Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாடு பிளவுபடுவதைத் தடுக்கலாம்

Featured Replies

அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாடு பிளவுபடுவதைத் தடுக்கலாம்

 
அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து நாடு பிளவுபடுவதைத் தடுக்கலாம்
 

‘’அதி­கா­ரம் பகி­ரப்­ப­டு­வ­தன் மூலம் நாடு பிள­வு­ ப­டு­வ­தைத் தடுக்க முடி­யும்.கொழும்­பில் ஒரு வகுப்­பி­ன­ரி­­டம் குவிந்து கிடக்­கும் அதி­கா­ரங்­க­ளைப் பிரித்து அவற்­றைப் பகிர்ந்­த­ளிக்க வேண்­டும்.வடக்கு -­கிழக்­குக்கு மாத்­தி­ர­மல்ல, மகி­யங்­கனை, மொன­ரா­க­லைக்­கும் அதி­கா­ரங்­கள் பகிர்ந்து கொடுக்­கப்­பட வேண்­டும்.

இவ்­வாறு அமைச்­சர் மனோ கணே­சன் சிங்­களத் தொலைக்­காட்சி ஒன்­றுக்கு வழங்­கிய நேர்­கா­ண­லில் தெரி­வித் துள்­ளார். அந்த நேர்­கா­ண­லின் முழு விவ­ரம் கீழே தரப்­பட்­டுள்­ளது.

கேள்வி: மகிந்த ஆட்சி கவிழ்­வ­தற்கு அவர் சர்­வ­தே­சத்­துக்கு வழங்­கிய வாக்­கு­றுதி நிறை­வேற்­றப்­ப­டா­மை­தான் கார­ணம் என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரன் கூறு­கின்­றார்.இதை நீங்­கள் ஏற்­றுக்­கொள்­கி­றீர்­களா?

பதில்: அதை முழு­மை­யாக ஏற்க முடி­யாது.பிர­தான கார­ணங்­க­ளுள் ஒன்­றாக அது­வும் இருக்­க­லாம்.பொரு­ளா­தார வீழ்ச்­சி­தான் மகிந்­த­வின் வீழ்ச்­சிக்­குக் கார­ணம். பொரு­ளா­தா­ரம் சரிந்து ஆட்சி கவிழ்­வ­தற்கு முன் தேர்­தலை நடத்தி ஆட்­சி­யைத் தக்­க­வைப்­ப­தற்கு விரும்பி இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­ன­தாகவே தேர்­தலை நடத்­தி­னார்.ஆட்­சியை இழந்­தார்.

இருப்­பி­னும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு சொல்­கின்ற விட­யத்­தி­லும் கவ­னம் செலுத்­தப்­படவேண்­டும். இந்த விட­யத்­தில் நாம் மெது­வா­கப் பய­ணிக்­கின்­றோம் என்று கூட்­ட­மைப்­புக் கூறு­கி­றது.அதி வேக­மா­கப் பய­ணிக்­கின்­றோம் என்று தெற்கு குற்­றஞ்­சாட்­டு ­கின்­றது.இரண்­டுக்­கும் நடு­வில் பொது­வான வேகத்­தில் நாம் பய­ணிக்க வேண்­டிய கட்­டத்­தில் இருக்­கின்­றோம்.

அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் நாம் பேசிக்­கொண்டு இருக்­கின்­றோம்.அனைத்­துப் பிரச்­சினை ­க­ளுக்­கும் எமது ஆட்­சி­யில் தீர்வு காணப்­பட வேண்­டும் என்­பதே எமது ஒரே நோக்­க­மா­கும்.அது எப்­ப­டி­யும் நிறை­வே­றும்.

சிவா­ஜி­லிங்­கத்­தின் குழப்­ப­க­ர­மான கருத்து வௌிப்­பா­டுகள்

கே:இந்த அர­சின் நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­கள் அதி­க­மாகி அது பிரி­வி­னை­வா­தத்­துக்கு இட்­டுச் செல்­லும் ஆபத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதை நீங்­கள் அவ­தா­னிக்­கி­றீர்­களா?சிவா­ஜி­லிங்­கத்­தின் கூற்று இதை உணர்த்­த­வில்­லையா?

