Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. முறைமையில் உள்ள வெடிப்புகளை அம்பலப்படுத்துகிறது ஹெய்ட்டியில் இலங்கைப் 'பாலியல் கும்பல்'

Featured Replies

தனது தாயாரின் நிலத்திலுள்ள தோட்டத்தில் பிளாஸ்ரிக் கதிரையொன்றில் ஜெனரல் அமர்ந்திருந்தார். இலங்கையைச் சேர்ந்த அமைதிகாக்கும் படைவீரர் ஒருவர் ஹெய்ட்டியைச் சேர்ந்த பதின்ம பராயத்தர் ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக அவர் கதைத்தார். 


அங்கு வல்லுறவு இடம்பெறவில்லையென மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ் வலியுறுத்திக் கூறினார். 2013 சம்பவம் தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஹெய்ட்டிக்கு அவர் அனுப்பப்பட்டிருந்தார். அந்தப் பணிக்கு அவர் சில சமயங்களில் சிறப்பான தெரிவாக அமைந்திருக்க முடியாது. உள்நாட்டு யுத்தத்தின் போது அவரின் சொந்த நாட்டில் இடம்பெற்ற அட்டூழியங்களுக்காக டயஸ் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.


டயஸ் குற்றஞ்சாட்டியவருடன் கதைத்திருக்கவில்லை. அத்துடன் அந்தப் பெண்ணைப் பரிசோதனை செய்த மருத்துவ அதிகாரிகளையும் அவர் நேர்முகம் கண்டிருக்கவில்லை என்று அசோஸியேட்டட் பிரஸ்ஸுக்கு அவர் கூறியுள்ளார். ஆனால், அவரின் படைவீரர் தொடர்பாக அவர் தெளிவாக இருந்தார். அப்படைவீரர் இலங்கை இராணுவத்தில் இருந்துள்ளார். 


பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு இலங்கைப் படைவீரர்கள் மீது  தெரிவிக்கப்படுவது இது முதல்தடவையல்ல. 2007 இல் ஹெய்ட்டி பிள்ளைகள் குழுவொன்று 134 இலங்கை அமைதிகாக்கும் பணியாளர்களை அடையாளம் கண்டிருந்தது. 3 வருடங்களாக சிறுவர் பாலியலில் கும்பலாக ஈடுபட்டிருந்ததாக அவர்கள் அடையாளம் காணப்பட்டதாக கடந்த ஏப்ரலில் ஏ.பி. செய்திச் சேவை தெரிவித்திருந்தது.

அந்தச் சம்பவத்தில் இலங்கை இராணுவம் 114 அமைதிகாக்கும் பணியாளர்களை திருப்பியெடுத்திருந்தது. ஆனால் எவரும் ஒருபோதும் சிறைவைக்கப்படவில்லை. உண்மையில் பாலியல் தாக்குதல் அல்லது பாலியல் தவறான நடத்தை என்பவற்றிற்காக எந்தவொரு படைவீரரையும் இலங்கை ஒருபோதும் விசாரணைக்குட்படுத்தியிருக்கவில்லை. அதேவேளை, அவர்கள் வெளிநாடுகளில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர் என்பதை ஏ.பி. செய்திச் சேவை கண்டறிந்துள்ளது.


வெளிநாடுகளில் இலங்கையின் படைவீரர்கள் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டானது தண்டனை விலக்கீட்டு சிறப்பு கலாசாரத்திலிருந்தும் வலுவடைந்ததொன்றாகும். இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் போது இந்தக் கலாசாரம் மேலெழுந்திருந்தது. அமைதிகாக்கும் பணிகளிலும் அது ஊடுருவியுள்ளது.

