Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி 2007 - செய்திகளும் கருத்துப்பகிர்வுகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனி அப்படி நடக்க சந்தர்ப்பமில்லை ஜம்மு :P

யம்முவுக்கு முன்னுக்கு போக சந்தர்ப்பம் இருக்கிறது. எனென்றால் தொடரில் அதிக ஒட்டங்கள், அதிக விக்கெற்றுக்கள் பெற்றவர் என்பதற்கு அவுஸ்திரெலியா எனப் பதில் அளித்திருந்தார். அவுஸ்திரெலியா இவ் கிண்ணத்தை தட்டும் வாய்ப்பினைப் பெற்றால் அதற்கும் யமுனாவுக்கு புள்ளிகள் கிடைக்கும்.

  • Replies 1k
  • Views 70.4k
  • Created
  • Last Reply

இலங்கைக்கே உலகக் கிண்ணம்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், சம்பியன் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றுவது உறுதி என்கின்றனர் இலங்கை சோதிடர்கள்.

இந்தியாவைப் போலவே இலங்கையிலும் சோதிடப் பித்து அதிகம். "சோதிடம்தனை இகழ்" என்றார் பாரதியார், "ஆனால், பார்க்காதே" என்று சொல்லவில்லை. எமக்குச் சாதகமாக சோதிடர் கூறினால் உற்சாகமாக இருப்போம். இல்லாவிட்டால், "இதையெல்லாம் நம்புவார்களா?" என்று பகுத்தறிவோடு கேட்டுவிட்டு வேலையைப் பார்ப்போம்.

இப்போது விடயத்துக்கு வருவோம். இலங்கைக்குத்தான் கிண்ணம் என்று அரிசேன் அஹுபுடு, பிரியந்த ரத்னாயக்க என்று இரண்டு சோதிடர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.

`இலங்கைக்கு கிண்ணம் உறுதியானால் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டிக்கு "உரிய நேரத்தில்" இலங்கை அணி ஹோட்டலைவிட்டு புறப்படுவதுதான் முக்கியம்' என்றார் அரிசேன் அஹுபுடு.

அப்படி புறப்பட்டிருப்பார்களா என்பது அரையிறுதிச் சுற்றின் முடிவிலும் அதன் பிறகு இலங்கை வெற்றி பெற்றால் இறுதிச் சுற்று ஆட்ட முடிவிலும் தெரிந்து விடுமென்றார்.

பிரியந்த ரத்னாயக்க நிபந்தனை ஏதும் போடாமல் இலங்கையின் வெற்றி உறுதி என்பதற்கு ஏற்கும்படியான காரணம் ஒன்றைத் தெரிவிக்கிறார்.

தொடக்க ஆட்டக்காரரான சனத் ஜெயசூரியாவுக்கு இப்போது நல்ல யோக திசையாம். எனவே, அவரும் சாதனை படைத்து அணியும் சாதனை படைப்பது உறுதியென்கிறார்.

தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவுக்கு நல்ல காலமா இல்லையா என்று யோதிடர்கள் அரிசேன் அஹுபுடு, பிரியந்த ரத்னாயக்க சொல்லவில்லையா?.

மகிந்தக்கு நல்ல காலம் என்றால் பாஞ்சடிச்சு சொல்லி இருப்பினம் தானே எப்போ கட்டு நாயக்க மேல குண்டு விழுந்திச்சோ அண்டைக்கா மகிந்துக்கு சனியன் ஆரம்பிச்சிட்டுது இனி அழத்தான் போறாரு பாவம் உலகக் கிண்ணத்த பாத்து ஒரு தடவை ஆசைக்கு சிரிக்கட்டும் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய சுடரொளியில் ஒரு செய்தி இருக்கிறது முட்டையா முழிதரன் கைப்பற்றிய ஜேக்கப் ஓரத்தின் விக்கெட் பந்து நிலத்தில் பட்டதாகவும் முழிதரன் நன்றாக நடித்து அந்த அவுட்டை தனதாக்கிக்கொண்டதாகவும். உலகிலேயே வாயால் விக்கெட் விழுத்துபவர்கள் இந்த சிங்களவர்களின் அணிதான்.

