Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவறான பாதையில் பயணிக்கும் அரசு எச்சரிக்கிறார் அத்துரலிய ரத்னதேரர்; நல்லாட்சியை உருவாக்கியது இதற்காகவல்ல என்றும் தெரிவிப்பு

Featured Replies

தவறான பாதையில் பயணிக்கும் அரசு

Athuraliya-5550b04feb93a1d51c7f2753b00030feda72d68b.jpg

 

எச்சரிக்கிறார் அத்துரலிய ரத்னதேரர்; நல்லாட்சியை உருவாக்கியது இதற்காகவல்ல என்றும் தெரிவிப்பு

 

நாட்டின் பொரு­ளா­தார செயற்­பா­டு­க­ளிலும் சர்­வ­தேச உடன்­ப­டிக்­கைகள் விட­யத்­திலும் மிகவும் மோச­மான கொள்­கை­களை அர­சாங்கம் கடைப்­பி­டித்து வரு­கின்­றது. தேசிய அர­சாங்­கத்­தினுள் ஒற்­று­மையும் புரிந்­து­ணர்வும் இல்­லாது போயுள்­ளன. எனவே இந்த அர­சாங்­கத்தின் மீது இனியும் நம்­பிக்கை வைக்க முடி­யாது என தேசிய மஹா சபையின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அத்து­ர­லிய ரத்ன தேரர் தெரி­வித்தார்.

இந்த அர­சாங்கம் இன்னும் மூன்று ஆண்­டு­க­ளுக்கு மாத்­தி­ரமே செயற்­பட முடியும். அதன் பின்னர் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவார் எனவும் அவர் குறிப்­பிட்டார். இலங்கை தேசிய மஹா சபையில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த போதே அவர் இதனை குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில்,

இன்று நாட்டின் அர­சியல் பயணம் மிகவும் மோச­மான வகையில் அமைந்து வரு­கின்­றது. பொரு­ளா­தார நகர்­வுகள் மிகவும் மோச­மான வகையில் விமர்­சிக்­கக்­கூ­டிய வகையில் உள்­ளன. பிர­தமர் மற்றும் ஐக்­கிய தேசியக் கட்சி முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் ஜனா­தி­பதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்கு தெரி­ய­வில்லை. தீர்வை வரி தொடர்பில் பிர­தமர் காரி­யா­லயம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை மிகவும் பார­தூ­ர­மான வகையில் அமைந்­துள்­ளது. அதேபோல் பொரு­ளா­தார ஒப்­பந்­தங்கள் என்ற அடிப்­ப­டையில் இவர்கள் மேற்­கொள்ளும் நகர்­வு­களும் மிகவும் மோச­மான வகையில் அமைந்­துள்­ளன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்கு வந்­த­வுடன் அவ­ரது கொள்கை பிர­க­ட­னத்தில் பொரு­ளா­தாரம் தொடர்பில் வெளி­யிட்ட கருத்­து­க­ளுக்கு அமை­வாக இன்று செயற்­ப­ட­வில்லை.

இன்­றைய பொரு­ளா­தார கொள்கை ஒரு­சில கொள்­ளை­யர்­க­ளுக்கு ஏற்ற வகை­யில்­ உள்­ளன. தமது தனிப்­பட்ட வியா­பா­ரத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு இந்த சர்­வ­தேச பொரு­ளா­தார உடன்­ப­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. இன்று அர­சியல் வாதி­க­ளுக்கு எந்­த­வொரு பொறுப்­புக்­கூறும் தன்­மையும் இல்­லாமல் போய்­விட்டது.

அர­சாங்­கத்தில் ஏதேனும் தவ­றுகள் இடம்­பெற்றால் அது எமது உயிரை பறிப்­ப­தற்கு சம­மா­ன­தாகும். நாம் போராடி ஆட்­சியை கவிழ்த்து நல்­லாட்­சியை உரு­வாக்­கினோம். தலை­மைத்­து­வத்தை உரு­வாக்கி ஆட்­சியில் அமர வைத்த பின்னர் இவர்­களும் நாட்டில் மோச­டிகள் கொள்ளை, ஊழல் நட­வ­டிக்­களை மேற்­கொண்டு மக்­களை கஷ்­டத்­திற்கு ஆளாக்­கினால் இறு­தியில் நாம் உரு­வாக்­கிய இந்த ஆட்­சி­யிலும் ஏமாற்­றமே மிஞ்சும். இந்த தேசிய அர­சாங்­கத்தில் ஒற்­றுமை இல்லை. இணக்­கப்­பாடு இல்லை.

இந்த அர­சாங்­கத்தில் நம்­பிக்கை வைத்த காலம் கடந்­து­விட்­டது. இந்த அர­சாங்­கத்தின் மீது இருந்த நம்­பிக்கை இழக்­கப்­பட்டு விட்­டது. ஆனால் ஒன்றை மாத்­திரம் செய்ய முடியும். அதா­வது இனியும் நடக்­க­வி­ருக்கும் அநி­யா­யங்­களை இந்த ஆட்­சியில் இருந்து தடுக்க முடியும்.

இன்று அர­சாங்கம் சிந்­திக்கும் நட­வ­டிக்­கைகள் மிகவும் மோச­மா­ன­தாக அமைந்­துள்­ளன. எதிர்­வு­கூறல் தொடர்பில் நாம் எப்­போதும் சிந்­திக்கப்போவ­தில்லை. அர­சாங்­கத் தின் கொள்கை தொடர்பில் மாத்­தி­ரமே நாம் எப்­போதும் சிந்­தித்து வரு­கின்றோம். மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­பதி ஆவார் என நாம் நினைக்­க­வில்லை.

அந்த சூழ்­நி­லையில் அவர் ஜனா­தி­ப­தி­யாக முன்­வந்தார். மேலும் இந்த அரசாங்கம் நீண்டகாலம் நீடிக்கப் போவதில்லை. இந்த அரசாங்கம் இன்னும் மூண்டு ஆண்டுகள் மாத்திரமே நகர முடியும். இன்னும் இரண்டு ஆண்டுகள் கடக்கும் போது எம்மால் தேர்தலை வைக்க முடியும். அதன் பின் புதிய ஜனாதிபதி ஒருவரை உருவாக்கும் நிலைமை ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-09#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.