Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பம்!

Featured Replies

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பம்!

 

கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் கொன்றுகுவிக்கப்பட்ட பேரவலத்தை நினைவுகூரும் வகையில் இன்றிலிருந்து எதிர்வரும் 18ஆம் நாள் வரை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

நினைவேந்தல் வாரத்தினை ஒற்றுமையாகவும், வன்முறையின்றியும் கடைப்பிடிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

2009ஆம் ஆண்டு மே மாதம் ஒரு குறுகிய பிரதேசத்துக்குள் மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்ட இறுதி நாட்களை முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக தமிழ் மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது.

இந்நினைவு வாரம் தொடர்பாக தமிழரசுக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

முள்ளிவாய்கால் நினைவேந்தல் இன்று ஆரம்பமாகின்றது. ஒற்றுமையாக – அனைவரும் இணைந்து நினைவேந்தலை கடைப்பிடிக்க வேண்டும். மே 18 ஆம் நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் சுடரேற்றி அஞ்சலி செலுத்த வேண்டும். இதற்காக எல்லோரையும் அழைக்கின்றோம். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் காலத்தில் இறை நம்பிக்கை உடையவர்கள், தங்கள் உறவுகளின் ஆன்மஈடேற்றத்திற்காக – ஆத்மசாந்திக்காக ஆலயங்களில் வழிபாடுகளை நடத்தலாம். நினைவேந்தல் வாரத்தில் வன்முறைகளையும் – களியாட்டங்களையும் தவிர்த்து, ஒவ்வொரு தமிழனும் கடைப்பிடிக்க வேண்டும்’ என தமிழரசுக் கட்சி மாவை சேனாதிராஜா குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்

http://thuliyam.com/?p=67345

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Athavan CH said:

பேரவலத்தை நினைவுகூரும் வகையில்

இவைக்கு இப்ப உது பேரவலமாப் போச்சு. பெரும் இனப்படுகொலை என்பது மறந்திட்டுது போல. இல்ல.. ஏதோ சொந்தத் தேவைகளுக்காக.. மறைச்சு வைக்கினம் போல. tw_angry::rolleyes:

செம்மணியில் ஈகைச் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்  

 

Y0011.jpgமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரம் செம்மணி படுகொலை நடந்த மண்ணில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் இன்று காலை 9.30 மணிக்கு  கூடிய மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆ.பரஞ்சோதி, க.விந்தன், பா.கஜதீபன்  மற்றும் வடக்கு மாகாண சபை எதிர்க் கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் முள்ளிவாய்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்காகவும், செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட 600ற்கும் மேற்பட்ட மக்களுக்காகவும் தீபம் ஏற்றி நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை ஆரம்பித்துள்ளனர்.y0404.jpgy880.jpg

 

Tags

http://www.virakesari.lk/article/19926

  • தொடங்கியவர்

செம்மணியில் ஈகைச் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்

Y0011.jpgமுள்ளிவாய்க்கால் இன அழிப்பு வாரம் செம்மணி படுகொலை நடந்த மண்ணில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செம்மணி பகுதியில் இன்று காலை 9.30 மணிக்கு  கூடிய மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், ஆ.பரஞ்சோதி, க.விந்தன், பா.கஜதீபன்  மற்றும் வடக்கு மாகாண சபை எதிர்க் கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் முள்ளிவாய்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்காகவும், செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட 600ற்கும் மேற்பட்ட மக்களுக்காகவும் தீபம் ஏற்றி நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

y0404.jpg

 

y880.jpg

http://www.virakesari.lk/article/19926

ஒருவாரத்திற்கு செம்மணி படுகொலை நினைவேந்தல்

 

ஒருவாரத்திற்கு செம்மணி படுகொலை நினைவேந்தல்

 

 
 
இன்று தொடக்கம் எதிர்வரும் ஒருவாரத்திற்கு இனப் படுகொலை வாரத்தை நினைவு கூறவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

செம்மணி படுகொலை நினைவேந்தல் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நினைவு கூறப்பட்டுள்ளது.

வடமாகாண சபை உறுப்பினர்களின் ஏற்பாட்டில் யாழ்.செம்மணி சந்தியில் இன்று (10) வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா உட்பட வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வில் ஈகைச் சுடரேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் மே 12 முதல் 18 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக நிகழ்வி்ல் கருத்து வௌியிட்ட எம்.கே.சிவாலிங்கம் தெரிவித்தார்.

இதற்கமையிற்கு அமைவாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தினம் பல்வேறு திகதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இறுதி தினத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=91406

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி இனப்படுகொலையின் நாயகன்.. சரத் பொன்சேகா.. இப்ப பீல்ட் மார்சல் பதவி வழங்கி சிங்களத்தால் கெளரவிப்பட... நாயகி சந்திரிக்கா.. எங்கள் சம் சும் கும்பலின் தெய்வமாகி இருக்கிறார்.

