Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாம் என்ன செய்வது :icon_idea:

  • Replies 1k
  • Views 70.4k
  • Created
  • Last Reply

நாம் என்ன செய்வது :lol:

நீங்கள் மைதானத்தில் இருந்து மட்சை பார்த்தபடி யாழ் களத்தின் வீரர்களின் பெயருடன் கமோன் போட்டு கத்தவேணும்!

உதாரணமாக இப்படி கோசம் போடலாம்!

1. குரங்குப்பிடி ஆதி கமோன்! கமோன்!

2. சுண்டிப்பிடி சுண்டல்! கமோன் சுண்டல்! சுண்டிப்பிடி சுண்டல்! கமோன் சுண்டல்!

3. ஒட்டிப்பிடி வினோ! ஒட்டிப்பிடி! கமோன்!

4. போடு மாப்பு பொல்லுப் பறக்க!

:P :P :P :P :P :P :icon_idea::D:lol::lol:

மாப்பிள்ளை பந்தை காலுக்கிடையால போக விட்டு யாரைப் பவிலியனில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்??? குழுவிற்கு கப்டன் யார்?

கீழே கிரிக்கட் தளம் ஒன்று

http://sports.123india.com/

ஜானா

நான் தான் கப்டன், வேண்டுமானால் நீங்கள் அடம்பிடிக்காமல் இருப்பதற்காக உங்களுக்கு வைஸ் கப்டன் பதவி தருகிறேன். :P

  • தொடங்கியவர்

இந்த ரீமை உலக கிண்ண போட்டிகளில் பங்குபற்ற அனுப்பினால் "இப்ப தங்கட ரீமுக்கு சவாலாக இருக்கிறது மாப்பு வின் ரீம் மட்டும் தான்" என்று பொன்டிங் சொல்லுவார். அத்துடன் தற்போது தங்களுக்கு பீடி என்ன என்றால் மாப்பு வின் பந்து வீச்சுக்கு துடுப்பாடுவது எப்படி என்பது தான் என்று மைக்கல் ஹசி, அடம் கில்கிறிஸ்ற், சைமன், கிளாக் போன்றவர்களும் சொல்லுவார்கள். :icon_idea::D

Edited by யாழ்வினோ

இது எப்படி? உலகக் கோப்பையை விட இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் போல் இருக்கிறதே?

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry165596

யாழ் களத்திலும் ஒரு கீரிக்கட்டு அணியை உருவாக்கினால் என்ன?

ஆனால் நான் தான் கப்படனாகவும், ஓபினிங் போலராகவும், ஓபினிங் பட்ஸ்மனாகவும் இருப்பேன்!

விக்கெட்டு கீப்பராக ஆதியைத்தான் போடுவேன்!

சின்னப் பெடியங்கள்தான் ஒடிஒடி பீல்ட் பண்ண வேண்டும்.

me - bowler

aathi - keeper

jana - Third man

yarlvino - longoff

prasanna - deep fine leg

sajeevan - silly mid off

sundal - silly mid on

eelavan - gully

vithu - extra cover

thuuyavan - deep square leg

vinith - mid on

எப்படி நம்ம பீல்டிங் செட்டிங்? ஒரு பய பவுண்டரியோ அல்லது சிக்ஸோ அடிக்க விடமாட்டன்! சிங்கில்ஸ் ஆக ஓட்டங்களை ஓடி ஓடி பொறுக்க வேண்டியத்தான்! எதிரணிக்கு வேறு வழியில்லை! :P :P :P

:huh::huh::huh::unsure::unsure::unsure::unsure::D:D:D:blink::blink::blink:

ரீம் உருப்பட்ட மாதிரித்தான்

நாம் என்ன செய்வது :D

நீங்கா வேணும்னா மாப்புக்கு பந்து பொறுக்கிக் கொடுங்க காப்பி அக்கா :P

உலகக் கிண்ணக் கிரிக்கெட் பலப்பரீட்சையில் இறங்கும் 16 அணிகளும் கடந்து வந்த பாதை

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இம்முறை 16 நாடுகள் பங்குபற்றுகின்றன. இந்த 16 அணிகளும் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அணிகள் கடந்த 2003 ஆம் ஆண்டில் இருந்து 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 ஆம் திகதி வரை பங்குபற்றிய ஒரு நாள் போட்டிகளின் பெறுபேறுகள் வருமாறு;

ஏ-பிரிவு

அவுஸ்திரேலியா :மொத்தம் 113 போட்டிகளில் பங்குபற்றி 80 போட்டிகளில் வெற்றியும் 27 போட்டிகளில் தோல்வியையும் கண்டது. 06 போட்டிகளுக்கு முடிவில்லை.

தென்னாபிரிக்கா: மொத்தம் 88 போட்டிகள் , 51 போட்டிகளில் வெற்றியும் 31 போட்டிகளில் தோல்வியும் கண்டது. 06 போட்டிகளுக்கு முடிவில்லை.

ஸ்கொட்லாந்து: மொத்தம் 15 போட்டிகள். 07 போட்டிகளில் வெற்றியும் 08 போட்டிகளில் தோல்வியும் பெற்றுள்ளது.

நெதர்லாந்து: மொத்தம் 13 போட்டிகள். 06 போட்டிகளில் வெற்றியும் 06 போட்டிகளில் தோல்வியும்கண்டது. 01 போட்டிக்கு முடிவில்லை.

பி-பிரிவு

இலங்கை:மொத்தம் 98 போட்டிகள். 55 போட்டிகளில் வெற்றியும் 39 போட்டிகளில் தோல்வியும் கண்டது. 04 போட்டிகளுக்கு முடிவில்லை.

