Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவும் சீனாவும் ஏட்டிக்கு போட்டியாக உதவி 27 நாடுகளிலிருந்து குவியும் நிவாரணங்கள்

Featured Replies

இந்தியாவும் சீனாவும் ஏட்டிக்கு போட்டியாக உதவி

01-copy-7f861567753f60fb5fcdc191cccfcaf95429f867.jpg

 

லியோ நிரோஷ தர்ஷன்

27 நாடுகளிலிருந்து குவியும் நிவாரணங்கள்

இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள அனர்த்த நிலை­மை­களை கருத்தில் கொண்டு அமெ­ரிக்கா, இந்­தியா மற்றும் சீனா உள்­ளிட்ட 27 உலக நாடுகள் உதவிக் கரம் நீட்­டி­யுள்­ளன. இதே­வேளை இந்­தி­யா வும் சீனாவும் நிவா­ரண உத­வி­களை தொடர்ச்­சி­யாக மேற்­கொண்டு வரு­கின்­றன. மேலும் கிடைக்­கப்­பெறும் நிதி உத­விகள் அனைத்தும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வீடு­களை அமைப்­ப­தற்குப் பயன்­ப­டுத்­தப்­பட உள்­ள­தாக அர­சாங்கம் அறி­வித்­துள்­ளது.

இலங்­கையில் ஏற்­பட்­டுள்ள அனர்த்த நிலை­மை­களை கருத்தில் கொண்டு 44 உலக நாடுகள் நேர­டி­யாக பல்­வேறு வகையில் உத­வி­களை வழங்­கு­வ­தற்கு முன் வந்­துள்­ளன. இவற்றுள் 27 நாடுகள் ஏற்­க­னவே நிவா­ரண உத­வி­களை வழங்­கி­யுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­

வித்­ததுடன், நாடுகள் வழங்­கிய நிதி விப­ரங்­களை தற்­போது வெளி­யி­டு­வது முறை­யல்ல எனவும் குறிப்­பிட்டார்.

இந்­தி­யாவில் இருந்து மாத்­திரம் 3 கப்­பல்கள் நிவா­ரண பொருட்­க­ளுடன் இலங்­கைக்கு வந்­துள்­ளன. அதே போன்று சீனாவில் இருந்தும் மூன்று கப்­பல்­களில் நிவா­ரணப் பொருட்­க­ளுடன் சீன கடற்­ப­டையின் மீட்பு பணி­யா­ளர்­களும் வருகை தந்­துள்­ளனர். சீனாவும் இந்­தி­யாவும் இலங்­கைக்கு ஏட்­டிக்கு போட்­டி­யாக நிவா­ரண உத­வி­களை வழங்கி வரு­கின்­றன. அது மாத்­திரம் அன்றி சர்­வ­தே­சமும் இன்று இலங்­கைக்கு உதவிக் கரம் நீட்­டி­யுள்­ளது.. 

மேலும், சீன பௌத்த சங்கம் 22 மில்­லியன் ரூபா நிதி அன்­ப­ளிப்பை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் நேற்று முற்­பகல் கைய­ளித்­தது.

sri guanguan தேரர் உள்­ளிட்ட சீன பௌத்த சங்­கத்தின் தேரர்கள் இந்த நிதி அன்­ப­ளிப்­பினை ஜனா­தி­ப­தி­யிடம் கைய­ளித்­தனர். இந் நிகழ்வில் பௌத்த மற்றும் பாளி பல்­க­லைக்­க­ழ­கத்தின் உப­வேந்தர் வண. கல்­லேல்லே சும­ன­சிறி தேரரும் இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டார்.

இதே­வேளை சீன அர­சாங்­க­மா­னது தொடர்ச்­சி­யாக இலங்­கைக்கு வழங்­கி­வரும் இத்­த­கைய ஒத்­து­ழைப்­புக்­க­ளினால் இரு­நாட்­டிற்கும் இடை­யி­லான நீண்­ட­கால தொடர்­புகள் மேலும் விருத்தி அடை­கின்­ற­தெனக் குறிப்­பிட்ட ஜனா­தி­பதி இலங்கை அனர்த்­தங்­களை சந்­திக்கும் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் சீன அர­சாங்கம் உத­வி­களை வழங்­கு­வ­தை­யிட்டு தனது நன்­றியைத் தெரி­வித்தார்.

