Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்நாடு சுற்றுலா

Featured Replies

நீலகிரிக்கு ராமாயண ஜடாயு மாதிரி பெரிய கழுகுகள் வந்திருக்கிறதாமே?! சம்மர் விசிட் அங்க போகலாமா?

 

 
himalayan_eagle

 

இந்தியாவில் 9 வகையான கழுகு இனங்கள் வாழ்கின்றன. இவற்றில் தென்னிந்தியாவில் 7 வகைகள் உள்ளன. இதில் தமிழகத்தில் வெண்முதுகு பாறு கழுகு, கருங்கழுத்து பாறு கழுகு, செந்தலை பாறு கழுகு மற்றும் மஞ்சள் முக பாறு  கழுகு ஆகிய 4 வகையான கழுகுகள் உள்ளன.

இந்நிலையில் கடந்தாண்டில் நீலகிரிக்கு சிறப்பு விருந்தாளிகளாக இமாலயன் கிரிபான் கழுகும், எகிப்தியன் கழுகும் வந்திருந்தன. இவற்றைத் தொடர்ந்து அண்மையில் சினேரியஸ் வகையான கழுகு ஒன்றும் மாயார் வனப்பகுதிக்கு வந்திருந்தது பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக நீலகிரியில் கழுகுகளைக் குறித்து ஆய்வு நடத்தி வரும் அருளகம் அமைப்பின் செயலர் எஸ்.பாரதிதாசன் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களாவன:
"இமயமலைப் பகுதியில் சுமார் 10,000 அடிக்கும் மேலான உயரத்தில் ஊசி இலை மரங்களில் கூடமைத்து இனப்பெருக்கம் செய்து சுற்றித் திரியும் சினேரியஸ் வகை கழுகு நடப்பாண்டில் நீலகிரி மாவட்டத்தில் மாயார் வனப்பகுதிக்கு வந்தது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இக்கழுகு கருப்பு நிறத்தில் இருந்தாலும் அதன் கழுத்து மற்றும் கால் ஆகியவை கருநீலத்தில் இருக்கும். அதனால் இவை கருங்கழுகு எனவும் அழைக்கப்படும். கழுகுகளிலேயே பெரிய உடல்வாகு கொண்டது இந்த கழுகு இனம்தான் என்றால் மிகையாகாது.

இந்த வகை கழுகுகள் உயரே பறக்கும்போது ஏற்படும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் வகையில் அதன் ரத்தத்தில் சிறப்பு வகையான ஹீமோகுளோபினை உருவாக்கிக் கொள்ளும் இயல்புடையதாகும். அழிவின் விளிம்பிலுள்ள இப்பறவை வட இந்தியாவில் பரவலாகவும், தென்னிந்தியாவில் அவ்வப்போதும் தென்படுகிறது. 

மேலும் இப்பறவை பெரிய உடல்வாகைக் கொண்டிருப்பதால் தனியாகவே இரை தேடும் இயல்புடையதெனவும், இறந்த விலங்குகளையும், செத்த மீன்களையும் உண்ணும் இப்பறவை சில சமயங்களில் எலி உள்ளிட்ட சிறு கொறி விலங்குகளையும், ஆமை மற்றும் முயல் உள்ளிட்ட சிறு விலங்குகளையும் கூட வேட்டையாடி உண்ணும் திறன் படைத்ததாகவும் இருக்கிறது'' என்றார். 

கழுகுகள் குறித்து நீலகிரியில் ஆராய்ச்சி நடத்திவரும் உதகை அரசு கலைக்கல்லூரி மாணவரான சாம்சன், ""கடந்த ஆண்டில் இமாலயன் கிரிபான் ரக கழுகும், எகிப்தியன் கழுகும் மாயார் வனப்பகுதிக்கு வந்திருந்த சூழலில் நடப்பாண்டில் சினேரியஸ் வகை கழுகும் வந்திருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக கழுகுகள் 37 வயது வரையிலும் உயிர்வாழக் கூடியவை என்பது அண்மைக்கால ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. இதில் 5 வயதிற்கு மேற்பட்ட கழுகுகளே வளர்ந்த கழுகுகள் என அழைக்கப்படும். ஓரிடத்திலிருந்து வேறு புதிய இடத்திற்கு வளர்ந்த கழுகுகள் வருவதில்லை. இளம் கழுகுகளே வந்து செல்கின்றன. முதலில் இவை அந்த பகுதிக்கு தனியாக வந்து தங்களது வாழ்க்கைச் சூழலுக்கு அந்த இடம் ஏற்றதா? என்பதை உறுதி செய்து விட்டு திரும்பிச் சென்ற பின்னர் அடுத்த முறை வரும்போது கூட்டத்தோடு வந்து செல்லும் இயல்புடையவையாகும்.