எதுஎப்படியோ.. சிங்களத்தின் இனப்படுகொலையை உள்ளபடி.. நினைவு கூற இப்படி பத்து ஜீவன்களாவது இருக்கேன்னு.. படுகொலைக்கு இலக்கான உயிர்கள் ஆத்மா சாந்தி அடையும். 

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எமது வழிபாட்டுக்குரிய நாள்

14476.jpg
2009 மே மாதம் 18ஆம் திகதி வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த யுத்தத்தின் இறுதி நாள்.
எங்கள் உறவுகள் உயிரிழந்து போன நாட்களின் ஒட்டுமொத்த நினைவு நாள்.
 
தமிழர்கள் என்பதால் குண்டு போட்டு எங்கள் இனத்தைச் சங்காரம் செய்த  நாசகாரத்தின் உச்சமான நாள்.
 
ஒரு நாடு; இரு இனங்கள். இறந்தது மனிதர்கள். அதிலும் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் என ஏராளம்.
 
இருந்தும் சிங்கள ஆட்சியாளர்கள் அதனை  வெற்றி நாளாகக் கொண்டாடினர் என்றால், அவர்களிடம் இருந்த வக்கிரம் எத்தன்மையது என்பதை அறிவது கடினமன்று.
 
இலங்கைத் தீவில் நாம் அனைவரும் சமம் என்பது ஆட்சியாளர்களின் மேடைப் பேச்சு.
 
சாந்தியும் சமாதானமும் ஏற்பட்டு இந்நாட் டில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது விசேட பண்டிகைகளின் போது அரச தலைவர்கள் வழங்கும் ஆசிச்செய்திகள்.
 
ஆனால், பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் துடிதுடித்துப் பதைபதைத்து போன துன்பகரமான நாளை வெற்றி நாளாக கொண்டாடும் அக்கிரமம் இலங்கையின் ஆட்சியில் தவிர வேறு எங்கும் நடக்க முடியாது.
 
போர் நடந்தது உண்மை. அதில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டது உண்மை. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டனர் என்பதும் உண்மை.
 
அதற்காக அதை வெற்றித் திருவிழாவாக ஆட்சியாளர்கள் கொண்டாடி மகிழ்வது எந்த வகையில் நியாயமானது என்பதுதான் நம் கேள்வி.
 
உயிரிழந்தவர்கள் நம் நாட்டவர்கள். அவர்கள் உயிரிழந்தது உங்களுக்கு வெற்றி என்றால், எப்போதுதான் உங்களால் சமாதானத்தை  ஏற்படுத்த முடியும்?
 
உங்களிடம் எம்மீது நல்லெண்ணம் இருக்கு மாயின் மே 18ஐ போர் கொடூரத்தில் உயிரிழந்த வர்களின் நினைவேந்தலுக்குரிய நாளாகப் பிரகடனம் செய்யுங்கள்.
 
போரில் இறந்தவர்கள் தமிழர்கள் என்று பாராமல் தமிழர்களும் இந்நாட்டவர்களே என்று நினைத்து மே 18ஐ வன்னிப் போரில் உயிரிழந்த தமிழ் உறவுகளின் நினைவேந்தல் நாளாக அங்கீகரியுங்கள்.
 
இதைவிடுத்து மே 18ஆம் திகதிதான் டெங்கு ஒழிப்புக்கான தேசிய தினம் என்றால், நீங்கள் மனிதர்களா என்ன?
 
டெங்கு நோயை ஒழிப்பது உங்கள் நோக்கமா? அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஊறு செய்வது நோக்கமா?
 
அட, இதுபற்றியெல்லாம் நாம் நினைக்க வில்லை என்றால், மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாள் என்று கலண்டரில் பதிவு செய்யுங்கள். 
 
இதை மத்திய அரசு செய்யும் வரை எங்கள் மாகாண அரசு மே 18ஐ நினைவேந்தலுக்குரிய நாளாக அறிவித்து அன்றைய நாளில், எமக்காக உயிரிழந்து போன எங்கள் உறவுகளை நினைந்துருக.
 
அவர்களுக்காக நெய்விளக்கேற்றி அனைவரும் தியானம் செய்ய ஏற்பாடு செய்யுங்கள்.

 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=14476&ctype=news

  • தொடங்கியவர்

 

வல்வையில்இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள்!

வல்வையில்இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள்!

வல்வையில்இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாள்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தின் இரண்டாம் நாள் அஞ்சலி நிகழ்வு நேற்று (13) வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்கு அருகில், சிறீலங்கா இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களின் நினைவிடத்தில், நடைபெற்றது.

வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

valvai-memo-130517-seithy-2.jpg valvai-memo-130517-seithy-3-300x172.jpg

http://thuliyam.com/?p=67561

 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கான நினைவு அஞ்சலி நிகழ்வுக்கள் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் கலந்துகொண்டு நினைவு அஞ்சலி நிகழ்விற்கான ஏற்பாடுகள் பற்றி ஆராய்ந்துள்ளார்.