கில்லி சிறப்பாக துடுப்பாடவில்லை என்றாலும் நான்கு பிடிகளை எடுத்துள்ளார் அது போதும். :lol:

கில்லி பிடிச்ச அத்தனை பிடிகளுமே மிக இலகுவானவை ஒன்றைத் தவிர.. தென்னாபிரிக்க வீரர்கள். மிக வெளியில் போன பந்துகளுக்கு எட்டி துளாவினார்கள்.. முட்டாள்கள். இல்லாவிட்டால் கில்லி பாடு கஷ்டம் தான்..

B)

இதுதான் கவர் டிறைவ், இதுதான் புல் ஷொட் என்று கொஞ்ச நாட்களாக ஒருத்தர் கில்லியின் படங்களை வெட்டி ஒட்டினார்.. அண்டையோடை விழுந்தது கில்லியின் பிழைப்பில் மண்.. நுணலும் தன் வாயால் கெடும்..

:P :P

\

அதேபோல இதுதான் ஓவ் டிரைவ், இதுதான் ஓன் டிரைவ் என்று கைடனின் "மாட்டு அடி" படங்களை அடிக்கடி வெட்டி ஒட்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொளகிறேன்.

<_<:lol:

Edited by Ponniyinselvan

கில்லி பிடிச்ச அத்தனை பிடிகளுமே மிக இலகுவானவை ஒன்றைத் தவிர.. தென்னாபிரிக்க வீரர்கள். மிக வெளியில் போன பந்துகளுக்கு எட்டி துளாவினார்கள்.. முட்டாள்கள். இல்லாவிட்டால் கில்லி பாடு கஷ்டம் தான்..

B)

இதுதான் கவர் டிறைவ், இதுதான் புல் ஷொட் என்று கொஞ்ச நாட்களாக ஒருத்தர் கில்லியின் படங்களை வெட்டி ஒட்டினார்.. அண்டையோடை விழுந்தது கில்லியின் பிழைப்பில் மண்.. நுணலும் தன் வாயால் கெடும்..

:P :P

\

அதேபோல இதுதான் ஓவ் டிரைவ், இதுதான் ஓன் டிரைவ் என்று கைடனின் "மாட்டு அடி" படங்களை அடிக்கடி வெட்டி ஒட்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொளகிறேன்.

<_<:lol:

கில்லி எல்லாம் கிட்டிப் புல்லு அடிக்கத்தான் சரி :lol:

கில்லி எல்லாம் கிட்டிப் புல்லு அடிக்கத்தான் சரி :lol:

சரியாகச் சொன்னீர்கள்..

:lol:

  • கருத்துக்கள உறவுகள்

இத்தொடரில் அதிகூடிய ஒட்டங்கள் பெற்றவர்

ML Hayden 1.04 Bet

Mahela Jayawardene 13.00 Bet

RT Ponting 13.00 Bet

இத்தொடரில் அதிகூடிய விக்கெற்றுக்கள் பெற்றவர்

GD McGrath 1.36 Bet

M Muralitharan 3.80 Bet

SW Tait 8.00 Bet

Australia 1.40 Bet

Sri Lanka 3.00 Bet

  • தொடங்கியவர்

கில்லி எல்லாம் கிட்டிப் புல்லு அடிக்கத்தான் சரி :lol:

:angry: :angry:

  • தொடங்கியவர்

கில்லி எல்லாம் கிட்டிப் புல்லு அடிக்கத்தான் சரி :lol:

:angry: :angry:

கில்லி இறுதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. 1999 ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண இறுதி போட்டியில் கில்லி 54 ஓட்டங்களை எடுத்திருந்தார் அத்துடன் 2003 ஆண்டு உலக கிண்ண இறுதி போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடி 57 ஓட்டங்களை எடுத்திருந்தார் ஆகவே நாளையும் அவர் சிறப்பாக ஆடுவார்.

gillaaarh5.jpg

கில்லியின் "எக்ஸ்ரா கவர் ட்ரைவ்" (Cricinfo)

