Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிவிவகார அமைச்சருடன் பிணையெடுக்க சென்ற சிறிதரன் ?(ஆதாரங்கள்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிவிவகார அமைச்சருடன் பிணையெடுக்க சென்ற சிறிதரன் ?(ஆதாரங்கள்)

17022403_1345112362202078_4587334308569919241_n.jpg
இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொடுக்கும்
முக்கிய தீர்மானத்துக்கு இலங்கை அரசுக்கு சாதகமாக வாக்களிக்குமாறு கோருவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரசல்ஸ் சென்றுள்ளார் தெரியவருகின்றது.
 
இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹார்சா டி சில்வா தலைமையிலான இலங்கை குழுவுடன் பிரசல்ஸ் சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனோ அல்லது த.தே.கூட்டமைப்போ இது பற்றி எந்த செய்தியையும் வெளியிடவில்லை என்பதோடு பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் த.தே.கூட்டமைப்பை பற்றி எழுதுவதற்கு பின்னடிப்பதையும் தமிழ்கிங்டொம் இங்கு சுட்டிக்காட்டுகின்றது.
 
இது தொடர்பாக முகநூலில் பல செய்திகள் வெளியாகியிருந்தபோதும் முன்னணி இணையங்கள் எவையும் இதனை பிரசுரிப்பதற்கு பின்னடிப்பதோடு இது தொடர்பான ஆதாரங்களை சிங்கள இணையத்தளமொன்று முதல்முதலில் வெளியிட்டுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிடுகின்றோம்.
unnamed.jpg
 




இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக இதுவரை தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்பட வேண்டும் இலங்கை முன்னோக்கி செல்கிறது என பிரச்சாரம் செய்யும் நோக்குடனேயே இலங்கை வெளிவிவகார பிரதி அமைச்சருடன் இந்த குழு சென்று பேச்சுவார்த்தை நடாத்தியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு தாமதம் காட்டி வருகின்றது; மேலும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும் வர்த்தக வலயங்களில் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன போன்ற விடயங்களை முன்வைத்து ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் 52 பேர் இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மறுக்குமாறு கோரியுள்ளனர்.
 
EU-GSP-harsha-de-silva.jpg
 
EU-GSP.jpg
 
unnamed%2B%25282%2529.jpg
 
unnamed%2B%25284%2529.jpg
 
unnamed.jpg
 
இலங்கை அரசு சார்பில் பெல்ஜியத்திற்கு சென்றுள்ள குழுவின் தலைவரான ஹார்சா டி சில்வா ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க தான் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தங்களுக்கு பரந்த ஆதரவு இருந்ததாகவும், சில அமைப்புகள் மாறுபட்ட அபிப்பிராயத்தைக் கொண்டிருந்த போதும், அவர்களோடு தானும் தனது குழுவினரும் தொடர்புகொண்டு; உரையாடி; அவர்களுக்கு அரசின் நல்லாட்சி, ஜனநாயகம், சட்டம் ஒழுங்கு, மனித உரிமைகள், மீளுறவை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களில் அரசு மேற்கொண்ட முன்னேற்றமான நடவடிக்கைகளை எடுத்துக்கூறி; அவர்களை வென்றெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
 
இம்முறை ஐ.நாவில் பேசியபிரதி வெளிவிவகார அமைச்சரின் உரை
 
 
 
இதே சமயம் வழமையாக சிறிதரனை அழைக்கும் புலம்பெயர் சமூக ஆதரவு அமைப்புகள் பிரஸல்ஸில் இலங்கை அரசுக்கு ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டாம் என்ற போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ளனர். பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த அரசாங்கம் போன்ற அமைப்புகள் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்க வேண்டாம் என்ற போராட்டத்தை முன்னெடுக்கின்றன. பிரித்தானிய தமிழர் பேரவை இது தொடர்பான கண்காட்சி ஒன்றையும் ஏற்பாடு செய்துள்ளது.

http://www.tamilkingdom.com/2017/04/456_68.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.