Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் இராணுவத்திடம் சரணடைய விரும்பவில்லை

Featured Replies

புலிகள் இராணுவத்திடம் சரணடைய விரும்பவில்லை

 

மூன்றாம் தரப்­பிடம் சர­ண­டை­யவே விரும்­பினர். அதனை அர­சாங்கம் விரும்­ப­வில்லை

நேர்­காணல் ரொபட் அன்­டனி  

புலிகள் இறுதி யுத்­தத்­தின்­போது இரா­ணு­வத்­திடம் சர­ண­டைய ஒரு­போதும் விரும்­ப­வில்லை. மாறாக மூன்றாம் தரப்­பிடம் சர­ண­டை­யவே விரும்­பினர். அதற்கு அர­சாங்கம் விரும்­ப­வில்லை என்று கடந்த அர­சாங்­கத்தின் பாது­காப்பு பேச்­சா­ளரும் அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் தற்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார்.

வீர­கே­சரி நாளி­த­ழுக்கு வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே கெஹெ­லிய ரம்­புக்­வெல மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். செவ்­வியின் முழு வடிவம் வரு­மாறு:

Q : நீங்கள் ஆட்­சியை இழந்து இரண்­டரை வரு­டங்கள் கடந்து விட்­டன புதிய அர­சாங்­கத்தின் செயற்­பாடு எவ்­வாறு அமைந்­தி­ருக்­கின்­றது? நீங்கள் என்ன செய்­து­கொண்­டி­ருக்­கின்­றீர்கள்?

A: சுதந்­தி­ரக்­கட்சி நாட்டை 20 வரு­டங்கள் ஆட்சி செய்­தன. அதில் 10 வரு­டங்கள் மஹிந்த ராஜ­பக் ஷ ஆட்சி செய்தார். பின்னர் நாட்டில் மாற்றம் தேவை என்ற கருத்து முன்­வைக்­கப்­பட்­டது. இன­வாத செயற்­பா­டு­களும் திட்­ட­மிட்­ட­வ­கையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அனைத்து விட­யங்­களும் ஒன்­று­சேர்ந்து குறைந்­த­ளவு வாக்­கு­க­ளினால் மஹிந்த ராஜ­பக் ஷ தோற்­க­டிக்­கப்­பட்டார். அனைத்து விட­யங்­களும் திட்­ட­மி­டப்­பட்டு முன்­னெ­டுக்­கப்­பட்­ட­துடன் அவற்றின் ஊடாக அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டன. அத­னூ­டாக புதிய ஆட்சி வந்­தது. பர­வா­யில்லை. ஆட்­சியில் மாற்றம் ஏற்­ப­டு­வது வழமை, அதற்கு மக்­க­ளுக்கு உரிமை உள்­ளது.

சுமார் 45 நாட்­களில் அந்த விடயம் முன்­னெ­டுக்­கப்­பட்டு ஆட்­சி­மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. எப்­ப­டியோ நாம் தோல்வி அடைந்தோம். உண்­மையில் என்ன நடந்­தது என்­பதை சிந்­தித்து பார்த்தால் அனை­வ­ருக்கும் புரியும். மாற்றம் தேவை­யென்று மக்கள் எதிர்­பார்த்து மாற்­றத்தை செய்­தனர். ஆனால் 0.1 வீத­மா­வது நாட்டில் நல்ல ரீதி­யான மாற்றம் ஏற்­பட்­டதா என்­பது கேள்­விக்­கு­றி­யாகும். அந்த மாற்றம் ஏற்­பட்­டதா என்று மக்­க­ளிடம் கேட்டால் மக்கள் சிறந்த பதிலை அளிப்­பார்கள்.

ஜன­நா­ய­கத்தை முன்­னி­றுத்­தியே தேர்தல் களத்தில் பேசி­னார்கள். அவ்­வாறு ஜன­நா­யகம் பற்­றிப் பேசிய புதிய அர­சாங்கம் ஜன­நா­ய­கத்தின் முக்­கிய அம்­ச­மான தேர்­தலை நடத்­தாமல் இருக்­கின்­றது. இதற்கு பஷில் ராஜ­ப­க் ஷவை குற்­றம்­சாட்­டு­கின்­றனர். அப்­ப­டி­யானால் அந்த பழைமை முறை­மையை மாற்­றி­ய­மைப்­ப­தற்கு இரண்­டரை வரு­டங்கள் போதாதா? அப்­ப­டி­யாயின் புதிய தேர்தல் முறையை கொண்­டு­வ­ரு­வ­தற்கு ஐந்து வரு­டங்கள் தேவையா? பழைய முறை­மை­யி­லேயே தேர்­தலை நடத்­தி­விட்டு எதிர்­வரும் நான்கு வரு­டங்­களில் புதிய முறை­மையை கொண்டு வந்­தி­ருக்­கலாம். ஆனால் அர­சாங்கம் மக்­க­ளுக்கு பயப்­ப­டு­கின்­றது. மக்­க­ளிடம் செல்ல அர­சாங்கம் அஞ்­சு­கி­றது.

