Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிக்குளம் காணிகளை விடுவிக்க உத்தரவு

Featured Replies

முள்ளிக்குளம் காணிகளை விடுவிக்க உத்தரவு
 
 

article_1493465292-land.jpgமுள்ளிக்குளம் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க கடற்படைத் தளபதி உத்தரவிட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/195692/ம-ள-ள-க-க-ளம-க-ண-கள-வ-ட-வ-க-க-உத-தரவ-#sthash.jC013YMN.dpuf

 

 

 

முள்ளிக்குளம் மக்கள் காணிகளை கடற்படையினர் விடுவித்தனர்:-

mulli.jpg

கடற்படையினர் வசமிருந்த முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு காணிகள் இன்று (சனிக்கிழமை) விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்படையின் கட்டளைத் தளபதி தலைமையில் முள்ளிக்குளம் கடற்படை முகாமில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற காணி விடுவிப்பு குறித்த உயர்மட்ட கலந்துரையாடலை தொடர்ந்து  காணிகள் விடுவிக்கப்பட்டதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சின் அவசர கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரம் இரு வாரங்களுக்குள் அவசர கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முள்ளிக்குளம் மக்களின் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முள்ளிக்குளம் மக்கள் இன்று முதல் தமது சொந்த நிலங்களில் குடியேற முடியும் என  கடற்படைத்தளபதி தெரிவித்துள்ளார். எனினும் முள்ளிக்குளம் மக்கள் நாளை முள்ளிக்குளம் ஆலயத்தில் திருப்பலியை ஒப்புக்கொடுத்த பின் தமது சொந்த நிலங்களில் குடியமரவுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/25435

  • தொடங்கியவர்

மன்னாரில் கடற்படையிடமிருந்த பொதுமக்களின் காணிகள் திரும்ப கையளிப்பு

 

மன்னார் மாவட்டம் முள்ளிக்குளம் கிராமத்தின் பொதுமக்களுடைய காணிகளை கடற்படையினர் சனியன்று ஊர் மக்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள், மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை உள்ளிட்ட மதகுருக்கள் அடங்கிய கூட்டத்தில் கையளித்திருக்கின்றனர்.

காணி கைளிப்பு நிகழ்வு Image caption38 நாள் போராட்டத்திற்கு பின் காணிகளை பெற்ற மன்னார் மக்கள்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் காணி கையளிப்பு நிகழ்வு குறித்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், உடனடியாக 25 - 30 குடும்பங்கள் தமது சொந்தக் காணிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமையே குடியேறவுள்ளதாகத் தெரிவித்தார்.

காணி கைளிப்பு நிகழ்வு

ஆயினும் கடற்படையினர் பொதுமக்களுக்குச் சொந்தமான 22 வீடுகளில் வசித்து வருவதாகவும், இவர்களுக்கான மாற்று வசதிகள் செய்யப்பட்டதும் 6 மாத காலத்தில் அந்த வீடுகளையும் அவர்கள் கையளிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து 250 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ள போதிலும், தற்போது 25 - 30 குடும்பங்களே மீள்குடியேறும் நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏனைய குடும்பங்கள் படிப்படியாகத் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காணி கைளிப்பு நிகழ்வு

இதேவேளை மீள்குடியேறுகின்ற குடும்பங்களுக்கென உடனடியாக 80 தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் உறுதியளித்திருக்கின்றார்.

மீள்குடியேறும் மக்கள் தமது மீன்பிடி தொழிலையும் விவசாய முயற்சிகளையும் மேற்கொள்வது தொடர்பில் நிலைமைகளை ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தப் பிரதேசத்தின் கடற்படைத்தளபதி மற்றும் ஊர் மக்கள் முக்கிய பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

முள்ளிக்குளம் காணிகள் விடுவிக்கப்படுவதாக கடற்படையினர் அறிவித்துள்ளதையடுத்து, காணி விடுவிப்புக்காக கடந்த 38 தினங்களாக அந்த ஊர் மக்கள் நடத்தி வந்த போராட்டம் கைவிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.bbc.com/tamil/sri-lanka-39755986

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.