ப:சிவா­ஜி­லிங்­கம் நடத்­திய நிகழ்­வில் ஐந்து பேர்­கூட இல்லை.மே 18ஆம் திகதி அனுஷ்­டிக்­கப்­பட்ட முள்­ளி­வாய்க்­கால் நிகழ்­வுக்கு இரண்டு அர்த்­தங்­க­ளைக் கொடுக்க முடி­யும்.ஒன்று புலி­க­ளின் மர­ணத்தை நினைவு கூர்ந்­த­தா­க­வும், அடுத்­தது மக்­க­ளின் மர­ணத்தை நினைவு கூர்ந்­த­தா­க­வும் இரண்டு கோணங்­க­ளில் அதைப் பார்க்­க­லாம்.

இறு­திப்போரில் மக்­க­ளும் மர­ணித்­தார்­கள்­தான? அவர்­களை யார் கொன்­றார்­கள் என்­பது வேறு விட­யம்.ஆனால்,மக்­கள் கொல்­லப்­பட்­டார்­கள் என்­பது உண்­மை­தானே?

தெற்­கில் 89புரட்­சி­யின்­போது மக்­கள் கொல்­லப்­பட்­டார்­கள்.அவர்­கள் இன்­றும் நினைவு கூரப்­ப­டு­கின்­ற­னர்.அது­போன்­ற­தான நினை­வு­கூ­ர­லாக வடக்கு நினைவு கூர­லை­யும் எடுத்­துக்­கொள்ள முடி­யும்.அது புலி­ க­ளின் மர­ணத்தை அனுஷ்­டிக்­கும் நிகழ்வு என்று சிவா­ஜி­லிங்­கம் சொன்­னாரா என்று தெரி­ய­வில்லை.

கே:மக்­க­ளைக் கொன்­ற­வர்­கள் படை­யி­னர் என்று அவர் கூறுகின்றாரே?

ப:அந்­தக் குற்­றச்­சாட்டை சம்­பந்­தன் முன்­வைத்­தாரா?சுமந்­தி­ரன் முன்­வைத்­தாரா?அல்­லது ஒட்­டு­மொத்தத் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு முன்­வைத்­ததா?சிவா­ஜி­லிங்­கம், ரெலோ கட்­சி­யைச் சேர்ந்­த­வர்.அவ­ரது தலை­வர் சம்­பந்­தன் அல்ல; செல்­வம் அடைக்­க­ல­நா­தன்.

உண்­மை­யில் இது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் பிரச்­சினை.சிவா­ஜி­லிங்­கம் போன்­ற­வர்­களை கூட்­ட­மைப்­புத்­தான் கட்­டுப்­ப­டுத்த வேண்­டும்.

இவர் இதற்கு முன்­பும் பல தட­வை­கள் இவ்­வாறு கூறி இருக்­கின்­றார்.என்­னு­டம் பல தட­வை­கள் சண்டை பிடித்தும் இருக்­கின்­றார்.நான் அவ­ருக்­குப் பதில் கூறப் போவ­தில்லை.அவர் ஒரு குழப்­ப­வாதி.அவ­ரைக் கணக்­கில் எடுக்­கா­மல் இருப்­பதே மேல்.

கே: சிவா­ஜி­லிங்­கத்­தின் கூற்­றுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடி­யாதா?

ப:இது பார­தூ­ர­மான பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது என்­றால் சட்ட நட­வ­டிக்கை எடுக்க முடி­யும்.நான் மீண்­டும் சொல்­கி­றேன்.அவரை ஊட­கங்­கள் மிகைப்­ப­டுத்­தா­மல் இருந்­தாலே போதும்.

