Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக தீவிரமடையும் கெடுபிடிகள் அரசாங்கத்தின்மீது நம்பிக்கை இழக்கும் சிறுபான்மையினர்

Featured Replies

முஸ்லிம் மக்களுக்கு எதிராக தீவிரமடையும் கெடுபிடிகள்

 

அர­சாங்­கத்­தின்­மீது நம்­பிக்கை இழக்கும் சிறு­பான்­மை­யினர் 
எம்.சி.நஜி­முதீன்

முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­முறைச் சம்­ப­வங்கள் தொடர்ந்து இடம்­பெற்று வரும் நிலையில் அத­னைக்­கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் மேற்­கொள்ளத் தவ­றி­யுள்­ள­தாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்­புகள் குற்­றம்­சாட்­டி­யுள்­ளன. எனவே, நல்­லாட்­சியின் மீது முஸ்­லிம்கள் கொண்­டுள்ள நம்­பிக்கை குறைந்து வரு­வ­தா­கவும் அவ்­வ­மைப்­புகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் அண்­மைக்­கா­ல­மாக குறி­வைக்­கப்­பட்டு தீக்­கி­ரை­யாக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் அது தொடர்பில் அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்கள் மாறு­பட்ட கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். குறித்த வர்த்­தக நிலை­யங்கள் மீதான தாக்­கு­தல்­களை அவ்­வர்த்­தக நிலை­யங்­களின் உரி­மை­யா­ளர்கள் காப்­பு­றுதி பெறு­வ­தற்­காக இவ்வாறு செய்­வ­தா­கவும் அர­சாங்­கத்­தி­லுள்ள சிலர் தெரி­விக்­கின்­றனர்.

நல்­லாட்சி அர­சாங்கம் கடந்த அர­சாங்­கத்தைப் போன்று செயற்­பட்­டுக்­கொண்டு முஸ்­லிம்கள் மீது பழி­போட முனை­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது. அத்­துடன் பொது­பலசேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் முஸ்­லிம்­க­ளையும் இஸ்­லாத்­தையும் நிந்­திக்கும் வகையில் கருத்து வெளி­யிட்­ட­துடன் பல்­வே­று­பட்ட அச்­சு­றுத்­தல்­க­ளையும் விடுத்­துள்ளார்.

எனினும் அவர் தற்­போது தலை­ம­றை­வா­கி­யுள்ளார். அவரைக் கைது­செய்­வ­தற்கு விசேட பொலிஸ்

பிரி­வுகள் கட­மையில் அமர்த்­தப்­பட்­டுள்­ள­போதும் இன்னும் அவர் கைது­செய்­யப்­ப­டா­மை­யா­னது அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொடர்பில் சந்­தே­கத்தை எழுப்­பி­யுள்­ள­தா­கவும் அவ்­வ­மைப்­புகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளன.

முஸ்லிம் எம்.பி.களின் சந்­திப்பு

இதே­வேளை அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்று வரும் அசா­தா­ரண நட­வ­டிக்­கைகள் தொடர்பில் பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­திகள் கடந்த புதன் கிழமை மாலை அவ­ச­ரக்­கூட்டம் ஒன்றை நடத்­தினர். அதன்­போது தற்­போது முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்க்­கப்­பட்­டுள்ள வன்­முறைச் சம்­ப­வங்­க­ளுக்கு உட­னடி முடிவு கட்ட வேண்டும். அது தொடர்பில் சகல பிர­தி­நி­தி­களும் கட்சி வேறு­பா­டின்றி இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு இணக்கம் தெரி­வித்­துள்­ளனர்.

மேலும் குறித்த விவ­காரம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­கவை அவ­ச­ர­மாகச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கும் தீர்­மா­னித்­துள்­ளனர். எனவே அச்­சந்­திப்பு நாளை அல்­லது நாளை மறு­தினம் இடம்­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அச்­சந்­திப்பின் பின்னர் பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் உறுப்­பி­னர்கள் அனை­வரும் இணைந்து தீர்க்­க­மாக முடி­வொன்­றுக்கு வர­வுள்­ள­தா­கவும் தெரிய வரு­கி­றது.

