Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையுடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு தீவிரம் காட்டும் சீனா

Featured Replies

இலங்­கை­யு­ட­னான சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கைக்கு தீவிரம் காட்டும் சீனா

 

(பா.ருத்­ர­குமார்)

இலங்­கை­யுடன் புதிய சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தங்­களை மேற்­கொள்­வது தொடர்பில் கலந்­தா­லோ­சித்து வரு­வ­தாக சீனாவின் வர்த்­த­கத்­துக்­கான துணை அமைச்சர் கியான் கெமீங் தெரி­வித்­துள்ளார்.

மேலும் சீனா சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தங்கள் தொடர்­பாக 20க்கும் மேற்­பட்ட நாடு­க­ளுடன் பேச­்­சு­வார்த்தை நடத்த திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பாக பட்­டுப்­பாதை மற்றும் வர்த்­தக மார்க்­கங்­களின் மத்­தியில் காணப்­படும் நாடு­க­ளு­ட­னேயே குறித்த ஒப்­பந்­தங்­க­ளுக்­கான பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும் எனவும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்ளார். 

இது தொடர்பில் அவர் ஊட­க­மொன்­றுக்கு மேலும் தெரி­விக்­கையில்,

சீனா தற்­போது வர்த்­தக மார்க்­கங்­களை அதி­க­ரிப்­பது தொடர்பில் அதிகம் கவனம் செலுத்­து­கின்­றது. இதன் முதற்­கட்­ட­மாக ஜோர்­ஜி­யா­வுடன் புதிய சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்தம் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்ளோம். இவ்­வாரம் சீனாவில் நடை­பெ­ற­வுள்ள பட்­டுப்­பாதை மற்றும் அபி­வி­ருத்­திக்­கான சர்­வ­தேச மாநாட்டில் மொங்­கோ­லி­யா­வுடன் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தத்தை மேற்­கொள்­வது தொடர்­பி­லான சாதக நிலை­மைகள் தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வுள்­ளன.

அது­மட்­டு­மல்­லாது நேபாளம், பங்­க­ளாதேஷ், மோல்­டோவா ஆகிய நாடு­க­ளு­டனும் புதிய ஒப்­பந்­தங்கள் இவ்­வ­ருட இறு­திக்குள் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்ளோம். சிங்­கப்பூர் பாகிஸ்தான் அர­சாங்­கங்­க­ளுடன் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தங்கள் மேற்­கொள்­வது தொடர்பில் இரு­த­ரப்பு புரிந்­து­ணர்வு பேச்­சு­வார்த்­தைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

மேலும் இலங்கை, இந்­தியா பங்­க­ளா தேஷ், லாவோஸ் நாடு­க­ளுடன் மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்ள ஒப்­பந்­தங்­க­ளுக்­கான நான்­காம்­ கட்ட பேச்­சு­வார்த்­தைகள் தற்­போது மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இத­ன­டிப்­ப­டையில் 2014 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2016 ஆம் ஆண்டு வரை சீனா­வினால் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தங்­களின் மூல­மாக சுமார் 20 ட்ரில்­லியன் வரு­மானம் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. 

எனவே சீனா சர்­வ­தேச நாடு­க­ளு­டனும் பிராந்­திய நாடு­க­ளு­டனும் இணக்­கப்­பாட்­டி­ன­டிப்­ப­டை­யி­லான வர்த்­தக ஒப்­பந்­தங்­களை மேற்­கொள்­கின்­றது. அதன்­மூ­லமே சீனாவின் ஏற்­று­மதி மற்றும் உள்­நாட்டு உற்­பத்­தியை அதி­க­ரிக்க முடியும். சீன கம்­ப­னிகள் மற்றும் பிராந்­திய நாடு­க­ளுக்­கி­டை­யி­லான ஒப்­பந்­தங்­களின் தன்மை மற்றும் நிதிக்­கொ­டுப்­ப­ன­வுகள் தொடர்­பி­லேயே இரு­நாட்டு புரிந்­து­ணர்வு பேச்­சு­வார்த்­தைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

அது­மட்­டு­மல்­லாது கட்­டு­மான வச­திகள் மற்றும் சுற்­று­லாத்­து­றையின் அபி­வி­ருத்­திக்­கா­கவும் சீன வர்த்தக அமைச்சு பல முதன்மையான திட்டங்களை மேற் கொண்டு வருகின்றது. அதன்படி நிதிசலா பொருளாதார மார்க்கங்களில் 50 பில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகை யும் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள கம்பனிகளுக்கிடையிலான வருமானம் 304.9 பில்லியன் அமெரிக்க டொலர் வரையி லும் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கின் றோம் என்றார்.

http://www.virakesari.lk/article/19918

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.