குறித்த நிகழ்வானது வாகரை பிள்ளையார் ஆலய முன்றலில் எதிர்வரும் 18.05.2017 அன்று காலை 09மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

9998_1494715765_bn.jpg  

9998_1494715765_bvnhj.jpg  

9998_1494715765_hujk.jpg  

http://battinaatham.com/description.php?art=9998

Edited by Athavan CH

  • தொடங்கியவர்
முள்ளிவாய்க்காலுக்கு வந்து  அமைதி அஞ்சலியைச் செலுத்த வேண்டுகின்றேன்!

முள்ளிவாய்க்காலுக்கு வந்து அமைதி அஞ்சலியைச் செலுத்த வேண்டுகின்றேன்!

 

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரும் சோக நாளாக இம்மாதம் 18ம் திகதி அனுஷ;டிக்கப்படவிருக்கின்றது. இது சம்பந்தமாக விடுக்கப்பட்ட முதலமைச்சரின் அறிக்கை பின்வருமாறு

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அளவில் ஏற்பட்ட எம் இனிய உறவுகளின் அநியாயமான உயிரிழப்புகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தும் புனித நாளே இம்மாதம் வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாகும். அந்த உயிரிழப்புக்கள் நடந்து 8 வருடங்கள் ஆகின்றன. அன்று குழந்தைகளாகவிருந்த இளம் சிறார்கள் இன்று இளைஞர் யுவதிகளாக உருமாற்றம் பெறும் நிலையில் உள்ளார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களில் கூட அன்று நடந்த பயங்கரமான நிகழ்வுகள் ஓரளவு வடுக்களை விட்டுச் சென்றுள்ளன.

சாட்சியில்லாது நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால். வெளியாரின் உள்ளீடுகள் தடுக்கப்பட்டு, ஊடக உள்நுழைவு மறுக்கப்பட்டு, போர் நடைமுறைகளுக்கு முரண்பட்ட விதத்தில் போராயுதங்கள் பாவிக்கப்பட்டு கரவாக மக்களை அழித்தொழித்த சமரே முள்ளிவாய்க்கால். அப்பாவிப் பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள், வயோதிபர்களின் உயிர்களைக் காரணமின்றிக் காவிச் சென்றதே முள்ளிவாய்க்கால். வட கிழக்கு மாகாண மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப்பதிவே முள்ளிவாய்க்கால். அன்றைய தினம் என்றென்றும் எம் மக்களின் வரலாற்றில் ஒரு துக்க தினமாக அனுஷ;டிக்கப்பட வேண்டிய தினமாகும். 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முடிவிலே உயிரிழந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் தொடர்பான உண்மை நிலை இது வரைக்கும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை. நடந்தது சம்பந்தமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைப்பொறிமுறை இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை. இன்றும் எம் மக்கள் உண்மையை அறிய ஆவலாக உள்ளார்கள்.

அண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவை, போரிலே கொல்லப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படும் என்ற தோரணையில் மேலும் இரு வருடங்கள் கால நீட்சி அளித்துள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் பொறுப்புக் கூறலானது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சர்வதேசத்தவர்களின் எதிர்பார்ப்பு. இலங்கை அரசாங்கம் இது பற்றிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறியே கால நீட்சி பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அது பற்றி எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் முன்வருவதாகத் தெரியவில்லை.

முன்னைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மட்டும் வெளிநாட்டு உள்ளடங்கலுடன் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்ற தமது தனியான கருத்தை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு உள்ளீடுகள்
இல்லாத நீதி விசாரணை ஒரு போதும் உண்மையை வெளிக்கொண்டுவர உதவி செய்யாது. சிலர் இவ்வாறான பொறிமுறையை நாங்கள் வேண்டி நிற்பதன் நோக்கம் குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே என்று நம்புகின்றார்கள். அதனால் பெருந்தன்மையுடன் இரக்கம் காட்டி அதைப்பற்றி மறந்துவிடலாமே என்று கூறுகின்றார்கள். இவ்வாறு கூறுபவர்கள் கொழும்பிலும் வேறு இடங்களிலும் சொகுசாக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளிக்கொண்டு வருகின்றார்கள்.

இது தவறு. இப்பேற்பட்ட விசாரணை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க உதவும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றார்களோ இல்லையோ இதுவரை காலமும் தமிழ்
மக்கள் எவ்வாறு நடாத்தப்பட்டுள்ளார்கள் என்பது சம்பந்தமான விடயங்கள் இவ்வாறான விசாரணைகள் வெளிக்கொண்டு வருவன. அத்துடன் நடந்தவை வெளிச்சத்திற்கு வந்தால் அவை தமிழ் மக்களின் நல்லதொரு அரசியல் தீர்வுக்கு முன்னோடியாக அமையக்கூடும். தமிழர்கள் தமது அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை இதுவரைகாலமும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த காரணங்களை எடுத்தியம்ப அவ்வாறான விசாரணைகள் வழிவகுப்பன.

