Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாறுகின்ற தளங்களும் மாறாத சிந்தனையும்

Featured Replies

மாறுகின்ற தளங்களும் மாறாத சிந்தனையும்

மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும் என்ற தலைப்பிலே நான் எழுதிய கட்டுரையை படித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன் வைத்த யாழ் கள உறவுகள் அனைவருக்கும் நன்றி.

தமிழீழ தேசம் தனது விடிவை நோக்கிய பயணத்தில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் பிரவேசித்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாயகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளும் கடமைகளும் நிறையவே இருக்கின்றன.

ஒரு புலம் பெயர்ந்த சமூகம் தன்னுடைய தாய் நாட்டின் விடுதலைக்கு எதைச் செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்பதற்கு எங்கள் கண் முன்னால் மூன்று இனங்களின் உதாரணங்கள் இருக்கின்றன.

1. யூதர்கள்

2. பலஸ்தீனியர்கள்

3. குர்திஸ் இனத்தவர்கள்

இதிலே யூத இனம் தனது தாய் நாட்டின் விடுதலை என்ற இலக்கில் வெற்றி பெற்ற இனமாகவும் ஏனைய இனங்கள் வெற்றிபெற முடியாமால் போன இனங்களாகவும் இருக்கின்றன.

இஸ்ரேல் என்ற யூதர்களுடைய நாடு இன்றைக்கு மிக மோசமான மனித உரிமை மீறல்களைச் செய்கின்ற விடுதலைக்கு போராடுகின்ற இனங்களை அழிக்கின்ற சக்திகளுக்கு துணைபோகின்ற பாலஸ்தீன மக்களுடைய விடுதலையை தயவு தாட்சண்யமின்றி ஒடுக்குகின்ற ஒரு நாடாக மாறி விட்டாலும்- அந்த இஸ்ரேல் என்ற நாட்டை அடைவதற்கு புலம் பெயர்ந்த யூத இன மக்கள் செய்த பங்களிப்பு ஈழத் தமிழ் மக்களாகிய நாங்கள் முன்னுதாரணமாகக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

நாடற்றவர்களாக அகதிகளாக உலகெங்கும் புலம்பெயர்ந்த யூதர்கள் பொருளாதாரத்துறையையும் ஊடகத்துறையையும் கையில் எடுத்து உலகத்தையே தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தார்கள். பொருளாதாரத்துறை மூலம் புலம் பெயர்ந்த நாடுகளில் தங்களது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்ட அவர்கள் அதேநேரத்தில் தங்களது தாயக மீட்புக்கான பங்களிப்பையும் தவறாது செய்தார்கள்.

ஊடகத்துறையை கையில் எடுத்த அவர்கள் முதலில் மத அடிப்படைவாதத்தாலும் ஏனைய ஏற்றத் தாழ்வுகளாலும் பிளவு பட்டுக்கிடத்த யூத இனத்தை தாயகம் நோக்கிய பயணத்துக்காக ஒன்று படுத்தினார்கள். அதேவேளை சர்வதேச ஊடக வலைப்பின்னலில் நுழைந்து அதில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொண்ட அவர்கள் உலகத்தையே தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்கள். தாயக விடுதலை என்ற இலக்கை முதனைப்படுத்தி தங்களது பிள்ளைகளை இந்த இரண்டு துறைகளையும் குறிவைத்து அதிகளவில் படிக்க வைத்தார்கள். இன்று யுத இனம் உலக பொருளதாரத்தலும் உலக கருத்துருவாக்கத்திலும் அதாவது ஊடகத்துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு புலம் பெயர்ந்த யூதர்களுடைய எதிர்காலத்தை நோக்கிய திட்டமிட்ட செயற்பாடுகள் தான் காரணமாகும்

இதேவேளை இஸ்ரேலியர்களிடம் தமது தாயகத்தை பறிகொடுத்த பலஸ்த்தீனியர்களும் அகதிகளாக பல்வேறு அரபு நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் புலம் பெயர்ந்த போதும் 50வருடங்களுக்கும் மேலாக தங்களது தாயக விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை நடத்திவருகின்ற போதிலும் அவர்களால் சுதந்திர பலஸ்த்தீனம் என்ற இறுதி இலக்கை அடையமுடியவில்லை.அவர்களுக்கு ஆதரவாக பல அரபு நாடுகள் இருந்தும் ஏன் அவர்களால் தங்களது இலக்கை அடைய முடியவில்லை ? என்ற விடயம் நாங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

பலஸ்தீன தேசியம் என்பதை மத அடிப்படை வாதத்துடன் இணைத்ததும் அதை புலம் பெயர்ந்த பலஸ்தீனியர்களே செய்ததும் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். 1970 களின் முற்பகுதியில் பலஸ்த்தீனப் போராளியாகவும் ஊடகவியலாளராகவும் இருந்த ஹசன் அலி என்பவரால் பலஸ்த்தீனத்தின் குரல் என்ற வானொலி மூலம் புலம்பெயர்ந்த பலஸ்த்தீன மக்கள் மத்தியில்; பலஸ்தீன தேசியம் என்ற அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட எழுச்சியும் ஒற்றுமையும் அந்த வானொலியின் நேயர்கள் ஆலோசகர்கள் என்ற பெயரில் ஊடுருவிய இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட்டால் அந்த வானொலியை வைத்தே அழிக்கப்பட்டதும் இஸ்லாமை முதன்மைப் படுத்தாத பலஸ்த்தீன தேசியம் என்பதை வலியுறுத்திய ஹசன் அலி லெபனானின் பெய்ரூட் நகரத் தெருவொன்றில் இஸ்லாத்தின் துரோகி என்ற பெயரில் பலஸ்த்தீனப் போராளி அமைப்பொன்றினாலே சுட்டுக் கொல்லப்பட்டதும் பலஸ்த்தீன விடுதலை அமைப்புக்கள் பிஎப்எல்பி (பலஸ்த்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணி) டிஎப்எல்பி (பலஸ்த்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி) அல் பத்தா, ஹமாஸ், ஹிஸ்புல்லா என்று பல் வேறு திசைவழியில் சென்று பலஸ்த்தீன மக்கள் சக்தியை பிளவு படுத்தி திசை திருப்பியதும் புலம் பெயர்ந்த தமிழர்கள் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டிய விடயங்களாகும். அதாவது ஒரு ஊடகத்தால் ஒரு விடுதலைப் போராட்டத்தை எப்படி பின் தள்ள முடியும் சிதைக்க முடியும் என்பதற்கு பலஸ்தீன விடுதலைப் போராட்டம் ஒரு சிறந்த உதாரணமாகும்.

அடுத்து துருக்கி ,ஈராக் சிரியா ஈரான் என்று பல நாடுகளின் பரந்து விரிந்திருந்த குர்திஸ் இன மக்களும் ஈராக்கிலும் துருக்கியிலும் மிகமோசமான அடக்கு முறைக்கு உள்ளாக்கி மேற்குலகிற்கு அதிகளவில் புலம் பெயர்ந்த போதிலும் அவர்கள் மத்தியல் இருந்த பிளவுகளும் புலம் பெயர்ந்த நாடுகளில் தாயக விடுதலைக்கு தாங்கள் செய்ய வேண்டிய கடமைகளை உரிய முறையில் திட்டமிட்டு செய்யத் தவறியதுமே இன்று வரை அவர்கள் தங்களது இலக்கை அடைய முடியாமல் இருப்பதற்கு காரணமாகும்.

இன்றைக்கு தமிழர்கள் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் புலம் பெயர்ந்து மூன்று தாசாப்தங்கள் ஆகிவிட்டன. இந்த 30 வருட காலத்தில் தாயகத்திலே பிறந்து எங்களோடு புலம் பெயர்ந்து வந்த எங்களது குழந்தைகள் வளர்ந்து பெரிவர்களாகி திருமணமுமாகி அவர்களுக்கு குழந்தைகளும் பிறந்துவிட்டன. அதேபோல எமக்கு இங்கே பிறந்த குழந்தைகளில் ஒரு பகுதியினர் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். இன்னொரு பகுதியினர் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது தாயகத்தில் பிறந்த தாயக மண்ணைப் பற்றி ஓரளவுக்காவது தெரிந்த ஒரு தலைமுறையும் அதை தெரியாத ஒரு தலை முறையுமாக எமது சமூகம் இங்கே புலம் பொயர்ந்த நாடுகளிலே வளர்ந்துகொண்டிருக்கிறது.

இந்த 30 வருடகாலத்தில் புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் தனது இருப்பை தக்க வைப்பதற்கும் தனது அடையாளத்தை உறுதிப் படுத்துவதற்கும் தாயக விடுதலையை விரைவு படுத்துவதற்கும் ஏற்கனவே புலம் பெயர்ந்த ஏனைய இனங்களின் அனுபவங்களை கவனத்தில் எடுத்துக் கொண்டதா என்றால் இல்லை என்றுதான் அடித்துச் சொல்ல வேண்டும்.

எங்களுடைய பிள்ளைகள் எல்லாம் பெரிய பெரிய படிப்பு படித்திருக்கிறார்கள். பல்துறைகளிலும் கால் பதித்திருக்கிறார்கள். நாங்கள் தலை நிமிர்ந்து நிற்கிறோம் என்ற செய்தி பெருமையாக தாயகத்துக்கு சொல்லப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை?புலம் பெயர்ந்த யுதர்கள் தங்களது அறிவு ரீதியான ஒன்றுபட்ட செயற்பாட்டின் மூலம் தாங்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்த சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதைப் போன்று தங்களை அனைவரும் திரும்பிப் பார்க்க வைத்ததைப் போன்று எங்களுடைய சமூகம் செய்திருக்கிறதா?

