Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மறுபடியும் மண் கவ்விய ஆஸ்திரேலியா

Featured Replies

இன்றைய ஒரு நாள் தொடர் ஆட்டத்திலும் நியூசிலாந்திடம் நடப்பு உலக சம்பியன்கள் மண் கவ்வியுள்ளார்கள். இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலியா அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 347 ஓட்டங்கள் குவித்திருந்தது. மனம் தளராத நியூசிலாந்து அணி ஒன்பது விக்கட் இழப்பிற்கு 49.3 ஓவர்களினல் 350 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது.

ஜானா

http://content-aus.cricinfo.com/nzvaus/eng...tch/251496.html

அருமையான செய்தி வேலையில் இருந்த படியால் பார்க்க முடியவில்லை :D

Edited by ஈழவன்85

அடுத்தடுத்து அடி வாங்கும் ஆஸ்திரேலிய அணி!

ஹாமில்டன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அபார வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு பேரிடியைக் கொடுத்துள்ளது.

கடந்த பல வருடங்களாக வெல்லவே முடியாத அணியாக, உலகின் அனைத்து அணிகளுக்கும் பெரும் சவாலாகவே விளங்கி வருவது ஆஸ்திரேலிய அணி.

எல்லா அணிகளும் எப்போதவது வெற்றி பெறும், ஆனால் ஆஸ்திரேலியா மட்டும் எப்போதாவது தோல்வி அடையும். ஆனால் இப்போது இங்கிலாந்தும், நியூசிலாந்து அணியும் மாறி மாறி ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு வைத்துள்ளன.

முதல் ஆப்பு இங்கிலாந்திடமிருந்து வந்தது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் பங்கேற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதின.

மொத்தம் உள்ள 3 போட்டிகளில் அடுத்தடுத்து இரு போட்டிகளில் இங்கிலாந்து வென்று ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. தொடரையும் வென்றது.

அடுத்த ஆப்பு நியூசிலாந்திடமிருந்து வந்தது. தற்போது ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் விளையாடின.

இதில் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து தோல்வி அடைந்து பெரும் அதிர்ச்சியை சந்தித்தது. முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்திலும், 2வது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா தோற்றது. இதன் மூலம் நியூசிலாந்து தொடரையும் அந்த அணி கேவலமாக பறிகொடுத்தது.

ஆஸ்திரேலிய அணியின் இந்த தொடர் தோல்வி உலகம் மழுவதும் உள்ள கி>க்கெட் ரசிகர்களுக்கு பெரும் வியப்பையும், அதிர்ச்சியையும் கொடுத்தன. ஆஸ்திரேலியாவா இது என்று கேட்கும் அளவுக்கு நிலைமை கேவலமாகிப் போயுள்ளது.

அணியின் தொடர் தோல்வி ஆஸ்திரேலியாவிலும் பேரரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் ஹாமில்டன் நகரில் 3வது ஒரு நாள் போட்டி நடந்தது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 346 ரன்களைக் குவித்து விளாசித் தள்ளியது. ஹைடன் 181 ரன்களைக் குவித்தார்.

ஆனால் அடுத்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி மிகவும் சிறப்பாக ஆடி வெற்றிக்குத் தேவையான ரன்களை 49.3 ஓவர்களில் பெற்று ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியாவுக்கு மகா அடியைக் கொடுத்தது.

இந்தவெற்றியின் மூலம் சேப்பல்ஹாட்லி கோப்பையை நியூசிலாந்து வென்றுள்ளது.

ஆஸ்திரேலிய அணி கடைசியாக ஆடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தத் தொடர் தோல்விகளால் பல வருடங்களாக இருந்து வந்த முதலிடத்திலிருந்து 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

விரைவில் தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் வெல்லும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படும் ஆஸ்திரேலிய அணிக்கு இப்படி ஒரு 'அசம்பாவிதம்' ஏற்பட்டிருப்பது ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2007/02/20/cricket.html

ஈழவா!! அவுஸ்ரேலியா அணி தோல்வியை தழுவிய ஆட்டங்களில் அணித்தலைவர், உப தலைவர், ஆரம்ப பந்து வீச்சாளர்கள் இருவர் மற்றும் முக்கிய நடுத்தர வரிசை ஆட்டக்காரர் இருவர் இப்படி பலர் பங்கு கொள்ளவில்லை அத்துடன் இந்த ஆட்டங்களுக்கு தலைமை தாங்கி அணியை வழி நடத்திய மைக்கல் ஹசி ஒரு புதிய வீரர் அவர் சிறந்த வீரர் என்றாலும் அனுபவம் அற்ற வீரர் தான் இன்றைய ஆட்டத்துக்கு அவர் அமைத்த அனுபவமற்ற களத்தடுப்பு வியூகங்கள் மற்றும் பந்து வீச்சாளர்களை அவர் பயன்படுத்திய முறை என்பன தான் அவுஸ்ரேலியா அணி 347 ஓட்டங்களை குவித்தும் தோல்வி அடைந்தமைக்கு காரணம்.