இதே­வேளை குறு­கிய காலத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அதி­க­ள­வான அசம்­பா­வி­தங்கள் பதி­வா­கி­யுள்­ளன. அவை வரு­மாறு,

16.04.2017:

தென் மாகா­ணத்­தி­லுள்ள கொட­பிட்­டிய, போர்வை நகரில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான 4 கடைகள் மீது அதி­காலை வேளையில் பெற்றோல் குண்டுத் தாக்­குதல்.

17.04.2017 :

காலி கோட்டை இரா­ணுவ முகாம் பாது­காப்பு வல­யத்தில் அமைந்­துள்ள ஷெய்ஹ் சாலிஹ் வலி­யுல்லாஹ் ஸியா­ரத்தின் பாது­காப்பு மதில்கள் இனந்­தெ­ரி­யாத நபர்­களால் உடைப்பு.

20.04.2017 :

அம்­பாறை, இறக்­காமம், மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான இரண்­டரை ஏக்கர் காணியை ஆக்­கி­ர­மித்து அதில் பௌத்த விகா­ரையை நிர்­மா­ணிப்­ப­தற்­கான ஆரம்பப் பணி­களை பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் முன்­னெ­டுப்பு.

25.04.2017 :

மாயக்­கல்லி மலை­ய­டி­வா­ரத்­தி­லுள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான காணியில் விகாரை நிர்­மா­ணிக்கும் பணி­களை பொது பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரர் அப் பகு­திக்கு விஜயம் செய்து பார்­வை­யிடல். அத்­துடன் அம்­பாறை மாவட்ட செய­ல­கத்தில் நடை­பெற்ற கூட்­டத்தில் கலந்து கொண்­ட­துடன் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­துக்­களை வெளி­யிட்­டமை.

08.05.2017 :

இலங்கை கடற்­ப­ரப்பில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள மியன்மார் அக­தி­களை மீண்டும் அவர்­க­ளது நாட்­டுக்கே திருப்­பி­ய­னுப்ப வேண்டும் எனவும் அக­திகள் எனும் போர்­வையில் முஸ்­லிம்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மிக்க முயற்­சிப்­ப­தா­கவும் கொழும்பில் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்டில் பொது பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் கருத்து தெரி­வித்­தமை

14.05.2017 :

பொலன்­ன­றுவை, ஓனே­கம பகு­திக்கு விஜயம் செய்த பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் அப் பகு­தியில் வசிக்கும் முஸ்­லிம்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்­த­துடன் கால்­நடை கொட்­டில்­க­ளுக்கும் சேதம் ஏற்­ப­டுத்­தினார். அத்­துடன் 'அல்லாஹ்'வை அவ­ம­திக்கும் வகையில் ஞான­சார தேரர் கருத்து வெளி­யிட்­டமை.

15.05.2017 :

தோப்பூர் நீணாக்­கேணி பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் பூர்­வீ­க­மாக பயிர்ச் செய்­கையில் ஈடு­பட்­டு­வரும் குடி­யி­ருப்புக் காணியில் பௌத்த பிக்­குகள் அத்­து­மீறிப் பிர­வே­சித்து வேலி­களை உடைத்­தெ­றிந்­தமை.

15.05.2017 :

பாணந்­துறை பழைய பஸார் பகு­தியில் அமைந்­துள்ள பள்­ளி­வாசல் மீது அதி­காலை 3 மணி­ய­ளவில் பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டமை.

16.05.2017 :

கொழும்பு, வெல்­லம்­பிட்டி, கொஹி­ல­வத்தை அல் இப்­ரா­ஹீ­மிய்யா ஜும்ஆ பள்­ளி­வாசல் மீது அதி­காலை 1.45 மணி­ய­ளவில் சுமார் 8 பேர் அடங்­கிய குழு­வினர் தாக்­குதல் நடத்­தி­யமை.

16.05.2017 :

பொது பல சேனா அமைப்பின் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­றிய ஞான­சார தேரர், மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கும் இஸ்­லாத்­துக்கும் எதி­ராக வெறுப்­பூட்டும் கருத்­துக்­களை முன்­வைத்­தமை.