பல ஐரோப்பிய நாடுகளில் சிறந்த கல்வி முறையின் கீழ் திறமையாக கல்விகற்கும் குழந்தைகளின் கல்வியை இடையில் நிறுத்தி இலண்டனுக்கு அழைத்துச் சொல்லும் பெற்றோர்கள் தான் எங்கள் மத்தியில் இன்னமும் நிறைய இருக்கிறார்கள்.படிப்பு என்றால் லண்டனில் தான் படிக்க வேண்டும். எங்களுடைய பிள்ளைகள் டொக்டராகவும் இஞ்சினியராகவும் வரவேண்டும் என்ற சிந்தனை தானே பெற்றோரான எங்களிடம் இன்னும் இருக்கிறது.

புலம் பெயர்ந்த யூதர்கள் எந்த நாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்களோ அந்தந்த நாடுகளின் மொழிகளிலேயே கல்விகற்று அந்தக் கல்வியை தமது சமூகத்துக்கு பயன் படுத்ததினார்கள். அந்தக் கல்வி மூலம் அந்த நாடுகளின் அரசியலிலும் பெருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதை ஏன் எங்களது சமூகம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வில்லை.

லண்டன் கனவையும் டொக்டர் இஞ்சினியர் சிந்தனையையும் விட்டு ஏன் எமது சமூகம் இன்னும் மாறவில்லை?ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டிய எவ்வளவு பெரிய விடயம் இது? பெருளாதாரம் வர்த்தகம் ஊடகம் முதலான துறைகள் எமது இனத்தின் விடுதலைக்கும் எதிர்காலத்துக்கும் முக்கியமானவை என்ற சிந்தனை ஏன் எங்கள் மக்களுக்கு வரவில்லை.

கடந்த வாரம் பாரிஸ் நகரத்தின் புறநகர் தொடரூந்து ஒன்றிலே பயணம் செய்த போது என்னுடன் பேசிக் கொண்டு வந்த ஒருவர் சொன்னார் 'அண்ணை நாங்கள் 1988 ம் ஆண்டு பரிசுக்கு வந்த போது 2 தமிழ் கடைகள் தான் இருந்தன. அதையும் பாண்டிச்சேரி தமிழர்கள் தான் வைத்திருந்தார்கள். இன்றைக்கு 200 க்கும் மேற்பட்ட கடைகள் வந்துவிட்டன இது ஈழத் தமிழரின் சாதனை என்றார்.

உண்மைதான் பாரிஸ் 10 நிர்வாகப் பகுதியில் உள்ள லா சப்பல் பகுதி தமிழ் மயமாக மாறிவிட்டது. பாரிசின் புறநகர் பகுதியான லா கூர்நெவ் இப்போது மாறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் பொருளாதர அடிப்படையில் நன்கு திட்டமிட்ட இந்த வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும். பிரான்சிலே புலம் பெயாந்து வாழும் யூதர்களும் சீனர்களும் பிரெஞ்சு பொருளாதாரத்தில் தாக்கம் விளைவிக்கக் கூடிய அளவுக்கு பிரமாண்டமான பல்பொருள் அங்காடிகளையும் பாரிய தொழில் நிறுவனங்களையும் உருவாக்கியது போல் தமிழர்களால் ஏன் உருவாக்க முடியவில்லை?

இன்று வரை பொருளியல் மற்றும் வணிகத்துறையில் நிபுணத்துவம் பெற்ற இளைய தலைமுறை இந்த வர்த்தக நடவடிக்கைளில் வணிக முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறதா? ஏன்றால் அதுவும் இல்லை.

புலம் பெயர்ந்த யூதர்கள் பங்குச் சந்தை வணிகத்தில் தேர்ச்சி பெற்று அதில் தங்கள் சமூகத்தை முதலிடச் செய்து அதிலே கால் புதித்து தங்களது இனத்தின் இருப்பை உறுதிப்படுத்தினார்கள். ஆனால் எமக்கு பங்குச் சந்தை பற்றி அறிவோ அதில் முதலீடு செய்வது பற்றிய அக்கறையோ கிடையாது.

பாரிஸ் நகரத்திலே இருக்கின்ற பல வணிக நிறுவனங்களின் பெயர்கள் ஆங்கில மொழியில் தான் இருக்கின்றன. பிரெஞ்சு மொழி பேசும் நாட்டின் தலை நகரத்தில் ஆங்கில மொழியில் பெயர் பலகை. இயல்பாகவே பிரெஞ்சு பாரம்பரியத்தில் ஊறிப் போன மக்களுக்கு ஆங்கில மொழியைப் பிடிக்காது. அவர்கள் அதை வெளிக் காட்டாது விட்டாலும் அடி மனதில் அவர்களுக்கு அந்த வெறுப்பு இருந்து கொண்டு தான் இருக்கிறது. அரசியலிலும் சரி, பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைளிலும் பிரான்ஸ் ஆங்கிலத்துக்கு மாற்று அணியாகத் தான் இருந்துகொண்டிருக்கிறது. இந்த விடயம் ஏற்கனவே பிரெஞ்சு அடிப்படைவாதிகள் பலருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது.

பாரிலுள்ள சில பௌத்த சிங்கள பேரினவாதிகளும் சிறீலங்கா அரசு உளவாளிகளும் இந்தியாவிலிருந்த குடிபெயர்ந்து சென்ற தமிழர்கள் சிங்களவர்களுடைய நாட்டில் பிரிவினை கேட்டு பயங்கவாதச் செயலில் ஈடுபடுவதைப் போல பாரிஸ் நகரத்தின் அமைதிக்கும் பங்கம் விளைவிப்பார்கள் என்று அரசாங்கத்துக்கு மனு அனுப்பியிருக்கிறார்கள்.சில பிரெஞ்சு ஊடகங்களிலும் சிறீலங்கா உளவுத் துறையின் பின்னணியுடன் இந்தக் கருத்து வெளிவந்திருக்கிறது. அண்மையில் பிரெஞ்சு தேசியவாதத் தலைவரான லூ பென்னும் இதே கருத்தை வலியுறுத்தி இலங்கை தமிழர்களுக்கு விசா கொடுக்கும் விடயத்தில் கவனமாக இருக்குமாறு கூறியதாக ஊடகங்களில் செய்தி வந்தது.

பிரெஞ்சு அரசாங்கம் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது விட்டாலும் எங்களது வணிக முயற்சிகள் பற்றி அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் வர்த்தக அமைச்சர் எமது இனத்தின் பேர் சொல்லி சில தவறுகளை சுட்டிக்காட்டும் அளவுக்கு எமது நிலை இருக்கிறது. இதற்கு காரணம் எமது வணிக முயற்சிகள் பொருளியல் மற்றும் தொழில் சார் முறைகளில் திட்டமிடப்படாததேயாகும்.

அடுத்து புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் எதிர் நோக்கும் மற்றொரு பெரிய பிரச்சனை திசை மாறிப்போன இளைஞர்கள் அல்லது மேற்குலக பெருநகர கலாச்சார சீரழிவுக்குள் சிக்கி சீரழிந்து போகும் இளைஞர்கள் அல்லது வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். நாங்கள் புலம்பெயர்ந்த பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறார்கள் பல்வேறு துறைகளிலும் ஆளுமையுள்ளவர்களாக வளர்கிறார்கள் என்று சொல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கையைவிட இவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். அண்மைக்காலமாக இது இன்னும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இன்றுவரை ஆபத்தான இந்தப் பிரச்சனைக்கு என்ன காரணம், இதை எப்படிச் சரி செய்யலாம் என்கின்ற ஆக்க பூர்வமான ஆய்வுகளோ செயற் திட்டங்களோ முன்னெடுக்கப்படவில்லை.

புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய தீங்கிளைக்கக் கூட இந்தப்பிரச்சனைக்கு சர்வ சாதாரணமாக ‘உவங்கள் குழப்படிக்காரர்-தமிழ் தேசியத்தக்கு எதிரானவங்கள் உவங்களை திருத்த முடியாது’ என்று தீர்ப்புச்சொல்லும் மனோபாவம் தான் எங்களிடம் இருக்கிறது.

இங்கே புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்து வளர்ந்து திசைமாறிப்போன ஒரு பிள்ளையை தேசத்துக்கு எதிரானவன் என்று முத்திரை குத்தும் போது தவறு எங்கள் பக்கமும் இருக்கிறது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்வதேயில்லை.

மாற்றுமொழி மாற்றுக் கலாச்சாரந் சூழலில் வாழுகின்ற எங்களுடைய பிள்ளைகளுக்கு எங்களுடைய அடையாளத்தையும் எங்களுடைய பண்பாட்டு மற்றும் கலாச்சர விழுமியங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு முதலில் பெற்றோர்களுக்கும் அடுத்து தமிழ் தேசியத்துக்கு வலுச் சேர்ப்பதற்கு உழைக்கும் ஊடகங்களுக்கும் இருக்கிறது.

ஆனால் நாங்கள் அதை சரியாகச் செய்வதே இல்லை. தமிழர்களான எங்களுடைய அடையாளம் என்கிறபோது சாதியும் சமயத்தையும் தான் கொண்டு வந்து முன்நிறுத்துகின்றோம். எங்களுடைய குலப் பெருமையையும் மதப் பெருமையையும். எங்களுடைய பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பதன் மூலம் அவர்களை எங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம் என்றுதான் நுற்றுக்கு 90 வீதமான புலம்பெயர்ந்த பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அன்பே சிவம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற தமிழர் மெய்யிலையும் தமிழர் மதத்தையும் எங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்வதற்கு பதில்; பிறப்பைக் கொண்டு மனிதனை பிளவு படுத்தும் இழிவு படுத்தும் வர்ணக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பணிய மதத்தையும் அதன் சடங்குகளையும் அதனோடு இணைந்து கலைகளையும் தான் எங்களது கலைகள் என்று விமானமேற்றிக் கொண்டு வந்து இங்கே அடையாளப்படுத்துகிறோம்.

