Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • தொடங்கியவர்

அவுஸ்திரெலியா, தென்னாபிரிக்கா விளையாட உள்ள ஆடுகளம் ஒரளவு சுழல் பந்து வீச்சாளாருக்கு ஏற்றதாக இருக்கிறது. இம்மைதானத்திலே தான் நியூசிலாந்து, இங்கிலாந்து, கென்யா, கனடா போன்ற நாடுகள் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் விளையாடின.

Beausejour Stadium, Gros Islet, Saint Lucia மைதானம் துடுப்பாட்ட வீரர்களுக்கு (Batsmen) சாதகமானது.

nonamevt1.jpg

நியூசிலாந்து - இலங்கை அணிகள் அரை இறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ள Sabina Park, Kingston, Jamaica மைதானம் பற்றி எதுவும் சொல்ல முடியாது 50%:50%.

nonameaaaw7.jpg

Edited by யாழ்வினோ

  • Replies 1k
  • Views 70.5k
  • Created
  • Last Reply
ஆஸ்திரேலிய அணியில் இப்போது 12 பேர் விளையாடிக்கொண்டிருக்கிறார்
  • தொடங்கியவர்

இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் ராஜினாமா.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது. கடைசி வாய்ப்பாயிருந்த தென் ஆபிரிக்காவுக்கு எதிரான முக்கியமான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்தது.

இதையடுத்து தோல்விக்கு பொறுப்பேற்று அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்திருக்கிறது.

சிம்பாப்வேயை சேர்ந்த பிளட்சர் 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கபப்ட்டார். இவரது பயிற்சியின் கீழ் ஏற்றம், இறக்கங்களை சந்தித்த இங்கிலாந்து அணி 2005 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

-Virakesari-

ஆகா தொடங்கிட்டாங்க அவர் பிழையா கொடுத்தா அதற்கு நம்மண்ட அணி எந்தவிதத்தில் பொறுபேற்கும்,யார் என்ன சொன்னாலும் ஒசி சுப்பேர்ப்

தலை வருவார்

:P

அதேதான் நடுவர்கள் கொடுக்கும் பிழையான தீர்ப்புகளிற்க்கு வீரர்களையோ அணிகளையோ தவறு சொல்லி பிழையில்லை, இதை எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டும்

இன்றைய போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதற்கு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடுவர் Asad Rauf தான் காரணம்.

இப்படியும் சொன்னீர்கள்..ஞாபகம் இருக்கிறதா ?

ஆகா தொடங்கிட்டாங்க அவர் பிழையா கொடுத்தா அதற்கு நம்மண்ட அணி எந்தவிதத்தில் பொறுபேற்கும்,யார் என்ன சொன்னாலும் ஒசி சுப்பேர்ப்

:P

இப்போ இப்படி சொல்றாங்க..

ஒண்ணுமே புரியலே.. உலகத்திலே.. என்னமோ நடக்குது..

:unsure:

இப்போ இப்படி சொல்றாங்க..

ஒண்ணுமே புரியலே.. உலகத்திலே.. என்னமோ நடக்குது..

:unsure:

அது யாழ்வினோ சொன்ன கருத்து இது நான் சொன்ன கருத்து அந்த கருத்துடன் என் கருத்தையும் ஒப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்

;)

  • தொடங்கியவர்

மேற்கிந்திய அணியின் தலைவரும் சிறந்த துடுப்பாட் வீரருமான பிறையின் லாறா சற்று முன் ரண் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார் இது அவர் பங்குபற்றும் இறுதி துடுப்பாட்ட போட்டி என்பது எல்லோரும் அறிந்த விடயம் லாறாவுக்கு மதிப்பளிக்கும் நோக்கத்துடன் இன்று பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் மைதானத்துக்கு வருகை தந்துள்ளார்கள் அவர் ஆட்டமிழந்து சென்ற போது பார்வையாளர்கள் எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி லாறாவுக்கு மரியாதையளித்தனர் ஆனால் மைதானத்தில் நிற்கும் இங்கிலாந்து வீரர்கள் எவரும் லாறாவை கண்டுகொள்ளவில்லை இது பார்ப்பதற்கு மிகவும் வருத்தமாக இருந்தது.