நீண்ட கால உள்நாட்டு யுத்தம் தொடர்பாக சுயாதீன விசாரணைகளுக்கான அழைப்புக்களை அரசாங்கம் உறுதியாக நிராகரித்துள்ளது. வல்லுறவு முகாம்கள், சித்திரவதைகள், பொதுமக்கள் கொலைகள் மற்றும் ஏனைய போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக துருப்புகள் மீது பரந்தளவிலான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான அமைதிகாக்கும் பணியாளர்களை ஐ.நா. பணியில் ஈடுபடுத்தியுள்ளது. உள்நாட்டில் போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக தீர்வு காணப்படாமல் இருக்கின்றபோதிலும், இவர்களைப் பணிக்கமர்த்தியுள்ளது. உலகளாவிய ரீதியில் இந்த முறைமை திரும்பத் திரும்பக் காணப்படுகின்றது.
படையினர் கட்டுப்பாட்டினால் பல நாடுகளில் இருந்து ஐ.நா. ஆட்சேர்ப்பு மேற்கொள்கின்றது.

மனித உரிமைகள் பதிவுகளில் தாழ்ந்த மட்டத்திலிருக்கும் நாடுகளிலிருந்தும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுகின்றது. அமைதிகாக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக இந்நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொண்டிருக்கின்றது. இந்த வருடத்திற்கு இப்பணிக்காக சுமார் 8 பில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டிருக்கின்றது.


கடந்த மாதம் ஏ.பி. செய்திச் சேவை விசாரணை ஒன்றை மேற்கொண்டிருந்தது. கடந்த மார்ச் வரையான கடந்த 12 ஆண்டுகளில் பாலியல் துஷ்பிரயோகம் அல்லது சுரண்டல் தொடர்பான 2000 குற்றச்சாட்டுகள் கணிப்பிடப்பட்டுள்ளன. ஐ.நா. அமைதிகாக்கும் பணியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எதிராக இக் குற்றச்சாட்டுக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அந்த மொத்தத் தொகை மாற்றமடையக்கூடும். ஐ.நா. அதிகாரிகள் தமது பதிவுகளை இற்றைப்படுத்தும்போது இந்த மாற்றம் இடம்பெற முடியும். 


கொங்கோ படையினரும் போர்க்குற்றச்சாட்டுகளில் தமது நீண்டகால யுத்தத்தின் போது ஈடுபட்டதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. மத்திய ஆபிரிக்கக் குடியரசில் அமைதிகாக்கும் பணியாளர்களாக செயற்பட்ட போது, பாலியல் துஷ்பிரயோக சுரண்டலில் குறைந்தது 17 பேர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

அதேவேளை, கொங்கோவின் நிலைவரம் மிகவும் சிக்கலானதாக இருக்கின்றது. தனது சொந்த மோதலை சமாளிப்பதற்கு ஐ.நா. அமைதிகாக்கும் படையினரை அந்த நாடு ஈடுபடுத்தியிருக்கின்றது. அதேவேளை, ஏனைய நாடுகளுக்கும் தனது அதிகாரிகளை அமைதிகாக்கும் பணிக்காக அனுப்பிக்கொண்டிருக்கின்றது.


இந்த விடயத்தை ஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் புரிந்துகொண்டிருக்கின்றார். ருவாண்டாவில் மோதல் உக்கிரமடைந்திருந்த போது அமைதிகாக்கும் படையினரை கண்டுகொள்வதற்கு அவர் பெரும் திண்டாட்டத்தை எதிர்கொண்டிருந்தார். 8 இலட்சம் மக்கள் வரை அந்தநாட்டில் கொல்லப்பட்டிருந்தனர்.

சில சமயங்களில் ஐ.நா.விற்கு படைகள் தேவைப்படுகின்றன. ஆனால், அவர்கள் படையினரை ஏற்றுக்கொள்ளும்போது மிகவும் விரக்தியான நிலைமை ஏற்படுகின்றது. வேறு தெரிவைக் கொண்டிருந்தால் சாதாரணமாக இவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று இந்த மாத முற்பகுதியில் ஏ.பி. செய்திச் சேவைக்கு அனான் கூறியிருந்தார்.


