Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அது ஒரு மிளாகாலம்

Featured Replies

அது ஒரு மிளாகாலம்

 

நம்ம பெரிய மாமா, அம்மாவுக்கு அண்ணன், ராணுவ அதிகாரியாயிருந்தவர். மாமியின் அநியாயமான அகால மரணத்துக்குப் பின்னால் மாமா எல்லையை விட்டுவிட்டு சென்னைக்குக் குடிவந்து என்ஸிஸி அதிகாரியாய்ப் பதவி வகித்தார். கீழ்ப்பாக்கம் ஆஸ்பிரான் கார்டன் ஏரியாவில் மேஜர் ரஹீம் என்றால் ரொம்பப் பிரபலம். மேஜர் ரஹீம் மட்டுமல்லாமல், அவருடைய டீன் ஏஜ் மகள்கள் ரெண்டு பேரும் கூடப் பிரபலம்.
13.jpg
மேஜர் ரஹீம் லெஃப்ட்டினன்ட் கர்னல் ரஹீமாய் உயர்ந்துவிட்டிருந்த காலத்தில், ஒரு கோடை விடுமுறையில், பாளையங்கோட்டை அசோக் டாக்கீஸ் பஸ் ஸ்டாப்பில் மூணாம் நம்பர் பஸ் ஏறி, திருநெல்வேலி ஜங்ஷனில் ரயிலேறி, சென்னை எழும்பூரில் வந்து இறங்கியபோது தன்னுடைய லாம்பரெட்டா ஸ்கூட்டரோடு மாமா என்னை வரவேற்க வந்திருந்தார்.

ஒரு நாள் ரெண்டு நாள் இல்லை. ஒரு வாரம் ரெண்டு வாரம் இல்லை. முழுசாய் ஒரு மாதம் மாமா வீட்டில் உல்லாச வாசம். பள்ளிச் சிறுமிகளாயிருந்த ரெண்டு மகள்களோடு, மூன்றாவதாய் அழகான பெண்ணொருத்தியும் மாமா வீட்டில் இருந்தாள். ஸெலின். சேர நன்னாட்டிளம் பெண். சமையலுக்கும் வீட்டு வேலைக்குமென்று ஸெலின் இருந்தாலும், அவளையும் தன்னுடைய இன்னொரு மகளாய், தன்னுடைய மூத்த மகளாய்ப் பாவித்துப் பராமரிக்க, உன்னதமான வித்தியாசமானதொரு ராணுவ அதிகாரியாயிருந்தவர் நம்ம மாமா.

பாசத்தோடு அவர் ‘செல்லம்மா’ என்று ஸெலினை அழைக்கிற இதமான குரலில், அன்புள்ள அப்பாத்தனம் தூக்கலாயிருக்கும். ஞாயிற்றுக் கிழமைகளிலும் வேறு விடுமுறை நாட்களிலும் மாமா தன்னுடைய லாம்பரெட்டா ஸ்கூட்டரில் என்னைப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டு மூர் மார்க்கெட்டை நோக்கிப் போவார். மூர் மார்க்கெட்டின் பின்புறம் வரிசையாய் மாட்டுக்கறி விற்கிற கடைகள்.

கிலோ நாலே நாலு ரூபாய்! மாமா, ரெண்டே ரெண்டு கிலோ வாங்குவார். ஸெலினுடைய கைப் பக்குவத்தில் பீஃப் வறுவல் பிரமாதமாயிருக்கும். சமைக்கிறதோடு சரி, பீஃப் சாப்பிடத் தெரியாத செமி சைவக் கிறிஸ்தவப் பெண் ஸெலின். மற்ற நாலு டிக்கட்டுகளுக்கும் ஆளுக்கு அரைக்கிலோ கறி.

நாங்கள் நாலு பேரும் மசாலா மணக்கிற மாட்டுக்கறி வறுவலை ஒருகை பார்ப்போம். மாட்டுக்கறியைப் பற்றிய பேச்சு வந்தபிறகு, மாட்டுக்கறியைவிட மேம்பட்ட இன்னொரு அரிய கறியைப் பற்றியும் அறியத் தருவது சரியாயிருக்கும் இப்போது. அதற்கு, ஒரு ஃப்ளாஷ்பேக் அவசியமாகிறது. நான் ஒரு ஏழு அல்லது எட்டு வயசுச் சிறுவனாயிருந்தபோது, பாளையங்கோட்டையில் நம்ம நானாசாப் வீட்டில் வைத்து எனக்கும் அம்மாவுக்குமிடையே நடந்த உரையாடலொன்று இந்த ஃப்ளாஷ்பேக்கில் இடம் பெறுகிறது.

