Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடி விஜயத்தின் மறைமுகமான செய்தி தேசிய பாதுகாப்பே மிக முக்கியமானது// – கலாநிதி ஜெகான் பெரேரா –

Featured Replies

மோடி விஜயத்தின் மறைமுகமான செய்தி தேசிய பாதுகாப்பே மிக முக்கியமானது

 

சர்­வ­தேச வெசாக் தினக் கொண்­டாட்­டங்­களில் பங்­கேற்­ப­தற்­காக இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி மேற்­கொண்ட விஜயம் இலங்கை அர­சாங்­கத்­துக்கு அசௌ­க­ரியத்தை தரக்­கூ­டிய ஒன்­றாக மாறுமோ என்ற ஒரு­வித நிச்­ச­ய­மற்ற நிலை காணப்­பட்­டது. கறுப்புக் கொடி ஆர்ப்­பாட்டம் நடத்த வேண்டும் என்று தேசி­ய­வாத அர­சி­யல்­வா­தி­களும் பெரும்­பான்­மை­யினச் சமூ­கத்­த­வர்கள் மத்­தியில் உள்ள தேசி­ய­வாத சிவில் சமூ­கத்­த­லை­வர்­களும் மோடியின் வரு­கைக்கு முன்­ன­தாக அழைப்பு விடுத்­தி­ருந்­தனர். இந்­தி­யாவின் தலை­யீட்­டுக்கு எதி­ரா­கவே இந்த அழைப்பு என்றும் அவர்கள் கூறி­யி­ருந்­தனர். பொரு­ளா­தார மற்றும் தொழி­ல்நுட்ப உடன்­ப­டிக்­கையும் எண்ணெய் தாங்­கி­களை குத்­த­கைக்கு விடு­வ­துடன் சம்­பந்­தப்­பட்ட திரு­கோ­ண­மலை துறை­முகத் திட்­டமும் இரு நாடு­க­ளுக்கும் இடையே தற்­போது பேச்­சு­வார்த்தை நடத்­தப்­ப­டு­கின்ற சர்ச்­சைக்­கு­ரிய இரு விவ­கா­ரங்­க­ளாகும்.

பொரு­ளா­தார மற்றும் தொழில்­நுட்ப ஒத்­து­ழைப்பு உடன்­ப­டிக்­கைக்கு உள்­நாட்டு வர்த்­தக சமூ­கத்­தி­ட­மி­ருந்தும் தொழில்சார் நிபு­ணர்­க­ளி­ட­மி­ருந்தும் கடு­மை­யான எதிர்ப்புக் கிளம்­பி­யி­ருக்­கி­றது. இந்த எதிர்ப்பை வெளிக்­காட்­டு­வதில் தொழில்சார் நிபு­ணர்­க­ளுக்கு அர­சாங்க மருத்­துவ அதி­கா­ரிகள் சங்கம் முன்­ன­ணியில் நின்று தலைமை தாங்­கு­கி­றது. இந்­தியத் தரப்­பி­ட­மி­ருந்து வரக்­கூ­டிய போட்­டா­போட்­டிக்கு தங்­களால் தாக்­குப்­பி­டிக்க முடி­யாமல் போகும் என்று இவர்கள் அஞ்­சு­கி­றார்கள். இந்­தியப் பிர­த­மரின் விஜ­யத்­துக்கு உள்­நோக்கம் கற்­பிக்க முயற்­சித்­த­வர்­க­ளினால் 1980 களில் இலங்­கையில் தமிழ்த் தீவி­ர­வா­தத்தை வளர்த்­து­வி­டு­வ­திலும் பலப்­ப­டுத்­து­வ­திலும் இந்­தியா தலை­யீடு செய்த பங்­க­ளிப்பை நினை­வு­மீட்­டக்­கூ­டி­ய­தா­கவும் இருந்­தது.