வல்லுறவு முகாம்கள்


ஹெய்ட்டி பாலியல் கும்பல் தொடர்பான விவகாரத்தில், சாப்பாட்டுக்காக தாங்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டதாக ஐ.நா. விசாரணையாளர்களிடம் 9 பிள்ளைகள் கூறியுள்ளனர். தாங்கள் ஒரு படைவீரரிடமிருந்து மற்ற படைவீரருக்கு மாற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். தனது 12 வயதில் அமைதிகாக்கும் பணியாளர் ஒருவருடன் தான் முதற்தடவையாக பாலியல் உறவு கொண்டதாகவும் அச்சமயம் தான் மார்பகங்களைக் கூட கொண்டிருக்கவில்லையெனவும் ஒரு சிறுமி கூறியிருந்தார்.

3 வருடங்களாக இடம்பெற்ற இந்த விடயத்தில் மற்றொரு பிள்ளை கூறுகையில், 100 க்கும் மேற்பட்ட இலங்கை அமைதிகாக்கும் படையினருடன் தான் பாலியல் உறவு கொண்டிருந்ததாக அந்தப் பிள்ளை கூறியுள்ளது.  நாளொன்றுக்கு சராசரி 4 பேருடன் உறவுகொண்டிருந்ததாக அந்தப் பிள்ளை தெரிவித்திருக்கிறது.


விடுதலைப் புலிகள் என்று அறியப்பட்ட தமிழ்க் கிளர்ச்சிக் குழுவுக்கு எதிராக தலைமுறை காலத்துக்கு நீண்டு சென்ற உள்நாட்டு யுத்தத்தை இலங்கை அமைதிகாக்கும் பணியாளர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன. இலங்கையின் வட, கிழக்குப் பகுதியில் சுதந்திரத் தாயகத்துக்காக விடுதலைப் புலிகள் அமைப்பு போராடியது. யுத்தம் முடிவுக்கு வந்து 8 ஆண்டுகளின் பின்னரும் மக்கள் முகாம்களில் பெற்றுக்கொண்ட திகில் நிறைந்த பதிவுகளை முன்வந்து தெரிவிப்பது அதிகரித்திருக்கின்றது.

அங்கு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டதாகவும், கும்பலினால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சாதாரண உடையில் முகமூடி தரித்தவர்களினால் தான் கடத்தப்பட்டதாகவும் கண்களைக் கட்டி கொண்டுசெல்லப்பட்டதாகவும் அது இராணுவ முகாமென தான் நினைத்ததாகவும் சாட்சியமொன்றில் தமிழ்ப் பெண் ஒருவர் கூறியிருந்தார்.


"அவர்கள் எனது ஆடைகளை அகற்றினர். தரையில் மெத்தையில் என்னை பலாத்காரமாக விழுத்தினர். எனது இரு கைகளையும் கால்களையும் நைலோன் கயிற்றினால் கட்டினர்' என்று அவர் கூறியுள்ளார். 2 மாதங்கள் அவர் வைக்கப்பட்டிருந்ததாகவும் திரும்பத் திரும்ப வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்திருக்கிறார். தன்னைப்போல் பாதிக்கப்பட்ட ஏனையோர் தொடர்பாகவும் அவர் விபரித்திருக்கிறார். தான் இருந்த அறைக்குள் 4 ஏனைய சிறுமிகளும் கொண்டுவரப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.


சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்ட அமைப்பிற்கு அவர் இதனைத் தெரிவித்திருக்கிறார். கடந்த மார்ச்சில் அந்த அமைப்பு 57 பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தது. 43 பேர் வல்லுறவு அல்லது சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆவணப்படுத்தியதாக அந்த 57 பக்க அறிக்கை காணப்பட்டது. சில சம்பவங்கள் டிசம்பரில் இடம்பெற்றுள்ளன. "அவர் சுற்றுமுற்றும் பார்த்து என்னைத் தெரிவு செய்தார். மற்றொரு அறைக்குக் கொண்டுசென்று என்னை வல்லுறவுக்குட்படுத்தினார்' என்று அப்பெண் தெரிவித்திருந்தார். 