‘‘அம்மா அம்மா, நாம தோட்டத்ல கோழி வளக்கிறோம். தொழுவத்ல மாடு வளக்கிறோம். ஸ்டோர் ரூம்ல எலி கூட வளக்கிறோம். நாம ஒரு மான் வளத்தா என்னம்மா?’’ ‘‘குறும்பப் பாரு! ஸ்டோர் ரூம்ல எலி கூட வளக்கிறோமாம்ல! கிச்சன்ல பல்லி வளக்கிறோமே, அத வுட்டுட்ட?’’ ‘‘அதெல்லாம் வளந்துட்டுப் போகட்டும், அம்மா அம்மா, நாம ஒரு மான் வளக்கலாம்மா...’’ ‘‘நம்ம வூட்ல மிளா வளத்தோமே தெரியுமா ஒனக்கு?’’

‘‘மிளாவா? அப்படின்னா?’’ ‘‘மிளான்னா பெரிய சைஸ் மான். பெரிய சைஸ் இல்ல, பெரீய்ய சைஸ் ெமாரட்டு மிருகம். யாருக்கும் அடங்காது...’’ ‘‘அப்புறம் அது என்னாச்சிம்மா?’’ ‘‘நீயெல்லாம் பொறக்கறதுக்கு முந்தியே அந்த மிளாவோட கத முடிஞ்சி போச்சி!’’
‘‘ஐயோ, செத்துப் போச்சா! எப்டீம்மா?’’

‘‘ஒங்கப் பெரிய மாமாவுக்கு மிலிட்டரில உத்யோகம் கெடச்சதா, அந்த சந்தோஷத்த எப்படிக் கொண்டாடறதுன்னு ஒங்க நானாசாப் யோசிச்சாங்க. ஊர் விருந்து குடுக்கணும்னு முடிவாச்சி. அடங்காத மிருகமாயிருந்த அந்த மிளாவ ஏழெட்டு ஆம்பளங்க சேர்த்து அடக்கி...’’
‘‘அடக்கி...?’’

‘‘மடக்கிப் புடிச்சி...’’ ‘‘மடக்கிப் புடிச்சி?’’ ‘‘சரி, நீ ஹோம் ஒர்க் செஞ்சிட்டியா? போய் ஹோம் ஒர்க் செய்யி, போ...’’ பாளையங்கோட்டை ஃப்ளாஷ்பேக் முடிந்து இப்போது திரும்பவும் கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரான் காடன். இதையடுத்து புதிய ஆவடிச் சாலை. அதையடுத்து ெஷனாய் நகர். 7C பஸ் அதுவரைக்கும்தான் வரும். ெஷனாய் நகரைத் தாண்டினால் வெறும் பொட்டல் காடு.

அண்ணா நகரெல்லாம் அப்போது உருவாகியிருக்கவே இல்லை. இப்போது அண்ணா நகரையடுத்திருக்கிற முகப்பேர் அப்போது இல்லை. ஆஸ்பிரான் கார்டனில் வீட்டுக்கு எதிர் வீட்டில் ஓர் ஆங்கிலோ இந்தியக் குடும்பம் இருந்தது. அந்தக் குடும்பத்து மாரியான், மாமா மகள்களுக்கு சிநேகிதி.

மாரியானுடைய அண்ணன் ஜோ, நம்ம வயசுக்குத் தேறியவனாயிருந்ததால், ஜோவை நான் சிநேகிதனாக்கிக் கொண்டேன். அவன் தமிழ் பேசினால் நேக்குப் புரியாது. நான் ஆங்கிலம் பேசினால் அவனுக்குப் புரியாது. ஆனாலும் இந்தத் தகவல் தொடர்புப் பின்னடைவையும் மீறி எங்கள் சிநேகிதம் தொடர்ந்ததற்கு ஜோவுடைய வீட்டிலிருந்த ரெண்டு அபூர்வமான வஸ்துக்கள் காரணமாயிருந்தன.

ஒன்று, மண்ணெண்ணையில் வேலை செய்கிற ஃப்ரிட்ஜ். அந்த மாதிரியொரு அதிசயமான ஃப்ரிட்ஜை அதற்கு முன்போ பின்போ எங்கேயுமே பார்த்ததில்லை. ரெண்டாவது, ஜோவுடைய அப்பாவுடைய ஸ்கூட்டர். ஸ்கூட்டரை வீட்டில் வைத்துவிட்டு அப்பாவியாய் அப்பா வேலைக்குப் போய்விடுவார்.