புலம்பெயர்ந்த நாட்டில் பிறந்து தமிழர் தாயகத்தை கண்ணால் பார்த்திராத தமிழர் வரலாற்றைப் பற்றி அறியாத குழந்தைகளுக்கு நீ இன்ன சாதி பிறப்பால் தாழ்ந்தவன் என்று கூறும் போது ‘இது என்ன ஒரு காட்டுமிராண்டித் தனமான முட்டாள் சமூகம்’ என்று தமிழ் சமூகத்தின் மீது அவர்களுக்கு எற்படுகின்ற வெறுப்பை எப்படி பிழை என்று சொல்ல முடியும்? அந்த வெறுப்பை நீக்கி உண்மையான தமிழ் அடையாளத்தை கலாச்சாரத்தை பண்பாட்டை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கும் சமூக அக்கறையுள்ள நிறுவனங்களுக்கும் தான் இருக்கிறது. அதை விடுத்து சர்வசாதாரணமாக இவர்கள் தமிழ் தேசியத்தக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்துவது என்னைப் பொறுத்தவரை மிகப் பெரிய தேசத் துரோகமாகும்.

புலம் பெயாந்த நாட்டில் சாதியத்தை வளர்த்து விடுவதிலும் அதை பிள்ளைகளுக்கு உணர்த்துவதற்கான தகவல்களை திரட்டிக் கொடுப்பதிலும் தமிழ் ஊடகங்கள் மிக முக்கியமான பங்காற்றுகின்றன.அதாவது இந்த ஊடகங்கால் முதன்மைப்படுத்தப்பட்டு காண்பிக்கப்படும் தமிழகச் சினிமாவும் சின்னத்திரையும் ‘தமிழ் சமூகத்தில் சாதி அடையாளத்தை தக்கவைப்பது. உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடுவது றவடி இசம் என்று சித்தரிப்பது’ என்ற கருத்தியல் இலக்கை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.

பெரும்பாலான சினிமா சின்னத்திரை தொடர்களில் பண்ணையார் எஜமான் கவுண்டர் தேவர் என்று சாதி தலைவர்களை உயர்ந்த உதாரண புருசர்களாக சித்தரிப்பதும் அவர்கள் தெருவில் வந்தால் பாமர மக்கள் ஒதுங்கி நின்ற வழிவிடுவதும் கூனிக் குறுகி நின்று தோள்; துண்டை எடுத்து கக்கத்தில் வைத்தக் கொண்டு வணக்கம் சொல்வது போல காண்பிப்பதும் வயலில் அல்லது தோட்டத்தில் வியர்வைசிந்தி உழைக்கும் மக்களை மடிப்புக்கலையாத வெள்ளையும் சொள்ளையமான வேட்டி சட்டை குடை மற்றும் அடியாட்கள் சகிதம் திமிர்த்தனமாக நின்று கண்காணிப்பது போலவும் காட்சிகள் அமைப்பது தற்செயலானதோ அல்லது கதைக்காக செய்யப்படுவதோ அல்ல. தமிழர்கள் மத்தியில் தேசிய உணர்வு வளர்ந்துவிடாமல் தடுத்து தொடர்ந்தும் அவர்களை சாதிய சமூகமாக வைத்திருப்பதற்கு உளவுத்துறை கொள்கை வகுப்பாளர்களும் பிழைப்பவாத அரசியல்வாதிகளும் வகுத்துள்ள திட்டம் என்பது பலருக்குத் தெரியாது.

அதேபோலவே எங்களது தேசத்திலே நடந்து வரும் வீரம்செறிந்த விடுதலைப் போராட்டம் தமிழ் மக்கள் மத்தியில் அவர்கள் இழந்து போன வீர உணர்வையும் எழுச்சியையும் உண்டாக்குவதை தடுப்பதற்காகவே ஆயுதப் போராட்டத்தை றவுடி இசமாகவும் பயங்கரவாதமாகவும் சித்தரிக்கும் கதைகளும் ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தால் அழிவான் என்பதை சித்திக்கும் கதைகளும் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட படங்கள் தான் வெற்றி பெற முடியும் என்ற உணர்வும் ரசனை முறையும் நடைமுறையில் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.

இங்கே புலம் பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளக்கு தங்களது சாதிப்பெருமையை எடுத்துக்காட்டுவதற்கு இந்தத் திரைப்படங்கள் சின்னத் திரைகளில் வரும் கதாபாத்திரங்களை உதாரணமாகக் காட்டி பல சம்பவங்கள் இருக்கின்றன. தமிழ் சினிமாவில் வரும் றவுடியிசம் தான் புலம் பெயர்பெயர்ந்த நாடுகளில் வளர்ந்துவரும் தமிழ் வன்முறை குழுக்களுக்கான வழிகாட்டியாகவும் அடிப்படையாகவும் இருக்கிறது.

ஒட்டுமொத்த தமிழ் சமுகத்தின் எதிர்காலத்தக்கும் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கும் எதிராக நன்கு திட்டமிட்டு திணிக்கப்பட்டுவரும் இந்தக் கருத்தியில் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சி எடுக்க வேண்டிய பொறுப்பு புலம் பெயர்ந்த ஊடகங்களுக்கே இருக்கிறது. இன்று வரை எந்த ஊடகமும் இத்தகைய திரைப்படங்களை புறக்கணிப்பதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இந்த திரைப்படங்கள் சின்னத்திரை தொடர் தமிழ் சமூகத்திற்கும் தமிழ் தேசியத்திற்கும் ஏற்படுத்தும் தீங்கு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இத்தகைய திரைப்படங்களை புலம்பெயர்ந்த நாடுகளிலே திரையிடக் கூடாது அவற்றின் இறுவெட்டுக்களையோ ஒளிநாடாக்களையோ நாங்கள் விற்பனை செய்யக் கூடாது என்ற உணர்வை நாங்கள் வர்த்தகர்களுக்கு ஊட்டவில்லை. இன்றைக்கு தமிழக சினிமாவைவின் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கின்ற நிலையில் நாங்கள் சமூகப் பொறுப்புணர்வோடு இதைச் செய்திருந்தால் தமிழ் தளத்தில் நல்ல சினிமா வளர்ந்திருக்கும். முற்போக்கு சிந்தனையும் தமிழ் தேசிய ஆதரவும் மிக்க தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் தங்களது இருப்பை உறுதிப்படுத்தி இருப்பார்கள். தமிழகத்தில் எங்களது தாயக விடுதலைக்கான ஆதரவென்பது இப்போதுள்ளதைவிட பல மடங்கு அசைக்க முடியாதபடி தடைகளை உடைத்துக் கொண்டு வளர்ந்திருக்கும். ஆனால் நாங்கள் என்ன செய்கிறோம் எங்கள் உணர்வுகளை சிதைத்து எங்களை கருத்தியல் ஏதிலிகளாகும் சீரழிவு சினிமாக்களுக்கு சின்னத்திரை தொடர்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு விளம்பரம் செய்து அவற்றுக்கன சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.

அடுத்து புலம் பெயர்ந்த சமுகத்தில் இன்று இன்னொரு மிக முக்கியமான பிரச்சனை வாழ்வை தொலைத்து விட்டு மனநோயாளிகளாகவும் குடிகாரர்களாகவும் மாறுவது. பாரிஸ் நகரத்தில் வீடற்ற தெருவோர வாசிகள் தொடர்பாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்ட கணக்கில் 162 பேர் தமிழர்களாகும். விரக்தி எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மை அடையாளம் இழத்தல் என்பன இவர்களை முழுநேர குடிகாரர்களாக மாற்றி தெருவோர வாழ்க்கைக்கு தள்ளியிருக்கிறது. இது ஒரு சமூகப் பிரச்சனை. இதை ஆய்வு செய்த வேண்டிய பொறுப்பும் இதைத் தடுத்த நிறுத்துவதற்கான வழிமுறைகளை கண்டறிவதற்கான தேடல்களை ஊக்கவிக்க வேண்டிய பொறுப்பும் உடகங்களுக்கத் தான் இருக்கிறது.

இதேபோல் பிள்ளைகளால் கைவிடப்படும் முதியோர்களின் பிரச்சனை குடும்ப உறவுகள் சீரழிந்து போவது விவாகரத்துக்கள்; அதிரிப்பது என்று எத்தனையோ விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாக இருக்கின்றன. இவை தொடர்பான துறைசார் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதோடு புலம் பெயர்ந்த ஏனைய இனங்கள் இத்தைகைய பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டு வெற்றிபெற்று தங்களது இருப்பையும் அடையாளத்தையும் தக்க வைத்தன என்கின்ற வரலாறுகளும் வெளிப்படுத்தப்பட வேண்டும் இதைச் செய்ய வேண்டிய பொறுப்பும் ஊடகங்களுக்கும் சமூகப் பொறுப்புள்ள ஊடகவியலாளர்களுக்கும் தான் இருக்கிறது.