கே:அவர் மக்­க­ளின் மர­ணத்தை அனுஷ்­டித்­தல் என்ற போர்­வை­யில் புலி­க­ளின் மர­ணத்தை அனுஷ்­டித்­தார் என்று அர்த்­தம்­கொள்ள முடி­யாதா?

ப:அப்­ப­டி­யென்று நான் எப்­படி நினைப்­பது?சிவா­ஜி­லிங்­கத்­தின் கட்­சி­கூட புலி­க­ளுக்கு எதி­ரான கட்­சி­தானே? அந்­தக் கட்­சி­யின் முன்­னாள் தலை­வர் சிறி சபா­ரத்­தி­னத்­தைக் கொன்­ற­வர்­கள் புலி­கள்.ரெலோ அப்­போது புலி­க­ளுக்கு எதி­ரா­கப் போரா­டி­யது. இத­னால் அவர் புலி­களை நினை­வு­ கூர்ந்­தார் என்று சொல்ல முடி­யாது.

ஆனால்,போரில் மக்­கள் இறந்­த­மைக்­குப் படை­யி­னர்­தான் கார­ணம் என்று அவர் கூறு­கின்­றார்.அப்­ப­டிக் கூற­மு­டி­யுமா என்று சட்­டமா அதி­பர்­தான் பதில் கூற வேண்­டும்.நான் சிவா­ஜி­லிங்­கத்தை ஒரு பார­தூ­ர­மான-­ பெரிய அர­சி­யல்­வா­தி­யா­கப் பார்ப்­ப­தில்லை.

கே:இவ­ரின் கூற்றுத் தொடர்­பில் அரசு நட­வ­டிக்கை எடுக்­கா­விட்­டால் தெற்கு கல­வ­ர­ம­டை­யாதா?

ப:தெற்கு மக்­கள் பக்­கு­வ­மா­ன­வர்­கள்.அரசு சில பிரச்­சி­னை­க­ளுக்கு பதி­ல­ளிக்­கப் போய் அது மிகப்பெரிய பிரச்­சி­னை­க­ளில் முடி­யும் வாய்ப்­பும் உண்டு.அப்­ப­டியே விட்­டு­விட்­டால் அது தானாக மறைந்­து­வி­டும்.

கே:நகத்­தால் சுரண்டி வீச வேண்­டிய பிரச்­சி­னை­கள் கணக்­கில் எடுக்­கா­மல் விடப்­பட்­ட­தால் அதை இரும்­பால் அடித்­துக்­கூட கழட்ட முடி­யா­மல் போன வர­லாறு இருப்­பதை மறந்­து­விட்­டீர்­களா?

ப:மறக்­க­வில்லை.இதெற்­கெல்­லாம் ஒரே தீர்வு, நாட்டு மக்­க­ளி­டையே முடி­யு­ மா­ன­வரை அதி­கா­ரத்­தைப் பகிர்ந்து கொடுப்­ப­து­தான்.அதி­கா­ரம் பகி­ரப்­ப­டு­வ­தன் மூலம் நாடு பிள­வு­ ப­டு­வ­தைத் தடுக்க முடி­யும்.கொழும்­பில் ஒரு வகுப்­பி­ன­ரி­­­­டம் குவிந்து கிடக்­கும் அதி­கா­ரங்­க­ளைப் பிரித்து கிரா­மிய ரீதி­யில் வழங்­க­வேண்­டும்.வடக்­கு- கி­ழக்­குக்கு மாத்­தி­ர­மல்ல மகி­யங்­கனை, மொன­ரா­க­லைக்­கும் அதி­கா­ரங்­கள் பகிர்ந்து கொடுக்­கப்­பட வேண்­டும்.

அதி­கா­ரங்­கள் இவ்­வாறு பகி­ரப்­ப­டு­வ­தன்­மூ­லம் எந்­தப் பிரச்­சி­னை­யும் ஏற்­ப­டாது.இருக்­கின்ற பிரச்­சி­னை­கள் தீருமே தவிர புதி­தாக எந்­தப் பிரச்­சி­னை­யும் தோன்­றாது.தெற்­கில் அன்று புரட்சி ஏற்­பட்­ட­மை­கூட இந்த அதி­கா­ரப் பகிர்­வைக் கோரித்­தான்.