  • தொடங்கியவர்

Scorecard

nonamebr3.jpg

லாரா களத்திற்கு வரும்போது இங்கிலந்து வீரர்கள் வரிசையாக நின்று வரவேற்றார்கள். போனபோது மேற்கிந்திய வீரர்கள் அணிவகுத்து நின்றார்கள். கண்டுகொள்ளவில்லை என்பது தவறு.

இளவரசன் லாராவின் கடைசி ஆட்டம் இப்படி முடிந்தது கவலைதான்..

:lol:

குட் பாய் லாரா :lol:

Edited by Kuddithambi

  • தொடங்கியவர்

இன்றைய ஆட்டம் மிகவும் விறு விறுப்பான ஒரு ஆட்டமாக இருந்தது 301 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து அணியினர் 49.5 ஓவர்களில் 9 விக்கெற்றுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர். கெவின் பீற்றர்சன் 100 ஓட்டங்களையும், மைக்கல் வோன் 79 ஓட்டங்களையும் எடுத்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

Edited by யாழ்வினோ

இங்கிலாந்து மேற்கிந்தியா தீவை வெற்றி பெறும் என்பதை 3 போட்டியாளார்கள் மட்டுமே சரியாகப் பதிந்துள்ளார்கள். மணிவாசகன் இப்பொழுது யாழ்வினோவுடன் ஒரே புள்ளிகள் பெற்றுள்ளார். போட்டி விதிப்படி முதல் இடத்தில் யாழ்வினோ தொடர்ந்தும் இருக்கிறார். 9ம் இடத்தில் இருந்த வாசகன் 4ம் இடத்துக்கும்,15ம் இடத்தில் இருந்த கந்தப்பு 13ம் இடத்துக்கும் முன்னேறி உள்ளார்கள். விபரங்களுக்கு http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=290263

  • தொடங்கியவர்

பிளெமிங் சொல்லுவதை பார்த்தால் அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியினர் முறையா வாங்கி கட்ட போறார்கள் போல இருக்கு. :lol:

However, Fleming is confident Bond and Oram will be back for the semi-final against Sri Lanka on Tuesday. We are a dangerous side, he said. We can play a semi-final and chase down 350 We are even more dangerous now.

-Cricinfo-

Edited by யாழ்வினோ

  • தொடங்கியவர்

சுப்பர் 8 சுற்று முடிவடைந்த நிலையில் முன்ணனி வீரர்கள் பெற்றுள்ள ஓட்டங்கள் மற்றும் விக்கெற்றுகள் பற்றிய விபரம்.

Most Runs

mostrunsei1.jpg

Most Wickets

mostwicoy3.jpg

  • தொடங்கியவர்

லாறாவின் இறுதி நிமிஷம்

39095932xb6.png

laarabw5.jpg

laarnt4.jpg

Edited by யாழ்வினோ

பிளெமிங் சொல்லுவதை பார்த்தால் அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியினர் முறையா வாங்கி கட்ட போறார்கள் போல இருக்கு. :o

However, Fleming is confident Bond and Oram will be back for the semi-final against Sri Lanka on Tuesday. We are a dangerous side, he said. We can play a semi-final and chase down 350 We are even more dangerous now.

-Cricinfo-

சுப்பர் 8லயும் இப்படித்தான் சவுடால் சொல்லிட்டு வந்தார் தாங்கள் பலமா இருக்கிறம் எண்டு :lol:

  • தொடங்கியவர்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், 25 ஆம் திகதி புதன்கிழமையும் நடைபெறவுள்ளன. அரையிறுதி ஆட்டத்துக்கு தற்போது அவுஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் தெரிவாகியுள்ளன.