ஒரு சமூகத்தின் அடையாளத்தை பிரதிபலிக்கிற ஊடகம் என்று சொல்கின்ற போது அது இத்தகைய பிரச்சனைகளையெல்லாம் பதிவுக்குள்ளாக்கி ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளை சொல்லாவிட்டாலும் அதற்கான வழிகாட்டல்களை அல்லது முன்மொழிவுகளையாவது முன்வைக்க வேண்டும். அப்போது தான் அது பரந்துபட்ட மக்களுடைய ஊடகமாக மக்களை அணிதிரட்டுகின்ற ஊடகமாக இருக்கும். ஊடகத்துறை என்பது தேடல் மிகுந்ததாகவும் சமூகப்பொறுப்புணர்ச்சி மிக்கதாகவும் இருக்க வேண்டும். ஊடகவியலாளர் என்று தன்னை அடையாளப்படுத்தும் ஒருவர் சமூகவியல் மானுடவியல் உளவியல் மொழியியல் தர்க்கவியல் அரசியல் பொருளாதாரம் கலை இலக்கியம் என்று அனைத்துறைகளிலும் குறைந்தபட்ச அறிவையாவது வளர்த்துக் கொள்ள வேண்டும். இவை தொடர்பான நூல்கள் கட்டுரைகள் ஆய்வுகள் என்பவற்றை இடையறாது தொடர்ந்து தேடிப்படிக்க வேண்டும்.

குறிப்பு :- இந்தக்கட்டுரையின் விரிவு கருதி இதை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் அடுத்த கட்டுரையில் ஒரு செய்தி அல்லது ஆய்வு அல்லது ஒரு விவரணம் மூலம் எப்படி மக்களுக்கு நம்பிக்கையூட்டுவது என்றும் அந்தச் செய்தி அல்லது ஆய்வு அல்லது விவரணம் மிகைப்படுத்தப்பட்டது நம்பகத் தன்மையற்றது என்ற உணர்வு மக்களுக்கு எற்படும் போது எப்படி அது அவர்களை அந்நியப்பட வைக்கிறது. அதனால் எற்படக் கூடிய ஆபத்துக்கள் என்ன என்பது பற்றியும் புலம் பெயர்ந்த சமூகத்தின் அடையாளத்தை பிரதிபலிக்கும் ஒரு ஊடகம் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் அது எதிர்நோக்கும் சவால்கள் பற்றி விரிவாக எழுதுகிறேன்

சிவா சின்னப்பொடி

கட்டுரைக்கு நன்றி.

சிந்திக்க வேண்டிய விஷயம்.

பிரான்சுக்கு வந்த முதல் சந்ததியினர் மொழிப் பிரச்சனையையும் குடும்பச் சுமையையும் தாங்கி தமது பிள்ளைகளையும் படிக்கவைத்து வீடுகளையும் கடைகளையும் வாங்கிக் கொண்டனர்.

அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டியவர்கள் இரண்டாவது சந்ததியினர். பல துறைகளிலும் முன்னேறிய இவர்களில் பலருக்கு ஈழப் பிரச்சனை பற்றியோ தமிழர் சமுதாயம் பற்றியோ எந்த அடிப்படை அறிவும் இல்லை. தங்களை ஐரோப்பியர் எனக் கருதுபவர்களும் உண்டு.

இதற்கு காரணம் தமிழர்கள் அடிப்படையிலேயே எதிகாலம் பற்றிய எந்த ஒரு கொள்கையும் இல்லாதவர்கள் என்று நினைக்கிறேன்.

புலம் பெயர்ந்தவர்களின் சந்தை என்ற விரலை வைத்து எமது தேசிய உணர்வு பகுத்தறிவு என்ற கண்களை எவ்வாறு குத்துகிறார்கள் என்றதை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.

நன்றி அய்யா.

நாம் பயணிக்க நீண்ட தூரம் இருக்கிறது என்ற உண்மையை எவ்வளவு விரைவில் எல்லோரும் உணர்கிறோமோ அந்தளவிற்கு எமது தேசியம் வலுப்பெறும் விடுதலையும் விரைவு பெறும். அதுவரை தமிழீழம் என்பது நாளை என்ற எதிர்கால பதமாகத்தான் இருக்கும். அது கானல் நீராக மாறிவிடாது இருக்க மாற்றங்கள் அவசியமானதும் அவசரமானதும்.

துணிவோடு தொடர்ந்து எழுதுங்கள் மற்ற ஊடகத்தவர்கள் உங்கள் எழுத்துக்களால் ஆவது விழிப்படைந்து துணிவு பெற்று தெளிவாக தமது கடமையை செய்ய இனியாவது முயற்சிக்கட்டும்.

புலம் பெயர்ந்தவர்களின் சந்தை என்ற விரலை வைத்து எமது தேசிய உணர்வு பகுத்தறிவு என்ற கண்களை எவ்வாறு குத்துகிறார்கள் என்றதை அழகாக விளக்கியிருக்கிறீர்கள்.

நன்றி அய்யா.

நாம் பயணிக்க நீண்ட தூரம் இருக்கிறது என்ற உண்மையை எவ்வளவு விரைவில் எல்லோரும் உணர்கிறோமோ அந்தளவிற்கு எமது தேசியம் வலுப்பெறும் விடுதலையும் விரைவு பெறும். அதுவரை தமிழீழம் என்பது நாளை என்ற எதிர்கால பதமாகத்தான் இருக்கும். அது கானல் நீராக மாறிவிடாது இருக்க மாற்றங்கள் அவசியமானதும் அவசரமானதும்.

துணிவோடு தொடர்ந்து எழுதுங்கள் மற்ற ஊடகத்தவர்கள் உங்கள் எழுத்துக்களால் ஆவது விழிப்படைந்து துணிவு பெற்று தெளிவாக தமது கடமையை செய்ய இனியாவது முயற்சிக்கட்டும்.

ஐயா நாய் வாலை நிமிர்த்துவது கூட சாத்தியமாகலாம். தமிழனை திருத்த முடியுமா? [/size]

எங்கள் பிள்ளைகள் பெரிய பெரிய படிப்பு படித்துள்ளார்கள், படித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது உண்மை. இதை வெறும் வார்த்தையால் கூற முடியாது. இலைமறை காயாக உள்ளவர்கள் ஒவ்வொருவராக வெளியில் வந்து விட்டால் இதன் மாபெரும் சக்தியை கற்பனை செய்தும் பார்க்கமுடியாது. பிரமித்து விடுவீர்கள். நம்மட ஆட்கள் புகுந்து விளையாடாத துறை என ஒன்றுமேயில்லை. உலகில் வெவ்வேறு மூலைகளில் வாழும் இவர்கள் ஒன்றிணைக்கப்படுவார்கள் என்றால் சிங்கிளப் பேரினவாதம் தவிடு பொடியாகிவிடும்!

இந்தப் பாரிய ஒண்றிணைப்பு வேலையை எப்படி, யாரால் கச்சிதமாகச் செய்து முடிக்க முடியும்? உலகில் வாழும் அனைத்து தமிழ்புத்தி ஜீவிகளும் ஒரே குடையின் கீழ் அணிதிரளுவார்களானால் இதை விட மிகப்பெரிய வெற்றி வேறு ஒரு சர்வதேச வேலைத்திட்டங்களாலும் எமக்கு கிடைக்காது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய புதிய புலம்பெயர் இளைய தலைமுறை எவ்வாறு எமது கையை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது என்று அழகாக எழுதி இருந்தீர்கள். இந்த இக்கட்டான சூழலில் அவர்களை தேசியத்துடன் இணைக்கக்கூடிய ஒருவும் ஒரேயுமான தொடர்பு (one and only one) அவர்களின் பெற்றோரே. Spanglish என்ற ஆங்கிலப்படத்தில் இதை மிக அழகாக விளக்கியிருந்தார்கள். ஆனால், துரதிருஷ்டவசமாக நாங்கள் பல பெற்றோரையே இழந்து கொண்டிருக்கின்றோம். இந்த லட்சணத்தில் பிள்ளைகளெங்கே?

ஆனாலும் சில பிரகாசமான நம்பிக்கை ஒளிக்கீற்றுகள் இன்னும் இருப்பதாகவே எனக்குத் தென்படுகிறது/பட்டது.

ஊடகம் என்பதற்கு இரு பகுதியினரை தொடுக்கும் ஒரு சாதனம் என்று பொருள் வருகிறது. அந்தவகையில் இன்றைய புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் சர்வதேச அளவில் ஒரு ஊடகத்துக்குரிய ஒரு பண்புடன் ஈருக்கிறது என்பதனை குறிப்பிட்டேயாக வேண்டும். அதாவது, இன்றுள்ள புலம்பெயர் தமிழ் வானொலி தொலைக்காட்சி இந்ரெனெற் மூலம் எந்த ஒரு புலம் பெயர் தமிழனையும் தொட்டுவிட முடியும். அந்தவகையில் ஊடகத்தின் ஒரு முனை சரியாகத்தான் இருக்கிறது. மற்றமுனையில் தான் பிரச்சினை இருக்கிறது. மற்ற முனையில் இருப்பவர்கள் ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள் போன்றோர். உங்கள் கட்டுரையின் படியும் அந்த மற்ற முனையில் தான் பிரச்சினை. என்னுடைய ஒரே ஆதங்கம், அந்த மற்ற முனையில் எத்தனை பேர் இருப்பார்கள்? எல்லா நாடுகளிலுமாக ஒரு ஆயிரம் பேர்? இந்த ஆயிரம் பேர்களை ஒழுங்கு படுத்தி எமது தேசியத்தை வலுப்படுத்துமுகமாக அவர்களை சிறப்பாக சீர்(fine tune) செய்ய ஏன் இத்தனை காலம்? ஒரு வகையில் பார்த்தால் இந்தக் கட்டுரை இந்த மற்ற முனையில் உள்ளவர்களுக்கானதே. எம்போன்ற வாசகர்களுக்கானதல்லவே? அப்படி இந்த மற்றமுனையை தொடர்புகொள்ளக் கூட நீங்கள் இப்படியான ஒரு ஊடகத்தைத் தெரிவுசெய்ய வேண்டியிருக்கிறது எனும் போது என் நெஞ்சில் பிரச்சினையின் ஆழம் இடியாக இறங்குகிறது. அதாவது மேலே எட்டு சுப்பர்சொனிக் வட்டமிட வெட்டவெளியில் நிற்கும் ஒரு உணர்வு ஏற்படுகிறது.

