Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 250-ஐ தாண்டியது

Featured Replies

இயற்கையின் கோரம் : பலியானோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரிப்பு 

 

 

நாட்டில் நிலவி வரும் அதிக மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையடுத்து நிலவிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளதுடன் 97 பேர் வரையில் காணாமல்போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

126.jpg

மேலும் குறித்த அசாதாரண காலநிலை காரணமாக சுமார் 109 ஆயிரத்து 773 குடுமபங்களை சேர்ந்த 4 இலட்சத்து 23 ஆயிரத்து 68 பேர்வரையில் பாதிப்புற்றுள்ளதாகவும், 49 பேர்வரையில் காயமுற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

DAzfZLdV0AAguDm.jpg

DAvsH_8UwAA3jOL.jpg

தென்மேற்கு பருவக்காற்று மழையின் சீற்றத்தினால் இதுவரை 14 மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த இயற்க்கையின் சீற்றத்தில் காணாமல் போன நபர்களை மீட்கும் நடவடிக்கையில் தொடர்ந்தும் பொலிஸார், முப்படையினர் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இலங்கையில் கடந்த 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அனர்த்தமாக தற்போதைய அனர்த்தம் குறிப்பிடப்பட்டுள்ளது.

DAvsIrZVwAAB7CK.jpgDAvsKIyVYAEUJMY.jpg

இந்நிலையில் எதிர்வரும் இரு தினங்களில் அதிகளவான மழைவீழ்ச்சி இருக்குமென வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20425

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
146 பேர் பலி - 52 பேர் காயம் - 112 பேரைக் காணவில்லை
7

image_d5d278becf.jpgநாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 146ஆக அதிகரித்துள்ளது என, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இன்று (28) மதியம் அறிவித்துள்ளது.

இந்த அனர்த்தங்களின் காரணமாகக் காயமடைந்தோரின் எண்ணிக்கை 52ஆக அதிகரித்துள்ளது என அறிவித்துள்ள அந்நிலையம், 112 பேரை, இன்னும் காணவில்லை என்றும் அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 51 பேர் இரத்தினபுரியிலும் 43 பேர் களுத்துறையிலும் உயிரிழந்துள்ளனர். மாத்தறையில் 14 பேர், காலியில் 8 பேர், ஹம்பாந்தோட்டையில் 5 பேர், கம்பஹாவில் 3 பேர், கேகாலையில் 2 பேர் என, உயிரிழந்தோரின் எண்ணிக்கை காணப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் 71 பேர் இரத்தினபுரியிலும் 43 பேர் களுத்துறையிலும் உயிரிழந்துள்ளனர். மாத்தறையில் 14 பேர், காலியில் 8 பேர், ஹம்பாந்தோட்டையில் 5 பேர், கம்பஹாவில் 3 பேர், கேகாலையில் 2 பேர் என, உயிரிழந்தோரின் எண்ணிக்கை காணப்படுகிறது.

இந்த அனர்த்தங்கள் காரணமாக, 114,124 குடும்பங்களைச் சேர்ந்த 442,299  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ள அந்நிலையம், 230 வீடுகள், முழுமையாகச் சேதமடைந்துள்ளன எனவும் 1,701 வீடுகள், பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அறிவித்துள்ளது.

இந்த அனர்த்தங்கள் காரணமாக, 109,773 குடும்பங்களைச் சேர்ந்த 423,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ள அந்நிலையம், 203 வீடுகள், முழுமையாகச் சேதமடைந்துள்ளன எனவும் 1,627 வீடுகள், பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அறிவித்துள்ளது.

  •  

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/146-பேர்-பலி---52-பேர்-காயம்---112-பேரைக்-காணவில்லை/150-197431

  • தொடங்கியவர்

இயற்கை சீற்றத்தால் இலங்கையில் 2 லட்சம் பேர் பாதிப்பு (புகைப்படத் தொகுப்பு)

 
 

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை122-ஆக அதிகரித்துள்ள நிலையில் மீட்புப் பணிகளும், நிவாரண பணிகளும் நடைபெற்று வருகின்றன. இன்னும் பல பகுதிகளில் வெள்ளம் வடிந்தபாடில்லை. அது குறித்த புகைப்படத் தொகுப்பு.

இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 99 ஆக குறைந்துள்ளது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகாணாமல் போனவர்களின் எண்ணிக்கை 99 ஆக குறைந்துள்ளது. களுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மற்றும் கேகாலை மற்றும் கம்பகா ஆகிய மாவட்டங்களிலே மரணங்களும் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களும் பதிவாகியிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகளுத்துறை , இரத்தினபுரி , மாத்தறை மற்றும் கேகாலை மற்றும் கம்பகா ஆகிய மாவட்டங்களிலே மரணங்களும் காணாமல் போனவர்கள் பற்றிய விபரங்களும் பதிவாகியிருப்பதாக அவர் தெரிவிக்கின்றார். சுமார் 52 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசுமார் 52 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு பேரிடர் முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டம் -38 பேர் கம்பகா மாவட்டம் - 02 பேர் என 40 மரணங்களும் பதிவாகியுள்ளன.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டம் -38 பேர் கம்பகா மாவட்டம் - 02 பேர் என 40 மரணங்களும் பதிவாகியுள்ளன. களுத்துறை மாவட்டத்தில் 80 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகளுத்துறை மாவட்டத்தில் 80 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் ரத்தினபுரி மாவட்டம் - 49 பேர் கேகாலை மாவட்டம் - 02 பேர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்புகள் இடம் பெற்றுள்ளனபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசப்ரகமுவ மாகாணத்தில் ரத்தினபுரி மாவட்டம் - 49 பேர் கேகாலை மாவட்டம் - 02 பேர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன கேகாலை மாவட்டத்தில் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகேகாலை மாவட்டத்தில் 2 பேர் காணாமல் போயுள்ளனர். தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 17 என அறிவிக்கப்பட்டுள்ளது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionதொடர்ந்து காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 17 என அறிவிக்கப்பட்டுள்ளது. மழையுடன் கூடிய கால நிலை நீடிக்குமானால் கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலுள்ள சில பிரதேசங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் அறிவித்துள்ளது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமழையுடன் கூடிய கால நிலை நீடிக்குமானால் கம்பகா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலுள்ள சில பிரதேசங்களில் நிலச்சரிவு அபாயம் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் அவ் வழியாக போக்குவரத்து செய்வோர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅந்த பகுதிகளிலுள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் அவ்வழியாக போக்குவரத்து செய்வோர் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலியானவர்களை எடுத்து செல்வதற்காக தயார் செய்யப்பட்டுள்ள சவப்பெட்டிகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபலியானவர்களை எடுத்து செல்வதற்காக தயார் செய்யப்பட்டுள்ள சவப்பெட்டிகள் மீட்புப்பணிகளில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமீட்புப்பணிகளில் ராணுவம் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. நிவாரண பொருட்களுக்காக காத்திருக்கும் பொதுமக்கள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநிவாரண பொருட்களுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் இந்திய நிவாராண பொருட்களுடன் அந் நாட்டிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை புறப்பட்ட கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்திய நிவாராண பொருட்களுடன் அந்நாட்டிலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்ட கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. நாளை ஞாயிற்றுக்கிழமை மற்றுமோர் நிவாரண கப்பல் வந்தடையவிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஞாயிற்றுக்கிழமை மற்றுமோர் நிவாரண கப்பல் வந்தடையவிருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.bbc.com/tamil/sri-lanka-40071605

  • தொடங்கியவர்
151 பேர் பலி - 95 பேர் காயம் - 111 பேரைக் காணவில்லை
 

image_d5d278becf.jpgநாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 151ஆக அதிகரித்துள்ளது என, அனர்த்த முகாமைத்துவ நிலையம், இன்று (28) மாலை அறிவித்துள்ளது.

இந்த அனர்த்தங்களின் காரணமாகக் காயமடைந்தோரின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்துள்ளது என அறிவித்துள்ள அந்நிலையம், 111 பேரை, இன்னும் காணவில்லை என்றும் அறிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 71 பேர் இரத்தினபுரியிலும் 47 பேர் களுத்துறையிலும் உயிரிழந்துள்ளனர். மாத்தறையில் 14 பேர், காலியில் 9 பேர், ஹம்பாந்தோட்டையில் 5 பேர், கம்பஹாவில் 3 பேர், கேகாலையில் 2 பேர் என, உயிரிழந்தோரின் எண்ணிக்கை காணப்படுகிறது.

இந்த அனர்த்தங்கள் காரணமாக, 112,565 குடும்பங்களைச் சேர்ந்த 4438,295  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அறிவித்துள்ள அந்நிலையம், 250 வீடுகள், முழுமையாகச் சேதமடைந்துள்ளன எனவும் 1,785 வீடுகள், பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் அறிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/151-பேர்-பலி---95-பேர்-காயம்---111-பேரைக்-காணவில்லை/150-197431

  • தொடங்கியவர்

இலங்கை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 250-ஐ தாண்டியது

 
 

இலங்கையில் மூன்று மாகாணங்களில் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்த மற்றும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 250-ஐ தாண்டியதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வெள்ளம்: பலி எண்ணிக்கை 250 ஆக உயர்வு

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காணாமல் போனவர்களில் சிலர் சடலங்களாக மீட்கப்பட்டு வருவதையடுத்தே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படுவதாக கூறப்படுகின்றது.

மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால் பாதிக்கப்பட்ட ஏழு மாவட்டங்களிலும், இதுவரையில் 151 பலியாகியும், 111 பேர் காணாமல் போனதாகவும் தகவல்கள் பதிவாகியிருப்பதாக கூறுகின்றார் அரசு பேரிடர் முகாமைத்துவ மையத்தின் உதவி இயக்குநர் பிரதீப் கொடிப்பிலி.

கம்பகா மற்றும் களுத்துறை மாவட்டங்களை கொண்ட களுத்துறை மாவட்டத்தில் 47 மரணங்கள் உள்ளிட்ட 50 மரணங்களும் 62 பேர் காணாமல் போயுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் மனோ கணேசன் , பழனி திகாம்பரம் நேரில் பார்வையிட்டனர் Image captionபாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் மனோ கணேசன் , பழனி திகாம்பரம் நேரில் பார்வையிட்டனர்

48 சத வீதமான மரணங்கள் சப்ரகமுவ மாகாணத்தில் பதிவாகியுள்ளன. அதாவது இரத்தினபுரி மாவட்டத்தில் 71 பேர் பலியாகியுள்ளனர்; 20 பேர் காணாமல் போயுள்ளனர் கேகாலை மாவட்டத்தில் 2 பேர் உயிழந்தும் மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.

மாத்தறை , காலி , மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாணத்தில் 28 பேர் பலியாகியுள்ளனர்; 27 பேர் காணாமல் போயுள்ளதாக அரசு போிடர் முகாமைத்துவ மையம் இறுதியாக வெளியிட்டுள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனதாக கூறப்படும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது நிலச்சரிவுகளில் புதையுண்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அவர்களை தேடும் பணிகள் 4வது நாளாகவும் தொடர்கின்றன.

http://www.bbc.com/tamil/sri-lanka-40078781

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.