தற்போது நீலகிரியில் காணப்பட்ட சினேரியஸ் கழுகு இங்கு வருவது இதுவே முதன்முறை எனலாம். இதற்கு முன்னர் இந்த வகை கழுகுகள் கடந்த 2008 - ஆம் ஆண்டு கோடியக்கரையிலும், 1987 - ஆம் ஆண்டு புதுவையிலும் மட்டும்தான் பார்த்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உணவு, வாழ்விடச் சுருக்கம், பொதுமக்களால் இடையூறு மற்றும் இனப்பெருக்கம் ஆகியவையே கழுகுகள் இடம் மாறி செல்வதற்கான காரணங்களாகும். தற்போதைய சூழலில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமும், உணவுத் தட்டுப்பாடும்கூட இவை வந்து செல்வதற்கான காரணமாக இருக்கலாம்'' என்றார்.

ஓரிடத்தில் கழுகுகள் அதிக அளவில் உள்ளது என்றால், அங்கு அவற்றிற்கான உணவுச் சங்கிலி சிறப்பாக இருப்பதாகவே பொருள் கொள்ளலாம். புலிகள் அதிக அளவில் இருக்க வேண்டுமெனில் அவற்றின் உணவுத் தேவையைத் தீர்க்கும் வகையில் மான்களும் அதிக அளவில் இருக்க வேண்டும். அதன் எச்சங்கள்தாம் இக்கழுகுகளுக்கு உணவாகும். அதனால் அத்தகைய கணக்கின்படி பிணந்தின்னிக் கழுகுகள் நீலகிரி வனப்பகுதிகளுக்கு அதிக அளவில் வந்து செல்வது இப்பகுதியில் புலிகளின் எண்ணிக்கையும் திடகாத்திரமாகவே இருப்பதாகக் கொள்ளலாம். 
- ஏ.பேட்ரிக்

 

http://www.dinamani.com/lifestyle/travellogue/2017/mar/09/நீலகிரிக்கு-ராமாயண-ஜடாயு-மாதிரி-பெரிய-கழுகுகள்-வந்திருக்கிறதாமே-சம்மர்-விசிட்-அங்க-போகலாமா-2663055.html

 

  • தொடங்கியவர்

 

 

 

 

 

  • 3 months later...
  • தொடங்கியவர்

தெரிந்த பெயர், தெரியாத விவரம்: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா-வண்டலூர் 

 

 
k7

* சென்னை மட்டுமல்லாது பக்கத்து மாவட்டங்களில் இருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் விடுமுறை நாள்களில் குடும்பத்துடன் விரும்பி செல்லும் இடம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவாகும்.  சுமார் கால் நூற்றாண்டுகளாக இப்போதும், எப்போதும் வண்டலூர் உயிரியல் பூங்கா தொடர்ந்து பரவசமூட்டும் இடமாக இருந்து வருகிறது.  இந்தப் பூங்கா குறித்து அறிந்தும் அறியாத சில விஷயங்களை பார்க்கலாம்.

* சென்னையின் தெற்கில் 30 கி.மீ. தொலைவில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. 

* 1855-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், மியூசியம் இயக்குநராக இருந்த எட்வர்ட் கிரீன் பால்ஃபர் என்பவரின் முயற்சியால் சுமார் 300 மிருகங்களுடன்  "மெட்ராஸ் மிருகக் காட்சி சாலை' என்ற பெயரில் விலங்கியல் பூங்காவை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மூர் மார்க்கெட்டில் அமைத்தார்கள். 

* ஏறத்தாழ 116-ஏக்கர் பரப்பளவில் PEOPLE’S PARK என்று அழைக்கப்பட்ட பகுதியில் இந்த ‘MADRAS ZOO’ இயங்கி வந்தது.  பல கருப்பு-வெள்ளை திரைப்படங்களின் பாடல் காட்சிகள் இங்கு படம்பிடிக்கப்பட்டுள்ளன. இதன் அருகில் "மை லேடீஸ் கார்டன்' என்ற பூங்காவும் இருந்தது.  