Edited by பண்டிதர்

இந்தப் பாரிய ஒண்றிணைப்பு வேலையை எப்படி, யாரால் கச்சிதமாகச் செய்து முடிக்க முடியும்? உலகில் வாழும் அனைத்து தமிழ்புத்தி ஜீவிகளும் ஒரே குடையின் கீழ் அணிதிரளுவார்களானால் இதை விட மிகப்பெரிய வெற்றி வேறு ஒரு சர்வதேச வேலைத்திட்டங்களாலும் எமக்கு கிடைக்காது!

யாராலும் மறுக்க முடியாத உண்மை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த வாரம் பாரிஸ் நகரத்தின் புறநகர் தொடரூந்து ஒன்றிலே பயணம் செய்த போது என்னுடன் பேசிக் கொண்டு வந்த ஒருவர் சொன்னார் 'அண்ணை நாங்கள் 1988 ம் ஆண்டு பரிசுக்கு வந்த போது 2 தமிழ் கடைகள் தான் இருந்தன. அதையும் பாண்டிச்சேரி தமிழர்கள் தான் வைத்திருந்தார்கள். இன்றைக்கு 200 க்கும் மேற்பட்ட கடைகள் வந்துவிட்டன இது ஈழத் தமிழரின் சாதனை என்றார்.

உண்மைதான் பாரிஸ் 10 நிர்வாகப் பகுதியில் உள்ள லா சப்பல் பகுதி தமிழ் மயமாக மாறிவிட்டது. பாரிசின் புறநகர் பகுதியான லா கூர்நெவ் இப்போது மாறிக் கொண்டிருக்கிறது.

ஆனால் பொருளாதர அடிப்படையில் நன்கு திட்டமிட்ட இந்த வர்த்தக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதா என்றால் இல்லை என்று தான் கூறவேண்டும். பிரான்சிலே புலம் பெயாந்து வாழும் யூதர்களும் சீனர்களும் பிரெஞ்சு பொருளாதாரத்தில் தாக்கம் விளைவிக்கக் கூடிய அளவுக்கு பிரமாண்டமான பல்பொருள் அங்காடிகளையும் பாரிய தொழில் நிறுவனங்களையும் உருவாக்கியது போல் தமிழர்களால் ஏன் உருவாக்க முடியவில்லை?

இன்று வரை பொருளியல் மற்றும் வணிகத்துறையில் நிபுணத்துவம் பெற்ற இளைய தலைமுறை இந்த வர்த்தக நடவடிக்கைளில் வணிக முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறதா? ஏன்றால் அதுவும் இல்லை.

……..

பிரெஞ்சு அரசாங்கம் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாது விட்டாலும் எங்களது வணிக முயற்சிகள் பற்றி அவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை. பிரெஞ்சு நாடாளுமன்றத்தில் வர்த்தக அமைச்சர் எமது இனத்தின் பேர் சொல்லி சில தவறுகளை சுட்டிக்காட்டும் அளவுக்கு எமது நிலை இருக்கிறது. இதற்கு காரணம் எமது வணிக முயற்சிகள் பொருளியல் மற்றும் தொழில் சார் முறைகளில் திட்டமிடப்படாததேயாகும்.

உண்மை தான் ஒத்துக்கொள்கிறேன்.

அதேபோல புலம்பெயர் ஊடகங்களினதும் நிலை இது தான் என்பதையும் ஒத்துக் கொள்கிறீர்களா? எந்த ஒரு தமிழ் ஊடகத்தாலும் அந்தந்த நாட்டிலுள்ள ஒரு mainstream media வில் தாக்கம் செலுத்த முடியவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

இதற்கு என்ன காரணம்?

Education என்று நான் சொல்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

இன்று புலம்பெயர் மக்கள் கல்வி அறிவில் கொடிகட்டிப்பறப்பதாகக் கூறுகிறார்கள். நீங்கள் சொன்னது போல அது உண்மையல்ல. புலம்பெயர் நாடுகளில் கிட்டத்தட்ட 1 மில்லியன் இலங்கைத் தமிழர் உள்ளனராம். இவர்களில் எத்தனை பேருக்கு ஒரு டிகிரி உள்ளது? ஒரு 40 வயதிலுள்ளவர் extra time கிடைத்தால் ஒரு extra work செய்வாரே தவிர ஒரு டிப்ளோமா, டிகிரி நோக்கி செல்வதை அறிந்திருக்கிறீர்களா? ஏன்? அவர்களுக்கு அது பற்றி counseling செய்ய நாங்கள் எத்தனை நிறுவனங்கள் வைத்திருக்கிறோம்?

நீங்கள் சொன்ன தெருவோரம் வசிப்போர் தொடர்பான பிரச்சினைக்கும் தீர்வு Education தானே? அது தவிர குழந்தைகளை சிறப்பாக கல்வியில் வழிகாட்டவும் "அந்த" வாசம் மிகவும் முக்கியமானது. லண்டன் நோக்கிய இடப்பெயர்வுக்கும் தீர்வு அது தான். இன்று இலங்கைத் தமிழ் மாணவர்கள் அதிகம் படிக்கும் சில பல்கலைக்கழகங்களில் அவர்களின் பெறுபேறுகள் சரா சரியை விட ஏன் குறைவாகவுள்ளது என்று ஆராய்ச்சி செய்கிறார்களாம். ஒரு wistle blower கூறினார்.

இன்று புலம்பெயர் ஊடகத்துறையினரின் கல்வியறிவு பற்றிய புள்ளிவிபரம் எனக்குத்தெரியாது. ஆனால், ஒவ்வொரு ஊடகவியலாளனும் தனது துறையில் இன்னும் இன்னும் கல்வியறிவு பெற முன்வர வேண்டும். அதை அவர்களது நிறுவனம் ஊக்குவிக்கவேண்டும். ஒரு டிப்லோமா கற்பதற்கு O/L படிப்பு போதும். டிப்லோமா உள்ளவர்கள் டிகிரி எடுக்க முயல வேண்டும். டிகிரி உள்ளவர்கள் அதை விட மேலே பார்க்கவேண்டும். இங்கு கல்விகற்ற இளைய தலைமுறையினர் ஓடிவந்து எம்மைத்தூக்கி விடுவர் என்று வாளாவிருக்கக்கூடாது. ஏனென்றால் இளைய தலைமுறையினரை வழிகாட்டவேண்டியவர் நாமே.

Edited by balapandithar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் எழுத்துக்களை நான் மனப்பூர்வமாக வரவேற்கின்ற அதேவேளை, இன்றைய நிலையில் புலம் பெயர் தமிழ் ஊடகங்கள் தமிழ்த்தேசியத்தை சிறப்பாக (effective) வளர்க இரண்டு வழிகளேயுள்ளன என்பதை கூறவிழைகிறேன்.

1) centralized influence: விடுதலைப் புலிகள் பலநாடுகளில் தடை செய்யப்பட்ட நிலையிலும், நாங்களெல்லாம் முதலாளித்துவ நாடுகளில் இயங்கிக் கொண்டிருப்பதாலும் இது “பெரும்பாலும்” சாத்தியமில்லை.

2) Cooperation and understanding: எதிர்கால பாதையைத் தீர்மானிக்கவும் கடந்து போன பாதையின் நிறை குறைகளை ஆராயவும் சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் மாநாடுகளை அடிக்கடி நடாத்துவதன் மூலம்.

இன்று புலம்பெயர் மக்கள் கல்வி அறிவில் கொடிகட்டிப்பறப்பதாகக் கூறுகிறார்கள். நீங்கள் சொன்னது போல அது உண்மையல்ல. புலம்பெயர் நாடுகளில் கிட்டத்தட்ட 1 மில்லியன் இலங்கைத் தமிழர் உள்ளனராம். இவர்களில் எத்தனை பேருக்கு ஒரு டிகிரி உள்ளது? ஒரு 40 வயதிலுள்ளவர் extra time கிடைத்தால் ஒரு extra work செய்வாரே தவிர ஒரு டிப்ளோமா, டிகிரி நோக்கி செல்வதை அறிந்திருக்கிறீர்களா?

கையில் டிகிரி, டிப்ளோமா வைத்திருப்பவர்கள் தான் புத்திஜீவிகளா? தொழிற்கல்வியில், வியாபாரத்தில் தேர்ச்சி பெற்ற படிக்காத மேதைகள் புத்திஜீவிகள் இல்லையா?

உங்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கையில் டிகிரி, டிப்ளோமா வைத்திருப்பவர்கள் தான் புத்திஜீவிகளா? தொழிற்கல்வியில், வியாபாரத்தில் தேர்ச்சி பெற்ற படிக்காத மேதைகள் புத்திஜீவிகள் இல்லையா?

உங்கள் இந்தக் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது!

மாப்பிளை,

நீங்கள் "மாதிரி நிகழ்வை"ப் (sample event) பற்றிக் கதைக்கிறீர்கள். நான் "மாதிரி சனத்தொகை"யைப் (sample population) பற்றிக் கதைக்கிறேன். ஒரு சமூகத்தின் வளர்ச்சி பற்றிக் கதைக்கும் போது எது நல்லது என்கிறீர்கள்? பொதுவானவரை பற்றிக்கதைப்பதா? அல்லது ஒரு விதி விலக்கானவரைபற்றிக் கதைப்பதா?

