Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் முதலீட்டாளர்களாக வெளிநாடுகளிலுள்ள புலிகள்; மத்திய வங்கியின் பணத்திருட்டுப் பற்றி உலகம் அறியும்

Featured Replies

வெளிநாட்டுச் செலாவணி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் அதிகளவுக்கு வளர்ச்சியடைந்த நாடுகளே இலங்கையிலும் பார்க்க நிலைகுலைந்திருப்பதாக கூட்டு எதிரணியின் எம்.பி. பந்துல குணவர்த்தன எச்சரிக்கின்றார். "சிலோன் ருடே' பத்திரிகைக்கு இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு;

கேள்வி: கூட்டு எதிரணி, பரிவர்த்தனை கட்டுப்பாட்டு திருத்தச் சட்டமூலத்தை ஏன் எதிர்க்கின்றது?


பதில்: கூட்டு எதிரணி மட்டுமன்றி, மத்திய வங்கியிலுள்ள உயர் அதிகாரிகளும் அதாவது பரிவர்த்தனைக் கட்டுப்பாடு தொடர்பாக நுட்பரீதியான அறிவைக் கொண்ட உயர் அதிகாரிகளும் வெளிநாட்டுச் செலாவணி பரிவர்த்தனை மற்றும் மோசடி தொடர்பான திருட்டுகளை எதிர்க்கும் பலரும் இந்த சட்டமூலத்திற்கு எதிரானவர்களாகும்.

எவ்வாறாயினும் பாராளுமன்றத்திலுள்ள சொற்படி கேட்டு நடக்கின்ற எதிரணியும் செயற்பாட்டில் தொடர்புகொண்ட எதிரணியும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாரதூரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்த விடயங்களையும் வெளிப்படுத்துவதில்லை.

அவர்கள் சாதாரணமான எதிர்ப்புகளிலேயே ஈடுபடுகின்றனர். அரசாங்கத்திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதையே அவர்கள் செய்கின்றனர். கூட்டு எதிரணிக்கு தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல் கிடையாது. தேசிய பொருளாதாரத்திற்கும் தேசிய பாதுகாப்புக்கும் அனுகூலமான விளைவைத் தரும் விடயங்களே எமக்கு முக்கியமானவையாகும்.


கேள்வி: இந்தச் சட்டமூலம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என 
நீங்கள் நம்புகின்றீர்களா?


பதில்: அதிகளவுக்கு நிச்சயமாக ஆம் என்றே கூறுவேன். வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்குவதே இந்தச் சட்டமூலத்தை கொண்டுவருவதற்கான மறைமுகமான திட்டமாகும்.

சட்டவிரோதமான வழிகளிலும் மற்றும் வெளிநாடுகளில் தற்போது தேங்கிக் கிடக்கும் அவர்கள் சம்பாதித்த பணத்தை நாட்டுக்கு கொண்டுவருவதே இந்த மறைமுகத் திட்டமாகும். புலம்பெயர்ந்தவர்களின் இந்த முதலீடுகளுக்கு நாட்டின் பிரதான பொருளாதாரத் துறைகளில் சொந்தமாகக் கொண்டிருப்பதற்கு பின்னர் இடமளிக்கப்படும். 


கேள்வி: இந்தச் சட்டமூலத்தில் எங்கேயும் புலம்பெயர்ந்த விடுதலைப் புலிகள் தொடர்பாக எதுவும் குறிப்பிட்டிருக்கவில்லை. அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறதா?


பதில்: ஆம். இதில் வெளிநாடுகளில் உள்ள புலிகள் தொடர்பாக குறிப்பிடப்படவில்லை. எவ்வாறாயினும், ஊடகங்களுடனான கலந்துரையாடலின் போது சட்டரீதியாக சம்பாதித்த டொலர்கள் அல்லது இதரவழிகளில் சம்பாதித்த டொலர்கள் நாட்டுக்கு கொண்டுவருவதற்கு இடமளிக்கப்படுமெனவும் அத்தகைய முதலீடுகளை விரும்பாதவர்களே இந்த சட்டமூலத்தை எதிர்ப்பார்கள் என்றும் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

ரவி கருணாநாயக்கவின் அறிக்கையானது அதிகளவுக்கு பொருத்தமானதாக அமைந்திருக்கின்றது. ஜனவரி 08 இல் அரசாங்கம் மாற்றமடைந்தபோது "இந்து' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் எரிக் சொல்ஹெய்மின் இலங்கைக்கான சிறந்த முதலீட்டாளர்கள் சீனா அல்ல எனவும் வெளிநாடுகளிலுள்ள புலிகள் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கான காரணம், அவர்கள் பெருந்தொகையான பணத்தை வைத்திருப்பதாகும். அவர்கள் வர்த்தக ரீதியான அறிவைக் கொண்டவர்கள். அத்துடன் முகாமைத்துவ ஆற்றலையும் அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.