இலங்­கையில் தனக்குக் கிடைக்­கக்­கூ­டிய மங்­கள வர­வேற்பு குறித்து ஐயு­றவு கொண்­ட­வ­ரா­கவே மோடி இருந்தார் என்று அவரின் விஜ­யத்­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் கூறி­னார்கள். அவரின் விஜ­யத்­துக்கு எதி­ராக ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்கக் கூடிய ஆர்ப்­பாட்­டங்கள் விரும்­பத்­த­காத சம்­ப­வங்­க­ளுக்கு வழி­வ­குத்­து­விடக் கூடு­மென்று வெளி­யான செய்­தி­களே அந்த ஐயு­ற­வுக்கு கார­ண­மாகும். ஆனால், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இந்­தியப் பிர­த­மரை சந்­திப்­ப­தற்கு வாய்ப்புத் தரு­மாறு கேட்­ப­தற்கு தீர்­மா­னித்­த­தை­ய­டுத்து இந்­தியத் தலை­யீட்­டுக்கு எதிர்ப்­புக்­காட்­டு­வ­தற்கு தேசி­ய­வாத எதி­ர­ணி­யி­னரால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய எந்­த­வொரு திட்­டத்­துக்கும் முடிவைக் கட்­டி­யது.

தேசி­ய­வாத எதி­ர­ணி­யி­னரின் மௌனமும் தங்­க­ளது அச்­சு­றுத்­தல்­களை எந்­த­வி­த­மான பகி­ரங்க எதிர்ப்புப் போராட்­ட­மா­கவும் மாற்றிக் காட்­டு­வதில் அவர்­க­ளுக்­கி­ருந்த இய­லா­மையும் நாட்டில் அவர்கள் கொண்­டி­ருக்கும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட செல்­வாக்கின் அறி­கு­றி­க­ளாகும். தேசி­ய­வா­திகள் தாங்கள் ஒரு விளிம்பு நிலைக்­கு­ழு­வி­னரே என்­பதை மீண்டும் ஒரு தடவை வெளிக்­காட்­டி­யி­ருக்­கி­றார்கள்.

நாட்டின் பிர­தான -நீரோட்ட அர­சியல் கட்­சி­யொன்றின் நிகழ்ச்சி நிர­லுக்குள் தங்­களை உள்­ள­டக்­கு­வதன் மூலம் மாத்­தி­ரமே இந்த தேசி­ய­வா­தி­க­ளினால் பலத்தைப் பெறக்­கூ­டி­ய­தாக இருக்­கி­றது என்­பதும் தெளிவாகத் தெரி­கி­றது. இந்­தியப் பிர­த­மரைச் சந்­திப்­ப­தற்கு கூட்டு எதி­ர­ணியின் தலை­மைத்­துவம் நாட்டம் காட்­டி­யதன் பின்­பு­லத்­திலே, பிர­தா­ன­போக்கு அர­சியல் தலைவர் ஒரு­வ­ரினால் உரு­வாக்­கப்­பட்ட மக்கள் ஆத­ரவு சபை­யினால் தேசி­ய­வா­திகள் அனு­கூ­ல­ம­டை­வ­தற்­கான சாத்­தியம் இல்­லாமல் போனதைக் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது.

இலங்கை மக்கள் பொதுவில் இந்­தி­யாவை தங்­க­ளது பரந்­த­ள­வி­லான நாக­ரிக ஒழுங்­க­மை­தியின் ஒரு அங்­க­மா­கவும் இலங்­கைக்கு உதவக் கூடிய ஆற்­றலைக் கொண்ட சக்­தி­மிக்­க­தொரு நாடா­கவும் நேர்­மை­யாக நோக்­கு­கி­றார்கள் என்ற நம்­பிக்கை இலங்கை விஜ­யத்தை முடித்துக் கொண்டு புறப்­பட்ட வேளையில் மோடிக்கு ஏற்­பட்­டி­ருக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

குறிப்­பாக, மிகவும் அண்மைக் காலத்தில் சர்­வ­தேச அரங்­கு­களில் இலங்­கைக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­வதில் இந்­தியா வகித்­தி­ருக்­கக்­கூ­டிய பாத்­திரம் நம்­பிக்­கை­யையும் பலத்­தையும் தரு­வ­தாக அமைந்­தி­ருக்­கி­றது. இந்­திய வம்­சா­வளித் தமி­ழர்கள் பெரு­ம­ளவில் வாழ்­கின்ற மலை­ய­கத்தில் இந்­தியப் பிர­த­ம­ருக்கு அளிக்­கப்­பட்ட வர­வேற்பு மிகவும் மன­மு­வந்­த­தா­கவும் ஆர்­வ­மிக்­க­தா­கவும் அமைந்­தி­ருந்­தது.