உண்மையான அதிகாரப்பரவலாக்கம் விரைந்து செயற்படவேண்டியதொன்று என்பதை அனைவரையும் அறிந்து கொள்ளச்செய்வன. இன்று ஜனநாயக வழிமுறைகளில் மக்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள். அடிதடி எடுத்தே ஒரு விடயத்திற்கு தீர்வு காணலாம் என்ற எண்ணம் போய் எம்மை நாமே
வருத்தி அகிம்சை முறையில் போராடி வெற்றிகள் காணமுடியுமென்பதை எமது மக்கள்
எடுத்துக்காட்டி வருகின்றார்கள்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் அந்தவகையிலே ஒருவிதப் போராட்டந் தான். அநியாயமாக கொலை செய்யப்பட்ட எம் மக்களை நாம் ஒன்றிணைந்து நினைவு கொள்வதன் மூலம் மக்களின் ஒரு பாரிய துயர அலையை உண்டுபடுத்துகின்றோம். இறந்து போனவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்று ஒருமித்து மனதார கோரிக்கை விடுவது இங்கும் பிறநாடுகளில் வாழும் தமிழ் மக்களையும் மனதால் ஒன்று சேர்க்க உதவுகின்றது.

எம் மக்களின் ஒற்றுமையே எமது கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்களைச் செவிசாய்க்க வைக்கும். ஆகவே இம் மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கட்சி பேதமின்றி, மத பேதமின்றி, இன பேதமின்றி, வர்க்க பேதமின்றி, ஏழைகள் பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி எமது மக்கள் சேர்ந்து பங்குபற்ற வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில்

உள்ள அனைத்து தமிழ் மக்களும் அத்துடன் நாட்டின் ஏனைய இடங்களில் வசிக்கும் தமிழ் மக்களும் புலம் பெயர் தமிழ்மக்களும் ஒன்று சேர்ந்து தமது துக்கத்தை வெளிப்படுத்தும் நாளாக அதை மாற்ற வேண்டும். எனவே இம்மாதம் 18ம் திகதி காலை 9.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் கூடும் ஜனக்கூட்டம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடாத்தும் அதே வேளை வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழப் ;பேசும் மக்கள் ஆகியோர் காலை 9.30 மணி தொடக்கம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடாத்த வேண்டும் என்று தாழ்மையுடன் வடமாகாண முதலமைச்சர் என்ற
முறையில் உங்களிடம் கோரிக்கை சமர்ப்பிக்கின்றேன்.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது வசதிக்கேற்றவாறு மூன்று நிமிடநேர மௌன அஞ்சலியில் ஈடுபடலாம். ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்டும் போது எவ்வாறு மக்கள் எங்கெங்கு நிற்கின்றார்களோ அங்கு தனித்துநின்று நாட்டிற்குக் கௌரவத்தை அளிக்கின்றார்களோ அதேபோன்று வரும் 18ந் திகதி காலை 9.30 மணிக்கு சகலரும் இருக்குமிடத்தில் சிரம் தாழ்த்தி 3 நிமிட நேரத்திற்கு இறந்த எம் உறவுகளுக்காக நினைவஞ்சலி செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன். இந்தத் தினம் வரும் வருடங்களிலும் தமிழர்தம் துக்க தினமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். முடியுமானவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு அன்று வந்து சேர்ந்திருந்து உங்கள் அமைதி அஞ்சலியைச் செலுத்த வேண்டுகின்றேன். பல இடங்களில் இருந்தும் மக்களை ஏற்றிவரப் பேரூந்துகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. பேரூந்தினுள் ஏறக்கூடிய இடங்களையும் நேரங்களையும் உங்கள் வடமாகாணசபை உறுப்பினர்களிடம் இருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

நன்றி
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம

http://thuliyam.com/?p=67623

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

மே-18 காலை 9.30 மணிக்கு தமிழர் தாயகம் எங்கும் 3 நிமிட மெளன அஞ்சலி அனைவரிடமும் வடக்கு முதல்வர் கோரிக்கை

14512.jpg

தமிழ் மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்று விட்ட சோக வரலாற்றுப் பதிவான முள்ளிவாய்க்கால் உயிரிழப்புக்களின் உண்மைநிலை வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், நினைவேந்தல் இறுதிநாளான மே-18 ஆம் திகதி அன்று வடக்கு -கிழக்கு உள்ளிட்ட புலம் பெயர் தேசமெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்கள் ஒருமித்து காலை 9.30 மணி தொடக்கம் 3 நிமிட மெளன அஞ்சலியை செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.    

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரும் சோக நாளாக இம்மாதம் 18ம் திகதி அனு~;டிக்கப்படவிருக்கின்றது. இது சம்பந்தமாக விடுக்கப்பட்ட முதலமைச்சரின் அறிக்கை பின்வருமாறு - 

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அளவில் ஏற்பட்ட எம் இனிய உறவுகளின் அநியாயமான உயிரிழப்புகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தும் புனித நாளே இம்மாதம் வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமாகும். அந்த உயிரிழப்புக்கள் நடந்து 8 வருடங்கள் ஆகின்றன. அன்று குழந்தைகளாகவிருந்த இளம் சிறார்கள் இன்று இளைஞர் யுவதிகளாக உருமாற்றம் பெறும் நிலையில் உள்ளார்கள். ஆனால் அவர்களின் உள்ளங்களில் கூட அன்று நடந்த பயங்கரமான நிகழ்வுகள் ஓரளவு வடுக்களை விட்டுச் சென்றுள்ளன. 