இதைத் தெளி­வாக விளங்­கிக்­கொண் டால் எம்­மால் பிரச்­சி­னை­களை மிக இல­கு­வா­கத் தீர்த்­துக்­கொள்ள முடி­யும். இந்த அதி­கா­ரப் பகிர்­வைக் கொடுப்­ப­தற்­கா­கவே நாம் இப்­போது பாடு­பட்­டுக்­கொண்டு இருக்­கின்­றோம்.

பொது வாக்­கெ­டுப்பு யோச­னையை சுதந்­தி­ரக்­கட்சி நிரா­க­ரிக்கிறது

கே:நீங்­கள்­தான் அதி­கா­ரப் பகிர்­வுக்­குத் தடை­யாக உள்­ளீர்­கள் என்று அமைச்­சர் டிலான் பெரேரா கூறு­கின்­றாரே?

ப:அதி­கா­ரங்­கள் பகி­ரப்­பட்டு அவை கிராம மட்­டங்­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டும் என்று நான் கூறு­வ­தையே டிலா­னும் கூறு­கின்­றார்.பிரச்­சினை என்­ன­வென்­றால், நாம் பொது வாக்­கெ­டுப்­பைக் கோரு­வ­தும் அதைச் சுதந்­தி­ரக் கட்சி நிரா­க­ரிப்­ப­தும்­தான்.இந்த விட­யத்­தில்­தான் நாங்­கள் முரண்­பட்டு நிற்­கின்­றோம்.

புதிய அர­ச­மைப்­பைக் கொண்டு வரு­வ­து­மில்லை, பொது வாக்­கெ­டுப்பை நடத்­து­வ­து­மில்லை என்று சுதந்­தி­ரக் கட்சி தீர்­மா­னம் எடுத்­துள்­ளது.இருக்­கின்ற அர­மைப்பு திருத்­தப்­பட்­டால் போதும் என்­பது அவர்­க­ளின் நிலைப்­பா­டா­கும்.

ஆனால்,ஐக்­கிய தேசிய முன்­ன­ணி ­யான எமது நிலைப்­பா­டா­னது புதிய அர­ச­மைப்பு கொண்டு வரப்­பட வேண்­டும்;அது பொது வாக்­கெ­டுப்­புக்கு விடப்­பட வேண்­டும் என்­ப­தா­கும்.இதுவே உண்­மையை மறைக்­கா­மல் மக்­க­ளி­டம் வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் நடந்­து­கொள்­வ­தாக இருக்­கும்.

மக்­க­ளி­டம் உண்­மை­யைக் கூறு­வ­தற்கு முற்­ப­டும் எமது முயற்­சியை எப்­ப­டிக் குறை­கூற முடி­யும்? அதி­கா­ரப் பகிர்வு வழங்­கப்­பட்­ட­தன் பின்­னர் பிரச்­சி­னை­கள் எவை­யும் ஏற்­ப­டா­மல் இருப்­ப­தற்கு எமது வெளிப்­ப­டைத் தன்மை கார­ண­மாக அமை­யும்.

பொது வாக்­கெ­டுப்­புக்கு விடப்­ப­டு­ வ­தன்­மூ­லம் நாம் எதைக் கொடுக்­கப் போகி­றோம் என்­பதை மக்­கள் அறிந்­து­கொள்­வார்­கள்.அதை ஏற்­றுக்­கொண்­டால் ஆத­ரித்து வாக்­க­ளிப்­பர்;ஏற்­கா­விட்­டால் தோற்­க­டிப்­பர்.இது­தான் ஜன­நா­ய­கம்.