மலை­ய­கத்தில் நவீன வச­தி­க­ளுடன் கூடிய ஆஸ்­பத்­தி­ரி­யொன்றைத் திறந்­து­வைத்த மோடி தோட்டத் தொழி­லாளர் சமூ­கத்­துக்­கென ஏற்­க­னவே நிர்­மா­ணிப்­ப­தற்கு உறு­தி­ய­ளித்த 4000 வீடு­க­ளுக்கு மேல­தி­க­மாக 10000 வீடு­களைக் கட்­டித்­த­ரு­வதா­கவும் உறு­தி­ய­ளித்தார்.

பிரித்தானிய கால­னித்­துவ ஆட்­சியில் இருந்து இலங்கை சுதந்­திரம் பெற்ற 1948 ஆம் ஆண்டில் இந்­திய வம்­சா­வளித் தமி­ழர்­களின் பிர­ஜா­வு­ரி­மை­யையும் வாக்­கு­ரி­மை­யையும் அர­சாங்கம் பறித்­தது. அதன் விளை­வான தாக்­கத்தில் இருந்து அந்தச் சமூகம் இன்றும் கூட விடு­பட முடி­யாமல் இருக்­கி­றது. இலங்­கையின் ஏனைய சமூ­கங்­க­ளுடன் ஒப்­பிடும் போது இந்­திய வம்­சா­வளித் தமி­ழர்­களே அதுவும் குறிப்­பாக தோட்டத் தொழி­லா­ளர்கள் மிகவும் பின்­தங்­கி­ய­வர்­க­ளா­கவும் வறி­ய­வர்­க­ளா­கவும் இருக்­கி­றார்கள் என்­பதை ஐக்­கிய நாடு­களின் புள்ளி விப­ரங்கள் தெளி­வாக வெளிக்­காட்­டு­கின்­றன. இத்­த­கை­ய­தொரு பின்­பு­லத்­திலே, இந்­தியப் பிர­த­மரை அந்த மக்கள் தங்­க­ளுக்­காக குரல் கொடுப்­ப­வ­ராக நம்­பிக்­கை­யுடன் நோக்கி பெரு­வ­ர­வேற்புக் கொடுத்­தது ஒன்றும் ஆச்­ச­ரி­யத்­துக்­கு­ரி­ய­தல்ல.

 

பாது­காப்பு முக்­கி­யத்­துவம்

இலங்­கைக்கு விஜ­யத்தை மேற்­கொள்­வ­தற்கு சர்­வ­தேச வெசாக் தினத்தை பிர­தமர் மோடி தெரிவு செய்தது அர­சியல் ரீதியில் மிகவும் சாது­ரி­ய­மா­ன­தொரு செய­லாகும். முன்னாள் ஜனா­தி­பதி திரு­மதி. சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­கவின் ஆட்சிக் காலத்தில் இலங்­கை­யினால் மேற்­கொள்­ளப்­பட்ட தீவிர முயற்­சி­களின் விளை­வா­கவே வெசாக் தினம் சர்­வ­தேச தின­மாக அனுஷ்­டிக்­கப்­ப­டு­வ­தற்கு ஐக்­கிய நாடுகள் சபை­யினால் ஏற்றுக் கொள்­ள­ப்பட்­டது. இந்தத் தினத்தைக் கொண்­டா­டு­வ­தற்கு இந்­தி­யாவின் பிர­தமர் இலங்­கைக்கு வருகை தந்­தமை சர்­வ­தேச சமூ­கத்­துக்கு இலங்கை வழங்­கிய பங்­க­ளிப்­பையும் பௌத்த மதத்தின் உன்­ன­த­மான போத­னை­க­ளையும் பாரம்­ப­ரி­யங்­க­ளையும் பேணிக்­காப்­பதில் இலங்கை வகித்­து­வரும் நெடுங்­கால பாத்­தி­ரத்­தையும் அங்­கீ­க­ரிப்­ப­தாக அமைந்­தி­ருக்­கி­றது. இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான விசே­ட­மான உற­வு­களை இலங்­கை­யர்­க­ளுக்கும் சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் காட்­டு­வ­தற்­காக ஒரு சந்­தர்ப்­ப­மா­கவும் இது அமைந்­தது. இலங்­கையில் ஆற்­றிய பிர­தான உரையில் இந்த யதார்த்­தங்­களை மோடி பிரத்­தி­யே­க­மாக சுட்­டிக்­காட்­டி­ய­தையும் காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. ‘நிலத்­திலும் சரி, இந்து சமுத்­திர கடல் பரப்­பிலும் சரி இரு சமூ­கங்­க­ளி­னதும் பாது­காப்பு பிரிக்­க­மு­டி­யா­த­தாகும்’ என்று அவர் கூறினார்.