16.05.2017 :

செல்­வ­நகர், நீணாக்­கேணி பிர­தே­சத்­திற்குள் கூரிய ஆயு­தங்கள் மற்றும் தடி­க­ளுடன் நுழைந்த சுமார் 200 பேருக்கும் மேற்­பட்ட கும்பல் அப் பகு­தியில் வாழும் முஸ்­லிம்­களின் வீடுகள் மீது தாக்­குதல் நடத்­தி­யமை. அதில் சிலர் காய­ம­டைந்­த­துடன் 16 வீடுகள் சேத­ம­டைந்­தன. அன்­றி­ரவு அக் கிராம முஸ்­லிம்கள் அச்சம் கார­ண­மாக அங்­கி­ருந்து வெளி­யேறி பள்­ளி­வா­ச­லிலும் உற­வினர் வீடு­க­ளிலும் தஞ்­ச­ம­டைந்­தமை.

17.05.2017 :

பாணந்­துறை, எலு­வில பிர­தே­சத்தில் அமைந்­துள்ள முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான பேக்­கரி ஒன்றும் தொலைத்­தொ­டர்பு நிலையம் என்­ப­வற்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல் நடத்­தப்­பட்­டமை.

18.05.2017 :

வென்­னப்­பு­வவில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலையம் அதி­காலை 2 மணி­ய­ளவில் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டமை.

21.05.2017

குரு­நாகல் மல்­ல­வப்­பிட்டி ஜும்ஆ பள்­ளி­வா­சல்­மீது அதி­காலை வேளையில் இனந்­தெ­ரி­யா­தோ­ரினால் பெற்றோல் குண்டுத் தாக்­குதல்.

மேலும் அன்­றைய தினம் அதி­காலை வேளையில் காலி பெந்­தோட்டை எல்­பிட்டி பிர­தே­சத்தில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலையம் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டமை.

22.05.2017

மிரி­ஹான பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நவின்ன சந்­தியில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்­த­க­ருக்கு சொந்­த­மான வர்த்­தக நிலையம் அதி­காலை வேளையில் தீக்­கிரை.

23.05.2017

இரத்­தி­ன­புரி கஹ­வத்தை நக­ரி­லுள்ள முஸ்லிம் வர்த்­த­க­ருக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலையம் மற்றும் தமிழ் வர்த்­த­க­ருக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலையம் என்­பன அதி­காலை வேளையில் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டமை.

24.05.2017

மிரி­ஹான பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட நாவின்ன நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் வர்த்­த­கரின் மருந்­த­கத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்­குதல்.

03.06.2017

திரு­கோ­ண­மலை பெரி­ய­கடை ஜும்ஆப் பள்­ளி­வாசல் மீது அதி­காலை வேளையில் பெற்றோல் குண்டுத் தாக்­குதல்.

06.06.2017

நுகே­கொடை விஜே­ராம சந்­தி­யி­லுள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான லெதர்,ரெக்சின் மற்றும் காபட் விற்­பனை நிலையம் நள்­ளி­ரவு வேளையில் தீக்­கிரை.

07.06.2017

மஹ­ர­கம நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான பெற்றோல் குண்டுத் தாக்குதல்.

06.06.2017

நுகேகொடை விஜேராம சந்தியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான லெதர்,ரெக்சின் மற்றும் காபட் விற்பனை நிலையம் நள்ளிரவு வேளையில் தீக்கிரை.

07.06.2017

மஹரகம நகரில் அமைந்துள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான பாதணிகள் விற்பனை நிலையத்தில் அதிகாலை வேளையில் தீ பரவல்.

08.06.2017

மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாளிகாகந்தை வீதியிலுள்ள முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான உணவகத்தில் அதிகாலை வேளையில் தீ பரவல்.

09.06.2017

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹபுகஸ்தலாவ பிரதான வீதியில் அமைந்துள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான தேயிலைத் தொழிற்சாலை அதிகாலை வேளையில் தீக்கிரை.

அத்துடன் அன்றைய தினம் மாலை வேளையில் மஹியங்கனையிலுள்ள முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான பாதணி விற்பனை நிலையத்தில் தீ பரவல்.