Edited by யாழ்வினோ

ம்ம்ம் நாளை சாஸ்த்திரம் சொன்னது சரியா தப்பா என தெரிந்துவிடுமே

:angry: :angry:

கில்லி இறுதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. 1999 ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண இறுதி போட்டியில் கில்லி 54 ஓட்டங்களை எடுத்திருந்தார் அத்துடன் 2003 ஆண்டு உலக கிண்ண இறுதி போட்டியிலும் அவர் சிறப்பாக விளையாடி 57 ஓட்டங்களை எடுத்திருந்தார் ஆகவே நாளையும் அவர் சிறப்பாக ஆடுவார்.

gillaaarh5.jpg

கில்லியின் "எக்ஸ்ரா கவர் ட்ரைவ்" (Cricinfo)

அப்பு அதில எல்லாம் ஒருமாதிரி கிண்ணத்த தூக்கிட்டீங்கள், ஆன இந்த கிண்ணத்த நீங்கள் தூக்கப்போற்தில்லத்தானே அடிச்ச என்னா கிண்டினா என்ன :lol::lol: :P :P :D:) B)

  • தொடங்கியவர்

ம்ம்ம் நாளை சாஸ்த்திரம் சொன்னது சரியா தப்பா என தெரிந்துவிடுமே

தூயா அக்கா, விதியை மதியால் வெல்ல முடியும் என்ற விசயம் தெரியுமோ?? தெரியாது என்றால் கொஞ்சம் வெயிற் பண்ணுங்கோ நாளைக்கு பிறக்ரிக்கலாக பார்க்கலாம்.

அவுஸ்ரேலியா அணியினர் உலக கிண்ண போட்டிகளில் தொடர்ச்சியாக 28 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

"Australia have won all ten of their matches in the Caribbean and are unbeaten in their last 28 Cup games, a run stretching back to the 1999 tournament in England"

-Cricinfo-

  • தொடங்கியவர்

அப்பு அதில எல்லாம் ஒருமாதிரி கிண்ணத்த தூக்கிட்டீங்கள், ஆன இந்த கிண்ணத்த நீங்கள் தூக்கப்போற்தில்லத்தானே அடிச்ச என்னா கிண்டினா என்ன :lol::lol: :P :P :D:) B)

நீங்கள் நாளைக்கு ரொம்ப மனமுடைந்து போக கூடாது என்பதற்காக தான் நேற்று ஜெயவர்த்தனாவிற்கு கோப்பையை தொட்டுப் பார்ப்பதற்கும் கோப்பையுடன் போஸ் கொடுத்தபடி படம் எடுப்பதற்றும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார்கள்.

:D

cupcp7.jpg

Edited by யாழ்வினோ

முரளி சூறாவளியை சமாளிக்க ரெடி: பான்டிங்

பிரிட்ஜ்டவுன்: உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் முத்தையா முரளீதரனின் சுழற்பந்து வீச்சு, மலிங்காவின் வேகப் பந்து வீச்சை சமாளிக்க ஆஸ்திரேலிய வீரர்கள் தயாராக இருப்பதாக அந்த அணியின் கேப்டன் ரிக்கி பான்டிங் கூறியுள்ளார்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி சனிக்கிழமை பார்படாஸில் நடைபெறுகிறது. தொடர்ச்சியாக 3வது முறையாக கோப்பையை வென்று புதிய சாதனை படைக்க ஆஸ்திரேலியாவும், 2வது முறையாக கோப்பையை தட்டிச் செல்ல இலங்கையும் ஆயத்தமாகி வருகின்றன.

ஆஸ்திரேலிய அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அமர்க்களமாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இலங்கையும் சவால்களை சந்தித்து திறம்பட விளையாடி இறுதிக்குள் வந்துள்ளது.

இலங்கைய அணியின் சுழற்பந்து சூறாவளி முத்தையா முரளீதரனும், வேகப் புயல் மலிங்காவும் எதிரணியினரை பயமுறுத்தி வருகிறார்கள். வலுவான ஆஸ்திரேலியாவையும் நாங்கள் எளிதாக வென்று கோப்பையுடன் ஊர் திரும்புவோம் என இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே கூறியுள்ளார்.

