Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கல்முனைத்தமிழர் விவகாரத்தில் அமைச்சர் ஹக்கீம் ஒத்துழைக்கவேண்டும்

Featured Replies

கல்முனைத்தமிழர் விவகாரத்தில் அமைச்சர் ஹக்கீம் ஒத்துழைக்கவேண்டும்

9740_1493616157_bngy.jpg

கல்முனைத்தமிழர் விவகாரத்தில் அமைச்சர் ஹக்கீம் ஒத்துழைக்கவேண்டும்!

இறக்காமம் மாயக்கல்லி மலை விவகாரத்தில் சம்பந்தன் ஜயா எவ்வாறு ஒத்துழைத்தாரோ அவ்வாறு கல்முனைத் தமிழ்ப்பிரதேச செயலக விவகாரத்தில் அமைச்சர் ஹக்கீம் ஒத்துழைக்கவேண்டும்.

இவ்வாறு தமிழ்மக்கள் விடுதலை இயக்கத்தின்(ரெலோ) உபதலைவரும் தமிழத்தேசியக்கூட்டமைப்பின் உயர்பீட உறுப்பினரும் கல்முனை மாநகசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான ஹென்றி மகேந்திரன் வெளியிட்டுள்ள மேதினச்செய்தியில் அறைகூவல் விடுத்துள்ளார்.

இன்று 1ஆம் திகதி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின ஊர்வலமும் கூட்டமும் அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ளது.அதனையொட்டி இம் மேதினச்செய்தியை ரெலோ உபதலைவர் ஹென்றிமகேந்திரன் வெளியிட்டுள்ளார்.

அம்பாறை மாவட்ட தமிழர்கள் மத்தியில் த.தே.கூட்டமைப்பு தங்களை கைவிட்டுவிட்டதா? என்ற சந்தேகம் எழத்தொடங்கியுள்ளது.எனவே இன்றைய மேதினக்கூட்டத்தில் தமிழ்த்தலைமைகள் அம்பாறை மாவட்ட தமிழர்விவகாரம் தொடர்பாக பகிரங்கமாக தெளிவுபடுத்தவேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.


மேதினச் செய்தியில் அவர் மேலும்தெரிவித்திருப்பதாவது:

கடந்த 35வருட கால வரலாற்றைக்கொண்டது கல்முனைத்தமிழ்ப்பிரதேச செயலக விவகாரம்.1989இல் உப பிரதேசசெயலகமாக தரமுயர்த்தப்பட்டதன்பின்பு  பலகோணங்களில் பலரும் பகீரதப்பிரயத்தனம் எடுத்தபோதிலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளின் முட்டுக்கடைகளால் அது தரமுயர்த்தப்படாமல் இன்றுவரை இருந்துவருகின்றது.


கல்முனைத்தமிழ்மக்களின் நீண்டகாலகோரிக்கையாக இருந்துவருகின்ற இத்தமிழ்ப்பிரதேச செயலகம் விவகாரத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பிரதான தலைமைகள் மௌனியாக இருந்துவருகின்றார்கள் என்ற குற்றசாட்டும் தமிழ்மக்களிடையே இருந்துவருகின்றது.

எனவே இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதினக்கூட்டம் அக்கரைப்பற்றில் நடைபெறும்போது தமிழர்தலைமைகள் இதனை பகிரங்கமாக வெளிப்படுத்தவேண்டும்.

நகரஅபிவிருத்தித்திட்டத்திற்கு நாம் எதிரானவர்களல்ல!

கல்முனை நகரஅபிவிருத்தித்திட்டத்திற்கு நாம் ஒருபோதும் எதிரானவர்களல்ல. ஆனால் புதிய நகரம் அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் அடையாளங்களை அடியோடு கிள்ளியெறிய புனையும் சதித்திட்டத்திற்கு ஒருபோதும் நாம் அனுமதிக்கமாட்டோம்.

இப்புதிய திட்டத்தினால் தமிழர்களின் பூர்வீகம் சனத்தொகைச்செறிவு இல்லாமலாக்கப்படுகின்றன. தமிழர்களின் காணி சூறையாடப்படுகின்றது. இதனை நாம் அனுமதிக்கலாமா?