24 ஆம் திகதி நடைபெறவிருக்கும் 1 ஆவது அரையிறுதி ஆட்டத்தில், இலங்கை அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாடும். 25 ஆம் திகதி நடைபெறவிருக்கும் 2 ஆவது அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி, தென்னாபிரிக்க அணியை எதிர்த்து விளையாடும்.

இந்த 4 அணிகளில் அவுஸ்திரேலிய அணியே மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருக்கின்றது. இவ்வணி இதுவரை எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாது தொடர்ந்து வெற்றிநடை போட்டுக்கொண்டே வருகின்றது. ஏனைய 3 அணிகளான இலங்கை, நியூசிலாந்து, தென்னாபிரிக்க அணிகள் சுப்ப- 8 போட்டிகளில் தோல்விகளை சந்தித்தே அரையிறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சுப்ப-8 போட்டியில் இலங்கை அணி 7 போட்டிகளில், தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியடைந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 2 ஆம் இடத்தில் இருக்கின்றது. நியூசிலாந்து அணியும் 2 போட்டிகளில் தோல்வியும், 5 போட்டிகளில் வெற்றியும் பெற்று 10 புள்ளிகளுடன் 3 ஆம் இடத்திலும், தென்னாபிரிக்க அணி 3 போட்டிகளில் தோல்வியும், 4 போட்டிகளில் வெற்றியும் பெற்று 8 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தில் இருக்கின்றன. அவுஸ்திரேலிய அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் 1 ஆம் இடத்தில் இருக்கின்றது.

அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை- நியூசிலாந்து அணிகளே முதலில் போட்டியிடவுள்ளன. ஆரம்பத்தில் மேற்கிந்திய தீவில் அணிகளிடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டங்களில் இலங்கை அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. சுப்ப-8 போட்டியில் நியூசிலாந்து அணி இலங்கை அணியிடம் தோல்வியடைந்தது. ஆனாலும், தற்போதைய நிலையில் இலங்கை அணி மிகவும் பலம் வாய்ந்த நிலையில் இருப்பதினால் இவ்விரு அணிகளுக்குமிடையில் நடைபெறவிருக்கும் அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை அணிக்கே கூடிய வெற்றி வாய்ப்பு இருப்பதாக அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இதேபோல் அவுஸ்திரேலிய, தென்னாபிரிக்க அணிகளிடையே நடைபெறவிருக்கும் அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணியே நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஆகவே, இதனடிப்படையில் பார்க்கும்போது இறுதியாட்டத்தில் இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளே போட்டியிடும் நிலை உருவாகும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நடப்பு உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணி இதுவரை 3 தடவைகள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. (1987, 1999, 2003). இலங்கை அணி 1996 ஆம் ஆண்டு மட்டுமே அவுஸ்திரேலிய அணியை வெற்றி கண்டு உலகக் கிண்ணத்தை முதல் தடவையாக கைப்பற்றியுள்ளது.

இறுதியாட்டம் 28 ஆம் திகதி சனிக்கிழமை பாபடாஸில் உள்ள கின்ஸிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய- இலங்கை அணிகள் போட்டியிடும் நிலை உருவானால் இலங்கை அணியின் கடும் எதிர்ப்பை அவுஸ்திரேலிய அணி எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமென்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனாலும், கிரிக்கெட் ஆட்டத்தில் எந்தநேரத்திலும் எதுவும் நிகழலாம் என்பதையும் யாரும் மறந்துவிட முடியாது.