ஆனால் கோப்பை எங்களுக்குத்தான், இலங்கையால் அதை தடுக்க முடியாது என்று ஆஸ்திரேலிய கேப்டன் பான்டிங் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்காவையும், முரளீதரனையும் சமாளித்து ரன் சேர்க்கக் கூடிய வகையில் எங்களிடமும் திறமையான வீரர்கள் உள்ளனர்.

முரளி நல்ல ஸ்பின்னர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவரை சமாளிக்கக் கூடிய பேட்ஸ்மென்கள் எங்களிடம் இருப்பதை யாரும் மறந்து விடக் கூடாது.

இலங்கை அணி சிறந்த பேட்ஸ்மென்கள், பந்து வீச்சாளர்களுடன் உள்ளன. ஆனால் இது இறுதிப் போட்டி. இதில் எதிராளியைப் பார்த்து பயப்பட நேரம் இல்லை.

1996ல் இலங்கை எங்களைத் தோற்கடித்து கோப்பையை வென்றது ஆனால் அடுத்து வந்த இரு உலகக் கோப்பைப் போட்டிகளிலும் நாங்கள் சாம்பியன் ஆனோம்.

இலங்கையை பலமுறை நாங்கள் தோற்கடித்துள்ளோம். எனவே 3 முறையாக கோப்பையை வென்று ஹாட்ரிக் சாதனையுடன்தான் நாடு திரும்புவோம்.

இறுதிப் போட்டியில் உறுதியாக எங்ளுக்கே வெற்றி. அதைத் தடுக்க இலங்கையால் முடியாது என்று கூறியுள்ளார் பான்டிங்.

----Thatstamil----

இறுதியாட்டத்தில் எந்த அணியையும் சந்திக்க இலங்கை அணி தயாராகவே உள்ளது

உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் எந்த அணியையும் சந்திக்கத் தாங்கள் தயாராகவிருப்பதாக இலங்கை அணிக் கப்டன் மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துடனான வெற்றியின் மூலம் இலங்கை அணி 2 ஆவது முறையாக உலகக் கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதற்கு முன் 1996 ஆம் ஆண்டில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி கிண்ணத்தைக் கைப்பற்றியது. நியூசிலாந்து அணி 5 ஆவது முறையாக அரை இறுதியில் தோல்வியைச் சந்தித்து வெளியேறியது.

இந்த வெற்றி குறித்து இலங்கை அணிக் கப்டன் மஹேல ஜெயவர்த்தன கூறியதாவது;

போட்டி தொடங்குவதற்கு முன் எனக்கு சிறிது பதற்றம் இருந்தது. இதற்கு முன்னர் இதே மாதிரி ஆடியவர்கள் என்னிடம் இதைச் சாதாரண ஆட்டமாக எடுத்துக் கொண்டு ஆடும்படி சொன்னார்கள். இந்த வார்த்தைகள் எனக்கு மன உறுதியைக் கொடுத்தாலும் என் அடி வயிற்றில் பயம் இருக்கத்தான் செய்தது. தொடக்கத்தில் எமது விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் அதனை சமாளித்து ஆடினோம். 45 ஓவர்களுக்குப் பின் அடித்து ஆட வேண்டும் என்று நினைத்தோம்.அந்த வாய்ப்பு எனக்கே கிடைத்தது. இந்தப் போட்டியில் நான் அடித்த சதம் மற்ற எல்லா சதங்களையும் விட மிகவும் உயர்ந்ததாகும்.