இந்தியா: மொத்தம் 109 போட்டிகள் .53 போட்டிகளில் வெற்றியும் 50 போட்டிகளில் தோல்வியும் கண்டது. 06 போட்டிகளுக்கு முடிவில்லை.

பங்களாதேஷ்: மொத்தம் 80 போட்டிகள். 28 போட்டிகளில் வெற்றியும் 52 போட்டிகளில் தோல்வியும் கண்டது.

பெர்மூடா:மொத்தம் 17 போட்டிகள். 05 போட்டிகளில் வெற்றி, 12 போட்டிகளில் தோல்வி.

சி-பிரிவு

நியூசிலாந்து: மொத்தம் 87 போட்டிகள். 43 போட்டிகளில் வெற்றி. 39 போட்டிகளில் தோல்வி 05போட்டிகளுக்கு முடிவில்லை.

இங்கிலாந்து:மொத்தம் 87 போட்டிகள். 39 போட்டிகளில் வெற்றி, 41 போட்டிகளில் தோல்வி, 07 போட்டிகளுக்கு முடிவில்லை.

கென்யா:மொத்தம் 27 போட்டிகள். 14போட்டிகளில் வெற்றி, 13 போட்டிகளில் தோல்வி.

கனடா: மொத்தம் 18 போட்டிகள். 05 போட்டிகளில் வெற்றி, 13 போட்டிகளில் தோல்வி.

டி- பிரிவு

பாகிஸ்தான்:மொத்தம் 104 போட்டிகள். 59 போட்டிகளில் வெற்றி. 42 போட்டிகளில் தோல்வி, 03 போட்டிகளுக்கு முடிவில்லை.

மேற்கிந்தியத்தீவு: மொத்தம் 94 போட்டிகள். 40 போட்டிகளில் வெற்றி. 48 போட்டிகளில் தோல்வி, 06 போட்டிகளுக்கு முடிவில்லை.

சிம்பாவே: மொத்தம் 88 போட்டிகள். 18 போட்டிகளில் வெற்றி. 67 போட்டிகளில் தோல்வி, 03 போட்டிகளுக்கு முடிவில்லை.

அயர்லாந்து: மொத்தம் 08 போட்டிகள். 02 போட்டிகளில் வெற்றி, 05 போட்டிகளில் தோல்வி, 01 போட்டிக்கு முடிவில்லை.

மேற்படி 16 அணிகளில் அயர்லாந்து , பெர்முடா ஆகிய இரு அணிகளும் உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவது இதுதான் முதற்றடவை. ஏனைய 14 அணிகளும் இதுவரை நடைபெற்று முடிந்த 8 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் பெற்ற பெறுபேறுகள் வருமாறு;

அவுஸ்திரேலியா: இது வரை நடைபெற்று முடிந்த 8 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி பங்குபற்றியுள்ளது. மொத்தம் 58 போட்டிகளில் பங்குபற்றி 40 போட்டிகளில் வெற்றியும் 17 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒரு போட்டி வெற்றி- தோல்வியின்றி முடிந்துள்ளது. அவுஸ்திரேலிய அணி 1987, 1999, 2003ஆகிய வற்றில் உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.

மே.இந்தியதீவு - இவ்வணி 8 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளது. மொத்தம் 48 போட்டிகளில் பங்குபற்றி 31 போட்டிகளில் வெற்றியும், 16 போட்டிகளில் தோல்வியையும் கண்டது. ஒரு போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது. இவ்வணி 1975 ஆம், 1979 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதலாம், 2 ஆம் உலகக் கிண்ண போட்டிகளில் கிண்ணங்களைக் கைப்பற்றியது.

இந்தியா - இந்திய அணியும் முடிவடைந்த 8 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளது. மொத்தம் 55 போட்டிகளில் பங்குபற்றி 31 போட்டிகளில் வெற்றியும் 23 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது. இந்த அணி 1983 ஆம் ஆண்டு உலக சாம்பியன் கிண்ணத்தை முதல் தடவையாக கைப்பற்றியது.

பாகிஸ்தான் :

பாகிஸ்தான் அணியும் 8 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளது. இந்த அணி மொத்தம் 53 போட்டிகளில் பங்குபற்றி 23 போட்டிகளில் வெற்றியும், 22 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகள் முடிவின்றியும் கைவிடப்பட்டன. 1992 ஆம் ஆண்டு உலகக் கிண்ண சாம்பியன் கிண்ணத்தை இவ்வணி கைப்பற்றியது.

இலங்கை :

முடிவடைந்த 8 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் இலங்கை அணி பங்குபற்றியுள்ளது. மொத்தம் 46 போட்டிகளில் பங்குபற்றி, 17 போட்டிகளில் வெற்றியும் 27 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்ததுடன், ஒரு போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது. இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ண சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.

இங்கிலாந்து :

8 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் பங்கு பற்றிய இங்கிலாந்து அணி, மொத்தம் 50 போட்டிகளில் பங்குபற்றி, 31 போட்டிகளில் வெற்றியும், 18 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி முடிவின்றி கைவிடப்பட்டது. இந்த அணி 1979, 1987, 1992 ஆம் ஆண்டுகளில் இறுதிப் போட்டிகளில் பங்குபற்றி தோல்விகளையே தழுவியது.

நியூஸிலாந்து :

8 உலகக் கிண்ணப் போட்டிகளிலும் பங்குபற்றிய இவ்வணி இதுவரை உலக கிண்ணத்தை கைப்பற்றவே இல்லை. இவ்வணி மொத்தம் 52 போட்டிகளில் பங்குபற்றி 28 போட்டிகளில் வெற்றியும் 23 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டி முடிவின்றியும் கைவிடப்பட்டது.

