Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை உத்தரவு

Featured Replies

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முல்லைத்தீவு நீதிமன்றம் தடை உத்தரவு

 

18518791_1120377818067276_2092449653_n.j

பாதிரியார்  ஒருவராலும் பொது  அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம்  ஒன்றிற்கு  அருகில் நாளையதினம் மேற்கொள்ள இருந்த   முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் நிகழ்விற்கு  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால  தடை உத்தரவு பிறப்பித்துள்ளது

குறித்த தடை உத்தரவில் சமர்ப்பிக்கப்பட்ட  ஏ  அறிக்கைக்கு அமைவாக    முள்ளிவாய்க்கால் கிழக்கு கத்தோலிக்க இல்லத்திற்கு அருகில்    நினைவேந்தல்  செய்வதனால்  நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும்   ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும்  அமைதிக்கும்   பங்கம்  ஏற்படும்    எனக்கருதி   பாதிரியார் இராயேந்திரன்  எழில்ராயன்  உட்;பட அனைவருக்கும் குற்றவியல் நடைமுறைக் கோவை பிரிவு 106 இற்கு  இணக்க  பதின் நான்கு  நாட்களுக்கான  இடைக்கால தடை உத்தரவை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம்  வித்திப்பதாக    குறிப்பிடப்பட்டுள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில்  கிளிநொச்சி  முல்லைத்தீவிர்கான  பிரதிப் பொலிஸ்மா  அதிபரிடம்  தொடர்புகொண்டு வினவிய பொழுது

குறித்த இடத்திலே ஏற்பாடு  செய்யப்பட்ட நிகழ்வில்  இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் வைத்து நினைவேந்தல் செய்வதாக கூறப்பட்டது  எனவும் அதில் பொறிக்கப்பட்ட பெயர்கள் யாருடையது என்பது பற்றி தம்மால் அறிந்து கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.

மேலும் இதனால்  நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும்  ஒருமைப்பாட்டிற்கும் இசமாதானத்திற்கும்  அமைத்திக்கும்     பக்கம் ஏற்;படாலாம்   என சந்தேகித்து முல்லைத்தீவு  பொலிசாரால் மேற்கூறிய காரணங்களை  மேற்கோள் காட்டி  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில்  இடைக்கால தடை  உத்தரவிற்கு இன்று விண்ணப்பம் செய்யப்பட்டமைக்கு அமைவாகவே தடை உத்தரவு  பிறப்பிக்கப்  பட்டுள்ளது  எனத் தெரிவித்தார்.

குறித்த பகுதியில்  மட்டுமே நினைவேந்தல் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும்  ஏனைய பகுதிகளில் நினைவேந்தல் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்த அவர் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும்  ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும்  அமைதிக்கும்     பங்கம் ஏற்;படாதவாறு நிகழ்வுகளை  மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்

https://globaltamilnews.net/archives/27118

  • தொடங்கியவர்

நீதி மன்ற தடையுத்தரவை மீறினால் கைது செய்யப்படுவீர்கள் பொலீஸார் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு

 

IMG_7960.jpg

பாதிரியார்  ஒருவராலும் பொது  அமைப்புகளாலும் முள்ளிவாய்க்கள் தேவாலயம்  ஒன்றிற்கு  அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த  முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் நிகழ்விற்கு  முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இடைக்கால  தடை உத்தரவு பிறப்பித்துள்ளது

இதனையடுத்து இன்று காலை  முள்ளிவாய்க்கால் கிழக்கில் அமைந்துள்ள கிறிஸ்தவ ஆலய சூழலில் பல இடங்களில் நீதி மன்ற தடையுத்தரவை பொலீஸார் பல இடங்களில் ஒட்டியுள்ளதோடு ,  ஒலிபெருக்கி மூலம் நினைவேந்தல் நிகழ்வை நடத்த வேண்டாம் என்றும்  அவ்வாறு நடத்தப்பட்டால்  கைதுசெய்யப்படுவீர்கள் என்றும் அறிவிப்பிலும் ஈடுப்பட்டனர்.