Q : தேர்தல் என்ற ஒரே விட­யத்தை வைத்து இந்த அர­சாங்கம் சரி­யில்லை என்று கூற முடி­யுமா?

A: இல்லை இல்லை. ஜன­நா­யக விட­யத்தில் மட்­டுமே தேர்­தலை சுட்­டிக்­காட்­டினேன்.

Q : ஆனால் புதிய அர­சாங்­கத்தில் ஜன­நா­யகம் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­றது தானே?

A: என்­ன­வென்று அதனை உங்­களால் கூற­மு­டி­யுமா?

Q : மக்­க­ளுக்கு பேசும் சுதந்­திரம் கிடைத்­துள்­ளதே? மக்கள் அவ்­வாறு உண­ரு­கின்­ற­னரே?

A: சிலர் அவ்­வாறு கரு­தலாம். பாரா­ளு­மன்­றத்தில் பிர­தமர், ஊட­க­வி­ய­லா­ளர்­களின் பெயர்­களைக் கூறி விமர்­சிக்­கின்றார். அச்­சு­றுத்­தல்கள் விடுக்­கப்­ப­டு­கின்­றன. ஆனால் வெளியில் பெரி­தாக தெரி­வ­தில்லை. சுதந்­திரம் உள்­ள­தாக கூறு­கின்­றீர்கள். வெள்­ளைவேன் இல்லை என்று கூறப்­ப­டு­கின்­றது. எமது காலத்தில் வெள்­ளைவேன் இடம்­பெற்ற ஒரு சம்­ப­வத்தை கூற முடி­யுமா? ஜப்­பானில் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்ற வேன்­களின் 99 வீதம் வெள்­ளை­நி­ற­மாகும். கறுப்பு வேன் இல்லை.

Q : ஆனால் உங்கள் ஆட்­சிக்­கா­லத்தில் வெள்­ளைவேன் கடத்தல் இடம்­பெற்­றதை மறுக்க முடி­யுமா?

A: கடந்த காலத்தில் பாதாள உலக செயற்­பா­டுகள் காணப்­பட்­டன. போதைப்­பொருள் வியா­பாரம் இருந்­தது. இவற்றை கட்­டுப்­ப­டுத்­தவும் கடந்த காலத்தில் வெள்­ளை­ வேன்­கள்தான் பயன்­ப­டுத்­தப்­பட்­டன. அத­னால்தான் வெள்­ளைவேன் கலா­சாரம் இருந்­த­தாக கூறப்­ப­டு­கின்­றது. ஒரு அர­சியல் தலை­வ­ரா­வது ஒரு அர­சியல் செயற்­பாட்­டா­ள­ரா­வது அர­சாங்­கத்­தினால் வெள்­ளை­வேனில் கடத்­தப்­பட்­டாரா?

Q : இங்கு அர­சாங்கம் செய்­தது என்­ப­தனை நீங்கள் மறுக்­கலாம். ஆனால் உங்கள் அர­சாங்கக் காலத்தில் இந்த சம்­ப­வங்கள் இடம்­பெற்­றன என்­பது சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றதே?

A: அப்­ப­டி­யானால் அவ்­வா­றான சம்­ப­வங்கள் இப்­பொ­ழுதும் நடை­பெ­று­கின்­றன என்­றுதான் கூற­வேண்டும். வந்­து­ற­பவில் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலும் வெள்­ளைவேன் மூல­மா­கவே இடம்­பெற்­றது. எமது காலத்தில் ஒரு அர­சி­யல்­வா­தி­யா­வது வெள்­ளை­வேனில் கடத்­தப்­பட்­டாரா?

 

Q : அர­சியல் செயற்­பாட்­டா­ளர்­க­ளான லலித், மற்றும் குகன் ஆகியோர் கடத்­தப்­பட்­டதை மறந்து விட்­டீர்­களா?