அதேபோல் சர்­வ­தேச ரீதியில் கிடைக்கும் நிதி உத­வி­களும் சீன அர­சாங்­கத்தின் நிதி உத­வி­களும் சீரற்ற கால­நி­லையால் அனர்த்­தத்­திற்­குள்­ளாகி வீடு­களை இழந்த மக்­க­ளுக்கு வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்­காக உப­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டு­மென கூறிய ஜனா­தி­பதி சீன பெளத்த சங்­கத்தின் தேரர்கள் மீண்டும் இலங்­கைக்கு வருகை தரும் சந்­தர்ப்­பத்தில் நிர்­மா­ணிக்­கப்­பட்ட வீடு­களை பார்­வை­யிட வச­தி­களை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் உறுதி கூறினார்.

இது இவ்­வா­றி­ருக்க வௌ்ளத்தால் பாதிக்­கப்­பட்ட தென்­னி­லங்கை மக்­க­ளுக்­கான உட­னடி நிவா­ரணப் பொருட்­களை ஏற்­றிக்­கொண்டு சீனா விமானம் ஒன்று நேற்று நண்­பகல் இரண்டு மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்கா பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தை வந்­த­டைந்­தது.

2.2 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் பெறு­ம­தி­யான நிவா­ர­ணப்­பொ­ருட்­க­ளுடன் குறித்த விமானம் தரை­யி­றங்­கி­யது. இதில் 600 டென்ட்­டுகள், 20000 போர்­வைகள், 5000 விரிப்­புகள், 1000 மழைக்கு பயன்­ப­டுத்தும் சப்­பாத்­துக்கள் மற்றும் 20,000 உயிர்க்­காப்பு அங்­கிகள் போன்­றவை உள்­ள­டங்­கு­கின்­றன.

அதே­வேளை, சீனாவின் செஞ்­சி­லு­வைச்­சங்க அமைப்பு அனர்த்த நிவா­ர­ணத்­திற்­கென ஒரு இலட்சம் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான நிதியை இலங்கை செஞ்­சி­லு­வைச்­சங்­கத்­திடம் கைய­ளித்­தி­ருந்­தது.

அத்­துடன், சீன வணிக நிறு­வ­னங்கள் மற்றும் சீனாவில் வாழும் இலங்­கை­யர்­களும் வேறு­வ­ழி­களில் அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நிவா­ரண உத­வி­களை வழங்­கி­யி­ருந்­தனர் என்­பதும் குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில் அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­காக சர்­வ­தேச நாடுகள் வழங்கும் நிதி உத­விகள் அனைத்தும் வெளி­வி­வ­கார அமைச்சின் வங்கிக் கணக்கில் வைக்­கப்­பட்டு , பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வீடு­களை அமைப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. இதற்கு அமைவாக வீடமைப்பு திட்டங்களுக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் போது அனர்த்த அச்சுறுத்தல் வலயங்களில் புதிய வீடுகள் அமைக்கப்பட மாட்டாது. அதே போன்று சட்ட விரோத கட்டடங்கள் குறித்தும் இதன் போது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இயற்கை அனர்த்த அச்சுறுத்தல்கள் உள்ள இடங்களில் இனி எவ்விதமான கட்டடங்களோ குடியிருப்புகளோ அமைக்க அனுமதியளிக்கப்போவதில்லை என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-06-04#page-1

 

china

நெருக்கடியான தருணங்களில் பக்கத்திலேயே இருப்போம் என்கிறது சீனா!

நெருக்கடியான தருணங்களில் சீனா எப்போதும் ஸ்ரீலங்காவின் பக்கத்திலேயே இருக்கும் என ஸ்ரீலங்காவிற்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் சீன விமானமொன்று வந்தடைந்துள்ளது.

ஸ்ரீலங்காவிற்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் இந்த உதவிப் பொருட்களை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் கையளித்துள்ளார்.

இதன்போதே, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரிடம் ஸ்ரீலங்காவிற்கான சீனத் தூதுவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

35 கோடி ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களுடன் எயர் சீனா நிறுவனத்தின் சரக்கு விமானம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதன்போது, 600 கூடாரங்கள், 20 ஆயிரம் கம்பளிப்போர்வைகள், 5 ஆயிரம் விரிப்புகள், 1000 மழைக்காலணிகள் மற்றும் 20 ஆயிரம் உயிர்காப்பு அங்கிகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.