Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதச் சட்டம் ஏன் முன்னாள் போராளிகள் மீது பாயவில்லை? கேள்வி எழுப்புகின்றது மகிந்த ஆதரவு அணி

Featured Replies

பயங்கரவாதச் சட்டம் ஏன் முன்னாள் போராளிகள் மீது பாயவில்லை?

கேள்வி எழுப்புகின்றது மகிந்த ஆதரவு அணி

 
பயங்கரவாதச் சட்டம் ஏன் முன்னாள் போராளிகள் மீது பாயவில்லை?
 

தெற்கில் சில குற்றச் செயல்களுக்காக நடைமுறைப்படுத்தப்படுகின்ற பயங்கரவாதத் தடைச் சட்டம் வடக்கில் முன்னாள் போராளிகள் மீது நடைமுறைப்படுத்தப்படாதது ஏன்?
இவ்வாறு மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
கொழும்பிலுள்ள தேசிய வளப் பாதுகாப்பு நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு முன்னாள் தொழிலாளர் விவகார அமைச்சரும் ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு ஆதரவளிப்பவருமான காமினி லொக்குகே கருத்துத் தெரிவித்தார். அதன்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார்.

அவர் தெரிவித்ததாவது-

எந்தவித சாட்சியும் இன்றி முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க ஒருவருடகாலமாக சிறை வைக்கப்பட்டார். ஆனால் முகமாலையில் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய முன்னாள் போராளிக்கு ஒரே வாரத்தில் பிணை வழங்கப்பட்டது.
முஸ்லிம் மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதற்கு கூட்டு அரரே பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானவார தேரரை பயன்படுத்துகின்றது.
தேர்தலை நடத்துவதற்கு அரசு பயப்படுகிறது. அதைத் தடுப்பதற்கான சட்டதிட்டங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். அதற்காகவே ஞானசார தேரரை பயன்படுத்துகின்றனர். அன்று ஞானசார தேரரைப் பயன்படுத்தியே மனிந்த ராஜபக்சவுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான உறவை முறிவடையச் செய்தனர். மீண்டும் அதனை செய்யவே முயற்சிக்கின்றனர்.
சிங்கள, தமிழ் உள்ளிட்ட அனைவரும் சகவாழ்வுடன் இருக்க வேண்டும் என்பதையே ஒன்றிணைந்த எதிர்கட்சி எதிர்பார்க்கிறது. அதற்காக அவர்கள் கேட்கின்ற அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதல்ல. இன்று வடபகுதியை எடுத்துக்கொள்ளுங்கள். பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய சந்தேக நபருக்கு ஒருவாரத்தில் பிணை வழங்கப்பட்டது. இங்கே பொலிஸாருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்டால் கை,கால் இன்றிதான் செல்ல நேரிடும். இல்லையேல் தாக்க முயற்சித்ததாக கூறி சூடு நடத்தி கொல்வார்கள்.
பொலிஸ் ஜீப் வண்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோக விவகாரம் மிகப்பெரிய செய்தியாக பிரசுரமாகியது. விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவரும், புனர்வாழ்வு பெற்ற போராளியே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தினார் பொலிஸார் தெரிவித்திருந்தனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் இவர்களை நீதிமன்றத்தில் முன்நிறுத்த இயலாதா?. ஆதாரங்களை மாற்றியதாக முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஒருவருடமாக சிறைவைக்கப்பட்டார். அவர் கொலை செய்யவில்லை, பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை. ஆதாரங்களை மாற்ற உதவியதாக குற்றச்சாட்டு காணப்படுகிறது. கொலைக் குற்றச்சாட்டில் பிள்ளையான் ஒருவருடமாக சிறை வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபருக்கு ஒருவாரத்தில் பிணை வழங்கப்பட்டது. இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் உள்ளன”-என்றார்.

http://uthayandaily.com/story/5829.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.