 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-06-11#page-1

  • தொடங்கியவர்

அர­சாங்கம் தொடர்ந்தும் பரா­மு­க­மாக இருப்பின் விளை­வுகள் விப­ரீ­த­மாகும்

 

அமைச்சர் ரிஷாட் காட்டம்
எம். நேச­மணி

தொடர்ந்து முஸ்லிம் சமூ­கத்தின் பொரு­ளா­தா­ரத்தை இலக்கு வைத்து வேண்­டு­மென்றே தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இந்த விடயம் தொடர்பில் அர­சாங்கம் உரிய நட­வ­டிக்கை எடுக்­காது பரா­மு­க­மாக பொறுப்­பற்ற வகையில் இருக்­கு­மானால் விப­ரீத விளை­வு­க­ளையே சந்­திக்க நேரி­டு­மென அமைச்சர் ரிஷாட் பதி­யுதீன் காட்­ட­மாக தெரி­வித்தார். இத்­த­கைய நாச­கார செயற்­பா­டு­களை

மேற்­கொண்­டு­வ­ரு­வோரைக் கண்டு பிடிக்க வேண்­டிய பொறுப்புக் கொண்ட பொலி­ஸாரும் பொலிஸ் திணைக்­க­ளமும் அதனைச் செய்­வதை விடுத்து, இவ்­வா­றான சம்­ப­வங்கள் இடம் பெறும் போதெல்லாம் அதற்கு பல்­வேறு வியாக்­கி­யா­னங்கள் கூறி வரு­வது வெட்­கக்­கே­டாக உள்­ளது எனவும் அவர் தெரி­வித்தார்.

முஸ்லிம் வர்த்­தக நிலை­யங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்கள் மீது தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தாக்­குதல் சம்­ப­வங்கள் குறித்து வின­விய போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

நேற்று முன்­தினம் மாலை மகி­யங்­கனை பகு­தியில் முஸ்லிம் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான வர்த்­தக நிறு­வனம் ஒன்று எரிந்து கொண்­டி­ருக்கும் போதே, அந்தப் பிர­தேச பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­கா­ரி­யுடன் தொடர்பு கொண்டு அச்­சம்­ப­வத்தைத் எடுத்­து­ரைத்த போது அதற்கு அவர் வயர் சோட்டாய் இருக்­கலாம் என்று பதி­ல­ளித்தார். சம்­ப­வ­மொன்று இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்கும் போது எவ்­வித விசா­ர­ணை­களும் மேற்­கொள்­வ­தற்கு முன்னர் எவ்­வாறு இப்­படிக் கூற முடியும்.

கடந்த வாரம் மஹ­ர­கமை பகு­தியில் முஸ்லிம் ஒரு­வரின் கடை எரிந்த போதும் அங்­குள்ள பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி இதே போன்­ற­தொரு பொறுப்­பற்ற பதி­லையே கூறினார்.

கடந்த 2 மாதங்­க­ளாக முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வியா­பார நிறு­வ­னங்கள் மற்றும் பள்­ளி­வா­சல்கள் மீது தொடர்ச்­சி­யாக தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.குறிப்­பாக கடந்­த­வாரம் திரு­கோ­ண­மலை பெரி­ய­கடை பள்­ளி­வாசல் பெற்றோல் குண்­டு­களால் தாக்­கப்­பட்­டன.

 இவ்­வா­றான அரா­ஜக செயற்­பா­டு­களை சில இன­வா­திகள் திட்­ட­மிட்டு மேற்­கொண்டு வரு­கின்­றனர். இச் சம்­ப­வங்­களை கட்­டுப்­ப­டுத்தி சிறு­பான்மைச் சமூ­கத்தை பாது­காக்க வேண்­டிய பொலிஸார் சட்­டத்தை கையி­லெ­டுக்­காமல் பல்­வேறு கார­ணங்­களைச் சொல்லிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

பொலி­ஸாரின் இவ்­வா­றான அச­மந்தப் போக்கு மற்றும் பொறுப்­பற்ற செயற்­பா­டுகள் குறித்து எவ்­வ­ளவு தான் நாங்கள் உரத்துச் சொன்­னாலும் அவர்­க­ளுக்கு உறைப்­ப­தாக தெரி­ய­வில்லை. அர­சாங்­கமும் இந்த விடயம் தொடர்பில் இது­வரை காத்­தி­ர­மான எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­க­வில்லை. இவ்­வா­றான நிலைமை தொடர்ந்து கொண்­டி­ருப்­பதால் முஸ்­லிம்­களும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.குறிப்பாக முஸ்லிம் அரசியல்வாதிகள் சமூகத்தின் நலனை முன்னிறுத்தி அரசியல் ரீதியான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலையொன்று தற்போது ஏற்பட்டிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-06-11#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.