குறித்த இடத்திலே ஏற்ப்பாடு  செய்யப்பட்ட நிகழ்வில்  இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் வைத்து நினைவேந்தல் செய்வதறகு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.  ஆனால் அங்கு கற்களில்  பொறிக்கப்பட்ட பெயர்கள் யாருடையது என்பது பற்றி  அறிந்து கொள்ள முடியாத காரணத்தினால்  அந்த நிகழ்வு  நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும்  ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும்  அமைத்திக்கும்     பங்கம் ஏற்படாலாம்   என சந்தேகித்து முல்லைத்தீவு    முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில்  இடைக்கால தடை  உத்தரவிற்கு பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

IMG_7961.jpgIMG_7965.jpgIMG_7969.jpgIMG_7970.jpgIMG_7974.jpgIMG_7975.jpg

 

https://globaltamilnews.net/archives/27238

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

முள்ளிவாய்க்கால்: கிறிஸ்தவ ஆலயத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடத்த அனுமதி

 
 

மீளாய்வு விண்ணப்பத்தையடுத்து, முள்ளிவாய்க்கால் கிறிஸ்தவ ஆலயத்தின் உள்ளே நினைவேந்தல் நிகழ்வை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் தேவாலய வளவில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்திற்கு அஞ்சலி செலுத்துவதுடன், முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவு கற்களைப் பதிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக காவல்துறையினரால் நீதிமன்றத்தில் பெறப்பட்ட தடையுத்தரவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால்

இந்தத் தடையுத்தரவு தொடர்பில் வடக்கு கிழக்கு பிரதேச சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர் எழில்ராஜன் சார்பில் வியாழனன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மனு ஒன்றைப் பரிசீலனை செய்த நீதிபதி, அந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ள இடத்திற்குள் எவரும் செல்லக் கூடாது என உத்தரவிட்டது.

மேலும் இறந்தவர்களை நினைவுகூர்வதற்காக அந்த ஆலயத்தின் உள்ளே பூஜை செய்யவும், அந்த ஆலய வளவின் ஏனைய பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்துபவர்கள் கூடியிருந்து செயற்படலாம் எனவும் உத்தரவிட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால்

இதனையடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி, அந்த கிறிஸ்தவ ஆலயத்தில் நினைவேந்தல் பூஜையும், வழிபாடுகளும் இடம்பெற்றன.

அத்துடன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களில் ஒரு பகுதியினருடைய பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் அடுக்கப்பட்டு, மலர்மாலைகள் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வைக் கண்காணிப்பதற்காக அங்கு வருகை தந்திருந்த இராணுவ புலனாய்வாளர்கள், நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்களைப் படம் பிடித்ததுடன் நிலைமைகளை கண்காணித்திருந்தனர்; எனினும் எந்தவிதமான அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

http://www.bbc.com/tamil/sri-lanka-39965645

13 hours ago, நவீனன் said:

குறித்த இடத்திலே ஏற்ப்பாடு  செய்யப்பட்ட நிகழ்வில்  இறந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கற்கள் வைத்து நினைவேந்தல் செய்வதறகு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.  ஆனால் அங்கு கற்களில்  பொறிக்கப்பட்ட பெயர்கள் யாருடையது என்பது பற்றி  அறிந்து கொள்ள முடியாத காரணத்தினால்  அந்த நிகழ்வு  நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும்  ஒருமைப்பாட்டிற்கும் சமாதானத்திற்கும்  அமைத்திக்கும்     பங்கம் ஏற்படாலாம்   என சந்தேகித்து முல்லைத்தீவு    முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில்  இடைக்கால தடை  உத்தரவிற்கு பெறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

சட்டவிரோத மண் கடத்தல், சட்டவிரோத மரம் வெட்டுதல் மற்றும் கடத்தல், சட்டவிரோத மாடு கடத்தல், சட்டவிரோத கசிப்பு விற்பனை போன்றவற்றில் பரவலாக ஈடுபட்டிருக்கும் இந்த சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளும், சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளும் தமிழ் மண்ணில் இருந்து முற்றாக அப்புறப்படுத்தும் வரை தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருக்கும்!

வன்னி மண்ணில் உள்ள பல சிங்கள-பௌத்த போலீஸ், இராணுவ அதிகாரிகள் லீசிங் இல் வாகனங்களை கொள்வனவு செய்வதையும் லீசிங் தவணைப் பணத்தை சட்டவிரோத மண் கடத்தல், மரம் வெட்டுதல், மாடு கடத்தல், கசிப்பு விற்பனைகளில் ஈடுபட்டுள்ள நபர்கள் கட்டி வருவதும் அரச பயங்கரவாதிகளுக்கு தெரியாமல் இல்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.