சாட்சியில்லாது நடத்தப்பட்ட சமரே முள்ளிவாய்க்கால். வெளியாரின் உள்ளீடுகள் தடுக்கப்பட்டு, ஊடக உள்நுழைவு மறுக்கப்பட்டு, போர் நடைமுறைகளுக்கு முரண்பட்ட விதத்தில் போராயுதங்கள் பாவிக்கப்பட்டு கரவாக மக்களை அழித்தொழித்த சமரே முள்ளிவாய்க்கால். அப்பாவிப் பெண்கள், பிள்ளைகள், குழந்தைகள், வயோதிபர்களின் உயிர்களைக்காரணமின்றிக் காவிச் சென்றதே முள்ளிவாய்க்கால். வட கிழக்கு மாகாண மக்களின் சரித்திரத்தில் மாறா இடம்பெற்றுவிட்ட சோக வரலாற்றுப்பதிவே முள்ளிவாய்க்கால். அன்றைய தினம் என்றென்றும் எம் மக்களின் வரலாற்றில் ஒரு துக்க தினமாக அனு~;டிக்கப்பட வேண்டிய தினமாகும். 

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முடிவிலே உயிரிழந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் தொடர்பான உண்மை நிலை இது வரைக்கும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை. நடந்தது சம்பந்தமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைப்பொறிமுறை இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை. இன்றும் எம் மக்கள் உண்மையை அறிய ஆவலாக உள்ளார்கள். 
அண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவை, போரிலே கொல்லப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படும் என்ற தோரணையில் மேலும் இரு வருடங்கள் கால நீட்சி அளித்துள்ளது. வெளிப்படைத்தன்மையுடன் பொறுப்புக் கூறலானது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சர்வதேசத்தவர்களின் எதிர்பார்ப்பு. இலங்கை அரசாங்கம் இது பற்றிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறியே கால நீட்சி பெற்றுக்கொண்டார்கள். 

ஆனால் அது பற்றி எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் முன்வருவதாகத் தெரியவில்லை. முன்னைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மட்டும் வெளிநாட்டு உள்ளடங்கலுடன் போர்க்குற்ற விசாரணை  நடைபெற வேண்டும் என்ற தமது தனியான கருத்தை வெளியிட்டுள்ளார். வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒரு போதும் உண்மையை வெளிக்கொண்டுவர உதவி செய்யாது. 

சிலர் இவ்வாறான பொறிமுறையை நாங்கள் வேண்டி நிற்பதன் நோக்கம் குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே என்று நம்புகின்றார்கள். அதனால் பெருந்தன்மையுடன் இரக்கம் காட்டி அதைப்பற்றி மறந்துவிடலாமே என்று கூறுகின்றார்கள்.இவ்வாறு கூறுபவர்கள் கொழும்பிலும் வேறு இடங்களிலும் சொகுசாக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளிக்கொண்டு வருகின்றார்கள்.

இது தவறு. இப்பேற்பட்ட விசாரணை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க உதவும்;.  குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றார்களோ இல்லையோ இதுவரை காலமும் தமிழ் மக்கள் எவ்வாறு நடாத்தப்பட்டுள்ளார்கள் என்பது சம்பந்தமான விடயங்கள் இவ்வாறான விசாரணைகள் வெளிக்கொண்டுவருவன. அத்துடன் நடந்தவை வெளிச்சத்திற்கு வந்தால் அவைதமிழ் மக்களின் நல்லதொரு அரசியல் தீர்வுக்கு முன்னோடியாக அமையக்கூடும். 

தமிழர்கள் தமது அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை இதுவரைகாலமும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த காரணங்களை எடுத்தியம்ப அவ்வாறான விசாரணைகள்  வழிவகுப்பன. உண்;மையான அதிகாரப்பரவலாக்கம் விரைந்து செயற்படவேண்டியதொன்று என்பதை அனைவரையும் அறிந்து கொள்ளச்செய்வன. 
இன்று ஜனநாயக வழிமுறைகளில் மக்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார்கள். அடிதடி எடுத்தே ஒரு விடயத்திற்கு தீர்வு காணலாம் என்ற எண்ணம் போய் எம்மை நாமே வருத்தி அகிம்சை முறையில் போராடி வெற்றிகள் காணமுடியுமென்பதை எமது மக்கள் எடுத்துக்காட்டி வருகின்றார்கள். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் அந்தவகையிலே ஒருவிதப் போராட்டந் தான். அநியாயமாக கொலை செய்யப்பட்ட எம் மக்களை நாம்ஒன்றிணைந்து நினைவு கொள்வதன் மூலம் மக்களின் ஒரு பாரிய துயர அலையை உண்டுபடுத்துகின்றோம். இறந்து போனவர்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய வேண்டும் என்று ஒருமித்து மனதார கோரிக்கை விடுவது இங்கும் பிறநாடுகளில் வாழும் தமிழ்மக்களையும் மனதால் ஒன்று சேர்க்க உதவுகின்றது. 