இந்தப் பயல்தான் ஸ்கூட்டரை ஓட்டி ஓட்டி ஒரு வழி பண்ணுவான். என்னையும், பின்னால் ஏற்றிக் கொண்டு ஒரு ரெண்டு கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் சுற்றிச் சுற்றி வருவான். நான் ஸ்கூட்டர் ஸ்கூட்டர் என்று குறிப்பிட்டாலும் அவனுடைய வாயில் ஸ்கூட்டர் என்கிற வார்த்தையே வராது. லாம்பரெட்டா என்றுதான் அதிகாரபூர்வமாய்க் குறிப்பிடுவான்.

நண்பர் சாந்தன், யாழ்ப்பாணத்தில் வசிக்கிறவர், சொல்லுவார். யாழ்ப்பாணத்து மக்கள் திருச்சி வானொலியையும் சென்னை வானொலியையும் குறிப்பிடுகிறபோது ‘திருச்சி ரேடியோ சிலோன், மெட்ராஸ் ரேடியோ சிலோன் என்றுதான் சொல்லுவினம்’ என்று. டால்டா என்றால் வனஸ்பதி என்று இருப்பதைப் போல, டார்ட்டாய்ஸ் என்றால் கொசுவத்தி என்று இருந்ததைப் போல, இருபத்தஞ்சு வருஷத்துக்கு முன்னால், வானொலி என்றால் ரேடியோ சிலோன்தான். அதைப் போல், ஸ்கூட்டர் என்றால் என் லாம்பரெட்டாதான்.

கொஞ்சம் இருங்க, கொஞ்சம் இருங்க. மேலே இருக்கிற மூன்று பத்திகளையும் எழுதி முடித்த பின்னால்தான் உறைத்தது இந்த வரிகளை ‘உறவு வரும் ஒரு நாள் பிரிவு வரும்’ என்கிற சிறுகதையில் நான் ஏற்கனவே எழுதி அந்த வரிகள் அச்சிலும் வந்து பழசாகிப் போனவை என்று. ஆகவே, இப்போது இந்தக் ‘கூறியவை கூறல்’ வேண்டாம்.

இந்தச் சிறுகதையை வாசகர்கள் ரெண்டாவது முறை, மூணாவது முறை வாசிக்கிறபோது அந்த மூன்று பத்திகளையும் ஸ்கிப் செய்து விடலாம்.
பிற்காலத்தில், பெரிய மாமாவின் பெரிய மகள் கல்யாணமாகி இலங்கையில் குடியேறி, ெரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி, அவளுடைய அம்மாவைப் போலவே அநியாயமாய் அகால மரணமடைந்துவிட்டது பெரிய கொடுமை.

இதைவிட மஹாப்பெரிய கொடுமை அவளுடைய மரணம் நிகழ்ந்த தினம் அவளுடைய ரெண்டாவது குழந்தையுடைய முதல் பிறந்தநாள் என்பது. மகள் காலமான துயரச் செய்தி முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாயிருந்த மாமாவுக்கு ரொம்பத்தாமதமாய்த்தான் தெரிவிக்கப்பட்டது. மாஜி ராணுவ அதிகாரிக்கு உடம்பில்தான் முடக்குவாதமே தவிர நெஞ்சில் ஒரு போர்வீரனின் உறுதி. மகளின் இறப்பைத் தாங்கிக் கொண்டார்.

அல்லது, தாங்கிக் கொண்டதாய் நடித்தாரோ என்னமோ. கொஞ்ச நாளில் அவரும் போய்விட்டார். குழந்தை குட்டிகளோடு, துபாய்க்கும் திருவான்மியூருக்குமாய் ஷன்ட்டிங் அடித்துக் கொண்டிருக்கிற பெரிய மாமாவின் இளைய மகள், திருவான்மியூருக்கு வந்திருப்பதைத் துப்பறிந்து கண்டுபிடித்துப் போய் சந்தித்து, டின்னர் சாப்பிட்டுவிட்டுப் பேசிக் கொண்டிருந்தபோது, மாரியான், ஜோ, ஸெலின் பற்றியெல்லாம் பேச்சு வந்தது.

மாரியான் - ஜோ குடும்பம் கனகாலத்துக்கு முன்பே அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்துவிட்டதாகவும், அதன் பிறகு அவர்களோடு தொடர்பு இல்லை என்றும் சொன்னாள். ஸெலின்கூட இப்போது தொடர்பு எல்ைலக்கு வெளியேதான் இருக்கிறாளாம். அழகான, அன்பான ஸெலின் சேச்சி, கேரளாவில்தான் இருப்பாள். இது ஒரு சின்னஞ்சிறு உலகம். கேரளாவும் சின்னஞ்சிறிய மாநிலம்தான்.

