Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளம், மண்சரிவால் அழிவுற்ற வீடுகளை மீள நிர்மாணிப்பதற்காக ஏட்டிக்கு போட்டியாக உதவி

Featured Replies

வெள்ளம், மண்சரிவால் அழிவுற்ற வீடுகளை மீள நிர்மாணிப்பதற்காக ஏட்டிக்கு போட்டியாக உதவி

 

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் அழிவுற்ற வீடுகளை மீள நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்துக்கு அமெரிக்க அரசாங்கத்தின் 350 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு நேற்று ஜனாதிபதியினது உத்தியோபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கப்பட்டது. 

DBdVbSNXkAQCzFx.jpg

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் உள்ளிட்ட பிரதிநிதிகளால் அந்த நன்கொடை சிறிசேனவிடம்; உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. 

மேலும் நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளின் நிபுணத்துவ ஆற்றலை மேம்படுத்துவதற்காக 12 மில்லியன் டொலரை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது. நான்கு ஆண்டுகளில் அந்த உதவியை மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க தூதுவர் இதன்போது குறிப்பிட்டார். 

DBc-_51UAAA4ytB.jpg

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்ட பாடசாலைகளை துப்பரவு செய்வதில் அமெரிக்க பிரதிநிதிகள் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த செயற்பாடு தொடர்ந்து இடம்பெறுமென்றும் அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/20605

  • தொடங்கியவர்

அமெரிக்கா 356 மில். ரூபா நிதியுதவி

 

எம்.நேச­மணி

வெள்­ளப்­பெ­ருக்கு மற்றும் மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு அமெ­ரிக்கா 356 மில்­லியன் ரூபா நிதி­யினை (2.3 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்) மனி­த­நேய உத­வி­யாக வழங்­கு­வ­தாக இலங்­கைக்­கான அமெ­ரிக் துள்ளார். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்று அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் சந்­தித்த போதே இதனை தெரி­வித்­துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

பாது­காப்­பான குடிநீர், தேகா­ரோக்­ கிய உப­க­ர­ணங்கள், அவ­சர கால நிலையின் போது

உறை­விடப் பொருட்கள், வீட்டுத் திருத்தப் பொருட்கள் மற்றும் நோய்­களை தவிர்ப்­ப­தற்கு முக்­கி­ய­மான சுகா­தார பரா­ம­ரிப்பு சேவை­களை வழங்­கு­வ­தற்கு இந்த உத­வி­யா­னது பயன்­படும்.

அமெ­ரிக்­காவும், இலங்­கையும் மிகவும் நெருக்­க­மான பிணைப்­பினை பகிர்ந்து கொண்­டுள்­ளன அதே­போன்று தேவை­யான சந்­தர்ப்­பங்­களில் இரு நாட்டு மக்­களும் ஒரு­வ­ருக்கு ஒருவர் துணை­யாக இருந்­துள்­ளனர்” என அவர் மேலும் குறிப்­பிட்டார்.

2001 முதல், சர்­வ­தேச அபி­வி­ருத்­திக்­கான அமெ­ரிக்க நிறு­வ­னத்தின் ஓர் அங்­க­மான வெளி­நாட்டு அனர்த்த உத­விக்­கான அமெ­ரிக்க அலு­வ­லகம் அனர்த்த உதவி மற்றும் அனர்த்த ஆபத்து குறைப்பில் சுமார் 19 பில்­லியன் ரூபாவை (125 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்) வழங்­கி­யுள்­ளது.

எதிர்­கால அனர்த்­தங்­களின் ஆபத்­தினை குறைப்­ப­தற்­கான நீண்ட கால செயற்­றிட்­டங்­க­ளுக்கு அமெ­ரிக்கா தொடர்ந்து ஆத­ர­வ­ளிக்கும். பாது­காப்­பான குடி­நீரை உறுதி செய்­வ­தற்கும், அனர்த்த மறு­சீ­ர­மைப்பு மற்றும் முகா­மைத்­துவ ஆற்­றலை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் மற்றும் உள்ளூர் மக்­க­ளுடன் சமு­தா­யங்­க­ளுடன் USAIDபணி­யாற்­றி­யுள்­ளது. மேல­தி­க­மாக, 2011ஆம் ஆண்டு முதல் அமெ­ரிக்கத் தூத­ர­க­மா­னது, இயற்கை அனர்த்­தங்­களால் இடம்­பெ­யர்ந்­த­வர்­களின் தற்­கா­லிக புக­லி­டங்­க­ளாக இருக்கும் பாட­சா­லைகள் மற்றும் சுகா­தார நிலை­யங்­களின் நிர்­மா­ணத்­திற்கு 2.3 பில்­லியன் ரூபா­வினை

 (15 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள்) வழங்­கி­யுள்­ளது.

தற்­போ­தைய சூழ்­நி­லையை கண்­கா­ணித்து வரும் அமெரிக்கத் தூதரகம், மேலதிகத் தேவைகளை அடையாளம் காண்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் அனர்த்த நிவாரண அதிகாரிகளுடன் தொடர்ந்தும் நெருக்கமாக செயற்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.     

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-06-04#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.