Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல் ஒரு நாள் போட்டி ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட்இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி

Featured Replies

முதல் ஒரு நாள் போட்டி ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட்இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி

செயிண்ட் லூசியாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தது.

 
முதல் ஒரு நாள் போட்டி ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட்இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி
 
செயிண்ட்லூசியா:

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்தது.

ஜாவித் ஆட்டி 81 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் பந்து வீச்சில் சிக்கி சின்னா பின்னமானது.
 
201706101049469478_nfnrx9uo._L_styvpf.gi


வெஸ்ட்இண்டீஸ் அணி 44.4 ஓவரில் 149 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. ரஷித் கான் 8.4 ஓவரில் 18 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தினார். ஆனால் ஆப்கானிஸ்தான் 63 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/06/10104946/1090019/Afghanistan-beat-West-Indies-by-63-runs.vpf

  • தொடங்கியவர்

ரஷித்தின் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது மேற்கிந்தியத் தீவுகள்

ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு எதி­ரான முத­லா­வது ஒரு நாள் போட்­டியில் மேற்­கிந்­­தியத் தீவுகள் அணி பரி­தா­ப­க­ர­மாக தோற்­றது.ஆப்­கா­னிஸ்தான் கிரிக்கெட் அணி மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு 3 போட்­டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளை­யா­டு­கி­றது. 

264289.jpg

இதில் முதல் போட்டி நேற்­று­முன்­தினம் செயின்ட் லூசி­யாவில் நடை­பெற்­றது. இந்தப் போட்­டியில் முதலில் ஆடிய ஆப்­கா­னிஸ்தான் 50 ஓவர்­களில் 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 212 ஓட்­டங்­களை எடுத்­தது.

264286.jpg

ஜாவித் ஆடி 81 ஓட்­டங்­களைப் பெற்றார். பின்னர் விளை­யா­டிய மேற்­கிந்­தியத் தீவுகள் அணி அடுத்­த­டுத்து விக்­கெட்­டு­க்களை இழந்து திண­றி­யது. சுழற்­பந்து வீச்­சாளர் ரஷித்கான் பந்து வீச்சில் சிக்கி மேற்கிந்தியத் தீவுகள் சின்னாபின்­ன­மா­னது.

264285.jpg

இறு­தியில் 44.4 ஓவர்களில் 149 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது.ரஷித் கான் 8.4 ஓவர்கள் பந்­து­வீசி 18 ஓட்­டங்­களைக் கொடுத்து 7 விக்கெட்டுக்களை வீழ்த்­தினார்.இதனால் ஆப்­கா­னிஸ்தான் 63 ஓட்டங்கள் வித்­தி­யா­சத்தில் அபார வெற்றி பெற்றது. 

http://www.virakesari.lk/article/20816

  • தொடங்கியவர்

ரஷீத் கான் மீண்டும் மிரட்டல் பவுலிங்: ஆப்கானை போராடி வென்றது மே.இ.தீவுகள்

 
ராஸ்டன் சேஸிற்கு அருமையான் பந்தை வீசி ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்திய ஆப்கன் பவுலர் ரஷீத் கான். | படம்.|ஏ.எஃப்.பி.
ராஸ்டன் சேஸிற்கு அருமையான் பந்தை வீசி ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்திய ஆப்கன் பவுலர் ரஷீத் கான். | படம்.|ஏ.எஃப்.பி.
 
 

செயிண்ட் லூசியாவில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கான் அணி எடுத்த 135 ரன்களை விரட்டிய மே.இ.தீவுகள் 6 விக்கெட்டுகளை இழந்து போராடி வெற்றி பெற்றது.

முதல் ஒருநாள் போட்டியில் லெக் ஸ்பின்னர் ரஷீத் கான் 18 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை கைப்பற்ற மே.இ.தீவுகள் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. இந்த 2 வது போட்டியிலும் ரஷீத் கான் மீண்டும் அச்சுறுத்தினார்.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்து 37.3 ஓவர்களில் 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 40/0 என்று இருந்த நிலையில் ரஷீத் கானிடம் 3 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து 62/3 என்றும் பிறகு 72/4 என்று தடுமாறியதோடு 98/5 என்று தோல்வி முகம் காட்டியது. மே.இ.தீவுகள் அணியில் ஹோப் என்ற வீரர்தான் 48 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து ஹோப் கொடுத்தார். இதனால் 39.2 ஒவர்களில் 138/6 என்று மே.இ.தீவுகள் போராடி வெற்றி கண்டது. இதன் மூலம் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது, இன்னும் ஒருபோட்டி மீதமுள்ளது.

குல்பதீன் நயிப் என்ற ஆப்கான் வீரர் பேட்டிங்கில் 51 ரன்கள் என்று அரைசதம் கண்டதோடு, ரஷீத் கானுடன் இணைந்து மே.இ.தீவுகளை அச்சுறுத்தி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

ரஷீத் கான் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் லெக்பிரேக், கூக்ளிகளை வீசும் பவுலர், பந்துகள் பிட்ச் ஆன பிறகு சரேலென்று செல்லும். அஸ்கர் ஸ்டானிக்ஸாய், ஆப்கான் கேப்டன், ரஷீத் கானை 7-வது ஓவரில்தான் கொண்டு வந்தார், அதற்குள் மே.இ.தீவுகளின் எவின் லூயிஸ், கெய்ரன் போவல் 37 ரன்களை சேர்த்திருந்தனர்.

முதல் ஓவரிலேயே இவரது கூக்ளியை போவெல் எட்ஜ் செய்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தார், பிறகு ரவுண் த விக்கெட்டில் சென்று லூயிசை எல்.பி. செய்தார். உயர்தரப் பந்து வீச்சில் மே.இ.தீவுகள் வீரர்கள் திணறினர், எந்தப் பந்து திரும்பும், எந்தப் பந்துதிரும்பாது என்ற சந்தேகத்தில் தட்டுத் தடுமாறி தடவினர்.

இவரை 5 ஓவர்களுக்குப் பிறகு ஆப்கன் கேப்டன் கட் செய்தார், இது ஏன் என்று தெரியவில்லை. நயீப் வந்து ஜொனாதன் கார்ட்டரையும், ஜேசன் மொகமதுவையும் வீழ்த்தினார். மீண்டும் ரஷீத் கானைக் கொண்டு வந்தபோது ராஸ்டன் சேசை அருமையான லெக்ஸ்பின்னில் வெளியே இழுக்க, பந்து ஏமாற்றியது, ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்தினார். ஆனால் ஹோப், போவெல், ஹோல்டர் பாதுகாப்பாக வெற்றிக்கு இட்டுச் சென்றனர்.

முன்னதாக ஆப்கான் பேட்ஸ்மென்களின் ஷார்ட் பிட்ச் பவுலிங் பலவீனத்தை மே.இ.தீவுகள் பயன்படுத்தி 135 ரன்களுக்கு அந்த அணியை சுருட்டியது. கப்ரியேல், ஹோல்டர், ஜோசப், ஆஷ்லி நர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். சேஸ் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சமநிலை பெற்றனர்.

http://tamil.thehindu.com/sports/ரஷீத்-கான்-மீண்டும்-மிரட்டல்-பவுலிங்-ஆப்கானை-போராடி-வென்றது-மேஇதீவுகள்/article9725313.ece?homepage=true

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.