Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைய செக்ஸ் அடிமைகள்: `லென்ஸ்' திரைப்படம் சொல்லும் உண்மை என்ன?

Featured Replies

இணைய செக்ஸ் அடிமைகள்: `லென்ஸ்' திரைப்படம் சொல்லும் உண்மை என்ன?

பிரமிளா கிருஷ்ணன்பிபிசி தமிழ்
 
 

ஸ்கைப் வழியாக பாலியல் உறவை தேடும் நபர், தனது நிஜ வாழ்க்கையை விட ஸ்கைப் வாழ்க்கையை வாழத் துடிக்கிறார். அது அவரது உண்மை வாழ்க்கையை எவ்வாறு திசை மாற்றுகிறது என்பதுதான் மே 12ம் தேதி வெளியாகவுள்ள 'லென்ஸ்' என்ற திரைப்படத்தின் சாராம்சம்.

இணைய பாலியல் வாழ்க்கை பற்றி பேசும் லென்ஸ் படத்தின் டீசர் காட்சிபடத்தின் காப்புரிமைYOUTUBE Image captionஇணைய பாலியல் வாழ்க்கை பற்றி பேசும் லென்ஸ் படத்தின் டீசர் காட்சி

இயக்குநர் மற்றும் கதையின் நாயகனாக நடித்துள்ள ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், இணையத்தில் பாலியல் காட்சிகள், இணையத்தில் ஏற்படுத்திக்கொள்ளும் பாலியல் தொடர்புகள், தொழில்நுட்ப வெளியில் தொலைந்து போகும் தனிநபர் உரிமையை பேசுபொருளாக்கியுள்ளார்.

எல்லோரிடமும் உள்ள ஸ்மார்ட்போன், கணினி தொழில்நுட்பம் போன்றவை வாழ்க்கையை எளிமையாக்குகிறது என்றாலும், அது எவ்வளவு சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது என்ற மறுபக்கத்தை தனது படம் காட்டுகிறது என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

இணையத்தில் பாலியல் உறவுகள், பரிமாறிக்கொள்ளப்படும் தகவல்கள், பாதுகாப்பின்மை பற்றிப் பேசும் இந்த படத்தை பதின்ம வயதினர் மற்றும் அவர்களது பெற்றோர் நிச்சயம் பார்க்க வேண்டும் என்கிறார் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

அந்தரங்கத்தை வியாபாரமாக்கும் அவலம்

தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் லென்ஸ் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பரிசுகளை வென்ற பிறகு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இணையத்தில் பாலியல் காட்சிகளை வெளியிடும் நபர்களை கேள்வி கேட்காமல், காட்சியில் தோன்றும் நபர்களின் நடத்தையை கேள்வி கேட்கும் போக்கை மாற்றவேண்டும் என்கிறார் தமிழில் படத்தை வெளியிடும் இயக்குநர் வெற்றிமாறன்.

''தனி நபர்களின் படங்கள், அந்தரங்க காட்சிகளை படம் எடுப்பது, அதை வைத்து ஏமாற்றுவது போன்ற செயல்கள் மிக சாதாரணமாகிவிட்டன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் படம் இது,'' என்கிறார் வெற்றிமாறன்.

இணைய பாலியல் வாழ்க்கை பற்றி பேசும் லென்ஸ் படத்தின் டீசர் காட்சிபடத்தின் காப்புரிமைYOUTUBE Image captionஇணைய பாலியல் வாழ்க்கை பற்றி பேசும் லென்ஸ் படத்தின் டீசர் காட்சி

நிஜ வாழ்க்கையில் லென்ஸ் பட நாயகன்கள்

லென்ஸ் பட நாயகனை போல நிஜ வாழ்க்கையில் இணைய உலகத்தில் பாலியல் வாழ்க்கையை வாழும் நபர்கள் என்ன ஆகிறார்கள்?

பதில் தருகிறார் பெங்களுருவில் உள்ள தேசிய மனநல சுகாதார மற்றும் நரம்பியல் மருத்துவமனையைச் சேர்ந்த மனோஜ் குமார் சர்மா.

 

இணையப் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை குணப்படுத்தும் சிறப்பு மையத்தில் பணிபுரியும் மருத்துவர் மனோஜ் குமார் சர்மா, ''பெரும்பாலானவர்களுக்கு தங்களது மன உளைச்சலை தீர்க்கும் வழியாக பாலியல் காட்சிகளை பார்க்கும் பழக்கம் தொடங்குகிறது. நாளடைவில் அந்த காட்சிகளை பார்க்க முடியாத போது, அதுவே மனநிலை பாதிப்பாக அமைந்துவிடுகிறது,'' என்கிறார்.

சமீபத்தில் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த ஐந்து நபர்களும் அதிக சம்பளம் ஈட்டும் வேலையில் உள்ளவர்கள், திருமணமானவர்கள், 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றார்.

