Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா உறுப்பினர்

Featured Replies

கடை எரிப்பு: கைதானவர் பொது பல சேனா உறுப்பினர்

 

Bodu-Bala-Sena.jpg
 
மஹரகமவில் அடுத்தடுத்து நான்கு வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
 
நாட்டின் சில் பகுதிகளில், கடந்த சில நாட்களாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு வருவதாக எரிக்கப்படும் குற்றச்சாட்டை அடுத்து குறித்த நபரை பொலிசார் கைது செய்திருந்தனர்.
 
இந்நிலையில், இன்று (11) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கருத்துத் தெரிவித்த பொலிஸ் மாஅதிபர், மஹரகம கடை எரிப்புச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், பொது பல சேனா அமைப்பின் உறுப்பினர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 
நாட்டின் பல பகுதிகளிலும் இன முறுகலையும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சீர்குலைக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற இவ்வாறான தனிநபர்கள் மற்றும் குழுவினர் தொடர்ந்தும் கைது செய்யப்படுவர் என அவர் சுட்டிக் காட்டினார்.
 
இதேவேளை, இனவாத கருத்துகளை வெளியிட்டு வரும் பொது பல சேனா அமைப்பின் செயலாளர், ஞானசார தேரர், இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டார் எனும் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகாமை தொடர்பில், நீதிமன்றத்தினால் அவருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள ஞானசாரவை தேடும் பணியில், 4 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

http://www.thinakaran.lk/2017/06/11/குற்றம்/18033

  • தொடங்கியவர்

நுகேகொடை,மஹரகமவில் முஸ்லிம் வர்த்தக நிலையங்களுக்கு தீ வைத்தவர் ஞான­சார தேர­ருக்கு நெருக்­க­மா­னவர் விசா­ர­ணையில் அதிர்ச்சித் தக­வல்கள்; பொதுபல சேனா­வுடன் நீண்ட கால உறவு என்­கி­றது பொலிஸ்

Published by Gnanaprabu on 2017-06-12 09:37:00

 

நுகே­கொடை, மஹ­ர­கம பகு­தி­களில் நான்கு முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்­களை தீ வைத்து எரித்­தமை தொடர்பில் கைதுசெய்­யப்­பட்­டுள்ள பிர­தான சந்­தேக நபர்  பொதுபல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு மிக நெருக்­க­மா­னவர் என தெரி­ய­வந்­துள்­ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்­சா­ளரும் பொலிஸ் மா அதி­பரின் அலு­வ­லக பிர­தா­னி­யு­மான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

குறித்த சந்­தேக நபர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்­போது வரை  தேர­ருடன்  மிக நெருக்­க­மாக செயற்­பட்டு வரு­வ­தா­கவும், அந்த அமைப்­புடன் தொடர்பில் உள்ள மேலும் சில இன­வாத கும்­பல்­களின் தலை­வர்­க­ளு­டனும் அவர் நெருக்­க­மான உற­வினைப் பேணி வரு­வதும் இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார். 

அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற கடும்   விஷேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே பொலிஸ் ஊடக பேச்­சாளர்  இதனைத் தெரி­வித்தார்.பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி மேலும்  குறிப்­பி­டு­கையில்,கடந்த ஒரு மாத கால­மாக நாட­ளா­விய ரீதியில் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான இரண்டு பள்­ளி­வா­சல்கள் மற்றும் பல வர்த்­தக நிலை­யங்கள் தீ வைக்­கப்­பட்­டன.  இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள்  அந்­தந்த பிர­தே­சத்தின் பொலிஸ் அதி­கா­ரி­களால் முன்­ன­டுக்­கப்­பட்­டன. இதில் மிகச் சிறந்த பெறு பேறு எமக்கு நுகே­கொட பொலிஸ் பிரிவில் இருந்து கிடைத்­தி­ருக்­கின்­றது.  

ARREST-755x437.jpg

நுகே­கொட பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட விஜே­ராம மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­களில் மிகக் குறு­கிய நாட்­க­ளுக்குள் நான்கு முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மீது தீ வைக்­கப்­பட்­டி­ருந்­தது.  இது தொடர்பில் மிக சூட்­சும விசா­ர­ணைகள் நுகே­கொடை பொலிஸ் அத்­தி­யட்சர் பிரசாத் ரண­சிங்க தலை­மை­யி­லான குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. 