படைவீரர்களின் புகைப்படங்களில் அவரை அவர் அடையாளப்படுத்தியுள்ளார். அந்த மனிதர் அதிகாரியெனவும் அவர் ஐ.நா. அமைதிகாக்கும் பணியாளராக சென்றிருந்தமையையும் ஏ.பி. செய்திச் சேவை கண்டறிந்துள்ளது. 


பழிவாங்கப்படுவதற்கு அச்சம் கொண்ட அந்தப்பெண் தன்னை அடையாளம் காட்டவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அறிக்கை தொடர்பாக இலங்கை இராணுவமும் அரசாங்கமும் கருத்துக் கூற மறுத்துள்ளன. பரந்தளவிலான சித்திரவதை அல்லது துஷ்பிரயோகத்தில் தனது படைகள் சம்பந்தப்பட்டிருந்ததை இலங்கை கிரமமாக மறுத்துவருகின்றது. 


ஏ.பி. செய்திச் சேவைக்கு அளித்த பேட்டிகளில் தமது புதிய அமைதிகாக்கும் பணி மாலியில் இடம்பெற்றுவருவதாகவும் தமது இராணுவம் சிறப்பாக செயற்படுகின்றது எனவும் இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 


"இலங்கை இந்தப் பணியில் ஈடுபடுவதற்கு அழைப்பு விடுக்கப்படுகின்றதென்றால் சகலரினதும் சௌகரியமான தன்மையுடனான வழிமுறையிலேயே விவகாரங்கள் யாவும் கையாளப்படுகின்றன என்று அர்த்தப்படுகிறது' என்று பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.


ஐ.நா. இதனை எவ்வாறு பார்க்கின்றது என்பது சரியாகத் தென்படவில்லை. உலகில் ஐ.நா. பணியில் ஈடுபடும் மிகவும் அபாயகரமான இடமாக மாலி விளங்குகிறது. அங்கு வாகன அணித்தொடர்களைப் பாதுகாப்பதற்கு அமைதிகாக்கும் பணியாளர்களை ஐ.நா. தேடிக்கொண்டிருந்தது என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அல்ஹுசைன் தெரிவித்திருக்கின்றார். இந்நிலையில், கிடைத்த படைவீரர்கள் இலங்கையர்களாக மட்டுமே இருந்தனர் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.


1993 இலிருந்து அமைதிகாக்கும் பணிக்காக அதிகாரிகளை வழங்குவதில், சிறப்பாக பயிற்சி பெற்ற படையினரையும் மனித உரிமைகள் பதிவுகளையும் கொண்டிருக்கும் நாடுகள் தயக்கத்துடன் இருந்துவருகின்றன. சோமாலியாவில் 18 அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த மரணங்கள் 1994 இல் ருவாண்டா இனப்படுகொலைக்கு முன்பாக அமைதிகாக்கும் படையினரைக் கண்டுகொள்வதில் ஐ.நா. திண்டாடியது என்பதற்கான முக்கியமான காரணமாக அமைந்திருந்தன. 


இதேவேளை, போர்க்குற்றச்சாட்டுகள் பற்றி அதிகளவுக்கு வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது பற்றி இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்த பல அதிகாரிகளில் ரொபேர்ட் பிளேக்கும் ஒருவராவார். அவர் 2006 2009 வரை இலங்கையில் அமெரிக்கத் தூதுவராகப் பணிபுரிந்தவர். 


"அமைதிகாக்கும் பணியாளர் என்ற முறையில் நீங்கள் அமைதியைப் பேண வேண்டும். அவர்களே அட்டூழியக் குற்றங்களைக் கொண்டிருந்தால் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் பொருத்தமானவர்களாக இல்லையென்பது தெளிவான விடய'மென்று கடந்த மாதம் ஏ.பி. செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் பிளேக் தெரிவித்திருந்தார். 


சிறுவர் பாலியல் கும்பல் என்றால் என்ன?