சிம்பாப்வே:

சிம்பாவே அணி 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற 3 ஆவது உலகக் கிண்ணப் போட்டியில் தான் முதல் தடவையாக பங்கு பற்றி இதுவரை 6 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கு பெற்றியுள்ளது. மொத்தம் 42 போட்டிகளில் பங்கு பற்றி 8 போட்டிகளில் வெற்றியும், 31 போட்டிகளில் தோல்வியும் 3 போட்டிகளில் முடிவின்றியும் கைவிடப்பட்டது. இந்த அணி இதுவரை உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றவில்லை.

தென்ஆபிரிக்கா:

இந்த அணி 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற 4 உலகக் கிண்ணப் போட்டியில் தான் முதல் தடவையாகப் பங்குபற்றி இதுவரை 4 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளது. 1992 ஆம் ஆண்டும் 1999 ஆம் ஆண்டும் அரை இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது. இந்த அணி மொத்தம் 30 போட்டிகளில் பங்கு பற்றி 19 போட்டிகளில் வெற்றியும் 09 போட்டிகளில் தோல்வியும் 2 போட்டிகளில் வெற்றி- தோல்வியின்றியும் முடிவடைந்துள்ளது.

கென்யா:

1996 ஆம் ஆண்டு முதல் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்கு பற்றி வரும் இந்த அணி இதுவரை 3 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றினாலும் 2003 ஆம் ஆண்டு அரைஇறுதிப் போட்டி வரை முன்னேறி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. இவ்வணி மொத்தம் 20 போட்டிகளில் பங்கு பற்றி 5 போட்டிகளில் வெற்றியும் 14 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டி முடிவின்றியும் கைவிடப்பட்டது.

பங்களாதேஷ்:

இவ்வணி 1999 ஆம் ஆண்டு முதல் இதுவரை 2 உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றி மொத்தம் 11 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும் 8 போட்டிகளில் தோல்வியும் ஒரு போட்டி முடிவின்றியும் கைவிடப்பட்டது.

கனடா:

இவ்வணி 1979 ஆம், 2003 ஆம் ஆண்டுகளில் மட்டும் உலகக் கிண்ணப் போட்டிகளில் பங்குபற்றி மொத்தம் 9 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் 8 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

நெதர்லாந்து:

இதுவரை 2 உலகக் கிண்ணத் தொடர்களில் பங்குபற்றி இவ்வணி மொத்தம் 11 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் 10 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.

ஸ்கொட்லாந்து: 1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் மாத்திரம் பங்கு பற்றிய இவ்வணி, இதுவரை 5 போட்டிகளில் விளையாடி அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது.

Edited by Prashanna

  • தொடங்கியவர்

உலகக்கிண்ண மத்தியஸ்தர்களில் மடுகல்ல, மஹாநாம.

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ஆரம்பச் சுற்றுப்போட்டிகளுக்கான மத்தியஸ்தர்கள் நடுவர்கள் விவரங்களை ஐ.சி.சி. நேற்றுமுன்தினம் வெளியிட்டது.

இப்போட்டிகளுக்கான நடுவர் குழாமில் 16 பேர் இடம்பெற்றுள்னர். இவர்களில் 9 பேர் ஐ.சி.சி.சியின் சிறப்பு நடுவர் குழாமைச் சேர்ந்தவர்களாவர். ஏனையோர் சுனில் கவாஸ்கர், மல்கம் ஸ்பீட் ஆகியோர் தலைமையிலான ஐ.சி.சி. கிரிக்?கெட் குழுவினால் தெரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஸ்டீவ் பக்னோர் ஐந்தாவது தடவையாக உலகக்கிண்ண சுற்றுப்போட்டியில் நடுவராக பணியாற்றவுள்ளார். ஐ.சி.சி.யினால் தொடர்ச்சியாக மூன்று தடவை சிறந்த நடுவராக தெரிவுசெய்யப்பட்ட அவுஸ்திரேலியாவின் சிமோன் டபெல் இலங்கையரான அசோக்க டி சில்வா மற்றும் மார்க் பென்ஸன், பில்லி போடன், அலீம் தார், ஸ்டீவ் டேவிஸ் பில்லி டொக்ட்ரோவ், இயன் கோல்ட், டெரில் ஹார்பர், டொனி ஹில், இயன் ஹோவெல், பிரையன் ஜேர்லிங், ரூடி கேர்ஸ்டன், பீட்டர் பார்க்கர், அஷாத் ரவூவ் ஆகியோரே இக்குழாமிலுள்ள நடுவர்களாவர்.

மத்தியஸ்தர் குழாமில் 7பேர் இடம்பெற்றுள்ளனர். இலங்கையர்களான ரஞ்சன் மடுகல்ல, ரொஹான் மஹாநாம, கிறிஸ்போர்ட், ஜெவ் குரோ, ஜவகல் ஸ்ரீநாத், அலன் ஹர்ஸ்ட் , மைக் புரொக்டர் ஆகியோரே இவர்களாவர்.

தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மைக் புரொக்டர் தவிர்ந்த ஏனைய அறுவரும் உலகக்கிண்ண போட்டிகளில் வீரராக பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள அதிகாரிகளுக்கு பயிற்சிப் போட்டிகள் முடிவடைந்தவுடன் எதிர்வரும் 10 ஆம் 11 ஆம் திகதிகளில் இருநாள் பயிற்சி வகுப்பொன்று நடைபெறவுள்ளது.