அதன்­படி இத­னுடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தேக நபர் கைது செய்­யப்­பட்டு தற்­போது பொலிஸ் தடுப்புக் காவல் உத்­த­ரவின் கீழ் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்றார். இந்த சந்­தேக நபர் 32 வய­து­டை­யவர். உண­வகம் ஒன்றில் சேவை­யாற்­று­பவர். வைத்­தியர் ஒரு­வரின் மகன். இந்த நபர் குறித்த நான்கு சம்­ப­வங்­க­ளு­டனும் நேர­டி­யாக தொடர்­பு­பட்­டவர் என விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சந்­தேக நபர் 2014 ஆம் ஆண்டு பொது பல சேனா அமைப்பின் செயற்­பாட்டு உறுப்­பி­ன­ராக சேர்ந்­துள்­ள­துடன் அப்­போது முதல் இது வரை பொது பல­சேனா தொடர்­பி­லான அனைத்து விட­யங்­க­ளிலும் செயற்­பாட்டு ரீதியில் பங்­கேற்­றுள்ளார். அத்­துடன் அவர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ருடன் மிக நெருங்­கிய தொடர்பை பேணி­யவர்.    ஞான­சார தேரரைக் கைது  செய்­வ­தற்கு எதி­ராக கடந்த வாரம் பொரளை பகு­தியில் இடம்­பெற்ற ஆரப்­பாட்­டத்தில் மிக ஆக்­ரோ­ஷ­மாக செயற்­பட்­டவர் என்­பதும் 2014 முதல் இது­வரை பொது பல­சேனா தொடர்பு பட்ட அனைத்து சம்­ப­வங்­க­ளிலும் இவ­ரது பங்­க­ளிப்பு உள்­ளது என்­பதும் விசா­ர­ணை­களின் போது தெரி­ய­வந்­துள்­ளது.

இத­னை­விட  பொது பல சேன­வுடன் தொடர்­பு­டைய மேலும் பல சிறிய குழுக்கள் உள்­ளன. அந்த குழுக்­களின் தலை­வர்­க­ளுடன் கைது செய்­யப்­பட்­டுள்ள மேற்­படி சந்­தேக நபர் மிக நெருக்­க­மான தொடர்­பினைக் கொண்­டி­ருந்தார் என்­ப­தற்­கான ஆதா­ரங்­களும் விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. தற்­போது சந்­தேக நபரை மிக விரை­வாக விசா­ரணை செய்து வரு­கின்றோம். இந் நிலையில் இந்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டைய ஏனை­யோ­ரையும் மிக விரைவில் கைது செய்வோம்.

பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்கு அமைய இந்த விசா­ர­ணைகள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒரு­வரின் நேரடி கட்­டுப்­பாட்டில் இடம்­பெற்று வரு­கின்­றன  என்றார்.தெஹி­வளை பகு­தியில் ஹோட்டல் ஒன்றில் சேவை­யாற்றி வரும் 32 வய­து­டைய  எனும் இலக்கம் 67, பாட­சாலை மாவத்த, மஹ­ர­கம எனும் முக­வ­ரியில் வசிக்கும் சந்­தேக நபரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

குறித்த சந்­தேக நபர் தொடர்பில் உளவுத் துறைக்கு கிடைக்கப் பெற்ற சிறப்புத் தக­வல்கள், கடந்த நான்காம் திகதி நுகே­கொடை - விஜே­ராம பகு­தியில் பெஷன் லெதர் எனும் வர்த்­தக நிலை­யத்­துக்கு தீ மூட்டும் சி.சி.ரி.வி. காட்­சி­களை மையப்­ப­டுத்தி குறித்த சந்­தேக நபரைக் கைது செய்ய முடிந்­த­தாக  குற்­ற­வியல் விவ­கா­ரங்கள் தொடர்­பி­லான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு சுட்­டிக்­காட்­டினார்.

இந் நிலையில் தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள குறித்த சந்­தேக நப­ரிடம், கடை­க­ளுக்கு தீ வைத்­ததன் பின்­னணி, அதற்­கான காரணம் தொடர்பில் தனிப்­படை பொலிஸார் விசா­ர­ணை­களை நடத்தி வரு­வ­தா­கவும் அந்த அதி­காரி சுட்­டிக்­காட்­டினார்.

தற்­போது கைது செய்­யப்ப்ட்­டுள்ள  சந்­தேக நபர் கடந்த மே மாதம் 22 ஆம் திகதி அதி­காலை மஹ­ர­கம நகரில் உள்ள காபட் மற்றும் லெதர் விற்பனை நிலையம் மீதும், மறு நாள் மே 23 ஆம் திகதி மஹரகம நாவின்ன பகுதியில் உள்ள ஹார்கோட் பார்மஷி மீதும், கடந்த நான்காம் திகதி விஜேராம பகுதியில் உள்ள பெஷன் லெதர் எனும் வர்த்தக நிலையம் மீதும்  நேற்று முன் தினம் அதிகாலை மஹரகம ஹைலெவல்  வீதியில் உள்ள ஜஸ்ட் போ யூ எனும் பாதணி விற்பனை நிலையம் மீதும் தீ வைத்து நாசகார செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

Tags

http://www.virakesari.lk/article/20801

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.