இலங்கைப் படைவீரர்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் நேர்மையற்றவையென ஜெனரல் டயஸ் விபரித்திருக்கிறார். ஒரு சில படைவீரர்களே விசாரணை செய்யப்பட்டிருக்கின்றனர் என அவர் கூறியுள்ளார் என்பது இங்கு விடயமாகும். அந்த சிலரும் எதனையும் தவறாக செய்திருக்கவில்லை என்பதை அந்த விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

‘குற்றச்சாட்டு ஒன்று குறித்து நாங்கள் கதைக்க முடியாது. உண்மைகள் இருந்தால் அவற்றைப் பற்றி நாங்கள் கதைப்போம்‘ என்று ஏ.பி. செய்திச் சேவைக்கு அளித்த பேட்டியில் டயஸ் தெரிவித்திருக்கிறார். ‘படைவீரர் ஒருவர் பெண் ஒருவரை வல்லுறவுக்குட்படுத்தியிருந்தால் அவர் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். அது தொடர்பாக சந்தேகமில்லை. ஆனால், ஆதாரம் எங்கேயுள்ளது? குற்றச்சாட்டுகள் வெறும் குற்றச்சாட்டுகளாவே உள்ளன‘ என்று அவர் தெரிவித்திருக்கின்றார். 


இராணுவப் பிரிவு ஒன்றுக்கு டயஸ் தலைமைதாங்கியவர். அப்படைப்பிரிவின் துருப்புகள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தேவாலயம், வைத்தியசாலை மற்றும் மனிதாபிமான நிலைகள் மீது 2009 இல் குண்டுவீச்சு நடத்தியதாகவும் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற உக்கிரமான இறுதி மாதங்களின் போது இவை இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. குற்றச்சாட்டுகளை அவர் அப்பட்டமாக நிராகரித்துள்ளார். 


‘தனது 57 ஆவது படையணி, படையினர் மீது கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்த பகுதிகளை மட்டுமே இலக்கு வைத்திருந்தது‘ என்று அவர் தெரிவித்திருக்கின்றார். ஐரோப்பாவிலுள்ள இரு மனித உரிமை குழுக்களினால் டயஸுக்கு எதிராக ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்த விடயம் 2011 இல் குற்றவியல் விசாரணை ஒன்றுக்கான அச்சுறுத்தலை விடுப்பதற்கு இட்டுச்சென்றிருந்தது. அச்சமயம் ஜேர்மனிக்கும் சுவிற்ஸர்லாந்துக்கும் வத்திக்கானுக்கும் பிரதித் தூதுவராக டயஸ் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

விரைவில் அவர் இலங்கைக்கு திரும்ப அழைக்கப்பட்டிருந்தார். இரு வருடங்களின் பின்னர் 2013 இலங்கை அமைதிகாக்கும் படைவீரர் ஒருவர் தொடர்பான வல்லுறவுக் குற்றச்சாட்டை விசாரணை செய்ய அவர் அனுப்பப்பட்டிருந்தார். 


‘போர்க்குற்றவாளி சந்தேக நபர் ஒருவர், விசாரணையை நடத்துவதற்கு தவறான ஆளாவார். அமைதிகாக்கும் படையினாரல் இழைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு அவர் தவறான நபர்‘ என்று இந்த முறைப்பாட்டை ஆரம்பிப்பதற்கு உதவியளித்த பேர்லினைத் தளமாகக் கொண்ட குழுவான அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நிலையத்தைச் சேர்ந்த அன்ரியாஸ் சுல்லர் என்பவர் கூறியுள்ளார்.


2015 இல் இராணுவத்தின் பிரதானியாக இலங்கை அரசாங்கம் டயஸை பதவி உயர்த்தியிருந்தது. அப்பதவி நாட்டின் இராணுவப் பதவியில் 2 ஆவது உயர்ந்த பதவியாகும். சில மாதங்களின் பின்னர் அவர் ஓய்வுபெற்றார். இப்போது தனியார் பாதுகாப்பு வர்த்தகத்தை அவர் நிர்வகிக்கின்றார். 2007 இல் ஹெய்ட்டி சிறுவர் பாலியல் கும்பல் தொடர்பான விசாரணையில் டயஸ் ஈடுபட்டிருக்கவில்லை. அச்சமயம் ஐ.நா. மற்றும் இலங்கை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட 9 பிள்ளைகளிடம் நேர்முகம் கண்டிருந்தனர்.


