Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேபாளத்தின் ஜனாதிபதி இன்று இலங்கை வருகின்றார்..!

Featured Replies

நேபாளத்தின் ஜனாதிபதி இன்று இலங்கை வருகின்றார்..!

 

 

(லியோ நிரோஷ தர்ஷன்)

Nepalese_President_Bidhya_Devi_Bhandari.

ஐக்கிய நாடுகள் வெசாக் தினத்தின் இறுதி நாள் நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதற்காக நேபாளத்தின் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரியும் இன்று மாலை இலங்கை வருகின்றார்.

ஐக்கிய நாடுகள் வெசக் தினம் இதற்கு முன்னர் 13 தடவைகள் இடம்பெற்றுள்ளன. தாய்லாந்தில் 11 தடவைகளும் வியட்னாமில் 2 தடவைகளுமாக இடம்பெற்றுள்ளது. ஆனால் இலங்கையில் இடம்பெறுவது இதுவே முதற்தடவையாகும். 1999 ஆம் ஆண்டில் அப்போதைய வெளிவிவகார அமைச்சரான லக்ஷமன் கதிர்காமர் பௌத்த மதத்தில் இலங்கைக்குள்ள சிறப்புகளை எடுத்துரைத்து ஐநாவில் வலியுறுத்தினார். 

இதற்கமைவாக 2001 ஆம் ஆண்டு பொதுச் சபையில் ஐக்கிய நாடுகள் வெசக் தினத்தை இலங்கையில் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் கடந்தகால சூழ்நிலைகள் சாதகமாக அமையாத பட்சத்தில் தற்போது இந்த நிகழ்வு இலங்கையில் நடைப்பெறுகின்றது. 

இன்று இடம்பெறுகின்ற ஐக்கிய நாடுகள் வெசக் தின ஆரம்ப நிகழ்வுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துக் கொண்டுள்ளார். இறுதி நாள் நிகழ்வுகள் நாளை கண்டி தலதா மாளிகை வளாகத்தில் இடம்பெற உள்ளது. இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக நேபாளத்தின் ஜனாதிபதி பிந்தியா தேவி பண்டாரி கலந்துக் கொள்ளவுள்ளார். 

மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரச உயர் மட்டத்தினரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்ள உள்ளனர். மேலும் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 75 உலக நாடுகளின் பிரதிநிதிகள் வெசக் தின நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/19915

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.