உலகக்கிண்ணத் தொடரின் கடைசிக் கட்ட போட்டிகளுக்கான நடுவர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

-Virakesari-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

பயிற்சி போட்டிகள் ஆரம்பம் இலங்கை அணி இன்று ஸ்கொட்லாந்தை சந்திக்கிறது.

உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டங்கள் இன்று மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகின்றன. இதில் உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் 16 நாடுகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

9 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரும் 11ஆம் திகதி தொடக்க வைபவத்துடன் அதிகாரபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

இதில் பங்குபெறும் 16 நாடுகளும் தற்போது மேற்கிந்திய தீவுகளை சென்றடைந்துள்ளன. இந்நிலையில் இன்று தொடக்கம் வரும் 9 ஆம் திகதிவரை பயிற்சிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இலங்கை அணி இன்று ஸ்கொட்லாந்து அணியுடன் மோதவுள்ளது.

இதுதவிர வரும் 9 ஆம் திகதி இலங்கை அணி பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. இந்த போட்டி பார்படோஸில் நடைபெறவுள்ளது. இது ஒருநாள் சர்வதேச போட்டிகளுக்குள் அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

-Virakesari-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

உலகக்கிண்ணத் தொடரை சோபர்ஸ் ஆரம்பித்து வைப்பார்.

garryta3.jpg

ஒன்பதாவது உலகக்கிண்ணக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சேர் கார்பீல்ட் சோபர்ஸ் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் நேற்றுமுன்தினம் இத்தகவலை வெளியிட்டது.

எதிர்வரும் 11 ஆம் திகதி ஜமைக்காவில் ஆரம்ப வைபவம் நடைபெறும். 16 நாடுகள் இச்சுற்றுப்போட்டியில் பங்குபற்றவுள்ளன.

உலகக்கிண்ண போட்டியை ஆரம்பித்து வைப்பதை பெரும் கௌரவமாக கருதுகிறேன். மேற்கிந்தியத் தீவுகளில் முதல்தடவையாக உலகக்கிண்ண போட்டிகள் நடைபெறுவது குறித்தும் நான் மகிழ்ச்சியடைகிறேன். கரிபியன் பிராந்தியத்திலுள்ள மக்களுக்கு உலகக்கிண்ணப் போட்டிகளை பார்வையிடுவதற்கான வாய்ப்பு இதன்மூலம் கிட்டியுள்ளது என சோபர்ஸ் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா உலகக்கிண்ணத்தை தக்கவைக்க இலங்கையும் நியூஸிலாந்தும் அச்சுறுத்தலாக விளங்கும்: ஷேன் வோர்ன்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இம்முறை தனது உலகக்கிண்ணத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு இலங்கையும் நியூஸிலாந்தும் பெரும் அச்சுறுத்தலாக விளங்குமென அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன்வோர்ன் கூறியுள்ளார்.

ஆனால் தென்னாபிரிக்க அணி உலக சாம்பியனாகுவதற்கு வாய்ப்பு குறைவு எனவும் வோர்ன் தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஐ.சி.சி.சியின் புதிய தரப்படுத்தல் பட்டியலில் தென்னாபிரிக்க அணி முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்றுமுன்தினம் அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்ச்சியில் பங்குபற்றவந்த வோர்னிடம் உலகக்கிண்ண கிரிக்கெட் குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஷேன்வோர்ன் மேலும் கூறுகையில் நியூஸிலாந்தும் இலங்கையும் அபாயகரமான அணிகளாகும். அவர்கள் விளையாடும் விதத்தை நான் விரும்புகிறேன். சிறிய மைதானங்கள் ஆடுகளத்தின் தன்மை என்பன அவர்களுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணி ஐ.சி.சி. சாம்பியன் கிண்ணத்தொடர் முதலியவற்றில் சிறப்பாக விளையாடியது. தற்போது அவர்களின் சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறவுள்ளன. எனவே அவர்கள் இம்முறை சிறப்பாக விளையாடுவார்கள்.

அவுஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக 5 ஒருநாள் போட்டிகளில் தோல்வியைத் தழுவிய நிலையில் உள்ளது. ஆனால், அவுஸ்திரேலிய அணியின் திறமை குறித்து தனக்கு எவ்வித சந்தேகமுமில்லை.என்கிறார் வோர்ன்.

அவர்கள் தமது சிறிய குறைபாடுகள் சிலவற்றை நிவர்த்தி செய்துகொண்டால் அனைத்தும் சரியாகிவிடும்.

ஆனால், தென்னாபிரிக்காவுக்கு வாய்ப்பிருப்பதாக நான் கருதவில்லை. அவர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால் தென்னாபிரிக்க அணி உலகின் சிறந்த அணி அல்ல என்றார்.