Edited by balapandithar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னத்திரை சீரியலையும் திரைப்படத்தையும் ஊடகங்கள் நிறுத்த வேண்டுமென்று சொன்னீர்கள். ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதை நிறுத்திவிட்டு அவர்கள் எதைப்போடுவது? எமது ஈழத்தமிழர் தயாரித்த ஒரு நாடகத்தை பார்க்கும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு காமிராவை எந்தெந்த கோணத்தில் வைத்து காட்சிகளை அகப்படுத்துவது என்று தெரியவில்லை அதேபோல, காமிராவுக்கு எப்படி முகம் கொடுத்து நடிப்பது என்று தெரியவில்லை. எமது ஈழத்துத தயாரிப்புகள் 100% ஈழத்துத் தயாரிப்புக்களாக இருக்கவேண்டியதில்லை. ஆணிவேர் ஒரு சிறந்த உதாரனம். அதேபோல இங்கு எடுக்கப்படும் தொலைக்காட்சித் தொடர்களையும் இந்திய தொழில்நுட்ப, நடிக உதவியுடன் தமிழக சீரியல்களின் தரத்துடன் கொண்டுவந்தாலே அதைவைத்து தமிழக சீரியல் மற்றும் படங்களை மாற்றீடு செய்வது சாத்தியம். இந்தியக் கலைஞர்களுக்குப் போட்டியாக பல சிறந்த மெல்லிச்சைப்பாடல்களை தந்த காலம் இருக்கிறதே? அது இனி வராதா?

Edited by balapandithar

சின்னத்திரை சீரியலையும் திரைப்படத்தையும் ஊடகங்கள் நிறுத்த வேண்டுமென்று சொன்னீர்கள். ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதை நிறுத்திவிட்டு அவர்கள் எதைப்போடுவது? எமது ஈழத்தமிழர் தயாரித்த ஒரு நாடகத்தை பார்க்கும் ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு காமிராவை எந்தெந்த கோணத்தில் வைத்து காட்சிகளை அகப்படுத்துவது என்று தெரியவில்லை அதேபோல, காமிராவுக்கு எப்படி முகம் கொடுத்து நடிப்பது என்று தெரியவில்லை. எமது ஈழத்துத தயாரிப்புகள் 100% ஈழத்துத் தயாரிப்புக்களாக இருக்கவேண்டியதில்லை. ஆணிவேர் ஒரு சிறந்த உதாரனம். அதேபோல இங்கு எடுக்கப்படும் தொலைக்காட்சித் தொடர்களையும் இந்திய தொழில்நுட்ப, நடிக உதவியுடன் தமிழக சீரியல்களின் தரத்துடன் கொண்டுவந்தாலே அதைவைத்து தமிழக சீரியல் மற்றும் படங்களை மாற்றீடு செய்வது சாத்தியம். இந்தியக் கலைஞர்களுக்குப் போட்டியாக பல சிறந்த மெல்லிச்சைப்பாடல்களை தந்த காலம் இருக்கிறதே? அது இனி வராதா?

[b]நீங்கள் சொல்வது சரி.தமிழக சினிமா துறையுடன் சேர்ந்து நல்ல தயாரிப்புக்களை செய்து அவற்றை ஒளிபரப்பலாம். அது சரி ஏன் சினிமாவையும் சின்னத்திரையையும் வைத்துத் தான் ஊடகம் நடத்த வேண்டும் என்ற சிந்தனை எங்களுக்கு வருகிறது.இன்றைக்கு அல்ஜெசீரா தொலைக்காட்சி ஆங்கிலத்தில் தொடங்கியிருக்கிறார்கள்.அதில

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
[b]நீங்கள் சொல்வது சரி.தமிழக சினிமா துறையுடன் சேர்ந்து நல்ல தயாரிப்புக்களை செய்து அவற்றை ஒளிபரப்பலாம். அது சரி ஏன் சினிமாவையும் சின்னத்திரையையும் வைத்துத் தான் ஊடகம் நடத்த வேண்டும் என்ற சிந்தனை எங்களுக்கு வருகிறது.இன்றைக்கு அல்ஜெசீரா தொலைக்காட்சி ஆங்கிலத்தில் தொடங்கியிருக்கிறார்கள்.அதில

Edited by balapandithar

கருத்தாடல் நல்ல திசையில் போகிறது. எல்லாருக்கும் நன்றி.

சினிமா இல்லாது எப்படி ஒலி ஒளி ஊடகங்களின் நேரத்தை நிரப்புவது என்பது நியாயமான கேள்வி தான்.

சினிமா சின்னத்திரை சார்ந்த நிகழ்ச்சிகளை முற்றாக நிறுத்தி முழு நேர செய்தி ஆவண கருத்தாடல் ஊடகமாக நடத்துவது என்பது நாங்கள் இன்று இருக்கும் நிலைக்கு மிகவும் புரட்சிகரமான ஒரு சிந்தனை. அதை அமுல்படுத்துவதில் ஏகப்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்கும். முதற்கட்டமாக வீதத்தை படிப்படியாக குறைக்க முயற்சிக்கலாம். தற்பொழுது சினிமா சின்னத்திரையே பெரும்பான்மையாக இருக்கிறது. அதற்கும் 2 சவால்கள்:

-1- மக்களை இத்தனை வருடங்களாக சினிமா சின்னத்திரைகள் நிறைந்த ஊடகங்களிற்கு பழக்கப்பட்டு விட்டார்கள். அதை திடீர் என்று மாற்ற முடியாது. அதுக்குள்ள கணிசமான momentum இருக்கு. படிப்படியாகத்தான் குறைக்கலாம். தனித்துவமாக ஒன்றை முயற்சித்தாலும் குப்கை கொட்ட வேறு பலர் இருக்கிறார்கள். குப்பைக்கு பழக்கப்பட்டவர்கள் திருப்த்தியாக ரசிச்சு அனுபவிப்பவர்கள் அது கிடைக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார்கள். மாற்றத்தை மெதுவாக அவர்களையும் சேர்த்து கொண்டு போவதாக இருந்தால் தான் வெற்றி.

-2- சினிமா சின்னத்திரை போன்றவற்றிற்கு மாற்றீடான நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும். அது ஓரளவு தரமானதாக பயனுள்ளவையாக இருக்க வேண்டும். சொந்தமாக நிகழ்ச்சிகள், ஆவணங்கள் விவரணங்கள் என்று தயாரிக்கும் அனுபவத்தை படிப்படியாக வழர்க்க வேண்டும். ஆரம்பத்தில் வேறு அனுபவம் நிறைந்தவர்களோடு சேர்ந்து கூட்டுத் தயாரிப்பு செய்யலாம். இவற்றிற்கும் நேரம் தேவை. இதுவும் படிப்படியாக மாற்ற வேண்டிய 1 ஆவதோடு கால அட்டவணையில் ஒத்துப் போகக் கூடியது.

இவற்றிற்கான செயல் திட்டங்கள் கால அட்டவணைகள் கொள்கைகள் அவை நடைமுறைப்படுத்தப்படுகிறதான என்பது பற்றிய கவனிப்புகள் கருத்தாடல்கள் விமர்சனங்களிற்கு ஒட்டு மொத்த புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கும் ஒரு media watchdog தேவை. அதன் தலமையில் வருடம் தோறும் பாலபண்டிதர் கூறுவது போன்ற மாநாடு நடக்க வேண்டும். இதை ஒரு think tank ஆகவும் பார்க்கலாம்.

அவர்கள் இன்னென்றையும் செய்யலாம். தேசத்தின் குரல் பலா அண்ணையின் பெயரால் (சர்வதேசம்-Internation studies, அரசியல்-Politics, மற்றும் இராஜதந்திரம்-Diplomacy) மாமனிதர் சிவராமின் பெயரால் (ஊடகவியல் துறையில்- Journalism,media) இளமானி முதுமானி படிப்புகளிற்கான புலமைப்பரிசில் ஊக்குவிப்பு தொகைகளை நிர்வகிக்கலாம். முற்று முழுக்க திறமை மற்றும் தயாகம் தேசியம் தன்னாட்சி-சுயநிர்ணய உரிமையில் நம்பிக்கை தெளிவு அர்பணிப்புள்ள மாணவர்களிற்கு அவர்களது ஈடுபாட்டை வைத்து அவை வழங்கப்படுவதாக இருக்க வேண்டும்.

காட்டுக் கலாச்சார உலக ஒழுங்கில் ஒரு நாடு நிறுவப்படவும் அது நிறுவப்பட்ட பின்னர் ஒரு தோல்வியடைந்த நாடாக மாறாது ஒரு சாதாரண நாடாக திகழவே பல சவால்கள் இருக்கிறது. அதற்கு அந்த நாட்டின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய தெளிவான இராஜதந்திரிகள் ஊடகவியலாளர்கள் தொடர்ச்சியாகத் தேவை. இதை குடிசைக் கைத்தொழிலாக செய்ய முடியாது. அதற்குரிய துறைசார் விழுமியங்களை தர்மங்களை நுணுக்கங்களை அறிந்து நடக்கும் நிபுணர்களாக இருக்க வேண்டும். அடுத்த சந்ததியை உருவாக்க இன்று ஆரம்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்றுபோல் "மாமனிதர் சிவராமிற்கு பிறகு..." என்ற பாணியில் இன்னும் பல விடையங்களிற்கு இன்னம் 5...10 வருடங்களில் ஏக்கமாக பதில் சொல்ல வேண்டி இருக்கும்.