பாதிக்கப்பட்ட அந்தப் பிள்ளைகள் 134 படைவீரர்களின் புகைப்படங்களை அடையாளம் கண்டிருந்தனர். தங்களை துஷ்பிரயோகம் செய்தவர்களாக அவர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். ஆனால், ஐ.நா. வின் விசாரணை அறிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டவற்றையும் தனது சொந்த அரசாங்கத்தினால் கண்டுபிடிக்கப்பட்டவற்றையும் டயஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

பதிலாக ‘தமிழ் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்புபட்ட வெளியார் தரப்பு ஒன்று இலங்கையின் புகழுக்குப் பாதிப்பை ஏற்படுத்த சதி செய்யும் சாத்தியம் காணப்படுகின்றது‘ என்று அவர் பரிந்துரைத்திருக்கின்றார்.‘எனது அறிவுக்குட்படுத்தப்பட்டவரை எந்தவொரு சம்பவமும் பாரதூரமானதாக இல்லை. எந்தவொரு படைவீரரும் ஒருபோதும் விசாரிக்கப்படவில்லை. அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக எவரையும் குற்றவாளியாக நாங்கள் கண்டிருக்கவில்லை‘ என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.


அறிக்கையைத் தொடர்ந்து 114 படையினரை இலங்கை திரும்ப அழைத்திருந்தது. ‘அது சிறந்த தீர்மானம் என தான் நினைக்கவில்லை‘ என்று டயஸ் கூறியிருந்தார். சம்பவம் நடந்த சில மாதங்களின் பின்னர் இலங்கை இறுதியாக ஏ.பி. க்கு அறிக்கையொன்றை அங்கீகரித்திருந்தது. 


18 படைவீரர்கள் பாலியல் குழுவில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் அதற்கு எதிராக இராணுவம் செயற்பட்டதாகவும் தெரிவித்திருந்தது. அத்துடன், அந்த விடயத்தை ஐ.நா. முடிவுக்குக் கொண்டுவந்ததாகக் கருதப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.
குறைந்தது 134 ஆட்களை ஐ.நா. விசாரணை சுட்டிக்காட்டியிருந்ததை அந்த அறிக்கை ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. 4 மாதங்களுக்கு முன்னரான அரசாங்கத்தின் மற்றொரு அறிக்கைக்கு அது முரண்பட்டதாகக் காணப்பட்டது.

இராணுவம் ஒரு படைவீரரை பதவிநீக்கம் செய்திருந்ததுடன், மற்றொரு அதிகாரியை ஓய்வுபெற நிர்ப்பந்தித்ததாகவும் ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது தண்டனையை ஏனைய 21 பேருக்கு நடைமுறைப்படுத்தியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. சாசனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட சான்றிதழின் பிரகாரம் அதில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனித உரிமைகள் தொடர்பான நிலைவரங்களை சித்திரவதைக்கெதிரான ஐ.நா. சாசனமே கிரமமாக கண்காணிக்கின்றது.


அமைதிகாக்கும் பணியாளர்களுக்கு எதிராக கண்டறிந்த விடயங்கள் தொடர்பாக ஒருங்கிணைந்து செயற்பட்ட ஐ.நா., பாலியல் கும்பலால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து தான் அறிந்திருக்கவில்லையெனக் கூறுகின்றது.


சட்டரீதியாக அறியப்படாத துவாரமொன்று ஹெய்ட்டியிலும் வேறு இடங்களிலும் இடம்பெற்ற ஐ.நா. பாலியல் துஷ்பிரயோகம் அமைதிகாக்கும் பணிக்கு வழங்கப்படும் நிதிப் பங்களிப்பைக் குறைத்துவிடும் அச்சுறுத்தலைக் கொண்டிருக்கின்றது. வரவு  செலவுத் திட்டத்திற்கு சுமார் 30% வழங்கும் அமெரிக்காவிடமிருந்து இந்த அச்சுறுத்தல் எழுந்திருக்கின்றது. 