இலங்­கையில் போரின் முடி­வுக்குப் பின்னர், அமெ­ரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் இந்­தியா உட்­பட உலகின் வல்­லா­திக்க நாடு­க­ளுக்­கி­டை­யே­யான போட்­டாப்­போட்­டியின் குவி­மை­ய­மாக இலங்கை மாறி­விட்­டது. இந்­தி­யா­வுக்கு கீழ்ப்­பு­றத்தில் அமைந்­தி­ருக்­கின்ற நாடு என்ற வகையில் இந்­தியா மீது நெருக்­கு­தலைப் பிர­யோ­கிக்க நாட்டம் கொண்ட வல்­லா­திக்க நாடு­க­ளினால் இலங்கை பயன்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டிய சாத்­தி­யங்கள் இருக்­கின்­றன.

அமெ­ரிக்­கா­வுக்கு அண்­மை­யாக அமைந்­தி­ருக்கும் கியூ­பாவில் 1963 ஆம் ஆண்டு சோவியத் யூனியன் அதன் ஏவு­க­ணை­களை நிலை வைக்க முயற்­சித்த போது உலகம் போரின் விளிம்­புக்குச் சென்­றது. கியூ­பாவை அண்­மித்துக் கொண்­டி­ருந்த சோவியத் கடற்­படைக் கப்­பல்­களை தாக்கப் போவ­தாக அமெ­ரிக்கா அச்­சு­றுத்­தி­ய­தை­ய­டுத்து சோவியத் யூனியன் பின்­வாங்கிக் கொண்­டது.

எந்த நாட்டைப் பொறுத்­த­வ­ரை­யிலும் தேசிய பாது­காப்பு என்­பது பேரம் பேச­லுக்­கு­ரிய விவ­கா­ர­மே­யல்ல. இலங்­கையின் மூன்று தசாப்­த­கால உள்­நாட்டுப் போரின் போது அர­சாங்­கங்கள் வேறு பல துறை­க­ளுக்கு செல­வி­னங்கள் அவ­சி­ய­மாக இருந்த போதிலும் கூட இரா­ணுவச் செல­வி­னங்­களை அதி­க­ரிப்­ப­தற்கே முன்­னு­ரிமை கொடுத்­தன.