எம் மக்களின் ஒற்றுமையே எமது கோரிக்கைகளுக்கு ஆட்சியாளர்களைச் செவிசாய்க்க வைக்கும். ஆகவே இம் மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கட்சி பேதமின்றி, மத பேதமின்றி, இன பேதமின்றி, வர்க்க பேதமின்றி, ஏழைகள் பணக்காரர்கள் என்ற வித்தியாசமின்றி எமது மக்கள் சேர்ந்து பங்குபற்ற வேண்டும். வடகிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் அத்துடன் நாட்டின் ஏனைய இடங்களில் வசிக்கும் தமிழ் மக்களும் புலம் பெயர் தமிழ்மக்களும் ஒன்று சேர்ந்து தமது துக்கத்தை வெளிப்படுத்தும் நாளாக அதை மாற்ற வேண்டும். 

எனவே இம்மாதம் 18ம் திகதி காலை 9.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் கூடும் ஜனக்கூட்டம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடாத்தும் அதே வேளை வடக்கிலும் கிழக்கிலும் ஏனைய இடங்களிலும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மற்றும் புலம்பெயர் தமிழ்ப்பேசும் மக்கள் ஆகியோர் காலை 9.30 மணி தொடக்கம் 3 நிமிட நேர மௌன அஞ்சலியை நடாத்த வேண்டும் என்று தாழ்மையுடன் வடமாகாண முதலமைச்சர் என்ற முறையில் உங்களிடம் கோரிக்கை சமர்ப்பிக்கின்றேன்.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமது வசதிக்கேற்றவாறு மூன்று நிமிடநேர மௌன அஞ்சலியில் ஈடுபடலாம். ஒரு நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்டும் போது எவ்வாறு மக்கள் எங்கெங்கு நிற்கின்றார்களோ அங்கு தனித்துநின்று நாட்டிற்குக் கௌரவத்தை அளிக்கின்றார்களோ அதேபோன்று  வரும் 18ந் திகதி காலை 9.30 மணிக்கு சகலரும் இருக்குமிடத்தில் சிரம் தாழ்த்தி 3 நிமிட நேரத்திற்கு இறந்த எம் உறவுகளுக்காக நினைவஞ்சலி செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன். 

இந்தத் தினம் வரும் வருடங்களிலும் தமிழர்தம் துக்க தினமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். முடியுமானவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு அன்று வந்து சேர்ந்திருந்து உங்கள் அமைதி அஞ்சலியைச் செலுத்த வேண்டுகின்றேன். பல இடங்களில் இருந்தும் மக்களை ஏற்றிவரப் பேரூந்துகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. பேரூந்தினுள் ஏறக்கூடிய இடங்களையும் நேரங்களையும் உங்கள் வடமாகாணசபை உறுப்பினர்களிடம் இருந்து தெரிந்துகொள்ளுங்கள். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=14512&ctype=news

  • தொடங்கியவர்
முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமையுங்கள்
 
14527.jpg
வன்னிப் பெரு நிலப்பரப்பில் நடந்த யுத்தத்தில் உயிரிழந்த எங்கள் உறவுகளுக்காக நினைவேந்தல் எதிர்வரும் 18ஆம் திகதி இடம் பெறவுள்ளது.
 
இறுதி யுத்தம் நடந்து முடிந்த முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வின் போது காலை 9.30 மணிக்கு அனைவரும் மூன்று நிமிட நேரம் மெளன அஞ்சலி செலுத்துமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
எங்களோடு வாழ வேண்டியவர்கள் கொடும்  யுத்தத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட நிட்டூரம் இந்த உலகம் இருக்கும் வரை பேசப்படும்.
 
அதேவேளை வன்னிப் பெரு நிலப்பரப்பில் அநியாயமாகக் கொல்லப்பட்ட எங்கள் உறவுகளை நினைந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைத்து தமிழ் உறவுகளும் முள்ளிவாய்க்காலில் ஒன்றுகூடி மனம் மெய் மொழிகளில் எங்கள் உறவுகளுக்கான அஞ்சலியைச் செலுத்த வேண்டும்.
 
அதேவேளை மே 18 என்பது நினைவேந்தலுக்கான நாளாகவும் நினைவேந்தலை செய்யும் பொருட்டு வடக்கு மாகாண சபை, தனது அதிகாரத்துக்குட்பட்ட வகையில் விடுமுறை வழங்குவது பற்றியும் சிந்திப்பது அவசியம்.
 
பெற்றோர்களை இழந்த பிள்ளைகள் மாணவர்களாகப் பாடசாலைகளில் கற்றுக் கொண்டிருக்கின்றனர்.
 