-Virakesari-

Edited by யாழ்வினோ

இந்திய அணிக்கு கொலை மிரட்டல் `கறுப்பு பூனை' கள் மேற்கிந்தியா செல்கின்றது

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அங்கு கறுப்பு பூனை பாதுகாப்பு படையை அனுப்ப இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி மேற்கு இந்தியத் தீவுகளில் இம்மாதம் 13 ஆம் திகதி தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, இந்திய அணியினர் ,கடந்த புதன்கிழமை இரவு மேற்கு இந்தியத் தீவுக்குச் சென்றது. இந்திய அணி வீரர்களில் சிலருக்கு பாகிஸ்தானை தளமாக கொண்டு செயல்படும் `லஸ்கர் -இ- தொய்பா' இயக்க தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், மேற்கிந்திய தீவு அரசால் இந்திய வீரர்கள் 15 பேருக்கு தேவையான விரிவான பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்கமுடியவில்லை என்று இந்தியத் தூதரகம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய பாதுகாப்புப் படையின் கமாண்டோ (கறுப்பு பூனை) வீரர்களை பாதுகாப்புக்கு அனுப்புவது என்று இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி , வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்கச்செய்யும் நிபுணர்கள் உள்ளிட்ட கறுப்பு பூனை படையை சேர்ந்த 16 வீரர்களை கொண்ட குழு நாளை திங்கட் கிழமை மேற்கு இந்தியத் தீவுகளுக்கு செல்லவிருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு நிபுணர்கள் இருவர், இந்திய வீரர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுகிறார்கள். இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பளிப்பதுடன் ,போட்டி நடைபெறும் மைதானத்திலும் கறுப்புப் பூனைப் படை படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். வெளிநாடு செல்லும் இந்திய கிரிக்கெட் அணிக்கு கறுப்பு பூனை பாதுகாப்பு வழங்குவது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

செல்போன் ' மூலம் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புதிய தகவல்கள் வெளியாகின்றன

செல்போன் மூலம் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய சுற்றுப்பயணத்தின் போது மேற்கிந்திய வீரர் சாமுவேல்ஸ் இரகசியமாக செல்போனை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த மேற்கிந்திய கிரிக்கெட் அணி 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இதில் ஜனவரி 21 ஆந் திகதி நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியின் போது சூதாட்டம் நடந்ததாக நாக்பூர் பொலிஸார் புகார் தெரிவித்தனர்.

மேற்கிந்திய அணியின் சகலதுறை விரர் சாமுவேல்ஸ் போட்டிக்கு முன் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சூதாட்டதரகர் முகேஷ் கொச்சாரிடம் பேசியதை ஒலிப்பதிவு செய்திருப்பதாகவும் அப்போது சாமுவேல்ஸ் போட்டி குறித்து பல்வேறு தகவல்களை சூதாட்ட தரகரிடம் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து 2 பேர் கொண்ட ஜ.சி.சி.யின் ஊழல் தடுப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டுஉள்ளனர். நாக்பூரில் நேரில் விசாரணை நடத்திய ஐ.சி.சி. குழுவினரிடம் ஒளிப்பதிவு ஆதாரத்தை பொலிஸார் அளித்தனர். தொடர்ந்து ஐ.சி.சி .விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அடங்கியிருந்த இந்த புகாரில் திடீர் திருப்பமாக மேலும் திடுக்கிடும் தகவல்கள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்தப் பயணத்தின் போது சாமுவேல்ஸ் இரகசிய செல்போன் ஒன்றை பயன்படுத்தி வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கான `சிம்காட்' இந்தியாவில் வாங்கப்பட்டுள்ளது. அந்த `சிம்காட்' மேற்கிந்திய அணியின் தொடர்பு அதிகாரியாக இருந்த வாசுகங்வானி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செல்போன் மூலம் சாமுவேல்ஸ் சூதாட்ட தரகரிடம் பல முறை பேசியதாகவும் ஆயிரம் ரூபாவுக்கு பேசப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் சூதாட்ட விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், நாக்பூர் பொலிஸ் துணை கமிஷனர் அமிதேஸ் குமார் கூறும் போது;

`செல்போன் மூலம் சாமுவேல்ஸ் மேற்கிந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார். அவரது பேச்சில் எந்த வித சந்தேகமும் இருப்பதாக தெரியவில்லை' என்று கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற உலகக் கிண்ணப்பயிற்சி ஆட்டங்களின் போது

இங்கிலாந்து அணி 50 ஓவர்களுக்கு 8விக்கட் இழப்பிற்கு 286 ஓட்டங்களை குவித்தது.

இங்கிலாந்தை எதிர்த்தாடிய பெர்மூடா சகல விக்கட்டுக்களையும் இழந்து 22.2 ஓவர்களில் 45 ஓட்டங்கள் மட்டும் பெற்றது. இங்கிலாந்து அணி 241 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

தென்னாபிரிக்கா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 50 ஒவர்களில் 192 ஓட்டங்களையும் அதை எதிர்தாடிய அயர்லாந்த அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 44.2 ஓவர்களில் 157 ஓட்டங்களை பெற்று 35 ஓட்டங்களில் தோல்வியைத் தழுவியது. :unsure:

சிரிலங்கா அணி 7 விக்கட் இழப்பிற்கு 50 ஓவர்களில் 294 ஓட்டங்களையும் அதை எதிர் கொண்ட ஸ்கொட்லாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 41.2 ஓவர்களில் 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 159 ஓட்டங்களில் சிரிலாங்காவிடம் தோல்வியைத் தழுவியது.

ஜானா

Edited by Janarthanan

தென்னாபிரிக்கா அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 50 ஒவர்களில் 192 ஓட்டங்களையும் அதை எதிர்தாடிய அயர்லாந்த அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 44.2 ஓவர்களில் 157 ஓட்டங்களை பெற்று 35 ஓட்டங்களில் தோல்வியைத் தழுவியது. :unsure:

ஜானா

:o:o:o:o:o

  • தொடங்கியவர்

என்ன ஆச்சு தென்னாபிரிக்கா அணிக்கு?? எல்லா முன்னணி வீரர்களும் விளையாடிய போதும் 192 ஓட்டங்கள் தான் பெற முடிந்ததா?? தென்னாபிரிக்கா அணியின் தீவிர ஆதரவாளர் பிரசன்னா எங்கே போயிற்றார்?? கருத்து எதுவும் சொல்லவில்லை?? :unsure::o

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொரு போட்டியில் மேற்கிந்திய அணி 6 ஆட்டக்காரர்களை இழந்து 268 ஒட்டங்கள் பெற்றது. பதிலுக்கு கென்யா அணி 7 ஆட்டக்காரர்களை இழந்து 247 ஒட்டங்கள் பெற்றது.