இந்த தோல்விகளை வைத்து அவுஸ்ரேலியா அணி பலம் குறைந்து விட்டது என்று எடை போட முடியாது. :D

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் பிரெட்லியைத் தவிர அவுஸ்திரெலியாவின் பந்துவிச்சாளர்களான மக்ராத், பிராக்கின்,வோட்சன், ரைட், கொக் ஆகிய 5 பந்துவீச்சாளர்களும் இருந்தும், நியூசிலாந்து அணியினர் 337 ஒட்டங்களினை வெற்றிபெறக்கூடியதாக இருந்தது. 3வது போட்டியில் மக்ராத்துக்குப் பதிலாக ஜோன்சன் விளாயாடினார். இப்போட்டியிலும் அவுஸ்திரெலியா அணியினர் தோல்வி அடைந்துள்ளார்கள். அவுஸ்திரெலியாப் பத்திரிகையான டெய்லி ரெலிகிராப், சிட்னி மொனிங் கரல் போன்றவை பொன்ரிங்க், கில்கிறிஸ்,சைமன்ற், கிளாக் போன்றவர்கள் விளையாடாததினால் தான் முதலாவது போட்டியில் துடுப்பாட்டம் பிரகாசிக்கவில்லை என்று சொன்னாலும் 2வது 3வது போட்டியில் 300க்கு மேல் அடித்திருந்தும் பந்து வீச்சில் சிறந்த பந்துவீச்சாளர்கள் விளையாடியும் தோல்வி கண்டுள்ளது என்று குறிப்பிட்டு அவுஸ்திரெலியாவின் பந்துவீச்சே இப்பொழுது கவலைக்குறியதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் அவுஸ்திரெலியா உலகக்கிண்ணப்போட்டியில் விளையாட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டிகளில் மக்ராத்,பிரெட்லி, பொன்றிங், கில்கிறிஸ், கிளாக் போன்றவர்கள் விளையாடியும் அவுஸ்திரெலியா தோல்வி அடைந்துள்ளது. இதனால் இம்முறை உலகக்கிண்ணப்போட்டியில் 8 நாடுகளுக்கு வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக நியூசிலாந்து அணித்தலைவர் பிளமிங் தெரிவித்துள்ளார்.

the top four successful run-chases in ODIs have all come against Australia.

438-9 (49.5 overs) South Africa v Australia Johannesburg 2005/06

350-9 (49.3 overs) New Zealand v Australia Hamilton (Seddon) 2006/07

340-5 (48.4 overs) New Zealand v Australia Auckland 2006/07

332-8 (49 overs) New Zealand v Australia Christchurch 2005/06

Australia's defeat at Hamilton was their fifth in a row. The last time they suffered such a dismal run was nine years ago, when South Africa and England combined to beat them in five successive matches

  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப்போட்டியில் நியூசிலாந்தில் சிறந்த வேகப்பந்தாளர் பொன்ட்(இவர் முதல் போட்டியின் போது சிறந்த ஆட்டக்காரர் ஆன விருதினைப் பெற்றவர்), சிறந்த சுழல் பந்து வீச்சாளர் வெற்றோரியும் விளையாடவில்லை. சிறந்த விளையாட்டு வீரரான ஒரம் இத்தொடரில் காயம் காரணமாக விளையாடவில்லை.

அவுஸ்திரெலியாவுடன் இங்கிலாந்து விளையாடிய இறுதிப்போட்டிகளில் இங்கிலாந்து அணித்தலைவர் வொர்ண், சிறந்த விளாயாட்டு வீரர் பீற்றசன்(இவர் இத்தொடரில் காயம் காரணமாக விளையாடவில்லை), பந்துவிச்சாளர்கள் அண்டர்சன், லூயிஸ் போன்றவர்களும் விளையாடவில்லை.

என்றாலும் அவுஸ்திரெலியா அணி தான் உலகக் கிண்ணப்போட்டியில் வெல்வதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக பல துடுப்பாட்டத்துடன் சம்பந்தபட்ட ஊடகங்கள் தெரிவித்து வருகிறது.

8 நாடுகளும் பலமாக இருப்பதினால் என்னால் யாழ்களப் போட்டியில் எப்படி பதில் அளிப்பது என்று தெரியாமல் முழிக்கிறேன். என்றாலும் மார்ச் 13 க்கு முதல் பதில் அழிப்பேன்

  • தொடங்கியவர்

இன்றைய ICC தர வரிசைப் படி :

1) தென் ஆபிரிக்கா

2) ஆஸ்திரேலியா

3) நியூசீலாந்து

4) பாக்கிஸ்தான்

5) இந்தியா

6) இலங்கை

நாடுகள் உள்ளது.

ஜானா

Edited by Janarthanan

நியூசிலாந்து - அவுஸ்ரேலிய அணிகளிற்கிடையிலான மூன்று ஆட்டங்களையும் காணும் வாய்ப்புக் கிடைத்தது. அவுஸ்திரேலியாவில் சில முன்னணி வீரர்கள்இன்மையினால் சில பலவீனங்கள் இருந்தது உண்மைதான். ஆனால் வெற்றிக்காக நியூசிலாந்து வீரர்களின் உழைப்பு கடுமையாக இருந்தது. ஒருவர் விட்டால் இன்னொருவர் வந்து சிறப்பாக விளையாடி வெற்றிக்காக உழைத்தனர்.

முதலாவது போட்டியில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிட்டியதன் மூலம் விக்கட் இழப்பின்றி 20 வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலியாவை வென்ற அணி என்ற பெருமையை நியூசிலாந்து பெற்றுள்ளது.

நியூசிலாந்திற்குக் கிடைத்த இந்த வெற்றிகளின் மூலம் உலகக் கோப்பைத் தொடரில் அந்த அணியும் கடும் சவாலாக விளங்கும்.

Edited by மின்னல்

இம்முறை உலகக்கிண்ணத்தினைப் பெறப்போகும் அணி எது என நினைக்கிறீர்கள்?. யாழ்கள உறுப்பினர்கள் பங்கேற்கும் போட்டியில் கலந்து கொண்டு நீங்களும் பதில் எழுதலாமே. போட்டியினைப் பார்க்க

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=239742

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.