ஜெயசூரியா விரைவில் ஆட்டமிழந்தாலும் மற்றத் துடுப்பாட்ட வீரர்கள் நன்றாக ஆடினார்கள். எங்கள் துடுப்பாட்ட வரிசை பலம் வாய்ந்தது. எங்கள் அணி வீரர்கள் அனைவரும் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்தார்கள். இதுவே வெற்றிக்கு காரணமாகும். டில்ஷானை பந்து வீச அழைத்தது நல்ல முடிவாகும். அவர் ஸ்டைரிஸ் விக்கெட்டை வீழ்த்தி நியூசிலாந்தை நெருக்கடிக்குள்ளாக்கினார். முரளிதரன் விக்கெட்டுகளை வீழ்த்தி துடுப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தினார். இறுதிப் போட்டிக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். சிறந்த அணியை வீழ்த்த நாங்கள் தயார் நிலையிலுள்ளோம். இறுதிப்போட்டி வரை நாங்கள் ஆடிய விதம் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

தோல்வி குறித்து நியூசிலாந்து அணிக்கப்டன் பிளமிங் கூறுகையில்;

`நாங்கள் 5 ஆவது முறையாக அரை இறுதிக்கு முன்னேறி தோல்வியடைந்துள்ளோம். இது எங்களுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. பல உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இல்லாத போதும் நாங்கள் அரை இறுதிக்கு முன்னேறியதை மோசமான நிலை என்று சொல்ல முடியாது. சிறந்த வீரர்கள் இல்லாத பட்சத்தில் இப்படி தோல்வியைச் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும். இலங்கை, அவுஸ்திரேலியா அணிகள் எங்களுக்கு தொல்லை கொடுக்கும் என்று எதிர்பார்த்தோம். அதன்படி இலங்கை அணி எங்களை அரை இறுதியில் தோற்கடித்து வெளியேற்றிவிட்டது. எங்களை விட இலங்கை எல்லாவிதத்திலும் சிறப்பாக ஆடியது. எங்களது தொடக்க ஆட்டமும் கடைசிக் கட்டப் பந்து வீச்சும் மோசமாக இருந்தன. ஜெயவர்த்தனவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது' என்றார்.

தினக்குரல்

  • தொடங்கியவர்

முரளி சூறாவளி என்றால் எங்கட நாதன் பிறேகன் சுனாமி (tsunami).

:unsure:

natthanik9.jpg

Brad Hodge, Stuart Clark, Nathan Bracken, Andrew Symonds ஆகியோர் இன்று கடலில் குளிக்கும் காட்சி (Cricinfo)

Edited by யாழ்வினோ

முரளி சூறாவளி என்றால் எங்கட நாதன் பிறேகன் சுனாமி (tsunami). :unsure:

பிறேகன் சுனாமி எண்டா நம்ம பரட்ட தலை மாலிங்க எரிமலை :P

நீங்கள் நாளைக்கு ரொம்ப மனமுடைந்து போக கூடாது என்பதற்காக தான் நேற்று ஜெயவர்த்தனாவிற்கு கோப்பையை தொட்டுப் பார்ப்பதற்கும் கோப்பையுடன் போஸ் கொடுத்தபடி படம் எடுப்பதற்றும் ஒரு சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறார்கள்.

:unsure:

cupcp7.jpg

பெரியவரே..இதையே உம்முடைய பொண்டிங்க்குக்கும் சொல்லலாம் ..ஞாபகம் இருக்கட்டும்

:P :P

இலங்கை அணி நாளை உலக கோப்பை இறுதி போட்டியில் ஆடவுள்ள நிலையில் முன்னாள் கேப்டன் ரணதுங்கா நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை அணி இறுதி போட்டிக்கு வந்து இருப்பது மிக முக்கியமானதாகும். 1996-ல் இலங்கை அணி உலக கோப்பையை வென்றது. அதே வாய்ப்பு இப்போதும் உள்ளது.

ஆனால் இலங்கை அணி பேட்டிங்கில் சில குறைபாடு கள் இருக்கின்றன. டாப் பேட்ஸ்மேன்களை நம்பி மட்டுமே அணி உள்ளது. இது நல்லதல்ல. எனவே முன்னணி பேட்ஸ்மேன்கள் வீழ்ந்துவிட்டால் அது சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே கவனமாக ஆட வேண்டும்.

ஜெயசூர்யா இவ்வளவு காலம் ஆடிய போதிலும் திறமையுடன் உள்ளார். இளம் வீரரை போல அவரது ஆட்டம் துடிப்புடன் உள்ளது. கீழ்நிலை வீரர்களும் நன்றாக பேட்டிங் செய்தால் அணிக்கு உதவுவதாக இருக்கும்.

