Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே 18இல் டெங்கு ஒழிப்பு என்ற பெயரில் வீடுகளைச் சோதனையிட திட்டம்!

Featured Replies

மே18 யை “ டெங்கு ஒழிப்பு தினம்”  என குழப்பும் முயற்சியை அனுமதிக்க முடியாது!

மே18 யை “ டெங்கு ஒழிப்பு தினம்” என குழப்பும் முயற்சியை அனுமதிக்க முடியாது!

 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினமான மே 18 ஆம் திகதி, டெங்கு ஒழிப்பு எனும் போர்வையில் வீடு வீடாக சென்று காவல்துறையினரும், இராணுவத்தினரும் எமது தமிழ் மக்களை அச்சுறுவதை அனுமதிக்க முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 18ஆம் திகதி மத்திய அரசினால் டெங்கு ஒழிப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், “மே மாதம் 18 மற்றும் 19 ஆகிய இரு நாட்கள் இலங்கையில் டெங்கு ஒழிப்பு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. மே 18 என்பது ஈழத்தமிழர்களுடைய துக்க நாளாகும். எனவே, தமிழ் தேசத்துடைய துக்க தினத்தில் தமிழர் தாயகத்தில் டெங்கு ஒழிப்பு தினத்தை அனுஷ்டிப்பதை அனுமதிக்க முடியாது.

அதனை வேறொரு தினத்திற்கு மாற்ற வேண்டும். அதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் டெங்கு ஒழிப்பு எனும் போர்வையில் காவல் துறையினரும் , இராணுவத்தினரும் எமது தமிழ் மக்களை அச்சுறுவதை அனுமதிக்க முடியாது.

டெங்கு ஒழிப்பு தினத்தை ஒத்திவைக்க மத்திய அரசு மறுப்பினும், அதனை புறக்கணிக்கும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசுகள் செயற்பட வேண்டும்.

தமிழர்களுடைய தேசிய துக்க தினத்தில் வேறு எவ்வித நிகழ்வுகளையும் நடத்த அனுமதிக்க மாட்டோம்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

http://thuliyam.com/?p=67581

  • தொடங்கியவர்
மே 18இல் டெங்கு ஒழிப்பு என்ற பெயரில் வீடுகளைச் சோதனையிட திட்டம்!

மே 18இல் டெங்கு ஒழிப்பு என்ற பெயரில் வீடுகளைச் சோதனையிட திட்டம்!

 

முள்­ளி­வாய்க்­கால் நினைவு தின­மான மே 18ஆம் திகதி வடக்கு ­கிழக்­கில் அவ­சர டெங்கு ஒழிப்­புச் செயற்றிட்­டத்தை முன்­னெ­டுக்­கு­மாறு கொழும்பு சுகா­தார அமைச்சு மாகாண சுகா­தார அமைச்­சுக்­க­ளுக்கு அறி­வித்­துள்­ளது.

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­லைக் குழப்­பும் ஒரு சூழ்ச்­சித் திட்­ட­மா­கவே கொழும்பு அரசு இதனை மேற்­கொண்­டுள்­ளது எனக் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

மே 18 ஆம், 19ஆம் திக­தி­க­ளில் அவ­சர தேசிய டெங்கு ஒழிப்பு தினம் என்ற போர்­வை­யில் வடக்­கு-­கி­ழக்­கில் உள்ள தமிழ் மக்­க­ளின் வீடு­க­ளைப் படை­யி­னர் மூலம் சோத­னை­யி­டும் திட்­டம் ஒன்று முன்­னெ­டுக்­கப் ப­ட­வுள்­ளது.

அண்­மை­யில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் நடத்­தப்­பட்ட நிலை­யில் மீண்­டும் இரண்டு நாள்­க­ளைத் தேசிய டெங்கு ஒழிப்பு தின­மாக முன்­னெ­டுக்­கு­மாறு மத்­திய சுகா­தார அமைச்சு மாகாண சுகா­தார அமைச்­சுக்­க­ளுக்கு அறி­வித்­துள்­ளது. இது தொடர்­பான அறி­வித்­தல் நேற்று மாவட்ட சுகா­தா­ரத் திணைக்­க­ளங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

மே 18ஆம் திகதி தமி­ழர்­க­ளால் கடைப்பிடிக்கப் படவுள்ள முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­த­ லைக் குழப்­பும் வகை­யி­லேயே கொழும்பு அரசு நன்கு திட்­ட­மிட்டு இந்த நட­வ­டிக்­கையை முன்­னெ­டுத்­துள்­ள­தா­கக் குற்­றஞ் சாட்­டப்­பட்­டுள்­ளது.

குறித்த அறி­வித்­த­லைக் கேள்­விப்­பட்ட சுகா­தா­ரத் திணைக்­க­ளத்­தின் உத்­தி­யோ­கத்­தர்­கள், இது வேண்­டு­மென்றே தமிழ் மக்­க­ளைப் பழி­வாங்­கும் செயல். முள்­ளி­வாய்க்­கா­லில் அழிக்­கப்­பட்ட எம் மக்­களை அனை­வ­ரும் அஞ்­ச­லிக்­கும் நாளில் இவ்­வாறு தேசிய நிகழ்வை நடத்தி படை­யி­ன­ரின் ஒத்­து­ழைப்­பு­டன் வீடு­க­ளைச் சோத­னை­யி­டு­வ­தைத் தமிழ் மக்­கள் விரும்­ப­மாட்­டார்­கள் என விச­னம் வெளி­யிட்­டுள்­ள­னர்.

இதே­வேளை, இதே நாளில் தேசிய வறுமை ஒழிப்பு தினம் எனக் கூறி முல்­லைத்­தீ­வுக்கு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால வரும் திட்­டம் ஒன்று முன்­னர் அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் தற்­போது மற்­று­மோர் தேசிய வேலைத்­திட்­டம் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது போரில் தமது உற­வு­க­ளைக் கொத்­துக் கொத்­தா­கப் பறி­கொ­டுத்த தமிழ் மக்­களை மேலும் நோக­டிக்­கும் செயல் என அதி­ருப்தி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

http://thuliyam.com/?p=67572

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசுக்கு கணக்காக  மே 18,19ல் டெங்கு ஒழிப்பை  செய்வது நரித்தனமானது. எதிர்க்கட்சி தலைவர் எப்போ அறிக்கை விடுவார்??

தமிழர்கள் தம் வீடுகளில் தைரியமாக சுடர்களை ஏற்றி சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளுக்கு தக்க பாடம் புகட்டுவர்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.