A: லலித் குகன் சம்­ப­வத்தை வெள்­ளை­வே­னுடன் சம்­பந்­தப்­ப­டுத்த முடி­யாது. அது வேறு­கதை.

Q : ஆனால் அது கடத்தல் சம்­பவம் அல்­லவா?

A: கடத்தல் தான், இருக்­கலாம். ஆனால் 147 கடத்தல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. 1988 ஆம் ஆண்டு ஒரு புகைப்­படப் பிடிப்­பாளர் கடத்­தப்­பட்டு கொல்­லப்­பட்டார். அன்­றுதான் இது ஆரம்­பித்­தது. அன்று முதல் 2015 ஆம் ஆண்­டு­வரை 147 சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. அர­சாங்கம் சுத்­த­மா­னது எனின் இந்த 147 சம்­ப­வங்கள் குறித்தும் பேச­வேண்டும். சுதந்­திரம் குறித்து பேசப்­ப­டு­கின்­றது. ஆனால் ஊடக நிறு­வ­னங்­களின் அனு­ம­திப்­பத்­தி­ரத்தை இரத்து செய்­வ­தாக பகி­ரங்­க­மாக கூறு­கின்­றனர். எப்­படி சுதந்­திரம் உள்­ள­தாக கூற முடியும்?

Q : உங்கள் காலத்­திலும் ஊடக நிறு­வ­னங்­களின் அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் ரத்து செய்­யப்­பட்­ட­னவே?

A: ஒன்று கூட அப்­படி நடக்­க­வில்லை.

Q : ஒரு வானொலி நிறு­வ­னத்தின் அனு­மதி சிக்­க­லுக்­குட்­பட்­டதே?

பதில்: அதில் செய்­தியே சிக்­க­லுக்­குட்­பட்­டது. ஒரு விட­யத்தை புரிந்து கொள்­ளுங்கள் இந்த நாட்டில் கடன் குறித்து பேசப்­ப­டு­கின்­றது. 1950 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2015 ஆம் ஆண்டு வரை நாட்டில் கடன் சுமை­யா­னது 7300 பில்­லி­யன்­க­ளாக காணப்­பட்­டன. ஆனால் 2017 ஆம் ஆண்டு வரும் போது 9ஆயி­ரத்து 600 பில்­லி­யன்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளது.

Q : அப்­ப­டி­யாயின் 2005 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2015 வரை எவ்­வ­ளவு கடன் பெறப்­பட்­டது ?

A: 3000 பில்­லி­யன்கள் பெறப்­பட்­டுள்­ளன. ஆனால் கடந்த இரண்டு வரு­டங்­களில் 2300 பில்­லி­யன்கள் பெறப்­பட்­டுள்­ளன. இந்த 2300 பில்­லி­யன்­களில் எதனை செய்­துள்­ளது. இந்த அர­சாங்கம்? நாம் எடுத்த கடன்­களில் என்ன செய்தோம் என்­பதை வெளிப்­ப­டை­யாக காட்­ட­மு­டியும். இந்த அர­சாங்கம் கடந்த இரண்டு வரு­டத்தில் என்ன செய்­தது. நாடு மிக பயங்­க­ர­மான நிலை­மைக்கு செல்­கி­றது. 2005 ஆம் ஆண்டு நாட்டை பொறுப்­பேற்கும் போது மொத்த தேசிய உற்­பத்­தியில் 102 வீதம் கடன் பெறப்­பட்­டி­ருந்­தது. ஆனால் மஹிந்த ராஜ­பக் ஷ அதனை வைத்­துக்­கொண்டு அழு­து­கொண்­டி­ருக்­க­வில்லை. வீதியில் இறங்கி வேலை செய்தார். மேலும் கடன்­களைப் பெற்றார். வேலை செய்தார். அதனால் தான் கடன் வீதத்தை 70 வீத­மாக குறைத்தோம்.

Q : உங்­க­ளது கூட்டு எதிர்க்­கட்­சியின் செயற்­பா­டுகள் எவ்­வாறு அமைந்­துள்­ளன.

A: புதிய அர­சியல் கட்­சி­யொன்றின் அல்­லது அர­சியல் அமைப்­பொன்றின் தேவையை மக்கள் உணர்ந்­துள்­ளனர்.

Q : தற்­போ­தைய நிலை­மையில் நீங்கள் எவ்­வாறு மக்கள் மத்­தியில் செல்ல முயல்­கி­றீர்கள்?