இணைய பாலியல் வாழ்க்கை பற்றி பேசும் லென்ஸ் படத்தின் டீசர் காட்சிபடத்தின் காப்புரிமைYOUTUBE

''சுரேஷ்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் முதலில் மன உளைச்சலில் இருந்து விடுபட பாலியல் காட்சிகளை பார்த்தார். பின்னர், வீட்டில் தனியாக இருந்த சமயங்களில் பாலியல் காட்சிகளைப் பார்த்தார். அடுத்து வார இறுதி நாட்களில் அதிகமாக பார்ப்பது, வேலை அதிகம் இல்லாத நேரத்தில் பார்த்து உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருப்பது என பழக்கம் அதிகரித்து அடிமையாகிவிட்டார்,'' என்றார்.

இணைய பாலியல் வாழ்க்கை பற்றி பேசும் லென்ஸ் படத்தின் டீசர் காட்சிபடத்தின் காப்புரிமைYOUTUBE

''சிறிது நாட்களில் பணியிடத்தில் கூட சுரேஷுக்கு பாலியல் காட்சிகளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. தனது மனைவியிடம் இருந்து வெகுநாட்கள் விலகி இருந்தார். தூங்குவதற்கு முன் பார்ப்பது, சாப்பிடுவதற்கு முன் பார்ப்பது என முற்றிய நிலையில், மூன்று மணி நேரம் தொடர்ந்து பார்ப்பது என்ற நிலைக்கு போனார். ஒரு நாள் அவரது மனைவிக்கு தெரிய வந்தது. அதன் பின்னர்தான் இங்கு அழைத்துவரப்பட்டார்,'' என்றார் ஷர்மா.

 

''சுரேஷுக்கு நான்கு முதல் ஆறு மாதங்கள் சிகிச்சை கொடுத்தோம். ஆனால் சிகிச்சை மட்டுமே போதாது. அவரது சுயகட்டுப்பாடு மட்டுமே அவரை குணப்படுத்தும் என்று கூறினோம்,'' என்றார் ஷர்மா.

இணைய பாலியல் அடிமை பழக்கத்தில் இருந்து மீளவேண்டுமா?

உங்கள் அன்றாட வாழ்க்கையில் உங்கள் நண்பரோ, உங்கள் குடும்ப உறுப்பினரோ அல்லது நீங்களோ கூட இணையத்தில் பாலியல் காட்சிகளுக்கு அல்லது பாலியல் உறவுகளுக்கு அடிமைப்பட்டிருந்தால் செய்ய வேண்டியது என்ன என்பதை விளக்குகிறார் சென்னையை சேர்ந்த பாலியல் மருத்துவ நிபுணர் காமராஜ்.

இணைய பாலியல் வாழ்க்கை பற்றி பேசும் லென்ஸ் படத்தின் டீசர் காட்சிபடத்தின் காப்புரிமைYOUTUBE

''முதலில் வீட்டில் வை-பை(wifi) வசதியை நிறுத்திவையுங்கள். தேவையான சமயங்களில் மட்டுமே இணையத்தை பயன்படுத்துங்கள். சிகிச்சைகள் மட்டுமே தீர்வாகாது. மன உறுதியுடன் உங்களது நிஜ வாழ்க்கைத் துணையை நாடுங்கள். சுயகட்டுப்பாடு மட்டுமே உங்களை இணையத்தில் பாலியல் உறவுகளை நாடும் எண்ணத்தை காப்பாற்றும்,'' என்கிறார்.

தன்னிடம் ஆலோசனை பெற வந்த பாலியலில் ஆர்வமற்ற தம்பதிகள் பலர் இந்த பழக்கம் பற்றி பேச தயங்கியதாக தெரிவித்த காமராஜ், '' இணைய காட்சிகள், பெண்ணை முழுக்க ஒரு பாலுறவுக்கான பொருளாக காட்டுகின்றன. இதனால் தங்களது மனைவியை வன்மையாக நடத்தியவர்களும் உண்டு. இணையத்தில் வெளியாகும் காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டவை என்பதை உணரவேண்டும்,'' என்கிறார்.

http://www.bbc.com/tamil/india-39864318

  • தொடங்கியவர்

திரைப்பட விமர்சனம்: லென்ஸ்

 
 
 
திரைப்படம் லென்ஸ்
 
நடிகர்கள் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், ஆனந்த் சமி, மிஷா கோஷல், அஸ்வதி லால், ஆர்.கே. ராதாகிருஷ்ணன்
 
இயக்கம் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்
   
லென்ஸ் : சினிமா விமர்சனம்படத்தின் காப்புரிமைYOUTUBE

இணையத்தின் மூலமாக பிறரது அந்தரங்க படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்தால், அதன் விளைவுகள் எந்த அளவுக்கு விபரீதமாக இருக்கக்கூடும் என்பதைச் சொல்லும் படம்.