இம்முறை உலகக்கிண்ணப் போட்டியில் அரை இறுதிக்குப் தெரிவாக உள்ள நாடுகள் பற்றி பல முன்னாள் வீரர்கள் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள். நானும் எவ்வணிகள் வரும் என்று குழம்பிப் போய் உள்ளேன். எனினும் எனது கணிப்பை யாழ்கள போட்டியில் 13ம் திகதிக்கு முன்பே எப்படியாவது பதிந்து விடுவேன்.

Andrew Hall produced a superb and timely allround performance to save South Africa's blushes in their opening World Cup warm-up match against Ireland at the Frank Worrell Ground in Trinidad. Hall rescued his side twice, first with an unbeaten 67 from No. 9 after South Africa, the new World No.1s, had been reduced to 91 for 8 in the first innings; then with a spell of 3 for 30 from nine overs to set up a tight 35-run win.

அன்றவ் ஆஹாலால் தென்னாவிரிக்காவின் மானம் காப்பாற்றப்பட்டது. என்னையும் சோத்து பலருடைய கணிப்புகள் தவறாகும் போல உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்

இன்றைய பயிற்சிப் போட்டியில் மேற்கிந்திய தீவும் கென்யாவும் மோதியது.

மேற்கிந்திய தீவு சகல விக்கட்டக்களையும் இழந்து 50 ஓவர்களில் 268 ஓட்டங்கள் எடுத்தது. சற்றும் சளைக்காமல் கென்யா அணி 7 விக்கட் இழப்பிற்கு 50 ஒவர்களில் 247 ஓட்டங்களை எடுத்து 21 ஓட்டத்தால் போராடித் தோற்றது.

ஜானா

  • தொடங்கியவர்

இன்னொரு போட்டியில் மேற்கிந்திய அணி 6 ஆட்டக்காரர்களை இழந்து 268 ஒட்டங்கள் பெற்றது. பதிலுக்கு கென்யா அணி 7 ஆட்டக்காரர்களை இழந்து 247 ஒட்டங்கள் பெற்றது.

இம்முறை உலகக்கிண்ணப் போட்டியில் அரை இறுதிக்குப் தெரிவாக உள்ள நாடுகள் பற்றி பல முன்னாள் வீரர்கள் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கிறார்கள். நானும் எவ்வணிகள் வரும் என்று குழம்பிப் போய் உள்ளேன். எனினும் எனது கணிப்பை யாழ்கள போட்டியில் 13ம் திகதிக்கு முன்பே எப்படியாவது பதிந்து விடுவேன்.

நீங்க வனு அற்றுக்கு போறது என்று தான் நிக்கிறீங்க. :unsure: இந்த வயதில உங்களுக்கு வனு அற்று தேவை தானா?? :o

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எலிக்கறிக்கு ஆசைப்பட நான் மட்டும் வனு-அற்றுக்கு போக ஆசைப்படக்கூடாதா?

  • தொடங்கியவர்

செல்போன் ' மூலம் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புதிய தகவல்கள் வெளியாகின்றன

செல்போன் மூலம் சாமுவேல்ஸ் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய சுற்றுப்பயணத்தின் போது மேற்கிந்திய வீரர் சாமுவேல்ஸ் இரகசியமாக செல்போனை பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்த மேற்கிந்திய கிரிக்கெட் அணி 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியது. இதில் ஜனவரி 21 ஆந் திகதி நாக்பூரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியின் போது சூதாட்டம் நடந்ததாக நாக்பூர் பொலிஸார் புகார் தெரிவித்தனர்.

மேற்கிந்திய அணியின் சகலதுறை விரர் சாமுவேல்ஸ் போட்டிக்கு முன் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சூதாட்டதரகர் முகேஷ் கொச்சாரிடம் பேசியதை ஒலிப்பதிவு செய்திருப்பதாகவும் அப்போது சாமுவேல்ஸ் போட்டி குறித்து பல்வேறு தகவல்களை சூதாட்ட தரகரிடம் கூறியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து 2 பேர் கொண்ட ஜ.சி.சி.யின் ஊழல் தடுப்பு குழுவினர் விசாரணை மேற்கொண்டுஉள்ளனர். நாக்பூரில் நேரில் விசாரணை நடத்திய ஐ.சி.சி. குழுவினரிடம் ஒளிப்பதிவு ஆதாரத்தை பொலிஸார் அளித்தனர். தொடர்ந்து ஐ.சி.சி .விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், அடங்கியிருந்த இந்த புகாரில் திடீர் திருப்பமாக மேலும் திடுக்கிடும் தகவல்கள் நேற்று முன்தினம் வெளியாகின. இந்தப் பயணத்தின் போது சாமுவேல்ஸ் இரகசிய செல்போன் ஒன்றை பயன்படுத்தி வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கான `சிம்காட்' இந்தியாவில் வாங்கப்பட்டுள்ளது. அந்த `சிம்காட்' மேற்கிந்திய அணியின் தொடர்பு அதிகாரியாக இருந்த வாசுகங்வானி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செல்போன் மூலம் சாமுவேல்ஸ் சூதாட்ட தரகரிடம் பல முறை பேசியதாகவும் ஆயிரம் ரூபாவுக்கு பேசப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் சூதாட்ட விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், நாக்பூர் பொலிஸ் துணை கமிஷனர் அமிதேஸ் குமார் கூறும் போது;

செல்போன் மூலம் சாமுவேல்ஸ் மேற்கிந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினரிடம் பேசியிருக்கிறார். அவரது பேச்சில் எந்த வித சந்தேகமும் இருப்பதாக தெரியவில்லை' என்று கூறியுள்ளார்.