அவர்கள் வெளிநாடுகளில் வசித்தாலும் அவர்கள் இலங்கையர்களாக உள்ளனர் என்ற அவரின் இந்த அபிப்பிராயம் இலங்கையில் அவர்களின் பணம் அதிகளவுக்கு முதலீடு செய்வதை அதிகரிக்க வேண்டுமென்ற அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கின்றது. நாட்டில் துரிதமான அபிவிருத்தியை வென்றெடுப்பதற்கு இது சாத்தியமானதாகும் என்ற அபிப்பிராயத்தையும் சொல்ஹெய்ம் கொண்டிருந்தார்.

எரிக் சொல்ஹெய்மின் அபிப்பிராயமானது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரின் திட்டங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் பொருந்துகின்றது. ஆதலால், இந்த சட்ட மூலத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுவது என்னவெனில், வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் சுதந்திரமாக இடம்பெறுவதற்கான வாய்ப்பை அளிப்பதாகும். மத்திய வங்கியின் வெளிநாட்டு செலாவணி திணைக்களத்தின் பரிவர்த்தனை கட்டுப்பாட்டாளரின் அனுமதியின்றி சுதந்திரமாகப்பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாகும். 


கேள்வி: அந்நியச் செலாவணி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு 
சாதகமான முறையில் பொருளாதார நிபுணர்கள் அபிப்பிராயங்களை வெளிப்படுத்தியிருக்கவில்லையா?


பதில்: ஆம். இந்தப் பொருளாதார நிபுணர்களில் பலர் மேற்குலக மனப்பான்மையைக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை சிறப்பானவையாக அதாவது நாணயப் பரிவர்த்தனைகளில் சிறப்பான தன்மையைக் கொண்டிருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். அந்த மாதிரியாக ஆசிய நாடுகள் சிந்திப்பது தவறானதாகும்.

அந்நியச் செலாவணி பரிவர்த்தனையுடன் தொடர்புபட்ட சட்டங்களை தளர்த்துவதால் தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் பொருளாதாரங்கள் பூச்சியமாக சீர்குலைந்து வருகின்றன. அந்த நாடுகள் எம்மிலும் பார்க்க அதிகளவுக்கு வளர்ச்சி கண்டவையாக இருந்தன. அந்நியச் செலாவணி பரிவர்த்தனை மோசடிகளில் சம்பந்தப்பட்டவர்கள் அந்த நாடுகளுக்கு குழுக்களாக சென்றடைந்துள்ளனர்.

அங்கு குறுகிய கால முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால், அந்த நாடுகளில் இருந்து அதிகளவு இலாபங்களை அவர்கள் எடுத்துக்கொண்டுள்ளனர். இந்த முதலீடுகளையும் அவர்கள் திரும்ப எடுத்துக்கொண்டுள்ளனர். அந்த நாடுகளின் நாணயப் பெறுமதி பூச்சியமாக வீழ்ச்சி கண்டிருந்தது. தாய்லாந்தின் நெருக்கடியை நான் நினைவுகூருகிறேன்.

தங்கள் விகாரைகளில் இருந்த சகல தங்கத்தையும் பௌத்த பிக்குகள் அரசாங்கத்திற்கு கொடுத்திருந்தனர். நாட்டுக்கு பணத்தைக் கொண்டுவருவதற்காக 100 டொலர் சாப்பாட்டுச் செலவுடன் ஹோட்டல் அறையை விற்பனை செய்திருந்தனர்.


கேள்வி: தாய்லாந்து, மலேசியாவில் உள்ளவர்கள் போன்று நெருக்கடிகள் இலங்கையிலும் மேலெழுமென நீங்கள் நினைக்கிறீர்களா?


பதில்: ஆம். விசேடமாக இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த 2 வருடங்களில் அந்நியச் செலாவணி பரிவர்த்தனை சந்தை கரும் புள்ளியை பெற்றிருக்கின்றது. அதனை அழிக்க முடியவில்லை. மத்திய வங்கியில் இடம்பெற்ற பணத்திருட்டு பற்றி முழு உலகமும் அறியும். 2015 பெப்ரவரி 27 இல் அச்சம்பவம் இடம்பெற்றது. அதன் பின்னர் வட்டி வீதங்கள் மிகக் கடுமையாக உயர்மட்டத்திற்கு சென்றன.

