Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞானசாரரை கைது செய்தால் நிலைமை பாரதூரமாக மாறும் காவி மீது கைவைக்க வேண்டாம்; மூன்று பௌத்த அமைப்புக்களின் தேரர்கள் எச்சரிக்கை

Featured Replies

ஞானசாரரை கைது செய்தால் நிலைமை பாரதூரமாக மாறும்

02-477359061922dc394f127ceb509cc8584bf48b20.jpg

 

காவி மீது கைவைக்க வேண்டாம்; மூன்று பௌத்த அமைப்புக்களின் தேரர்கள் எச்சரிக்கை
(க.கம­ல­நாதன்)

கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்தால் நிலைமை பார­தூ­ர­மாகும். அவரை கைது செய்­வ­தற்கு முன் பார­தூ­ர­மான இன­வாத கருத்­துக்­களை வெளி­யிடும் விக்கினேஸ்­வரன், சிவா­ஜி­லிங்கம் உள்­ளிட்­ட­வர்­களை கைது செய்ய வேண்டும் என மூன்று பெளத்த அமைப்­புக்­களின் தேரர்கள் வலி­யு­றுத்­தினர். அண்­மையில் கல­கொட அத்தே ஞான­சார தேரரை கைது செய்­யு­ மாறு அமைச்­சர்கள் குழு­வொன்று அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்த­மை­யா­னது அர­சி­ய­லமைப்­புக்கு முரணா­னது. எனவே காவியின் மீது கைவைக்க வேண்டாம் என்றும் அவர்கள் எச்­ச­ரிக்கை விடுத்­தனர். 

கொழும்பு தேசிய நூல­கத்தில் ஊழ­லுக்கு எதி­ரான அமைப்பு, அஸ்­கி­ரிய பீடம், ரத்­ம­லானை பெளத்த ஆய்வு மையம் ஆகி­ய­வற்றின் தேரர்­கள்­குழு ஒன்­றி­ணைந்து நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே மேற்­படி அமைப்­புக்­களின் தேரர்கள் இவ்­வாறு தெரி­வித்­தனர்.

ஊழல் எதிர்ப்பு இயக்­கத்தின் தலைவர் உலப்­பனே சுமங்­கள தேரர் தெரி­விக்­கையில்,

இன்று நாட்டில் ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் தனிப்­பட்ட நிலைப்­பா­டு­களை மையப்­ப­டுத்­திக்­கொண்டு இன­வாத தூண்டல் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இந்த இன­வாத செயற்­பா­டு­களின் பின்­பு­லத்தில் இருப்­ப­வர்கள் யார் என்­பதும் கேள்­விக்­கு­றியா­கவே உள்­ளது.

நாட்டில் சட்டம் என்­பது சக­ல­ருக்கும் ஒரே முறையில் செயற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தற்­கி­ணங்க வன்­மு­றைகள் எங்கு நடந்­தாலும் அங்கு சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யாக உள்ளோம்.முப்­பது வரு­டங்­கள தொடர்­சி­யான யுத்­தினை பார்த்த நாடு என்ற வகையில் எமக்கு இன­வாத செயற்­பா­டுகள் நாட்டில் தொடர வேண்டும் என்ற எண்­ண­மில்லை. அவற்றை முற்­றாக ஒழிக்க வேண்­டி­யதன் தேவையை நாங்கள் அறிவோம்.

இவ்­வா­றி­ருக்­கின்ற போது தற்­கா­லத்தில் இணை­யத்­த­ளங்கள் வாயி­லாக ஞான­சார தேரர் என்ற ஒரு­வரின் தனிப்­பட்ட விட­யங்­களை மையப்­ப­டுத்­திக்­கொண்டு அவரை கைது செய்­ய­வேண்டும் என்று விடுக்­கப்­படும் அழுத்­தங்கள் இன­வாத பிர­சா­ரங்­க­ளா­கவே அமைந்­துள்­ளன.

பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. அதன் பின்­ன­ணியில் யார் உள்­ளார்கள் என்­பது தற்­போது வரையில் மர்­ம­மா­கவே உள்­ளது. இந்த விவ­கா­ரங்கள் குறித்து சட்டம் சார்ந்த தரப்­புக்கள் அவ­தான திரும்­வேண்­டிய அவ­சியம் உள்­ளது.

இவ்­வா­றிருக்கின்ற போதுதான் அண்­மையில் ஒரு இனத்தை சார்ந்த மக்கள் குழுக்கள் ஒன்­று­கூடி ஞான­சார தேரரை கைது செய்ய வேண்டும் என்று அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்­தி­ருந்­தார்கள். அவரை கைது செய்ய வேண்­டு­மாயின் முதலில் வில்­பத்து வனத்­தைவ சீர­ழிப்­ப­வர்­களை கைது செய்ய வேண்­டிய தேவை உள்­ளது. அதனால் இன­வாத போக்கில் செல்லும் சக­ல­ரையும் நாம் வன்­மை­யாக கண்­டிக்­கின்றோம். அதேபோல் ஞன­சார தேரரை கைது செய்­யுங்கள் என்று அர­சாங்­கத்­திற்கு அழுத்தம் கொடுத்த அமைச்­சர்கள் குழு ஒரு இன மக்­களை மாத்­திரம் பிர­தி­து­வப்­ப­டுத்­திக்­கொண்டு செயற்­பட்­டமை அர­சி­ய­ல­மைப்­புக்கும் முரணான செய­ளாகும்.