சாமுவேல் புதிய வீரர். அந்தாள் இப்படி சூதாட்டங்களுக்கு எல்லாம் போற அளவுக்கு இல்லை. இந்தியா பொலிஸ் சும்மா நாடகம் ஆடுறார்கள்.

Edited by யாழ்வினோ

என்ன ஆச்சு தென்னாபிரிக்கா அணிக்கு?? எல்லா முன்னணி வீரர்களும் விளையாடிய போதும் 192 ஓட்டங்கள் தான் பெற முடிந்ததா?? தென்னாபிரிக்கா அணியின் தீவிர ஆதரவாளர் பிரசன்னா எங்கே போயிற்றார்?? கருத்து எதுவும் சொல்லவில்லை?? :unsure::o

:o

:angry:

விட்டால் நான் தான் தெனாப்பிரிக்க அணியின் தலைவர் என்டு சொல்லுவீங்க போல்யிருக்கே என் ஆதரவு பெர்மூடாக்குத்தான் :o:o :P :P

  • தொடங்கியவர்

வீரர்கள் தேர்வு குறித்த ரகசியங்களை வெளியிட்ட வெங்சர்க்கார் மீது நடவடிக்கை இந்திய கிரிக்கெட் சபை ஆலோசனை.

வீரர்கள் தேர்வின் போது நடந்த ஆலோசனைகளை வெளிப்படுத்திய தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்க்கார் மீது நடவடிக்கை எடுக்க இந்திய கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது. உலகக் கிண்ணத்துக்கான அணி தேர்வு செய்யப்பட்ட பின்னர் தனிப்பட்ட வீரர்கள் தேர்வு குறித்து கருத்து வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் சபை கூறியுள்ளது. இந்திய தேர்வுக்குழுத்தலைவர் வெங்சர்க்கார் இதனை மீறி பேட்டி ஒன்றில் விரேந்திர செவாக் இந்திய அணியில் சேர்க்கப்பட்டதற்கு அணித்தலைவர் டிராவிட் வலியுறுத்தலே காரணம் என்று கூறியிருந்தார். செவாக் ஓட்டம் குவிக்க முடியாமல் திணறி வந்ததையடுத்து அவரை அணியில் சேர்ப்பதில்லை என தேர்வுக்குழு முடிவு செய்திருந்ததாகவும் எனினும் அணித்தலைவர் டிராவிட் ஷெவாக் அணியில் இடம் பெற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் வெங்சர்க்கார் கூறினார். தலைவரின் விருப்பப்படியே அணியை தேர்வு செய்வது நல்லது என்று தான் கருதியதாகவும் அவர் கூறியிருந்தார்.

வெங்சர்க்காரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் சபை இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கிரிக்கெட் சபையின் முதன்மை நிர்வாக அதிகாரியான ரத்னாகர் ஷெட்டி வெங்சர்க்கார் கூறியுள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். உலகக்கிண்ணம் ஆரம்பமாவதற்கு முன்னதாக அணியின் தேர்வு குறித்து கருத்து தெரிவிப்பது நல்லதல்ல என்றும் வெங்சர்க்கார் இப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நடத்தை விதிகள் வீரர்கள், அதிகாரிகள் மற்றும் தேர்வுக்குழுத் தலைவருக்கும் பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் சபையின் துணைத்தலைவர் ராஜீவ் சுகிலாவும் வெங்சர்க்காரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்வுக் குழுத் தலைவர் பதவியில் இருப்பவர் இது போன்ற கருத்துக்களை கூறக்கூடாது என்றும் இது இந்திய அணியின் செயற்பாட்டை பாதிக்கக்கூடிய தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திடும் என்றும் அவர் கூறியுள்ளார். தேர்வுக்குழுவினர் நீண்ட ஆலோசனைக்குப் பிறகே அணியை தெரிவு செய்தனர். இந்நிலையில் தற்போது தனிப்பட்ட வீரர்கள் தேர்வு பற்றி பேசுவது தேவையில்லாதது என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை வெங்சர்க்காரின் இந்த செயற்பாட்டுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் சபை நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

வெங்சர்க்காரின் நடவடிக்கை எமக்கு வருத்தத்தை அளிக்கிறது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபை தலைவர் சரத்பவார் தலைமையில் கூடி ஆலோசனை நடத்த உள்ளோம்.

இதன்போது அவர் மீது இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறான செயல்களுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்புவோம். அதன் பின்னரே உரிய நடவடிக்கை எடுப்போம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

-Virakesari-

அதிர்ஷ்டம் இல்லாத வானவில் தேசம்

அதிர்ஷ்டம். வாழ்க்கையில் புகழின் உச்சிக்கு நம்மை ஏணிப்படிகளில் ஏற்றாமல் லிப்டில் கொண்டு செல்லும் மாயக்கோல் இது.

திறமை, உழைப்பு, நேர்மை ஆகியன ஒட்டுமொத்தமாக இருந்தும் ஒருவர் வாழ்கையின் கடைக்கோடியில் தேங்கியிருப்பதற்கு அதிர்ஷ்டம் இல்லை என நாம் பேச்சு வாக்கில் கூறுவதுண்டு.