ஆனால்,இந்­தச் சந்­தர்ப்­பத்­தில் பொது வாக்­கெ­டுப்­புக்­குச் செல்­வது பொருத்­த­மற்­றது.அப்­ப­டிச் சென்­றால் அர­ச­மைப்­புக்கு மேல­தி­க­மாக மக்­கள் எழுப்­பும் கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளிக்­கும் நிலை ஏற்­ப­டும் என்று சுதந்­தி­ரக் கட்சி கூறு­கின்­றது.

கே: இது தொடர்­பில் பிர­தான இரண்டு கட்­சி­க­ளும் மாறு­பா­டான நிலைப்­பாட்­டைக் கொண்­டி­ருப்­பதை நீங்­கள் எப்­ப­டிப் பார்க்­கின்றீர்­கள் ?

ப: இது­தான் ஜன­நா­ய­கம்.இரண்டு கட்­சி­க­ளும் இணைந்து ஆட்சி அமைத்­தி­ருப்­ப­தால் அந்­தந்­தக் கட்­சி­க­ளின் நிலைப்­பாடு மூடி மறைக்­கப்­பட வேண்­டும் என்று அர்த்­த­மில்லை. இரண்டு கட்­சி­க­ளும் பேசி இறு­தி­யில் ஒரு நல்ல முடி­வுக்கு வரு­வோம்.அதி­கா­ரப் பகிர்வை மக்­க­ளுக்கு வழங்கி அனைத்­துப் பிரச்­சி­னை­க­ளுக்­கும் முற்­றுப் புள்ளி வைப்­போம்.

சம்­பந்­தன் சரியான எதிர்க்­கட்­சித் தலை­வரல்லர்

கே: இறு­தி­யாக உங்­க­ளி­டம் ஒரு கேள்வி.நாடா­ளு­மன்­றத்­தில் பிர­தான எதிர்­கட்­சித் தலை­வர் யார்?

ப: தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் தலை­வர் ஆர்.சம்­பந்­தன்.

கே:அந்­தப் பத­வி­யின் பெயரை அவர் காப்­பாற்­று­கி­றாரா?

ப: அவர் பிர­தான எதிர்­கட்­சித் தலை­வர் பத­வியை வகித்­தா­லும், உண்­மை­யான எதிர்­கட்­சித் தலை­வர் சம்­பந்­தன் இல்லை என்­பதை நான் ஏற்­றுக்­கொள்­கி­றேன்.சம்­பந்­தன் முழு நாட்­டின் பிரச்­சி­னை­க­ளை­யும் நாடா­ளு­மன்­றில் பேசு­வ­தில்லை.வடக்கு-­ கிழக்கு பிரச்­சி­னை­களை மட்­டும்­தான் பேசு­கின்­றார்.அர­சி­யல் கார­ணங்­க­ளுக்­காக அவர் இந்­தப் பத­வியை வகிக்­கின்­றார்.

ஆனால்,அவர் எதிர்­கட்­சித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­ட­தன்­மூ­லம் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு தனி நாட்­டுக் கோரிக்­கை­யைக் கைவிட்­டு­விட்­டது என்ற செய்தி சிங்­கள மக்­க­ளுக்­குச் சொல்­லப்­பட்­டுள்­ளது. இது மிக முக்­கி­ய­மான விட­யம்.அதி­கா­ரப் பகிர்வு விட­யத்­திற்கு இந்­தச் செய்தி பெரிய உத­வி­யாக இருக்­கும்.

நாம் இந்தத் தேசத்­தின் ஒரு பங்­கா­ளி­யாக மாறி­விட்­டோம் என்­ப­தும் தனி நாட்­டுக் கோரிக்­கையை கைவிட்­டு­விட்­டோம் என்­ப­தும்­தான் அந்­தச் செய்­தி­யா­கும். உண்­மை­யில் இது அவ­சி­ய­மான செய்தி.சிங்­கள மக்­கள் மத்­தி­யில் இருந்த சந்­தே­கத்தை, தப்பெண்­ணத்தை நீக்­கு­வ­தற்கு இந்­தச் செய்தி உத­வி­யுள்­ளது என்றே கூற வேண்­டும், என்­றார்.

http://uthayandaily.com/story/5387.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.