-1- மக்களை இத்தனை வருடங்களாக சினிமா சின்னத்திரைகள் நிறைந்த ஊடகங்களிற்கு பழக்கப்பட்டு விட்டார்கள். அதை திடீர் என்று மாற்ற முடியாது. அதுக்குள்ள கணிசமான momentum இருக்கு. படிப்படியாகத்தான் குறைக்கலாம். தனித்துவமாக ஒன்றை முயற்சித்தாலும் குப்கை கொட்ட வேறு பலர் இருக்கிறார்கள். குப்பைக்கு பழக்கப்பட்டவர்கள் திருப்த்தியாக ரசிச்சு அனுபவிப்பவர்கள் அது கிடைக்கும் இடத்திற்கு சென்றுவிடுவார்கள். மாற்றத்தை மெதுவாக அவர்களையும் சேர்த்து கொண்டு போவதாக இருந்தால் தான் வெற்றி.

-2- சினிமா சின்னத்திரை போன்றவற்றிற்கு மாற்றீடான நிகழ்ச்சிகளை தயாரிக்க வேண்டும். அது ஓரளவு தரமானதாக பயனுள்ளவையாக இருக்க வேண்டும். சொந்தமாக நிகழ்ச்சிகள், ஆவணங்கள் விவரணங்கள் என்று தயாரிக்கும் அனுபவத்தை படிப்படியாக வழர்க்க வேண்டும். ஆரம்பத்தில் வேறு அனுபவம் நிறைந்தவர்களோடு சேர்ந்து கூட்டுத் தயாரிப்பு செய்யலாம். இவற்றிற்கும் நேரம் தேவை. இதுவும் படிப்படியாக மாற்ற வேண்டிய 1 ஆவதோடு கால அட்டவணையில் ஒத்துப் போகக் கூடியது.

இவற்றிற்கான செயல் திட்டங்கள் கால அட்டவணைகள் கொள்கைகள் அவை நடைமுறைப்படுத்தப்படுகிறதான என்பது பற்றிய கவனிப்புகள் கருத்தாடல்கள் விமர்சனங்களிற்கு ஒட்டு மொத்த புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கும் ஒரு media watchdog தேவை. அதன் தலமையில் வருடம் தோறும் பாலபண்டிதர் கூறுவது போன்ற மாநாடு நடக்க வேண்டும். இதை ஒரு think tank ஆகவும் பார்க்கலாம்.

அட சும்மா இரும் ஐயா. media watchdog கும் think tank கும் மண்ணாங்கட்டியும். இதெல்லாம் வந்தால் எங்கடை தமிழ் பாரம்பரியம் என்னாகிறது. ‘நீங்கள் உங்க என்ன செய்யிறியள் எண்டு நாட்டிலை இருந்து கேட்டால் எங்கடை சனம் இன்னும் திருந்தேல்லை அவயின்ரை விருப்பப்படிதான் நாங்கள் நடக்க வேண்டி கிடக்கு’ எண்டு எப்பிடி பதில் சொல்லுறது. உமக்கு வேற வேலை இல்லை எண்டா ‘புலம் பெயர்ந்த தமிழர்களை சீரழிப்பது எப்படி’ என்று ஒரு நூல் எழுதும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிப்படிப்பினம்.

Diplomacy - a game Tamils need to master

Diplomacy is the art and practice of conducting negotiations between representatives of groups or states, says Wikepideia.

It usually refers to international diplomacy, the conduct of international relations through the intercession of professional diplomats with regard to issues of peace-making, culture, economics, trade, and war International treaties are usually negotiated by diplomats prior to endorsement by national politicians, says further.

Like any jargon, diplomacy contains many roles and needs to serve one nation's interest. You could read more here: http://www.publicdiplomacy.org/1.htm

It is a game too

What you may not known is this, diplomacy is a seven-player game based on the political situation in Europe at the beginning of the 1900's. That is right, it all started as a game! Games take between 3 and 10 hours to play. Long games are mentally draining... you have to concentrate really, really hard for long periods of time under constant time pressure.

It's a very social game - it's based on communication and social interaction.... it is also the game that has the highest potential to alienate people. You need to play with people who understand that it is a game, because it can appear quite personal. It never is though. Afterwards the bitterest of enemies tend to sit down and smile and share a beer and say "wow, you really had me under pressure there..." For more enjoy at : http://www.geocities.com/sydneyboardgamesc..._diplomacy.html

The game GoSL plays

When it comes to "Diplomacy in Sri Lanka " - it has only one and one aim only - to discredit Tamil struggle for self determination. Like all Presidents, Foreign Ministers too want to prove that they are better than their predecessor. GoSL and its powerful lobbying has done well, and GoSL would like to keep the "bans" firm, and working with UN to impose some restrictions and counter any potential allegations, even with "Ad Haminem".

When 4 Lankans were "beheaded" for mere robbery of Saudis (note that GoSL would have lobbied to save these poor souls, had they robbed Tamil workers in Saudi), and their bodies have been "displayed publicly", there is a loud outcry among Sinhalese that their "diplomacy" failed. This accusation comes from humiliation.

Classic Diplomacies

a ) The first comes to mind is diplomacy around Israel-Palestine conflict. There were many talk, shuttle travels, special envoys and even Nobel prize. The end result shows that Palestine (Arab) side is weakened on all 3 counts: politically, economically and militarily. This is a classic case study for Tamils.

b ) War on Iraq : Here too, just before the war, lots of diplomacy. One went to plant GPS pens, others went to sell arms to Iraq - all in the name diplomacy.

c ) Now there is talk of diplomacy gathering momentum in and around Iran . Read, watch and learn.

d ) Cold war era: Because of there was a "balance of power" between USSR (former Russia ) and USA , they never had fought a war. Now that India and Pakistan have nuclear weapons, there will be no full scale war.

Bottom line

If diplomacy is what the "power houses" wanted us to believe in, then there would not be any wars in the first place.

Why the 5 years old CFA failed to bloom? Why diplomacy failed? Is the answer, balance of power??

Tamils do not have the know-hows and resources to counter efficiently Sinhala lobbying. But, we must take baby steps to correct the situation.

Remember, diplomacy is a game of communication and interaction. "They can do it" - "We can help them".

--Thanks: Anonymous, Canada

ஊடகத்துறையை கையில் எடுத்த அவர்கள் முதலில் மத அடிப்படைவாதத்தாலும் ஏனைய ஏற்றத் தாழ்வுகளாலும் பிளவு பட்டுக்கிடத்த யூத இனத்தை தாயகம் நோக்கிய பயணத்துக்காக ஒன்று படுத்தினார்கள். அதேவேளை சர்வதேச ஊடக வலைப்பின்னலில் நுழைந்து அதில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக்கொண்ட அவர்கள் உலகத்தையே தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தார்கள். தாயக விடுதலை என்ற இலக்கை முதனைப்படுத்தி தங்களது பிள்ளைகளை இந்த இரண்டு துறைகளையும் குறிவைத்து அதிகளவில் படிக்க வைத்தார்கள். இன்று யுத இனம் உலக பொருளதாரத்தலும் உலக கருத்துருவாக்கத்திலும் அதாவது ஊடகத்துறையிலும் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு புலம் பெயர்ந்த யூதர்களுடைய எதிர்காலத்தை நோக்கிய திட்டமிட்ட செயற்பாடுகள் தான் காரணமாகும்

ஊடகத்துறையில் நாம் மிக மோசமான நிலையில் இருக்கிறோம் என்ற கசப்பான உண்மையை எமது ஊடகங்கள் இன்றும் ஏற்று கொள்ள கூடிய மனபக்குவ படவில்லை.......................

விடுதலை க்கு போராடும் மக்கள் பற்றிய செய்திகள் மிக மிக அவசியம் எந்த செய்தியாக இருந்தாலும் அதை அப்படியே பெருமையாகவும் வெற்றியாகவும் போடுவதை விட அந்த செய்தியின் முலம் நாம் எப்படியான சுழ்நிலையில் வாழ்கிறேம் போராட்டம் எமக்கு ஏன் அவசியம் என்பதை எடுத்து கூற கூடியதாக இருக்கவேண்டும்........

போக ஒரு சிங்கள ஊடகத்தின் செய்தியை மொழி மாற்றி அவர்கள் போடும் அதே மாதிரி கேள்விகுறியும் போட்டு விட்டால் சரியா? அந்த சிங்கள ஊடகம் சிங்கள்வர்களை நோக்கி செய்தி கொண்டு போகிறது அதே சிங்களவர்களால் நடத்தும் ஆங்கில ஊடகங்கள் இலங்கையில் இருக்கும் வெளீநாட்டு ராஜதந்திரிகளை நோகிய செய்தியாக தான் இருக்கும் அதன் முலம் எதோ ஒன்றை அவர்கள் சொல்ல முற்படுவார்கள் ஆனா நாங்கள் என்ன செய்கிறோம்

இருக்கிற ஆங்கில அறிவை வைத்து மொழி பெயர்த்து தான் செய்தி போடுகிறோம்

அதை எப்படியான கோணத்தில் மக்களிடம் கொண்டு சொல்ல வேண்டும் என்று சிந்த்திப்பது இல்லை............

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலத்தின் கட்டாயத்தேவை

எமது இளைய தலைமுறையினரை இந்த துறைகள் நோக்கி கல்வி கற்க நாம் ஊக்கப்படுத்தும் அதே வேளை இன்று பல துறைகளிலும் கல்விமான்களாக விளங்கும் பலரும் காலத்தின் கட்டாயம் கருதி இந்த ஊடகத்துறையில் கால்பதிக்கவேண்டிய தேவை இருக்கின்றது போலுள்ளது. குறந்தபட்சம் இவர்களுக்கு இந்த ஊடகத்துறை, diplomacy பற்றிய அடிப்படை அறிவு போதிக்கப்படல் வேண்டும். பலர் வெவ்வேறு துறைகளில் கலாநிதிப் பட்டம் வரை பெற்றவர்களாக இருந்தும் அவர்களிற்கு இந்த துறைகளில் போதிய அறிவின்மையால் தாமுண்டு தம் பாடுண்டு என்று போராட்டத்தப்பற்றி அலட்டிக்கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, தாம் தாயகத்துக்குச் செய்யும் சேவை தமது துறைகளில் முடிந்தளவுக்கு தேர்ச்சி பெறுவது. "காலம் கனிந்தால்" ஈழத்துக்குப் போய் ஏதாவது செய்யலாம் என்ற வகையில் போகிறது.