A: அதனை தற்­போது கூற முடி­யாது. எங்­க­ளது திட்­டங்கள் உரிய நேரத்தில் உரிய முறையில் வெளி­வரும். எமது திட்­டங்­களின் ஒரு கட்­ட­மாக மே தினக்­கூட்­டத்தை குறிப்­பி­டலாம். தடை­க­ளுக்கு மத்­தியில் வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க மேதி­னக்­கூட்­டத்தை நடத்­தினோம்.

Q : எதிர்­கா­லத்தில் என்ன செய்­வீர்கள்?

A: தேவை­யான நேரத்தில் தேவை­யா­னதை செய்வோம் அர­சி­யலில் நேரம் என்­பது மிகவும் முக்­கி­யத்­து­வ­மா­னது. எந்த காலத்தில் எதனை செய்­வது என்­பது முக்­கி­ய­மா­னது.

Q : கெஹெ­லிய ரம்­புக்­வெல தற்­போது எந்­தக்­கட்­சியில் இருக்­கிறார்?

A: நான் சுதந்­தி­ரக்­கட்­சியில் இருக்­கின்றேன்.

Q :ஆனால் அங்கு உங்­களைக் காண­மு­டி­ய­வில்­லையே?

A: என்னை விலக்கி வைத்­துள்­ளனர்.

Q :அப்­ப­டி­யாயின் நீங்கள் எந்தக் கட்சி?

A: சுதந்­தி­ரக்­கட்­சிதான்.

Q : ஆனால் நீங்கள் அந்த கட்­சியில் இல்­லையே?

A: அதற்கு நான் என்ன செய்ய? நான் சுதந்­தி­ரக்­கட்­சி­யில்தான் இருக்­கிறேன். அவர்கள் என்னை இல்லை என்று கூறு­கி­றார்கள்.

Q : எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் உங்­க­ளது கூட்டு எதிர்க்­கட்சி எவ்­வாறு போட்­டி­யிடும்?

A: இந்தக் கேள்­விக்கு நான் முன்­னரே கூறி­விட்டேன். நேரம் வரும்­போது உரிய முடிவு எடுக்­கப்­படும்.

Q : எனது அனைத்துக் கேள்­வி­க­ளுக்கும் இந்த பதி­லையே கூறு­வீர்கள் போல் தெரி­கி­றதே?

A: இத­னுடன் சம்­பந்­தப்­பட்ட கேள்­வி­யாயின் அதுதான் பதில்.

Q : 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நடை­பெ­றுமா?

A: ஒரு தேர்­தலும் நடை­பெ­றாது என்றே மக்கள் கூறு­கின்­றனர். 2020 ஆம் ஆண்டு தேர்தல் நடக்கும் இல்­லா­விடின் நாங்கள் தேர்­தலை எடுப்போம்.

Q : அப்­ப­டி­யாயின் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் உங்கள் வேட்­பாளர் யார்?

 A: அது தற்­போது பேசப்­ப­ட­வேண்­டுமா? நான்கு அல்­லது ஐந்து பேர் வரை பேசப்­ப­டு­கின்­றார்கள். சரி­யான நேரத்தில் தகு­தி­யா­னவர் முன்­வ­ருவார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 45 நாட்­க­ளி­லேயே உரு­வானார். ஆறு மாதங்­க­ளுக்கு முதல் வந்­தி­ருந்தால் நிலைமை மாறி­யி­ருக்கும்.

Q : அப்­ப­டி­யாயின் உங்கள் அர­சியல் முகாமின் இலக்கு என்ன?

A: தற்­போ­தைய அர­சியல் நிகழ்­வு­க­ளைக்­கொண்டு முன்­னெ­டுப்போம். அதனை வைத்தே எதிர்­காலம் தொடர்பில் தீர்­மானம் எடுப்போம்.

Q : 2015 ஆம் ஆண்டு உங்கள் கட்­சியின் வேட்­பாளர் மஹிந்த ராஜ­பக் ஷ என்­ப­தனை நீங்கள் 2010 ஆம் ஆண்­டி­லேயே கூறி­னீர்­களே?

A: அது எங்­க­ளது நகர்வு.

Q : அப்­ப­டி­யாயின் தற்­போது உங்கள் வேட்­பாளர் யார் என்­ப­தனை ஏன் கூற முடி­யாது?

A: ஏன் கூற­வேண்டும்? தற்­போது அவரின் பெயரைக் கூறினால் பல்­வேறு பிரி­வு­க­ளினால் விசா­ரிக்­கப்­ப­டுவார். பொய்க் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைப்­பார்கள். சேறு­பூ­சு­வார்கள். இவை எல்லாம் எதற்கு?