கடந்த மாதம் ஹெய்ட்டி சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையை ஏ.பி. செய்திச் சேவை வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தமது படைவீரர்களை பதிலளிக்கும் கடப்பாடு கொண்டவர்களாக செய்வதை நிராகரிக்கும் நாடுகள் தமது படைவீரர்களை வீட்டுக்கு திருப்பியனுப்ப வேண்டும். அல்லது இந்த நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்பதை அடையாளங் கண்டுகொள்ள வேண்டும். அவர்களுக்கான நிதி இழப்பீடுகள் முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்று பாதுகாப்புச் சபைக்கு அமெரிக்கத் தூதுவர் நிக்கிகலே எச்சரித்திருந்தார்.


இந்தப் பிரச்சினையின் அங்கமாக விளங்கும் விடயம் ஐ.நா., சட்டரீதியான நீதிப் பரிணாமத்தைக் குறைவாகக் கொண்டிருப்பதாகும். தனது அமைதி காக்கும் படைமீது சட்டநடவடிக்கைகள் எடுக்கும் விடயத்தை ஐ.நா. தாழ்ந்த மட்டத்திலேயே கொண்டிருக்கின்றது. 110,000 அதிகாரிகள் இப்போது அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தமது சொந்தப் படையினரால் இழைக்கப்படும் குற்றங்களை விசாரணை செய்வதற்கு உறுப்பு நாடுகளிலேயே ஐ.நா. தங்கியிருக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இதனால் பாதிக்கப்பட்டோருக்கான நீதி நழுவிச் செல்கின்றது. 
அதேவேளை ஐ.நா. வும் படையினரை வழங்கும் நாடுகளும் குற்றச்சாட்டிலிருந்து தப்பி செல்லக் கூடியதாக அமைகின்றது. இந்த நிலைவரம் பரஸ்பரம் சௌகரியத்திற்கான விடயமாக அமைந்திருப்பதாக சர்வதேச அமைதிகாக்கும் படை சஞ்சிகையின் பிரதம ஆசிரியரும் கென்ற் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளருமான பிலிலீப் குன்லுவி கூறியுள்ளார்.


ஒருவர் மீது ஒருவர் தங்களால் குற்றச்சாட்டை சுமத்த முடியுமென்ற நிலையில் இருதரப்பும் இருக்கின்றன. இறுதியில் பொறுப்புக் கூறுதல் அங்கு இல்லையென்பதை இது அர்த்தப்படுத்துகின்றது என்று பேட்டி ஒன்றில் குன்லுவி கூறியுள்ளார். 
இப்போது முதற்தடவையாக இலங்கையிடமிருந்து ஆட்சேர்ப்புச் செய்யும் தனிப்பட்டவர்கள் தொடர்பாக சோதனையிடுவதை ஐ.நா. விரிவுபடுத்தியுள்ளது.

முன்னர் இந்த விடயம் மிகவும் சிறியளவிலேயே இடம்பெற்றிருந்தது. மாலிக்கு அமைதிகாக்கும் பணிக்கு ஆட்களை அனுப்பும் திட்டம் கடந்த வருடம் அறிவிக்கப்பட்ட போது, சுமார் 1000 இலங்கைப் படைவீரர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என ஐ.நா.வும் இலங்கையும் பரிந்துரைத்திருந்தன. 200 ஆக அந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டது என்று இலங்கை பிரிகேடியர் ஜயந்த குணரட்ன ஏ.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.


நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம்


கொழும்பிலிருந்து இரு மணித்தியாலங்கள் பயணம் செய்தபோது, காட்டுப் பகுதியில் அமைதிகாக்கும் பணிக்கு ஆட்திரட்டப்பட்டவர்கள் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் தொடர்பான நெருக்கடிக்குத் தீர்வு காண தாங்கள் நடவடிக்கை எடுத்திருப்பதாக பயிற்சி முகாமில் பயிற்சி வழங்குவோர் கூறினர்.

