Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனேடிய உணவு மற்றும் பான கண்காட்சியில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் பிரதிநிதிகள் குழு

Featured Replies

கனே­டிய உணவு மற்றும் பான கண்­காட்­சியில் இலங்கை ஏற்­று­ம­தி­யா­ளர்கள் பிர­தி­நி­திகள் குழு

 

கன­டாவின் ரொரன்டோ நகரில் எதிர்­வரும் மே 2 ஆம் திகதி முதல் 4 ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்ள இந்த ஆண்­டுக்­கான 'சியல் கனடா 2017' சர்­வ­தேச உணவு மற்றும் பான கண்­காட்­சியில் 10 சிறிய மற்றும் நடுத்­தர அள­வான ஏற்­று­ம­தி­யா­ளர்கள் பங்­கேற்­பதை அறி­விப்­பதில் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக கொழும்­பி­லுள்ள கனே­டிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தால் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் அந்த அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது;  இந்தக் கண்­காட்சி நிகழ்ச்சித் திட்­டத்­திற்கு கனே­டிய வர்த்­தக வச­தி­ய­ளிப்பு அலு­வ­லகம் (ரி.எப்.ஓ), இலங்கை ஏற்­று­மதி அபி­வி­ருத்தி சபை (ஈ.டி.பி), ரொரன்­டோ­வி­லுள்ள இலங்கை பிர­தி­நி­திகள் நாயகம் அனு­ச­ரணை வழங்­கு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. 

 கனே­டிய வர்த்­தக வச­தி­ய­ளிப்பு அலு­வ­ல­க­மா­னது 1980 ஆம் ஆண்டு கனே­டிய அர­சாங்­கத்தால் ஸ்தாபிக்­கப்­பட்ட அரச சார்­பற்ற நிறு­வ­ன­மாகும். கன­டா­வு­ட­னான வாணி­பத்தின் ஊடாக குறிப்­பி­டத்­தக்க பொரு­ளா­தார அபி­வி­ருத்­தி­களை உரு­வாக்கி வாழ்க்­கையை அபி­வி­ருத்தி செய்­வது அந்த நிறு­வ­னத்தின் குறிக்­கோ­ளா­க­வுள்­ளது.

 அந்த நிறு­வனம் அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களைச் சேர்ந்த 1,200 க்கு மேற்­பட்ட ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கும் 1,200 க்கு மேற்­பட்ட வர்த்­தக ஆத­ரவு நிறு­வ­னங்­க­ளுக்கும் 1,600 க்கு மேற்­பட்ட கனே­டிய இறக்­கு­ம­தி­யா­ளர்­க­ளுக்கும் வர்த்­த­கத்தை சாத்­தி­ய­மாக்கிக் கொள்ள உத­வி­யுள்­ளது.

அதே­ச­மயம், இலங்கை ஏற்­று­மதி அபி­வி­ருத்தி சபை கனே­டிய வர்த்­தக வச­தி­ய­ளிப்பு அலு­வ­ல­கத்தின் ஏற்­று­மதி அபி­வி­ருத்தி செயற்­பா­டு­களில் அங்கம் வகிக்கும் முக­மாக அந்த அலு­வ­ல­கத்­துடன் உடன்­ப­டிக்­கையை செய்­து­கொண்­டுள்­ளது.

 அந்த உடன்­ப­டிக்­கை­யி­னூ­டாக கனே­டிய வர்த்­தக வச­தி­ய­ளிப்பு அலு­வ­லகம் கடந்த 2015 ஆம் ஆண்­டி­லி­ருந்து எதிர்­வரும் 2018 ஆம் ஆண்டு வரை­யான 4 வருட காலத்­துக்கு இலங்­கைக்கு ஆத­ர­வ­ளிக்­க­வுள்­ளது.

 இந்­நி­லையில் இலங்­கைக்­கான கனே­டிய உயர்ஸ்­தா­னிகர் எச். ஈ. ஷெல்லி விற்­றிங்கின், தனது உத்­தி­யோ­க­பூர்வ அலு­வ­ல­கத்தில் ஏற்­று­ம­தி­யா­ளர்கள் பிர­தி­நி­திகள் குழுவை நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை சந்­தித்த போது, இந்த வர்த்­தக மற்றும் ஊக்­கு­விப்பு செயற்­பா­டுகள் இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டை­யி­லான வாணிப வளர்ச்சி மற்றும் பொரு­ளா­தார கூட்­டு­ற­வுக்கு ஆத­ரவு வழங்கும் வகையில் அமைந்­துள்­ள­தாக தெரி­வித்தார்.

“நாம் சிறிய மற்றும் நடுத்­தர வர்த்­தக ஏற்­று­ம­தி­களை பொரு­ளா­தார வளர்ச்­சியின் இயந்­தி­ரங்கள் என அழைக்­கிறோம். சிறிய மற்றும் நடுத்­தர தொழில் முயற்­சி­க­ளுக்கு ஆத­ர­வ­ளிப்­பது இலங்கை பொரு­ளா­தா­ரத்­துக்கு நெருக்­க­டி­யா­க­வுள்ள தொழில்­வாய்ப்­பு­களை உரு­வாக்­குதல், பொரு­ளா­தாரம் மற்றும் ஏற்­று­மதி பல்­வ­கை­மைக்கு உத­வு­வ­தா­க­வுள்­ளது. கனே­டிய வர்த்­தக வச­தி­ய­ளிப்பு அலு­வ­ல­கத்­தி­னூ­டாக கனே­டிய சந்­தைக்குள் தம்மை விரி­வு­ப­டுத்திக் கொள்ள எதிர்­பார்த்­துள்ள மேற்­படி முக்­கி­யத்­துவம் மிக்க ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு கனடா ஆத­ர­வ­ளித்து வரு­கி­றது. நீங்கள் அனை­வரும் சியல் வாணிப கண்­காட்­சியில் மிகச் சிறப்­பாக செயற்­பட வாழ்த்­து­வ­துடன் அதற்குப் பதி­லீ­டாக உங்­களால் பெற்­றுக்­கொள்­ளப்­படும் வாய்ப்­புகள் குறித்து கேட்­ட­றி­யவும் எதிர்­பார்த்­துள்ளோம்" என எச்.ஈ.ஷெல்லி விற்­றிங்கின் மேலும் தெரி­வித்தார்.

அதே­ச­மயம், கனே­டிய அர­சாங்­கத்தின் வாணிப துறை­யி­ன­ரது வலைப்­பின்­ன­லாக வாணிப ஆணை­யாளர் சேவை அமைப்பு விளங்­கு­கி­றது. இலங்­கையில் அந்த அமைப்பு, கனே­டிய வாணிப வசதியளிப்பு அலுவலகம் மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை போன்ற இரு நாடுகளுக்குமிடையிலான வலையமைப்புகளை ஸ்தாபித்தலுடன் கனேடிய பொருட்கள் மற்றும் சேவைகளை ஊக்குவிக்கவும் புத்துருவாக்கத்திற்கும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கு வசதியளிக்கவும் இலங்கை அரசாங்கம் மற்றும் தனியார் துறையினருடன் இணைந்து செயற்படுகிறது என கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-04-29#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.