-Thinakkural-

கோப்பை அவுஸ்ரேலியாவுக்கு தான் நோ மோர் சொய்ஸ். :)

Edited by யாழ்வினோ

கோப்பை அவுஸ்ரேலியாவுக்கு தான் நோ மோர் சொய்ஸ். :(

முந்தி எடுத்த கோப்பையெல்லம் இருக்குத்தானே வச்சிட்டு கம்முன்னு உக்கந்து தென்னாபிரிக்க - இலங்கை மோதும் இறுதியாடத்த பாருங்கோ :)

பிளெமிங் சொல்லுவதை பார்த்தால் அரை இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியினர் முறையா வாங்கி கட்ட போறார்கள் போல இருக்கு. :)

However, Fleming is confident Bond and Oram will be back for the semi-final against Sri Lanka on Tuesday. We are a dangerous side, he said. We can play a semi-final and chase down 350 We are even more dangerous now.

-Cricinfo-

அப்படித்தான் முந்தியும் சொன்னாங்கோ.. இதையெல்லாம் தூக்கிபிடிச்சு மனசை விடாதையுங்கோ.. இரண்டு நாள்தானே கம்முன்ணு இருங்கோ..

:P :P :P :P

யாழ்கள உறுப்பினர் மணிவாசகனுக்கு ஜே..ஜே..ஜே

:(

Edited by Ponniyinselvan

அப்படித்தான் முந்தியும் சொன்னாங்கோ.. இதையெல்லாம் தூக்கிபிடிச்சு மனசை விடாதையுங்கோ.. இரண்டு நாள்தானே கம்முன்ணு இருங்கோ..

:P :P :P :P

யாழ்கள உறுப்பினர் மணிவாசகனுக்கு ஜே..ஜே..ஜே

:)

அது அவருக்கு தொழிலாச்சே :P

முந்தி எடுத்த கோப்பையெல்லம் இருக்குத்தானே வச்சிட்டு கம்முன்னு உக்கந்து தென்னாபிரிக்க - இலங்கை மோதும் இறுதியாடத்த பாருங்கோ :unsure:

கோப்பை ஓசிக்கு தான்

;)

  • தொடங்கியவர்

யாழ்கள உறுப்பினர் மணிவாசகனுக்கு ஜே..ஜே..ஜே

:unsure:

யாழ் கள போட்டியில் நான் வெற்றி பெற மாட்டேன் என்று ஏற்கனவே நான் உத்தியோக பூர்வமாக அறிவித்து விட்டேன் பாருங்கோ அப்புறம் ஏனங்கோ கிண்டல் பண்ணுறீங்கள். இந்த போட்டியில் நான் வெற்றி பெறாவிட்டாலும் பறவாயில்லை எனக்கு பிடித்த அவுஸ்ரேலியா அணி கோப்பையை கொண்டு வந்தால் அது போதும் எனக்கு. :lol:

அதேதான் என்னாலும் வெற்றி பெற முடியாது, இலங்கை அணி கிண்ணததை கொண்டுவருவதை பார்த்து ரசிக்க வேண்டும் :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

கோப்பை எமது பக்கத்து நாட்டுக்கு போனாலும் போகலாம்

  • தொடங்கியவர்

முந்தி எடுத்த கோப்பையெல்லம் இருக்குத்தானே வச்சிட்டு கம்முன்னு உக்கந்து தென்னாபிரிக்க - இலங்கை மோதும் இறுதியாடத்த பாருங்கோ :unsure:

அப்படித்தான் முந்தியும் சொன்னாங்கோ.. இதையெல்லாம் தூக்கிபிடிச்சு மனசை விடாதையுங்கோ.. இரண்டு நாள்தானே கம்முன்ணு இருங்கோ..

:P :P :P :P

அனுபவம் மிக்க தலைவர் பிளமிங் சிறப்பாக தனது அணியை வழி நடத்தி இலங்கை அணியை மண் கவ்வ வைப்பார் என்பது உறுதி. இலங்கை அணிக்கு "ரண்ணர் அப்" நிலை கூட கிடைக்காது நாளை மறு தினம் உங்கள் எல்லாருடைய நிலை கோவிந்தா தான். :lol:

Edited by யாழ்வினோ

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.