இந்த நாட்டின் பிணை முறியங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்திருந்தனர். அவர்கள் தமது முதலீடுகளை வாபஸ் பெற்றதுடன், பல பில்லியன்களை கொண்டுசென்றனர். சர்வதேச முதலீடு 8.2 பில்லியனாக இருந்து 5 பில்லியனாக 2017 இன் ஆரம்பத்தில் வீழ்ச்சி கண்டிருந்தது. 2014 இல் 131 ரூபா மட்டுமே டொலருக்காக செலுத்தப்பட்டது. இப்போது டொலரின் பெறுமதி 154 ரூபாவாகும். ரூபா மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது. 


கேள்வி: இலங்கையில் ரூபாவின் மதிப்பிறக்கம் ஏற்றுமதியாளர்களுக்கு அனுகூலமானதாக அமைந்திருக்கின்றது. அரசாங்கத் தரப்பில் தேயிலை, இறப்பர், தெங்கு என்பனவற்றிற்கு அதிக விலைகள் ஏற்பட்டிருப்பதாக அரசாங்க தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்படுகின்றதே?


பதில்: இந்த விடயம் முன்முதிர்ச்சியற்றதாகும். அமானுஷ்யமான விவாதமாகும். ஏற்றுமதி அதிகரிக்கும் போது கிடைக்கின்ற பணமானது, ரூபா மதிப்பிறக்கம் செய்யப்படும்போது அதிகரிக்கும் என்பது உண்மை.

எவ்வாறாயினும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு செலுத்தப்படும் பணத்தின் தொகை துரிதமாக அதிகரிக்கும். சீனி, பருப்பு, அரிசி, பால்மா மற்றும் உரம், கோதுமை, இரசாயனப் பொருட்கள், தளபாடங்கள, இயந்திராதிகள், மோட்டார் வாகனங்கள் என்பவற்றிற்கு செலுத்தப்படும் ரூபாவின் பெறுமதி பாரியளவில் அதிகரித்திருப்பது குறித்து நீங்கள் பரிசீலிக்க முடியும்.

ஆதலால், வர்த்தக பற்றாக்குறை விரிவடைகின்றது. 2015 இலும் 2016 இலும் சென்மதி நிலுவை பிரதிகூலமானதாக உருவாகியுள்ளது. இந்த ஆட்கள் இந்த பாரிய அனர்த்தம் குறித்து விளங்கிக் கொள்வதில்லை. ரூபாவின் பெறுமதிக் குறைப்புடன் நாட்டின் கடன் சுமையும் உயர்மட்டத்திற்கு அதிகரிக்கின்றது. 2015 இல் ரூபா மதிப்பிறக்கம் செய்யப்பட்டதன் காரணமாக நாட்டின் கடன்சுமை 285 பில்லியன் டொலராக அதிகரித்தது.

2016 இல் 187 பில்லியன் ரூபாவாக அது உயர்வடைந்தது. நாணய மதிப்பிறக்கத்தின் பெறுபேறாக நல்லாட்சி அரசாங்கத்தின் கீழான கடன் சுமை 472 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. அரசியலில் உள்ள இளையவர்கள் இந்த பில்லியன்கள் தொடர்பாக எதனையும் விளங்கிக் கொள்வதில்லை. அறிக்கைகளில் உள்ள பொருளாதார ரீதியான அறிவியல் புள்ளிவிபரங்கள் பற்றியும் அவர்கள் எந்தவொரு எண்ணப்பாட்டையும் கொண்டிருக்கவில்லை. 472 பில்லியன் ரூபாவாக இந்தத் தொகையை அதிகரித்திருப்பது குறித்தும் அவர்கள் எந்தச் சிந்தனையும் அற்றவர்களாக உள்ளனர்.

பாராளுமன்றத்திற்கு ரவி கருணாநாயக்கவினால் அச்சிடப்பட்டு கையளிக்கப்பட்ட 8 பாரிய திட்டங்கள் சார்பான கடன்தொகை காணப்படுகின்றது. அம்பாந்தோட்டைத் துறைமுகம் , மத்தள விமான நிலையம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின்லங்கா கொம்பனி, நிலும் கோபுரம், அக்ருகொட பாதுகாப்பு தலைமையகங்கள், அம்பாந்தோட்டை மாநாட்டு மண்டபம், சூரியவௌ தகவல் தொழில்நுட்ப நிலையம் உட்பட அரசாங்கத்தின் முதலீடுகள் 301 பில்லியன் ரூபாவாகும்.

அந்த 301 பில்லியன் சொத்துக்களும் தொடர்ந்து நாட்டுக்குள்ளேயே இருக்கின்றன. எவ்வாறாயினும், 2 வருடங்களுக்குள் ரூபா மதிப்பிறக்கம் செய்யப்பட்டதால் நாட்டின் கடன்தொகை 472 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் தகவலின் பிரகாரம் 171 பில்லியன் ரூபா மேலதிகமாக விரயமாக்கப்பட்டுள்ளது. 171 பில்லியன் ரூபாவை நாங்கள் கொண்டிருந்தால் அம்பாந்தோட்டை போன்ற மற்றொரு துறைமுகத்தை எம்மால் நிர்மாணித்திருக்க முடியும்.