ஹெய்ட்டியில் சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டதன் பின்னர் அந்த நெருக்கடி குறித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ‘அந்த விடயம் எமது ஐ.நா. பணிக்கு கரும்புள்ளியாகும்‘ என்று முகாமின் தலைமைப் பயிற்சியாளர் லெப்ரினன்ட் கேணல் ரைரல் டி சில்வா கூறியிருந்தார். 


உண்மையில் என்ன நடந்தது என்பது பற்றி தான் அறிந்திருக்கவில்லையெனவும். ஒரு சில பணியாட்களின் தவறான நடத்தையாக இருந்திருக்கும் என்பது தான் விளங்கிக் கொண்ட விடயம் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.


இதேவேளை, ‘பாதிக்கப்பட்டவர்கள்மீதான அச்சுறுத்தல், சாட்சியம் இல்லாத தன்மை, ஆதாரத்தைத் திரட்ட முடியாமை என்பனவற்றால் இலங்கையின் பிரபல்யமான இராணுவத்தின் உறுப்பினர்களை விசாரணை செய்வது சாத்தியமற்றது‘ என கும்பல் வல்லுறவுக்காக 3 படைவீரர்களுக்கு அபூர்வமான தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கில் அண்மையில் வாதிட்டிருந்த தமிழ் சட்டத்தரணி கே.எஸ். ரட்ணவேல் தெரிவித்திருக்கிறார். 


‘ஒழுங்கீனமான, இரக்கமற்ற இந்தப் படைவீரர்களை அமைதிகாக்கும் பணிக்கு ஐ.நா. ஈடுபடுத்துவதற்கு ஊக்குவிப்பது குறித்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம்‘ என்று ரட்ணவேல் தெரிவித்திருக்கிறார்.


கடந்த வருடம் இலங்கையை ஐ.நா. புகழ்ந்திருந்தது. ஹெய்ட்டியில் நிலை கொண்டிருந்த இலங்கை கொமாண்டர் ஒருவர் சிறுமி ஒருவருக்கு தந்தையாகியதற்காக 45,243 டொலரை கொடுப்பனவாக செலுத்துவதற்கு ஐ.நா. அமைதிகாக்கும் திணைக்களத்திடமிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் அதற்கு  நாடு இணங்கியிருந்தது. அந்த சிறப்பான நடவடிக்கைகளுக்காக இலங்கையை அண்மையில் ஐ.நா. பாராட்டியிருந்தது. 


இந்தக் கொடுப்பனவுக்கான உத்தரவில் இலங்கை பாதுகாப்புச் செயலாளராக விளங்கிய கருணாசேன ஹெட்டியாராச்சி கைச்சாத்திட்டிருந்தார். தந்தையாகியதற்கான கொடுப்பனவு பற்றி தான் சிறிதளவே அறிந்திருந்ததாக ஏ.பி. செய்திச் சேவைக்கு அவர் கூறியிருந்தார். அல்லது இந்த மாதிரியான கோரிக்கைகள் இலங்கை அமைதிகாக்கும் படைவீரர் தொடர்பாக இருக்கின்றனவா என்பது பற்றியும் தான் அதிகளவுக்கு அறிந்திருக்கவில்லையென அவர் கூறியிருந்தார்.


‘பொதுவாக அமைதிகாக்கும் படைவீரர்கள் தொடர்பாக தவறான பதிவை நாங்கள் கொண்டிருக்கவில்லை என்று நான் நினைக்கின்றேன்‘ என்று தெரிவித்திருக்கின்றார்.
அசோஸியேட்டட் பிரஸ், டெய்லி மெயில் 

http://www.thinakkural.lk/article.php?article/2bowggfhnr8175f2fb9d75af17148thljj8f3f2eb322ff968e62a324opdgh

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.