இவர்களின் துறை (field of expertise) வேறாக இருந்த போதும் காலத்தின் தேவை கருதி இவர்களும் ஊடகப்போரில் இறக்கப்பட வேண்டியவர்கள் போல எனக்குப் படுகிறது. இது, இன்று எவ்வாறு தாயகத்திலுள்ள அனைவரும் வீட்டுக்கொரு வீரன் என்றவகையில் அவர்களின் சிறப்புத்தேர்ச்சி வேறுபாடு பாராமல் களமிறக்கப் படுகிறார்களோ, அதையொத்தது. என்னைப் பொறுத்தவரை நல்ல ஒரு தூரநோக்குக் கொண்ட ஒரு ஊடகர் குழு ஒன்று (veteran journalists) இருந்தால் ஒரு effective ஆன பாடத்திட்டத்தை வகுத்து ஒரு வருடத்தில் இவர்களுக்கு ஓரளவிற்குத் தேவையான அறிவைப் புகட்ட முடியும். இவ்வாறான அறிஞர்குழு கட்டாயம் தமிழர்களாக இருக்க வேண்டியதில்லை. எத்தனையோ மேலைத்தேய ஊடகர்கள், பேராசிரியர்கள் என்று இருக்கிறார்களே. ஜெனீவாப் பேச்சுவார்த்தைக்கு முன்னராக எவ்வாறு MIT யிலிருந்து அறிஞர்குழு அவர்களுக்கு போதிக்கச் சென்றனரோ, அது போல. சிவராமை இழந்ததை நினைத்து நீண்ட நாள் கவலைப்பட்டுக்கொண்டிருப்பதை ஜீரணிக்க இயலாது, we cant afford to do that.

அதேவேளை, முழுநேரமும் ஊடகத்துறையில் ஈடுபடமுடியாத இவர்களை மினைக்கட்டு பயிற்றுவிப்பதில் ஏதாவது பயனுண்டா என்ற கேள்வியுமுள்ளது. ஆனால் இவ்வாறான பயிற்சிகள் பட்டறைகள் நமது ஊடகவியலாளர்களுக்கு கட்டாயம் தேவை.

தயவு செய்து மேலுள்ளவற்றைப்பற்றி யாராவது கருத்துச் சொல்லுங்கள்.

Edited by balapandithar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு சமூகத்தின் அடையாளத்தை பிரதிபலிக்கிற ஊடகம் என்று சொல்கின்ற போது அது இத்தகைய பிரச்சனைகளையெல்லாம் பதிவுக்குள்ளாக்கி ஆய்வு செய்து அதற்கான தீர்வுகளை சொல்லாவிட்டாலும் அதற்கான வழிகாட்டல்களை அல்லது முன்மொழிவுகளையாவது முன்வைக்க வேண்டும். அப்போது தான் அது பரந்துபட்ட மக்களுடைய ஊடகமாக மக்களை அணிதிரட்டுகின்ற ஊடகமாக இருக்கும். ஊடகத்துறை என்பது தேடல் மிகுந்ததாகவும் சமூகப்பொறுப்புணர்ச்சி மிக்கதாகவும் இருக்க வேண்டும். ஊடகவியலாளர் என்று தன்னை அடையாளப்படுத்தும் ஒருவர் சமூகவியல் மானுடவியல் உளவியல் மொழியியல் தர்க்கவியல் அரசியல் பொருளாதாரம் கலை இலக்கியம் என்று அனைத்துறைகளிலும் குறைந்தபட்ச அறிவையாவது வளர்த்துக் கொள்ள வேண்டும். இவை தொடர்பான நூல்கள் கட்டுரைகள் ஆய்வுகள் என்பவற்றை இடையறாது தொடர்ந்து தேடிப்படிக்க வேண்டும்.

சிவா சின்னப்பொடி

தேவையனவர்களுக்கு, சிலவிடயங்களை force feed பண்ணுவதற்கான பல வழிமுறைகளை மேற்கத்தைய உலகம் விருத்தி செய்துவைத்திருக்கிறது. அவற்றின் உச்சப்பயன்பாட்டை நாமும் எவ்வாறு பெறுவது என்று சிந்திக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தக் கட்டுரையைப்போட தெரிவுசெய்த இடம் சரியில்லை என்ரு நினைக்கிறேன். யாரும் கண்டுகொள்கிறார்களில்லை. எமது பரிந்துரைகளை நிர்வாகத்துக்கு அனுப்ப வேண்டியகாலம் வந்து விட்டது.

Edited by balapandithar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் 24 மணி நேர news channel தோடங்குவது இருக்கட்டும், எப்போது ஒரு தமிழனின் news agency தொடங்கப் போகிறோம்?

நாங்கள் 24 மணி நேர news channel தோடங்குவது இருக்கட்டும், எப்போது ஒரு தமிழனின் news agency தொடங்கப் போகிறோம்?

உண்மையில் எங்களுக்கு தொலை நோக்கான பார்வை இருந்திருந்தால் ஒரு செய்தி நிறுவனத்தை (news agency) இதுவரை உருவாக்கியிருப்போம்.சர்வதேச பரப்புரைக்கு செய்தி நிறுனம் முக்கியம் என்பது உணரப்படவில்லை.

தமிழ்நெற் ஒரு news agency தான். ஆங்கில மொழியில் தமிழ்நெற் நல்ல தரத்தில் இருக்கு. அதை பலப்படுத்தி சேவைகளை விரிவாக்க முயற்சி எடுக்கலாம்.

தமிழ் மொழியில் புதின த்தை பலப்படுத்தலாம். சங்கதியும் பறவாயில்லை. ஆனால் இவர்களிடம் professional நடத்தை இல்லை. அதைப்பற்றிக் கதைத்தால் ஓசியில செய்யிறம் உது காணாதோ எண்ணுவினம்.

தமிழ்நெற்றின் சேவைகளை நாமே மதிக்க தெரியாதவர்களாகத்தான் வெட்டி ஒட்டுவது மூலமும் , மூலம் குறிப்பிடாத மொழிபெயர்ப்புகள் மூலமும் நடந்து கொள்கிறோம். விளக்கம் கேட்டால் தேசியத்திற்கு பின்னால் ஒளித்துக் கொள்வார்கள். இன்னொரு கூட்டம் தன்னாவலர்கள் என்று புராணம் பாடுங்கள்.

வெட்டி ஒட்டலுக்கு முன்னர் யாழ்களத்தில் ஒரு நியாம் எழுதப்பட்டது. அது வந்து டாங்கிகளுக்கு காத்துப் போக கோபுரங்கள் சரிஞ்சு விழ கட்டுப்பாட்டு தலமையகங்கள் இடம் மாறிய காலம். அந்தக் காலத்தில வருகையாளர்கள் ஊடி சில முன்னணி இணையத் தளங்கள் quota முடிந்து பார்க்க முடியாது அவதிப்பட்ட காலம். அந்த நேரங்களில் வெட்டி ஒட்டின தளங்களில் வாசிக்கக் கூடியதாக இருந்தது என்று நியாம் எழுதின பிரபலங்களும் உண்டு. வருகையாளர்கள் கூடின இணய சேவை வேணும் என்றால் அதை நடத்தும் மூல ஊடகங்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தி அடைய முடியாதா? சரி hackers பிரச்சனை என்றால் ஏன் உத்தியோக புhர்வரீதியில் mirror site ஆக நடத்தக் கூடாது?

நம்மவர்கள் உள்ளதைப் பலப்படுத்தாது புதுசு புதுசாக உருவாக்க நிற்பதால் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் மேலும் விரையமாகிக் கொண்டு இருக்கிறது.

வருடத்திற்கு 100 டொலரும், கணனி பாவிப்பது வெப்சைற் பற்றி கொஞ்ச அறிவும் மினக்கட நேரமும் கிடைத்தால் செய்திச் சேவை தொடங்கிவிடலாம் என்ற நிலையில் எத்தனை பேர்?

இவற்றில் விரையமாக்கப்டுபவற்றை ஏலவே நடத்துபவர்களிற்கு கொடுத்து ஊக்குவிக்க பலப்படுத்த ஏன் நினைக்கிறார்கள் இல்லை?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதெல்லாம் சரி ஐயா,

நாங்கள் ஈழத்தமிழர்கள் ஈழத்தில் சி்ங்களவனால் பிரச்சினை, ஆக்கிரமிப்பு, அடக்குமுறை என்று ஓடிவந்தவர்கள். இங்கு எங்களுக்கு ஆக்கிரமிப்பும் கிடையாது, அடக்குமுறையும் கிடையாது. தேவையான வளங்கள் இரூக்கிறது. என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனாலும் நாங்கள் 30 வருடமாகியும ஒரு சராசரி வளர்ச்சியை அடைய முடியவில்லையே? நீங்கள் சொன்னது போல ஆயிரம் பிரச்சினைகள். இதைவிட நாம் வாழும் நாடுகளில் பலவிதமான கெட்ட பெயர்கள் வேறு.

அதனால் தான் கேட்கிறேன், ஈழத்தமிழர்களுக்குப் பிரச்சினையா? அல்லது ஈழத்தமிழர்களே பிரச்சினையா?

Edited by balapandithar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.