முரளீதரன், வாஸ் ஆகியோர் பந்துவீச்சில் கலக்குகிறார்கள். அவர்கள் தாக்குதல் திறன் நன்றாக உள்ளது. அதே போல மலிங்காவின் பந்து வீச்சு வித்தியாசமாக உள்ளது. புதிய பந்து, பழைய பந்து இரண்டையுமே அவர் சிறப் பாக கையாள்கிறார். பந்து வீச்சு துல்லியமாக

இருக்கிறது.

கேப்டன் ஜெயவர்த்தனே பள்ளி மாணவனாக விளை யாடிய காலத்தில் இருந்தே கவனித்து வருகிறேன். ஒவ் வொரு காலகட்டத்திலும் அவர் ஆட்டத்திறன் மெருகேறி வருகிறது. சிறுவயதிலேயே கேப்டனாகிவிட்ட அவர் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

இவ்வாறு ரணதுங்கா கூறினார்.

Lankasri Sports

முரளி சூறாவளி என்றால் எங்கட நாதன் பிறேகன் சுனாமி (tsunami). :unsure:

உங்கடை நாதன் பிறேக்கனோ..பகிடிதான்.. யாழ்ப்பாணம் பொது நூல்நிலையத்திற்க்கு பக்கத்தில் இருக்கிறவரோ அல்லது ஒன்ராரியோவில் அடுத்த வீட்டு ஆளோ..

:D :P

  • தொடங்கியவர்

2007 உலக கிண்ண இறுதி ஆட்டத்துக்கு நடுவர்களாக கடமையாற்றுவோர்.

Steve Bucknor (West Indies)

Aleem Dar (Pakistan)

saxr1.png

Steve Bucknor & Aleem Dar

ஆரம்பத்தில் Steve Bucknor (West Indies), Rudi Koertzen (South Africa) ஆகிய இருவரும் தான் இறுதியாட்டத்துக்கு நடுவர்களாக கடமையாற்றுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் நியூசிலாந்து - இலங்கை அணிகளிடையே நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் Rudi Koertzen (South Africa) தவறான தீர்ப்புகளை வழங்கிய காரணத்தினால் ஐசிசி அவரை இறுதியாட்டத்துக்கு மூன்றாவது நடுவராக நியமித்துள்ளது.

Steve Bucknor (West Indies) 1992, 1996, 1999, 2003 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக கிண்ண இறுதி ஆட்டங்களுக்கு நடுவராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ssch5.png

Steve Bucknor

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று சக்த்தி ரீவியில் முரளிதரனின் தம்பி சிங்களத்தில் பேட்டிகொடுத்தான் இவன் தமிழனாம்?

சும்மா விசர்க்கதை கதைக்காதேங்கோ

நாளைக்கு மகிந்தவோடை சேர்ந்து சப்போர்ட் பண்ண இருக்கிற நேரத்திலை தேவையில்லாத கதை கதையாதேங்கோ

சிறிலங்காட் ஜெயவேவா

மகிந்தட ஜெயவேவா

புரளிட ஜெயவாவா

பிற்குறிப்பு : எப்படியும் எங்கடை பெடியள் உயிரைக் கொடுத்;து எங்களுக்கொரு நாட்டை உருவாக்கிட்டாங்கள் எண்டால் பிறகேன் நாங்கள் சிங்கள நாட்டுக்கு சப்போர்ட் பண்ணப் போறம். நாடு கிடைக்கு மட்டுக்கும் தான் சிறிலங்காவுக்கு சப்போர்ட் பண்ணுவம் சரியா

முரளிதரனின் தம்பிமட்டுமல்ல முரளிதரனுமு; வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த பாராட்டுவிழாவிற்கு வந்து இனவாதி அர்ஜன மேடையில் இருக்கிறான் என்பதற்காக முழுக்க முழக்க சிங்களத்தில் பேசியவன் தான்.

அதைக் கண்ணால் கண்ட பலரில் நானும் ஒருவன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.