சர்­வ­தேச மனித உரிமைகள் அமைப்­பு­களின் கடு­மை­யான கண்­ட­னங்­க­ளுக்கு மத்­தி­யிலும் அவ­ச­ர­காலச் சட்டம் மற்றும் பயங்­க­ர­வாதத் தடைச் சட்டம் உட்­பட தேசிய பாது­காப்­புடன் தொடர்­பு­டைய சட்­டங்­களை அர­சாங்­கங்கள் விஸ்­த­ரித்துப் பலப்­ப­டுத்திக் கொண்­டே­யி­ருந்­தன. போர் முடி­வுக்கு வந்த பிறகு அர­சாங்கம் இரா­ணுவ செல­வி­னங்­களைக் குறைக்கும் என்றும் முன்­னென்­று­மில்­லாத அள­வுக்கு எண்­ணிக்­கையில் அதி­க­ரித்­து­விட்ட படைப்­பி­ரி­வு­களில் சில­வற்றை கலைக்கும் என்றும் எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், எது­வுமே நடை­பெ­ற­வில்லை. தேசிய பாது­காப்பே அதி முன்­னு­ரி­மைக்­கு­ரிய விவ­கா­ர­மாக தொடர்ந்­தது. இன்று கூட, முன்­னைய போர் வல­யங்­க­ளான வடக்கு, கிழக்கில் தேசிய பாது­காப்பு கார­ணங்­களின் நிமித்தம் பெரு­ம­ளவு இரா­ணுவப் பிர­சன்னம் தொட­ரவே செய்­கி­றது. தேசிய பாது­காப்புச் சட்­டங்­களை கூடு­த­லான அள­வுக்கு தாராள போக்­கு­டை­ய­வை­யா­கவும் மனித உரி­மை­க­ளுக்கு நேச­மா­ன­வை­யா­கவும் மாற்­றி­ய­மைப்­ப­தற்கு தற்­போ­தைய அர­சாங்கம் தயக்கம் காட்­டு­வ­தி­லி­ருந்தும் இலங்­கையில் தேசிய பாது­காப்­புக்கு தொடர்ந்தும் முன்­னு­ரிமை கொடுக்­கப்­ப­டு­வதை தெளி­வாகப் புரிந்து கொள்ள முடியும். தற்­போது நடை­மு­றையில் இருக்கும் பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்­துக்குப் பதி­லாக இலங்கை கைச்­சாத்­திட்­டி­ருக்கும் சர்­வ­தேச மனித உரி­மைகள் சாச­னங்­க­ளுக்கு பெரு­ம­ளவில் இசை­வான முறையில் அமையக் கூடிய சட்­ட­மொன்றைக் கொண்­டு­வ­ரு­மாறு ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் தீர்­மா­னத்தில் கோரப்­பட்­டி­ருக்­கி­றது.

அத்­துடன், ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தி­ட­மி­ருந்து ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்­ச­லு­கையைப் பெற வேண்­டு­மா­னாலும் சர்­வ­தேச குடி­யியல் உரி­மைகள் சாச­னங்­க­ளுக்கு இசை­வான முறையில் சட்­டங்­களைக் கொண்­டு­வ­ரு­மாறு இலங்­கை­யிடம் நிபந்­தனை விதிக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்­துக்குப் பதி­லாக கொண்டு வர உத்­தே­சிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­டமும் கூட, சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்­பு­க­ளி­னாலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­னாலும் கடு­மை­யான விமர்­ச­னத்­துக்­குள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது.

 தற்­போ­தைய பயங்­க­ர­வாதத் தடைச் சட்­டத்தை விடவும் உத்­தேச சட்டம் மனித உரி­மைகள் கோட்­பா­டு­களை பெரு­ம­ள­வுக்கு மீறு­வ­தாக இருக்­கி­றது என்று சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது. உத்­தேச சட்டம் தடுப்புக் காவல் உத்­த­ர­வு­களை வழங்­கு­வ­தற்­கான அதி­கா­ரத்தை நீதித்­து­றை­யி­டமே விட்­டு­வி­டு­வ­தற்குப் பதி­லாக அதை பொலி­ஸா­ருக்கு வழங்­கு­கி­றது. ஒருவர் கைது செய்­யப்­படும் போது சட்ட உத­வியை அவர் பெறு­வ­தற்­கான வாய்ப்பு மற்றும் ஒப்­புதல் வாக்­கு­மூ­லங்­களை சாட்­சி­யங்­க­ளாக ஏற்­றுக்­கொள்­ளுதல் போன்ற விட­யங்கள் தொடர்­பிலும் பிரச்­சி­னைகள் கிளப்­பப்­பட்­டி­ருக்­கின்­றன.