Q : தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற விசா­ர­ணைகள் குறித்த குற்­றச்­சாட்­டுக்கள் பொய்­யா­னவை என்று கூறு­கின்­றீர்­களா?

A: 90 வீதம் பொய்க் குற்­றச்­சாட்­டுக்கள். இது அனை­வ­ருக்கும் தெரியும். டுபாய் வங்­கியில் நிதி இருப்­ப­தாக கூறி­னார்கள். எங்கே ?

Q : உங்­களின் 9 வருட ஆட்­சியில் இருந்த குறை­பாடு என்ன?

A: சில குறை­பா­டுகள் இருந்­தன. குறை­பா­டுகள் இல்­லாத அர­சாங்கம் இருக்க முடி­யாது. ஆனால் குறை­பா­டு­களை தாண்டி பாரிய வேலைத்­திட்­டங்­களை நாங்கள் முன்­னெ­டுத்தோம்.

Q : 2015 ஆண்டு தேர்­தலில் உங்கள் தலைவர் தோல்­வி­ய­டைய என்ன காரணம்?

A: இன­வாதம். பேரு­வளை சம்­ப­வமே முஸ்லிம் மக்­களின் முழுமையான வாக்­கு­களை எங்­க­ளுக்கு இல்­லாமல் செய்­தது.

Q : ஒரு முஸ்லிம் கூட உங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­க­வில்லை என்று கரு­து­கின்­றீர்­களா?

A: நூற்­றுக்கு ஒரு வீதம் கிடைத்­தி­ருக்­கலாம். ஆனால் முழு­மை­யாகக்கிடைக்­க­வில்லை என்று கூறலாம். அந்த நேரத்தில் நாங்கள் விட்ட தவறு என்­ன­வெனின் அதன்­போது சட்­டத்தை கடு­மை­யாக அமுல்­ப­டுத்­த­வில்லை.

Q :தமிழ் வாக்­கு­களை ஏன் இழந்­தீர்கள்?

A: அது மிகவும் தெளி­வான காரணம். எமது அர­சாங்­கத்தில் வடக்­குக்கு போன்று எந்த பகு­திக்கும் அபி­வி­ருத்­திக்­காக செலவு செய்­ய­வில்லை. கண்­ணி­வெ­டிகள் 1.5 மில்­லி­யன்­களை அகற்­றினோம். மூன்று இலட்சம் இடம்­பெ­யர்ந்த மக்­களை குடி­யேற்­றினோம். அபி­வி­ருத்­தியை செய்தோம். நீர்த் திட்­டங்­களை முன்­னெ­டுத்தோம். ஆனால் மறு­புறம் அதற்கு அர­சியல் ரீதி­யான வேலைத்­திட்­டங்­களும் ஒரு சில தரப்­புக்­க­ளினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. முதல் தட­வை­யாக 89 வீத வாக்குப் பதிவு இடம்­பெற்­றது இலங்கை அர­சியல் வர­லாற்றில் இல்­லாத விடயம். அதனால் சிறு­பான்மை மக்கள் எம்மை விட்டு பிரிந்­தனர். அதனால் சிறி­ய­ளவு வாக்­கு­க­ளினால் தோல்­வி­ய­டைந்தோம்.

Q : உங்கள் ஆட்­சிக்­கா­லத்தில் இதனை செய்­தி­ருக்­கலாம் என்று நீங்கள் நினைக்கும் விடயம் என்ன?

A: சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து நாங்கள் அதிக கவனம் எடுத்­தி­ருக்­கலாம். முஸ்லிம் மக்­களின் பிரச்­சி­னை­களை பார்த்­தி­ருக்­கலாம். எங்­க­ளது நேர்­மையை வெளிக்­காட்­டி­யி­ருக்­கலாம்.

Q : தேசிய இனப்­பி­ரச்­சி­னையை தீர்த்­தி­ருக்­க­லாம்­தானே?

A: தமிழ் இனப்­பி­ரச்­சி­னையை என்னை பொறுத்­த­வ­ரையில் தீர்க்க முடி­யாது. ஒரு­நாளும் தீர்க்க முடி­யாது. உலகில் 120 மில்­லியன் தமிழ் மக்கள் உள்­ளனர்.

 

 

 

(திங்கட்கிழமை தொடரும்...)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-06-03#page-5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.