* 1942-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போரின்போது குண்டு வீசப்பட்டதில் இங்கிருந்த பல விலங்குகள் இறந்தன. 1944-இல் பூங்கா புதுப்பிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சிக்காக மிருகக் காட்சி சாலை பற்றிய ஆவணப் படத்தை திரைப்பட இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் எடுத்துக் கொடுத்துள்ளார். 

* சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் விரிவாக்கம் காரணமாக,  இந்தப் பூங்கா வண்டலூருக்கு மாற்றப்பட்டு, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் "அண்ணா உயிரியல் பூங்கா' என்ற பெயரில் 1985-ஆம் ஆண்டு ஜூலை 24 -ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.

* இந்தியாவில் உள்ள நவீன முறையில் அறிவியல் அடிப்படையில் பராமரிக்கப்படும் மிகச்சில உயிரியல் பூங்காக்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா முதன்மையாக சிறந்து விளங்குகிறது.

* வண்டலூர் பூங்கா, தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்கா என்ற சிறப்பு பெற்றது. 1,265 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில், 170 வகையிலான 2200 விலங்குகள் பராமரிக்கப்படுகின்றன.

* பாலூட்டிகள் 430, பறவைகள் 534, ஊர்வன 351, நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை 72, மீன்வகைகள் 265 என்ற எண்ணிக்கையில் உள்ளன.

* சிங்கம், புலி, சிறுகத்தை, கருஞ்சிறுத்தை,கரடி, நீர் யானை, வெள்ளைப் புலிகள், சிங்கவால் குரங்கு, நீள வால் குரங்கு, மனிதக்குரங்கு, புள்ளி மான், இமாலயக் கறுப்புக் கரடி, செந்நாய், வரிக்குதிரை, ஒட்டகச்சிவிங்கி, சாம்பல் நாரை, கரண்டிவாயன், வாலற்ற பெருங்குரங்கு ஆகிய விலங்குகளைப் பார்க்கத் தவறி விடவே கூடாது.

* அது மட்டுமல்ல, சிங்க வனப் பயணம், மான் பயணம், வண்ணத்துப்பூச்சி வீடு, ஊர்வன வீடு ஆகியவை மிகவும் மகிழ்ச்சியூட்டக் கூடியவை. 

* 602 ஹெக்டேர் பரப்பில் பிரம்மாண்டமாக விரிந்திருக்கும் இந்தப் பூங்காவை சைக்கிளில் பயணம் செய்தும் பார்க்கலாம். இதற்காகக் சைக்கிள்கள்கூட வாடகைக்குக் கிடைக்கும்.

* தினமும் 5,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் 10,000க்கும் மேற்பட்டோர் வருவதுண்டு. 

* பரந்து விரிந்திருக்கும் இந்தப் பூங்காவை நடந்து சென்று பார்க்க இயலாதவர்கள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு பேட்டரி கார் வசதியும் உண்டு.

* கோடைக் காலங்களில் பூங்காவில் இருக்கும் யானைகளுக்கு குளு குளு ஷவர் குளியல் கொடுக்கப்படும். அதனை பார்ப்பதற்காகவே மே, ஜூன் மாதங்களில் ஏராளமான குழந்தைகள் பூங்காவுக்கு வருகை தருவார்கள்.

* அண்ணா உயிரியல் பூங்கா காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பார்வையாளர்களுக்கு திறந்திருக்கும். வாரந்தோறும் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை பூங்காவுக்கு விடுமுறை.

* நுழைவுக் கட்டணமாக சிறுவர் சிறுமியர்களுக்கு ரூ.20, பெரியவர்களுக்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

* ஆசைப்பட்ட உணவு வகைகளை வாங்கிச் சாப்பிட இங்கே உணவகமும் சிற்றுண்டி சாலைகளும் உள்ளன. கொண்டு செல்லும் உணவுகளை அமர்ந்து சாப்பிட வசதிகளும் உண்டு. 

 

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2017/sep/04/தெரிந்த-பெயர்-தெரியாத-விவரம்-அறிஞர்-அண்ணா-உயிரியல்-பூங்கா-வண்டலூர்-2767240.html

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.