எனவே இன­வா­தத்தை தூண்­டி­விடும் மற்­ற­வர்­களை விட்டு ஞான­சார தேரரை மாத்­திரம் கைது செய்ய வேண்டும் என்­பது நியா­ய­மா­ன­தல்ல. அவ்­வாறு செய்தால் நிலைமை பாரா­தூ­ர­மான அதன் பலன்­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைமை ஏற்­படும்.அத்­துடன் பெளத்­தர்கள் போல நல்­லி­ணக்­கத்தை புரிந்­துக்­கொண்­ட­வர்கள் எவரும் இருக்க முடி­யாது. அதனால் தனிப்­பட்ட ஒரு மனி­தரின் செயற்­பா­டு­களை மாத்­திரம் கொண்டு தவ­றான போக்கில் செல்ல கூடாது. அதனால் நாட்டின் ஒட்­டு­மொத்த மக்­க­ளையும் பிர­திநிதித்­து­வப்­ப­டுத்தி செயற்­பட வேண்­டிய அமைச்­சர்கள் ஒரு இனத்­திற்கு மாத்­திரம் சார்­பாக கூடி செயற்­பட்­டமை அர­சி­ய­ல­மைப்­புக்கு முரணா­ன­தாகும் என்றார்.

அஸ்­கி­ரிய பீடத்தின் அனு­நா­யக்க தேரர் ஹேகொட விபிஸ்ஸி தேரர் தெரி­விக்­கையில்,

தற்­போது எமது நாட்டில் நல்­லாட்சி நில­வு­கின்­றதை சத­க­மாக பயன்­ப­டுத்­திக்­கொண்டு சில சக்­திகள் இன­வாத செயற்­பா­டு­களை மேம்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றார்கள். அதற்­காக கல­கொட அத்தே ஞான­சார தேரரின் செயற்­பா­டுகள் சக­ல­தையும் சரி­யா­னவை என்று நாங்கள் கூற­வில்லை. அவர் தனிப்பட்ட பிரச்­சினை ஒன்­றுக்­காக பேச­வில்லை. மாறாக நாட்டின் பொது­வான பிரச்­சினை ஒன்­றிற்­காக போரா­டு­கின்ற கார­ணத்­தி­னா­லேயே அவரின் சார்பில் பேசு­கின்றோம்.

அண்­மையில் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ,அஸ்­கி­ரிய, மல்­வத்து பீடா­தி­பதிபதிகள் உள்­ளிட்ட மகா சங்க தேரர்கள் குழுவை சந்த்­தித்து தன்னை கைது செய்­வ­தற்­கான முனைப்­புக்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இதன் போது மகா­சங்க தேரர்கள் ஞான­சார தேரரை பொறு­மையா இருக்­கும்­படி அறி­வுரை வழங்கி அனுப்­பி­யி­ருந்­தார்கள். அதன் பின்னர் அவர் குரு­ணா­க­லுக்கு சென்­ற­போ­துதான் 200 க்கும் மேற்­பட்ட பொலி­ஸார்கள் சென்று வீதி­களை மறித்து அவரை கைது செய்ய முற்­பட்­டதால் தான் பிரச்­சினை முற்­றி­யது.

அதன் பின்னர் சர்­வ­மத கூட்­டத்தில் நாங்கள் பங்­கேற்­றி­ருந்த போதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டத்தில் மேற்­படி விவ­கா­ரத்தை தெரி­வித்த போது, அவர் தேரர்­களின் கருத்­துக்­களை அவ­தா­னித்­து­விட்டு பின்னர் இந்த நாட்டில் எந்த ஒரு தேர­ருக்கும் நெருக்­கடி ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளியேன் என்று உறு­தி­யாக கூறினார்.

அதனால் தான் இன்று நாங்­களும் வலி­யு­றுத்­து­கின்றோம் விக்­கி­னேஸ்வர் மற்றும் சிவா­ஜி­லிங்கம் போன்­ற­வர்கள் தனி­நாடு வேண்டும் என்று பார­தூ­ர­மான கருத்­து­களை வெளி­யி­டு­கின்ற போது அவர்­க­ளிட்­டத்தில் சட்டம் தன் கடமையை செய்யவில்லை மறு­பு­றத்தில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்­கவும் அரச சார்­பற்ற நிறு­வங்­களின் தேவைக்­கான வடக்கு மக்­க­ளுக்கு சேவை­யாற்­று­வ­தாக கூறிக்­கொண்டு இன­வாத செயற்­பா­டு­க­ளுக்கு வலு சேர்­கின்றார்.