அதுபோல, கிரிக்கெட்டில் ஜாம்பவான் அணிக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் தகுதிகளும் இருந்தும் உலகக் கோப்பை ஏந்த முடியாமல் போன கடும் ஏமாற்றம் தென் ஆப்பிரிக்காவுக்கு உண்டு

ஆப்பிரிக்க கண்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது தென் ஆப்பிரிக்க தேசம். இந்நாட்டில் கிடைக்கும் தங்கம், வைரங்களின் அபரிமிதமான வளங்களே பிரிட்டிஷ் மக்களின் அசைக்க முடியாத ஆசைக்கு காரணம். அவர்களே இங்கு கிரிக்கெட்டையும் விதைத்தனர். இதன் கிரிக்கெட் வரலாற்றை நாம் அணுஅணுவாக ஆராய்ந்தால் மிக சுவாரஸ்யமாகவும், உணர்ச்சியின் உச்சக்கட்ட வெளிப்பாடாகவும் இருக்கும்.

கிரிக்கெட் விளையாடப்பட்ட ஆரம்ப காலத்தில் நிறவெறிக்கொள்கை இந்நாட்டில் தலைவிரித்தாடியது. தென் ஆப்பிரிக்க அணியில் ஆரம்பம் முதல் வெள்ளையின மக்களைத் தவிர மற்ற இனத்தவர் அணியில் சேர்க்கப்படாமல் இருந்தனர்.

1968-ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட்டிலும் நிறவெறிக் கொள்ளையை பயன்படுத்தியதால் அந்த அணிக்கு 20 ஆண்டுகள் விளையாடத் தடைவிதித்தது ஐ.சி.சி.

அதன் பின்பு, 1991-ம் ஆண்டு தடைநீக்கப்பட்டு டெஸ்ட் அந்தஸ்தும், ஒருதின போட்டி அந்தஸ்தும் வழங்கப்பட்டது. நிறவெறிக் கொள்கைகளை கைகழுவியதால் அனைத்து தரப்பு மக்களும் தற்போது அங்கு வாழ்ந்து வருகின்றனர். இதனால் அந்நாடு வானவில் தேசம் என்றும் அழைக்கப்படுகிறது.

கெப்லர் வெஸ்ஸல்ஸ் தலைமையில் சர்வதேச கிரிக்கெட் உலகில் தடம் பதித்தது தென் ஆப்பிரிக்க அணி. 1991-ல், நவம்பர் 10-ம்தேதி கோல்கத்தாவில் இந்திய அணியுடன் முதன் முதலாக ஒருதினப் போட்டியில் விளையாடியது. அப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி இறுதிப்போட்டியில் மோசமாக ஆடி கோப்பையைக் கைவிட்டது.

1992-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடி, அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் இங்கிலாந்துடனான ஆட்டத்தில் மழை குறுக்கிடவே, 19 பந்தில் 23 ரன்கள் எடுக்க வேண்டியிருந்த அணி டக்வொர்த்- லூயிஸ் விதிமுறைப்படி ஒரு பந்தில் 21 ரன் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பரிதாபமாக தோற்றுப்போனது.

இதுவரை 4 உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி, ஒரு முறைகூட அரையிறுதியை தாண்டியதில்லை.

ஹான்சி குரோனியே தலைமையிலான அணி, சிறப்புடன் திகழ்ந்த போதிலும் தொடரை இழந்தே வந்தது. அதன்பின் கிரிக்கெட் சூதாட்டத்தில் சிக்கி குரோனியே ஆயுள்தடை பெற்றார். அடுத்த சில ஆண்டுகளில் விமான விபத்தில் மரணமடைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர் தென் ஆப்பிரிக்க அணி உருக்குலைந்தது. அடுத்தடுத்து பல தோல்விகளைச் சந்தித்தது.

இதையடுத்து, ஷான் போலக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் அணி மீண்டும் விஸ்வருபமெடுத்து பல வெற்றிகளைப் பெற்றது. 2003-ம் உலகக் கோப்பை போட்டியை ஏற்று நடத்திய அந்நாடு, முதல் சுற்றிலேயே வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அதனால் கேப்டன் பதவியை போலக் ராஜினாமா செய்தார். ஸ்மித் தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி தயாரானது. வெள்ளையர் அல்லாத ஒருவர் முதன் முதலாக கேப்டனாக நியமிக்கப்பட்ட சிறப்பு ஸ்மித்துக்கு கிடைத்தது. அதன் பின்னர் கறுப்பு இனத்தவர்களும் அணியில் சேர்க்கப்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் மகாய நிதினி, முதல் கறுப்பு இனத்தவராக அணியில் சேர்க்கப்பட்டார்.

ஸ்மித் தலைமையில் அணி முழுவடிவம் பெற்று குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைப் பெற்றது. ஐ.சி.சி நாக்அவுட் போட்டியில் மே.இ.தீவுகளை வென்று கோப்பையைத் ஏந்தியது.

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றது. அடுக்கடுக்காக பல வெற்றி மாலைகளைச் சூடியது. உலகமே வியக்கும் வண்ணம் ஆஸ்திரேலிய அணி குவித்த 438 ரன்களை சேஸ் செய்து சாதனை புரிந்தது.

பலமுறை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் அணி, கடைசியில் கோப்பைக்கான போட்டியில் மட்டும் கோட்டைவிடுவது ஏனோ என இன்னும் புரியவில்லை.

தற்போது உலகத் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென்ஆப்பிரிக்க அணி, உலகக் கோப்பையைக் கைப்பற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

dinamani.com

Lankasri Sports : . 03 Mar 2007

  • தொடங்கியவர்

இன்று அவுஸ்ரேலியா - சிம்பாவே அணிகளுக்கு இடையான பயிற்சி துடுப்பாட்ட போட்டி நடைபெறவுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.