அதேபோல் அரச அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் இருக்கக் கூடியவர்கள் தங்கள் உறவுகளுக்கான அஞ்சலியைச் செலுத்துவதற்கு வசதியாக விடுமுறை அல்லது பதிலீட்டுடனான விடுமுறைக்கு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
 
இதற்கு அப்பால் வன்னிப் பெருநிலப்பரப்பில் உயிரிழந்தவர்களுக்கான நினைவேந்தல் என்பது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் ஒன்று சேர்ப்பதாக இருக்க வேண்டும்.
 
பொதுவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படுகின்றது. 
 
அந்த வகையில் புலம்பெயர் தமிழ் உறவுகளையும் ஒன்றுசேர்க்கக்கூடிய வலிமையும் ஆத்மபலமும் மே 18 நினைவேந்தல் நிகழ்வுக்கு உண்டு.
 
இந்த வருடம், அடுத்த வருடம் என்ற குறுங்காலத்தில் சாத்தியமாகாவிட்டாலும் நீண்ட காலத்தில் மே 18 நினைவேந்தல் உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய தமிழ் மக்கள் ஒன்றுகூடி வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்பை நினைத்துப் பார்க்கின்ற நாளாகப் பிரகடனமாகும்.
இதற்கு உலக அங்கீகாரம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
 
ஆகையால், இதற்கெல்லாம் வழி செய்வது போல இறுதி யுத்தம் நடந்த முள்ளிவாய்க்காலில் பிரமாண்டமான நினைவிடம் அமைக்கப்படுவது கட்டாயம்.
 
இந்தப் பணியை செய்வதில் அனைத்துத் தமிழ் மக்களும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.
 
முள்ளிவாய்க்காலில் அமைக்கப்படும் நினைவாலயம் உலக நாட்டவர்களும் அகவணக்கம் செலுத்தும் அமரராலயமாக மிளிரட்டும். 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=14527&ctype=news

  • தொடங்கியவர்

நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18 – தமிழ் மக்கள் பேரவை

நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18 - தமிழ் மக்கள் பேரவை

நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18 – தமிழ் மக்கள் பேரவை

 

எமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக , 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின்  மிகக்கொடூரமான மனித அவலங்கள்  நிகழ்த்தப்பட்டது.

நீதிக்கான குரல் எழுப்பிய மக்களை, நீதிக்காய் குரல் எழுப்பினார்கள் அதனோடு இணைந்து நடந்தார்கள் என்பதற்காகவே சர்வதேச யுத்தவிதிகளை புறந்தள்ளி , மனிதத்துவ நடைமுறைகளையெல்லாம் தூக்கியெறிந்து , பாலியல் பலாத்காரங்களை, உயிர்வாழ்வதற்கான உணவை ,மருந்தை கூட ஆயுதமாக்கி, சாட்சியங்கள்முடியுமானவரை அகற்றி  , பூகோள அரசியல்  போட்டியின் பகடைக்காய்களாக்கப்பட்டு ,சர்வதேசம் கண்மூடி இருக்க , வஞ்சிக்கப்பட்டு எமது மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.

எதுவுமறியாத பாலகர்கள் , முதியவர்கள் அங்கவீனர்கள் என எந்த வேறுபாடுகளும் இன்றி, தமிழர்கள் என்பதற்காகவே ஆயிரம் ஆயிரமாய் எமது மக்கள் கொன்றுகுவிக்கப்பட்டார்கள்.

அந்த அவலங்களின் உச்சக்கட்டங்கள் நிகழ்ந்தேறிய நாள்தான் மே 18 .  2006 ம் ஆண்டு வாகரை மண்ணில் உச்சம் பெறத்தொடங்கிய இந்த கோரத்தாண்டவம் 2009 மே 18 இல் வன்னியின் முள்ளிவாய்க்கால் மண்ணில் வரலாறுகாணாத பேரவலத்தை விதைத்திருந்தது. அந்த மானுடப்பேரவலத்தின் எட்டாவது ஆண்டு நினைவுகாலத்தை நாம் இப்போது அனுஷ்டித்து வருகின்றோம்.

 உண்மையில் சிறிலங்கா அரசு, தமிழர்கள் மீது தொடர்ச்சியாக  இழைத்துவரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகள் உச்சம் பெற்ற ஒரு தினமே மே 18 ஆகும்.  உண்மையில் எம்மீதான இனப்படுகொலையின் ஒரு குறீயீட்டு நாளாகவே  இந்த மே 18 ஐ தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஒருமுகப்பட்டு அனுஷ்டிக்கின்றோம்.