மூடுமந்திரமாக அனைத்து செயற்பாடுகளையும் முஸ்லிம் தரப்பினர் செய்துவருவது எமக்குள்ள நியாயமான சந்தேகங்களை மேலும்வலுப்படுத்திநிற்கின்றது.

வடக்கு கிழக்கு இணைப்பு இல்லாத தீர்வை நாம் ஒருபோதும் ஏற்கோம்!

வடக்கு கிழக்கு பிரிப்பை  நாமோ தமிழ்த்தேசியக்கூட்டமைப்போ பலமாக எதிர்ப்போம்.வடக்கு கிழக்கு இணைப்பு இல்லாத எந்த தீர்வையும் தமிழ்மக்களாகிய நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.


இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து எமது தமிழ்மக்கள் ஆணைவழங்கிவந்தது வடகிழக்கு இணைந்த தாயகத்திற்கே தவிர பிரிப்பிற்கல்ல.

வடக்குகிழக்கு என்பது தமிழ்பேசும் மக்களின் பூர்வீக தாயகம். வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வையே சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழ்மக்கள் கோரிவருகின்றனர்.
கடந்த 70 வருட காலமாக அதற்கே அவர்கள் ஆணை வழங்கிவருகின்றனர்.

இதனை மறுதலிக்கவோ சாத்தியமல்ல என்று சொல்வதற்கோ த.தே.கூட்டமைப்பிலுள்ள யாருக்கும் உரிமையில்லை.

 

எனவே  இதுவிடயத்தில் விட்டுக்கொடுப்பிற்கிடமில்லை. இணைவதால் தமிழ்பேசும் சமுகங்களிற்கு நன்மையே கிடைக்கும்.பிரிந்த அலகில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எந்த நன்மையும் கிட்டப்போதில்லை.

ஜக்கியஇலங்கைக்குள் இணைந்த வடக்குகிழக்கில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வையே நிரந்தரத்தீர்வாக நாம் ஏற்போம்.
உள்ளுராட்சி சபை பிரிக்கமுடியாது!
கல்முனை மாகரசபையை 4ஆகப்பிரிக்க அமைச்சர் றிசாட்முஸ்தீபு எடுத்துள்ளதாக அறிகிறோம். அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்.
கல்முனை மாகரசபை எல்லைக்குள் வருகின்ற சாய்ந்தமருதிற்கு தனிப்பிரதேசபை வழங்குவதில் எவ்வித ஆட்சேபனையும் எமக்கில்லை. அது நியாயமானதும்கூட. எமது ஆதரவு எப்போதும் உண்டு.
ஆனால் மீதிப்பிரப்பை 3ஆகப்பிரித்து தமிழர்களின் செறிவை கேள்விக்குறியாக்க அனுமதிக்கமாட்டோம். அது ஒன்றாகவே இருக்கவேண்டும்.

மாநகரசபை தமிழர்களுக்கு பாரபட்சம் !
கல்முனை மாநகரசபை தமிழ்மக்களைப்புறக்கணித்து செயற்பட்டுவருகின்றது. இது தொடர்பாக அண்மையில் எமது குழுவினர் அமைச்சர்களான ஹக்கீம் பைசர்முஸ்தபா முதலமைச்சர் நசீர்அகமட் உள்ளிட்டோரைச் சந்தித்து பேச்சுவாhர்த்தையீலீடுபட்டது. பலனாக மயான மதில் கட்டப்பட்டுவருகிறது.காவலாளி நியமனம் இடம்பெறவுள்ளது. நல்லது. நன்றிகள்.

எனவே இத்தகைய நல்லெண்ண நடவடிக்கைகள் தொடரவேண்டும். இரு இனங்களும் ஒத்துத்தான் வாழவேண்டும்.

எனவே இன்றைய மேதினத்தில் அதற்கான பிரதிக்ஞையை அனைவரும் இணைந்து  எடுப்போம்.வாரீர். என்றார்

http://battinaatham.com/description.php?art=9740

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.