கேள்வி: பரிவர்த்தனைக் கட்டுப்பாட்டு திருத்த சட்டமூலத்தின் பிரதான பாதிப்பு ஏற்படுத்தும் விளைவுகள் எத்தகையவை என நீங்கள் நோக்குகின்றீர்கள்?


பதில்: முதலாவதாக இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை அதிகாரமாகும். அது அரசியல் மயப்படுத்தப்பட்டதாக உருவாகிக்கொண்டிருக்கின்றது. பரிவர்த்தனை கட்டுப்பாட்டுத் திணைக்களம் இல்லாமல் செய்யப்படும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டாளர் அரசியல்வாதிகளின் தாளத்திற்கேற்ப நடனமாடும் பொம்மையாக உருவாகுவார்.


வர்த்தக வங்கிகளுக்கு அப்பால், மட்டுப்படுத்தப்பட்ட வர்த்தகர்களுக்கு பிரதமரினால் அனுமதியளிக்க முடியும். அங்கீகாரம் பெற்ற பரிவர்த்தனை வர்த்தகர்களாக அவருக்கு பொருத்தமானவர்கள் என தோன்றுவோருக்கு பிரதமரினால் அனுமதியளிக்க முடியும். சட்டவிரோத அந்நியச் செலாவணி பரிவர்த்தனை மோசடியாளர்களுக்கு தமது மோசடிகளை பாரியளவில் மேற்கொள்வதற்கு சிறந்த வாய்ப்பை அளிப்பதாக அமையும்.

கறுப்புப் பணத்திற்கான வாய்ப்பும் அங்கு இருக்கும். கறுப்புப் பணத்தை பயன்படுத்தக்கூடிய பணமாக உருவாக்குவதற்கு ஏற்புடைய நாடாக இலங்கை உருவாகுமானால் அதன் பிரதிமை முழுமையாக நாசமாகிவிடும். கடந்த காலத்தில் அந்நியச் செலாவணி பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்டவர்களுக்கும் இந்தச் சட்டமூலத்தின் மூலம் அவர்கள் சுதந்திரமாக செயற்படுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது. உணர்வுபூர்வமான நடைமுறைகள் இல்லாமல் செய்யப்படுகின்றன.


கேள்வி: இந்தச் சட்டமூலம் தொடர்பாக உயர்நீதிமன்றத்திற்கு மனு ஒன்றை நீங்கள் சமர்ப்பித்திருந்தீர்களா?


பதில்: ஆம். கற்றறிந்த சட்டத்தரணிகளினால் மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. உயர்நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க சில திருத்தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்தத் திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டால் அரசியல் அமைப்புக்கு எதிரானதாக அமையாதென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. 


கேள்வி: நீங்கள் சுட்டிக்காட்டிய பாதிப்பான விடயங்கள் மாற்றப்பட்டுள்ளன. ஏனெனில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினால் அவ்வாறு மாற்றப்பட்டுள்ள நிலையில் அந்தத் தீர்மானம் குறித்து நீங்கள் திருப்தியடைந்துள்ளீர்களா?


பதில்: நான் திருப்தியடையவில்லை. அரசியலமைப்புக்கு எதிரானதாக இது இல்லாவிடினும் சட்டமூலத்திலுள்ள சில பிரிவுகள் இலங்கை மத்திய வங்கியினை தரம் தாழ்த்துவதாக அமைகின்றது. அந்நியச் செலாவணி பரிவர்த்தனைக் கட்டுப்பாடு அரசியல் மயப்படுத்தப்படுவதை தடுப்பதற்கான முயற்சியினை கூட்டு எதிரணியினரான நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

பாராளுமன்றத்திலுள்ள பொருளாதார அபிவிருத்தி தொடர்பான கண்காணிப்புக் குழுவிடம் நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். சட்டமூலத்திற்கு திருத்தங்களை சமர்ப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறோம். சட்டமூலத்தின் பாதிப்பான பிரிவுகள் குறித்து ஜனாதிபதிக்கு கூட்டு எதிரணி உறுப்பினர்கள் அறிவிப்பார்கள்.

அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். நாட்டிற்கு பாதிப்பான பிரிவுகளை திருத்துவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொள்வோம்.

http://www.thinakkural.lk/article.php?article/5rfmfpvsuc60243bd8fdb09012845krkwqf1f5eb66a00c84dbc5ad51jqurr

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.