அரவிந்த் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்) இணையத்தில் நிர்வாண படங்களை பதிவேற்றம் செய்வது, பிற பெண்களுடன் வீடியோ மூலம் உறவாடுவதில் மூழ்கிக்கிடக்கும் ஓர் அடிமை. ஒரு நாள் புதிதாக ஒரு பெண்ணிடமிருந்து ஃபேஸ்புக்கில் அழைப்புவர, அந்தப் பெண்ணுடன் உரையாட ஸ்கைப் வீடியோவை ஆன் செய்கிறான் அரவிந்த். ஆனால், உண்மையில் அழைப்பு யோகன் (ஆனந்த் சமி) என்ற ஒரு ஆணிடமிருந்து வந்தது என்பது அப்போதுதான் தெரிகிறது. யோகன் தான் தற்கொலை செய்யப்போவதாகவும், அதனை அரவிந்த் ஸ்கைப் மூலம் பார்க்க வேண்டுமென்றும் கூறுகிறான். யோகனுக்கும் அரவிந்திற்கும் என்ன தொடர்பு, யோகன் இப்படிச் செய்வதற்கான காரணம் என்ன என்பது மீதிக் கதை.

நிஜ வாழக்கையை பிரதிபலிக்கும் 'லென்ஸ்'

நள்ளிரவில், ஒரு பெண்ணுடன் நிர்வாணமாக அரவிந்த் உரையாடுவதில் துவங்குகிறது படம். அடுத்த சில காட்சிகளிலேயே மடமடவென திருப்பம் ஏற்பட 20 நிமிடங்களுக்குள்ளேயே த்ரில்லராக மாறி, பரபரக்க வைக்கிறது.

லென்ஸ் : சினிமா விமர்சனம்படத்தின் காப்புரிமைYOUTUBE

ஆபாச படங்களை எடுப்பது, பதிவேற்றம் செய்வது, அடையாளம் தெரியாத நபர்களுடன் அந்தரங்கமாக வீடியோ மூலம் உறவாடுவது என்பதைப் பின்னணியாக வைத்து, இவ்வளவு துல்லியமான தகவல்களுடன் வெளியாகியிருக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் (தமிழ், மலையாளம், ஆங்கிலம் மூன்று மொழிகளிலும் எடுக்கப்பட்ட படம் இது).

லென்ஸ் : சினிமா விமர்சனம்படத்தின் காப்புரிமைYOUTUBE

சிறிது தவறினாலும் ஒரு செக்ஸ் படமாகக் கருதப்படக்கூடிய வாய்ப்புள்ள ஒரு கருவை எடுத்துக்கொண்டு, அதனை த்ரில்லராக மாற்றுவது உண்மையிலேயே ஒரு சவாலான காரியம். அதில் பெருமளவு வெற்றியும் கிடைத்திருக்கிறது.

 

அரவிந்த், யோகன், ஏஞ்சல், ஸ்வாதி, சில காவல்துறையினர் என மிகக் குறைவான கதாபாத்திரங்களே படத்தில் இருப்பதால் சில சமயங்களில் சலிப்புத்தட்டினாலும் ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல சினிமா அனுபவத்தைக் கொடுக்கிறது லென்ஸ்.

லென்ஸ் : சினிமா விமர்சனம்படத்தின் காப்புரிமைYOUTUBE

இடைவேளைக்குப் பிந்தைய சில காட்சிகள், குறிப்பாக யோகனுக்கும் அவனது மனைவி ஏஞ்சலுக்கும் இடையிலான காட்சிகள் சற்று குறைவாக இருந்திருக்கலாம். பின்னணி இசையும் சற்று இயல்பாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டிருப்பதால், சமயங்களில் எந்த இடத்தில் கதை நடக்கிறது என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. அதேபோல சில க்ளோஸ் - அப் காட்சிகளில் உதட்டசைவும் வசனமும் பொருந்தவில்லை. இவை மட்டுமே இந்தப் படத்தில் சுட்டிக்காட்டத்தக்க சிறு குறைகள்.

 

பாலியல் சார்ந்த படங்களை இணையத்தில் தொடர்ந்து பார்த்து அதற்கு அடிமையாவது, மெய்நிகர் (Virtual) வாழ்க்கையிலேயே மூழ்கிக் கிடப்பது போன்றவை சம்பந்தப்பட்ட நபர்களின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், முன்பின் அறியாதவர்களின் வாழ்வையும் எப்படிச் சீரழிக்கக்கூடும் என்பதை சுட்டிக்காட்டுவதே இயக்குனரின் நோக்கம். அதில் அவருக்கு முழு வெற்றி கிடைத்திருக்கிறது.

 

http://www.bbc.com/tamil/arts-and-culture-39895367

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.