 

கயிற்றில் நடத்தல்

கிளர்ச்­சிகள், பயங்­க­ர­வாதம், போர் மற்றும் வெளி­நாட்டுத் தலை­யீடு ஆகி­ய­வற்­று­ட­னான இலங்­கையின் நீண்ட கால அனு­ப­வங்­களின் விளை­வா­கவே தேசிய பாது­காப்­புக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­ப­டு­கி­றது. மிகவும் பெரி­யதும் உலக அர­சியல் மையத்­துக்கு நெருக்­க­மான கூடுதல் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தா­கவும் இருக்­கின்ற நாடான இந்­தி­யாவைப் பொறுத்­த­வ­ரை­யிலும் கூட இதே தர்க்கம் பொருத்­த­மா­ன­தாக இருக்க முடியும். இந்­தியா அதன் அயல்­நா­டு­க­ளுடன் போர்­களில் ஈடு­பட்­டி­ருக்­கி­றது. உள்­நாட்டுக் கிளர்ச்­சி­களின் விளை­வான பிரச்­சி­னை­க­ளுக்கும் அது தொடர்ந்து முகங்­கொ­டுத்துக் கொண்­டி­ருக்­கி­றது.

இலங்கை உட்­பட சகல நாடு­க­ளி­னாலும் தேசிய பாது­காப்­புக்கு கொடுக்­கப்­ப­டு­கின்ற முன்­னு­ரிமை இலங்­கை­யு­ட­னான அதன் உறவு முறை­களில் இந்­தியா தேசிய பாது­காப்­புக்கே முன்­னு­ரிமை அளிக்கும் என்­ப­தையே குறித்து நிற்­கி­றது. பொரு­ளா­தார, வர்த்­தக மற்றும் முத­லீட்டு விவ­கா­ரங்கள் தொடர்பில் இலங்­கை­யு­ட­னான பேச்­சு­வார்த்­தை­களில் நெகிழ்ச்சித் தன்­மை­யு­டனும் திறந்த மன­து­டனும் இந்­தியா நடத்­து­கொள்­ளக்­கூ­டி­யது சாத்­தியம் என்­கின்ற அதே­வேளை, தேசிய பாது­காப்­புடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்­களில் அது நெகிழ்ச்சித் தன்­மையைக் காட்­டு­வது சாத்­தி­ய­மில்லை.

இலங்­கைக்­கான பிர­தமர் மோடியின் விஜ­யத்­துக்கு ஒரு சில நாட்கள் முன்­ன­தாக கொழும்புத் துறை­மு­கத்­துக்கு வந்து தரிப்­ப­தற்கு நீர் மூழ்கி கப்பல் ஒன்றை அனு­ம­திக்­கு­மாறு சீனா­வினால் வேண்­டுகோள் விடுக்­கப்­பட்­டது. இந்­தியா முக்­கிய இடத்தை எடுக்­கின்ற ஒரு நேரத்தில் இலங்­கையில் தனது பிர­சன்­னத்தை வெளிக்­காட்­டு­வ­தற்கு சீனா கையா­ளு­கின்ற அணு­கு­முறை இது என்று ஊகங்கள் பிறப்­ப­தற்கு அந்த வேண்­டுகோள் வழி­வ­குத்­தது.

இலங்­கையில் நீர்­மூழ்கி இரா­ஜ­தந்­தி­ரத்தில் சீனா ஈடு­ப­டு­வது இதுதான் முதற்­த­ட­வை­யல்ல. 2014 ஆம் ஆண்டில் ஜப்­பா­னியப் பிர­தமர் இலங்­கைக்கு விஜயம் செய்த போது சீனாவின் நீர் மூழ்­கி­யொன்று கொழும்புத் துறை­மு­கத்தில் தரித்து நின்­றது. ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ தலை­மை­யி­லான முன்­னைய அர­சாங்­கத்தின் மீது சீனா­வினால் செலுத்தக் கூடி­ய­தாக இருந்த செல்­வாக்கை பற்­றிய செய்­தி­யொன்றை தெரி­யப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­யாக அந்த சீன நீர்­மூழ்­கியின் வரு­கையை கரு­திய இந்­தி­யாவும் ஜப்­பானும் அந்தச் சந்­தர்ப்­பத்தில் பெரும் விச­ன­ம­டைந்­தன. ஆனால், இத்­த­டவை இந்­தியப் பிர­த­மரின் விஜ­யத்தின் போது கொழும்­புத்­து­றை­மு­கத்தில் சீன நீர்மூழ்கி வருகைதரு­வ­தற்கு இலங்கை அர­சாங்கம் அனு­மதி கொடுக்க மறுத்­து­விட்­டது.