அதனால் இந்த பிரச்­சி­னை­களை மேலும் பெரி­து­ப­டுத்­திக்­காண்­டி­ருப்­பதை விட இவற்­றுக்கு பேச்­சு­வார்த்­தைகள் மூலர் தீர்வு காண்­பதே சிறந்­தாகும். தற்­போது வடக்கு கிழக்­கிலும் கூட 400 க்கும் மேற்­பட்ட பெளத்­தர்­களின் புரா­தன ஸ்தலங்கள் அழிக்­கப்­பட்­டுள்ளன. அவற்­றுக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் இல்லை.

இந்த பிரச்­சி­னை­களை பாரா­ளு­மன்­றத்தில் பேசு­கின்ற போது அமைச்சர் ஹக்கீம் மேற்­படி விட­யங்­களை பாரா­ளு­மன்­றத்தில் பேசு­வது பொருத்­த­மல்ல என்­கின்றார். எனேவ அது குறித்தும் உரிய தரப்­புக்கள் சிந்­திக்க வேண்டும். சிங்­க­ள­வர்கள் இன­வா­திகள் என்று கூறி­னாலும் இன்றும் கூட கண்டி தலதா மாளி­கையில் இறுதிகட்ட மன்னன் ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் ஆத்ம நலன் வேண்டிதான் முதல் பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றது இதுவே நல்லிணகம் என்றார்.

பெளத்த ஆய்வு பீடத்தின் சார்பில் ஊடகவியலாளல் சந்திப்பில் கலந்துக்கொண்ட கெடவல ஹேமாலோக தேரர் தெரிவிக்கையில்,

 ஞானசார தேரர் கைது செய்யப்பட வேண்டுமாயின் அவருக்கு முன்பாக கைது செய்யப்பட வேண்டிய பலர் உள்ளார்கள். அதனால் காவியின் மீது கைவைக்காதீர்கள் என்று எச்சரிகைகைள நாங்கள் விடுக்கின்றோம்.

நாங்கள் இனவாதம் பேச முற்படவில்லை. மட்டமான அரசியல்வாதிகள் தான் இனவாதத்தை தூண்டிவிடுகின்றனர். அதனால் சட்டத்தை சகலரும் சமமாக நடைமுறைப்படுத்துங்கள் என்று வலியுறுத்துகின்றோம் என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-06#page-1

  • தொடங்கியவர்

சரணடைவாரா ஞானசாரர்?

 

(எம்.எப்.எம்.பஸீர்)

 கைது செய்வதற்காக பொலிஸாரால் தேடப்பட்டு வரும் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தான் கைதாவதைத் தவிர்த்து நீதிமன்றில் சரணடைவார் என எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அதற்கான சாத்தியங்கள் தற்போது குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஞானசார தேரர் சரணடைவது குறித்து நேற்றைய தினம் பொலிஸ் உயர் மட்டத்தினருக்கு சில தகவல்கள் கிடைத்திருந்த நிலையில், அவர் சரணடைவார் என பல தரப்பினரும் எதிர்ப்பார்த்தனர். எனினும் நேற்று அவர் சரணடையவில்லை. நேற்று ஞானசார தேரர் சரணடையவுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய புதுக் கடை நீதிவான் நீதிமன்றில் ஊடகவியலாளர்கள் பலர் காத்திருந்த போதும் ஞானசார தேரர் அங்கு வரவில்லை.

இதனிடையே ஞானசார தேரர் தான் சரணடைய போவதாக உத்தியோகபூர்வமாக எதனையும் எவருக்கும் அறிவிக்காத நிலையிலேயே சரணடையும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதால், அவரை கைது செய்வதில் எவ்வித பாதிப்புக்களும் இல்லை என பெயர் குறிப்பிட விரும்பாத உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே ஞானசார தேரை கைது செய்ய திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பிலான தடுப்புப் பிரிவின் நான்கு சிறப்புக் குழுக்கள் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கடமையில் இருந்த பொலிஸாரை அச்சுறுத்தியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை , இன மற்றும் மத கலவரங்களை தூண்டும் விதமான கருத்துக்களை வெளியிட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்ய பொலிஸாரால் ஞானசார தேரர் தேடப்பட்டு வருகின்றார். இது தொடர்பில் பல பொலிஸ் குழுக்கள் நாடளாவிய ரீதியில் பல பகுதிகளுக்கும் அனுப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்தார்.

குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்கு சமூகமளிக்காமல் மறைந்துள்ள ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்த பின் நிற்கப் போவதில்லை எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இந் நிலையில் நேற்று வரை அவர் கைது செய்யப்படாத நிலையில் அவரின் தலைமறைவு வாழ்க்கை தொடர்கிறது. இந் நிலையில் ஞானசார தேரருக்கு உயர் மட்டத்தில் உள்ள எவரேனும் ஒத்துழைப்பு வழங்கி அவரை காப்பாற்றி மறைத்து வைத்துள்ளனரா என பரவலாக சந்தேகங்கள் எழுப்பட்டு வருகின்றன. இந் நிலையிலேயே ஞானசார தேரர் நீதிமன்றில் சரணடைய உள்ளதாக தகவல்கள் நேற்று வெளியாகியிருந்தன.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-06#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.