஒரு முறை அவரது மனைவிக்கு கடுமையான வயிற்று நோய் ஏற்பட்டது. இதனால் அவர் மன நிம்மதி இழந்து தவித்தார். மருத்துவர்கள் ஒரு புறம், ஆருடன் சொல்பவர்கள் ஒரு புறம் அரண்மனையை ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள். தன் மனைவி நோயிலிருந்து விடுபட திருமறைக்காடு சிவத்தலத்தில் சிறப்பு வழிபாடுகளும், கடுமையான விரதமும் மேற்கொள்ள, சரபோஜி மன்னர் அங்கு சில நாள்கள் தங்கியிருந்தார். அப்போது சேர நாட்டிலிருந்து, திருமறைக்காட்டுக்கு வந்திருந்த நாடோடிகள் தங்கள் நாட்டு மன்னன், தஞ்சை மீது படையெடுக்க உறுதி பூண்டிருக்கிறான் என்ற செய்தியை மன்னனை சந்தித்து தெரிவித்தார்கள்.

அப்போது, அங்கிருந்த சிவனடியார் ஒருவர் மன்னனிடம், "நீ பதிலுக்கு சண்டை போடாதே. வீரமிக்க ஒரு புலவனை சேர நாட்டுக்கு அனுப்பிப் பேசு.  இதுவும் கடந்து போகும்" என்று உரைத்தார். பின், சரபோஜி மன்னர் தஞ்சை வந்து அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். நம்மால் போர் செய்து வெற்றி பெற முடியும். அதற்கான வசதிகளும், வாய்ப்புகளும் நம்மிடம் இருப்பது போல் சேர நாட்டிடம் இல்லை. சேர நாட்டு மன்னனும் தனது மக்கள் குறித்து கவலைப்படவில்லை. மேலும், கடுமையான தண்ணீர் உணவு பஞ்சம் காரணத்தால், சேர நாட்டினர் பிற நாடுகள் மீது படையெடுத்தால், அது சேர நாட்டுகள் பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தும்.


இந்த செய்தியை சேர நாட்டுக்கு அனுப்பி பேசலாம் என்று சரபோஜி மன்னர், அமைச்சர்களுடன் பேசி முடிவு எடுத்தார். இந்த செய்தியோலையை எடுத்துச் செல்வதற்கு ஒரு வீரமக்க புலவர் வேண்டுமே என்று சரபோஜி கேட்டபோது, உடனே சங்க இலக்கியப் புலவரான ஏலேல சிங்கனார் என்பவரை அனுப்பலாம் என்று அனைவரும் கூடி முடிவு எடுத்தனர்.

563301ec-ae29-45a4-a334-2e40da72d2b8_110


ஏனென்றால், ஏலேல சிங்கனார் புலவர் மட்டுமல்ல. போர் திறன் கற்ற வீரரும் ஆவார். அதனால் நமக்கு வெற்றி நிச்சயம் என்று அனைவரும் கூறினார்கள். அதன்படி, ஏலேல சிங்கனும் சேர நாட்டைச் சென்றடைந்தார். செய்தியைப் படித்த சேர நாட்டு மன்னன், " சரபோஜி மன்னன் எந்த தந்திரத்தோடு போர் செய்ய வேண்டாம் என்று ஒரு புலவரை அனுப்பி என்னை மதிமயங்க செய்யலாம்?" என்று கேட்டான்.

உடனே ஏலேலசிங்கன், "மன்னா நான் அனைத்து போர் வித்தைகளையும் தெரிந்தவன். புலவர் என்ற தொழில் எனது பகுதி நேர வேலையாகும். போர்ப் பயிற்சி தான் எனது முழு நேரத் தொழில்", என்றதோடு, போரினால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதையெல்லாம் தெளிவாக விவரித்து, "எங்கள் நாட்டின் மீது படையயெடுத்து, உயிர் சேதம் ஏற்படுவதைவிட, உங்கள் நாட்டில் உள்ள உணவு பஞ்சத்தை தீர்த்துக் கொள்வதற்கு எங்களது மன்னனிடம் பேசுங்கள். தீர்வு உள்ளது. சமாதனமாகப் பேசி முடிவெடுத்தால் நன்மை ஏற்படும். ஏனென்றால் எங்களது நாட்டில் உணவு உற்பத்தி அபரிமிதமாக உள்ளது. உங்கள் நாட்டுக்கு தேவையான தானியங்களை எங்களால் தர முடியும்" என்று நயமாகப் பேசினார்.

உடனே, ஒரு முடிவுக்கு வந்த சேர மன்னன், ஏலேல சிங்கனை ஆரத்தழுவி, வாழ்த்தி அனுப்பினார். அதன்பிறகு, தஞ்சை வந்து சமாதனமாகப் பேசி, தனது நாட்டின் உணவுப்பஞ்சத்தை போக்கிக் கொண்டான் சேர மன்னன். இதுவும் கடந்த போகும் என்று கூறிய சிவனடியாரை நினைத்து, சரபோஜி மன்னன் மகிழ்ந்து போனார்.  இந்த வரலாற்று நிகழ்வுகள், தற்போதைய அரசியல் சூழலுக்கு, ஒரு முன்னோடியாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

http://www.vikatan.com/news/tamilnadu/87915-namadhu-mgr-newspaper-published-a-article-over-present-polical-situation.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.