இந்த தினத்தில்,  தொடர்கின்ற இனப்படுகொலையில் கொல்லப்பட்டு இந்த மண்ணில் வீழ்ந்த அனைவருக்கும் எமது அஞ்சலிகளை தெரிவிக்கின்றோம். தாயகத்தில் வாழுகின்ற மக்கள் முடிந்தவரை, மானுடப்பேரவல நிகழ்ந்தேறிய முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கொல்லப்பட்ட மக்களுக்கான தமது அஞ்சலிகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஏனையவர்கள் தாம் வாழும் இடங்களில் அஞ்சலி தீபமேற்றி மூன்று நிமிட  மெளன அஞ்சலி செலுத்தி இந்த மண்ணில் வீழ்ந்த எம் உறவுகளை நினைவுகூருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இனிவரும் காலங்களில் , எமது மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இனப்படுகொலை நினைவேந்தல் குழுமம் ஒன்றின் மூலம் நினைவாலயம் ஒன்றை முள்ளிவாய்க்கால் மண்ணில் நிறுவுவதும் , இனப்படுகொலைக்கான ஆவணப்படுத்தலை ஒருங்கிணைப்பதும் அனைவராலும் நேர்மையுடன் கருத்தில் கொள்ளப்படவேண்டும் .

இந்த நினைவேந்தல் நிகழ்வுகளானது , இதுவரை காலமும் இனப்படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கு வெறுமனே அஞ்சலி செலுத்தி விளக்கேற்றும் நிகழ்வாக மட்டும் குறுக்கப்படமுடியாதது.

சர்வதேச விதிகளை அப்பட்டமாக மீறி கொடூரமாக கொல்லப்பட்டவர்களுக்கும் தொடரும் இனப்படுகொலைக்குமான பொறுப்புக்கூறலிற்கான குரலை எந்தவித சமரசமுமின்றி முன்னெடுத்து செல்வோம் என உறுதி பூணவேண்டிய நாளும் இதுதான். எந்த அரசியல் உரிமைக்காக ,மானுட  நீதிக்காக குரல் எழுப்பி அதற்காய் கொல்லப்பட்டார்களோ அந்த அரசியல் உரிமைக்கான குரலை தொடர்ந்தும் நீதியுடன் முன்னெடுப்போம் என எம்மை மீள உறுதிப்படுத்தப்படவேண்டிய தினமும் இதுதான் .

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை உதாசீனம் செய்து நிகழ்த்தப்பட்ட இந்த இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலிற்கான குரலையும்,  இனப்படுகொலைக்கான நீதிக்கான சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணைப்பொறிமுறையொன்றையும் எந்த வித மாயைகளுக்குள்ளும் உட்படாது நேர்மையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் ஒற்றுமையாய் முன்னெடுத்தலும் எமது அரசியல் கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருத்தலுமே  இன்று எம் முன் உள்ள கட்டாய கடமைகளாகும்.

உண்மையில் இதுவே வீழ்த்தப்பட்ட எமது உறவுகளிற்கு நாம் செய்யும் நேர்மையான அஞ்சலியாகவும்  அமையும். நீதிக்கான மக்களின் குரலை வன்முறைமூலம் அடக்கிவிடலாம் என்பது  அடிப்படைப்புரிதல் அற்ற  வன்மம் மிகுந்த செயன்முறையாகும்.

மறுக்கப்பட்ட நீதியை வழங்குவது மட்டுமே  , அந்த மக்களின் குரலை அமைதிப்படுத்துமே தவிர , வரலாறுகளை மாற்றுவதும் சலுகைகள் மூலம் நீதிக்கான் குரல்களை ஒளித்துவைக்க முயல்வதும் அல்ல. ஆனால், சிறிலங்கா அரசானது, தொடர்ச்சியாக இப்படியான ஏமாற்றும் செயன்முறைகளிலேயே தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறது.

நல்லாட்சி என தம்மை அழைத்துக்கொள்ளும் இந்த அரசாங்கமும் அதே ஏமாற்று வழிமுறையையே தனது செல்நெறியாக வரித்துக்கொண்டுள்ளது. இப்படியான மனோநிலை தொடர்ந்தும் இருக்கும்வரையில் சிறிலங்கா அரசாங்கமானது , சர்வதேச தலையீடு இல்லாதவரைக்கும், எமக்கான நீதியை தானே முன்வந்து வழங்கும் என நாம் ஒருபோதும் எதிர்பார்க்கமுடியாது .

எனவே இந்த வரலாற்று யதார்த்தத்தையும் உண்மையான கள நிலவரத்தையும் புரிந்து கொண்டு , சர்வதேச சமூகம் எமது பிரச்சினையை நேர்மையுடன் அணுக வேண்டும் எனவும் நாம் மீளவும் வலியுறுத்துகிறோம்.

இறுதியாக, எமது கோரிக்கைகளில் தெளிவுடனும் உறுதியுடனும் இருப்போம் எனவும் எம்மிடையேயான பேதங்கள் அனைத்தையும் இந்த இழப்புகளின் பெயரால் தாண்டி , எமது இனத்தின் நீண்டகால நலனை மட்டும் முன்னிறுத்தி நடபோம் எனவும் இந்த மண்ணில் வீழ்த்தப்பட்ட எம் உறவுகளின் நினைவுகள் மீது உறுதியெடுத்துக்கொள்வோம்.

http://thuliyam.com/?p=67880

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.