 

கடற்­கொள்­ளைக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளுக்குச் செல்லும் வழியில் எரி­பொருள் நிரப்­புதல் போன்ற மீள் விநி­யோ­கங்­களைச் செய்­து­கொள்­வ­தற்கு தனது நீர்மூழ்கி ­க­ப்பல்களுக்கு தரித்துச் செல்ல ஒரு இடம் தேவை­யென்றும் ஏடென்­கு­டா­வுக்கும் சோமாலியா கடற்­ப­ரப்­புக்கும் பாதுகாப்பு பணிகளுக்காக செல்லும் வழியில் நீர் மூழ்கிகள் மீள் விநியோகங்களுக்காக தரித்து நிற்பதென்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச நடைமுறை என்றும் சீனா கூறியிருக்கிறது. இலங்கைக்கு மிகவும் கூடுதல் பொருளாதார வளங்களை சலுகை அடிப்படையிலும் வர்த்தக அடிப்படையிலும் வழங்குகின்ற நாடாக சீனா தற்போது விளங்குகிறது.

இந்தப் பயனை இழப்பதற்கு இலங்கையின் எந்தவொரு அரசாங்கமும் விரும்பாது. மேற்குலக நாடுகளிடமிருந்து சொற்ப முதலீடுகளே வருகின்ற ஒரு நேரத்தில், இலங்கையில் பொருளாதார வாய்ப்புகளை எடுத்துக்கொள்ள சீனா விரும்பும். அதனால் அந்த வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள இயலும், அந்த வாய்ப்புகள் தனியாருக்குச் சொந்தமான வர்த்தக நிறுவனங்களுக்கு பொருளாதார நோக்கில் கவர்ச்சியானவையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சீனாவின் அரச நிறுவனங்களுக்கு அவை கவர்ச்சியானவை.

இலங்கைக்கு பொருளாதார உதவிகளைச் செய்வதில் இந்தியா பெருந்தன்மையுடன் நடந்துகொள்கின்ற போதிலும் கூட, முதலீடுகளைப் பொறுத்தவரை சீனாவினால் வழங்கப்படுகின்றவற்றுடன் நிகராக நிற்க இந்தியாவினால் இயலாது.

அதேவேளை, சீனா நாட்டம் காட்டக்கூடிய இராணுவ நோக்கங்களுக்காக துறைமுகங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பது போன்ற செயற்பாடுகள் மூலமாக கேந்திர முக்கியத்துவ வெளியை இலங்கை கொடுப்பதை இந்தியா ஒருபோதும் இணங்கிக் கொள்ளப் போவதில்லை. சகல நாடுகளையும் போன்றே இங்கு தேசிய பாதுகாப்பே முதன்மை பெறும்.

இலங்கை அதன் அயல் நாடுகளுக்கு பாதுகாப்பு விசனங்களை ஏற்படுத்தாத வகையிலான நடுநிலையான தேசிய பாதுகாப்புக் கொள்கை யொன்றைப் பேண வேண்டியதும் அவசியமாகும். இலங்கை அதன் பொருளாதார தேவைக்கும் தேசிய பாதுகாப்பு அக்கறை களுக்கும் இடையில் அதன் சொந்த நலன்களுக்காக கயிற்றில் நடப்பது போன்று தொடர்ந்து செயற்பட வேண்டியது முக்கியமாகும். 

– கலாநிதி ஜெகான் பெரேரா –

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-05-20#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.