Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடியுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை! - விக்னேஸ்வரன் வேதனை 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மோடியுடனான சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை! - விக்னேஸ்வரன் வேதனை 
 
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் வேண்டாதவர் என்றும்,  இதனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்புக்குத் தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.   வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற அவுஸ்திரேலிய சர்வதேச நீர் மையத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர்,  ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறும் போது, "நான் நேற்றைய நிகழ்விற்கு சென்றேன். மோடி எனக்கு கைலாகு கொடுத்து நலம் விசாரித்தார். நான் இருந்த இடத்திலிருந்து மோடி சற்று தொலைவிலேயே இருந்தார். அதனால் அவருடன் கதைக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை. எனினும் அவருடன் வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஜெய்சங்கரிடம் சில விடயங்களை தெரியப்படுத்தினேன். பலாலி விமான நிலையத்தை மக்களின் காணிகளை சுவீகரிக்காத வகையில் பிராந்திய விமான நிலையமாக மாற்றவேண்டும். இதனை வர்த்தக நடவடிக்கைக்கு பயன்படுத்த கூடியவாறு அமைக்க வேண்டும். தனுஷ்கோடி, தலைமன்னார் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்க நடவடிக்கை வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஜெயசங்கரிடம் தெரிவித்தேன்" என்று தெரிவித்தார்.   http://www.seithy.com/breifNews.php?newsID=182281&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.