ஒரு பத்து நாள் சுற்றுப் பயணத் திட்டம் போட்டு ஒரு கோம்பிங் ஆப்பரஷேன் நடத்தினால், ஸெலின் சேச்சியைக் கண்டுபிடித்தே விடலாம். இன்ஷா அல்லாஹ். மாமாவுடையவும், ஜோவுடையவும் லாம்பரெட்ட பற்றியும் பேச்சு வந்தது. லாம்பரெட்டா பிற்காலத்தில் லாம்பியாய்ச் சுருங்கிப் போய், அந்த லாம்பியும் சுருங்கிச் சுருங்கிக் காணாமற் போயே பலப்பல வருஷங்கள் ஓடிப்போய்விட்டன.

லாம்பரெட்டா லாம்பியாய் இருந்த காலத்தில் என்னிடம் ஒரு லாம்பி இருந்தது. கல்யாணமான புதுசில் மாமனார் பரிசளித்தது.சிங்காரச் சென்னையின் எல்லா ஏரியாக்களிலும் என்னைச் சுமந்து கொண்டு சுற்றியிருக்கிறது நம்ம லாம்பி. அண்ணா நகரிலிருந்து கிளம்பி, தினமும் எஸ்.பி.ஓ.ஏ பள்ளிக் கூடத்தில் நம்ம மகனைக் காலையில் கொண்டு விடுவதும், பிறகு சாயங்காலம் ஸ்கூலிலிருந்து பிக் அப் பண்ணிக் கொண்டு வருவதும் நம்ம லாம்பியில்தான்.

ஒரு நாள் சாயங்காலம் அப்படி பிக் அப் பண்ணிக் கொண்டு திரும்பி வருகையில் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்தது. திருமங்கலம் சந்திப்பு திருப்பத்தில் லாம்பியை இடது பக்கம் திருப்பியபோது, பின்னாலிருந்து படுவேகத்தில் வந்த லாரியொன்று நம்ம வாகனத்தை உரசிக் கொண்டு முன்னே சென்றது.

லாம்பியின் முன்பகுதியில் நம்ம குட்டிப் பையன் நின்ற நிலையிலிருக்க, நிலை தடுமாறி விழப்போன நான், சமாளித்துக்கொண்டு அந்த லாரியை விரட்டோ விரட்டென்று விரட்டிப் போய் ஓவர்டேக் செய்து முன்னே போய் வழிமறித்து ஸ்டாண்ட் போட்டு நிறுத்திக் கீழே இறங்கினேன். அந்த லாரி டிரைவரை ஒரு வழி பண்ணிவிடுவது என்கிற வெறியோடு பின்னால் திரும்பி ரெண்டு எட்டு வைத்தபோது அந்த லாரி டிரைவர் இறங்கி வந்தார்.

சும்மா வரவில்லை; கைகூப்பியபடி வந்தார். ‘சாரி சார். தப்புதான் சார், மன்னிச்சிருங்க சார்’ என்றார். அந்த சரண்டரை எதிர்பார்த்தேயிராத நேக்குக் கையும் ஓடலை, காலும் ஓடலை. என்னுடைய வேகமும் வெறியும் அவசர அவசரமாய் பம்மிக் கொள்ள, ‘பரவாயில்லிங்க, பாத்துப் போங்க’ என்கிற ஒரே சமாதான வாக்கியத்தில் அவருடைய பணிவையும் மன்னிப்பையும் அங்கீகரித்தேன்.

இந்தச் சம்பவம் நடந்து கூடப் பலப்பல வருஷங்கள் ஓடியே போய்விட்டன. அந்த, நம்ம அற்புதமான லாம்பி முதுமையடைந்து அடிமாட்டு விைலக்கு விற்கப்பட்டுக்கூட கனகாலமாகிவிட்டது. ஆனால், அந்த மறக்க முடியாத மாலை வேளையை இப்போது அசைபோட்டுப் பார்க்கிறபோது தோன்றுகிறது, அந்த லாரி டிரைவரோடு சிநேகபூர்வமாய்க் கைகுலுக்கியிருக்கலாமே என்று.

http://www.kungumam.co.in

  • கருத்துக்கள உறவுகள்

கண விடயங்களைக் கூற வந்து எதையும் முழுதாய் கூறமுடியாமல் தவித்து விட்டார் ஆசிரியர்....!  tw_blush: 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.