Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடவடிக்கை எடுக்காமையினால் அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்

Featured Replies

முஸ்­லிம்­க­ளுக்­கு­ எ­தி­ரா­ன­ தாக்­கு­தல்கள் நடவடிக்கை எடுக்­கா­மை­யி­னால்­ அ­ரசின்­ மீது ­நம்­பிக்­கை­ இ­ழந்­து­விட்டோம்

Published by Gnanaprabu on 2017-06-12 10:09:27

 

முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் தாக்­கு­தல்­க­ளுக்கு காலம் கடந்தும் எவ்­வித நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கா­மையின் கார­ண­மாக நாம் அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை இழந்­துள்ளோம். எனவே அர­சாங்கம் துரி­த­மாக இன­வா­தத்தை தூண்­டு­வோ­ருக்கு எதி­ராக காலம் தாழ்த்­தாது சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். மேலும் இன­வாத தாக்­கு­தல்­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர வேண்டும் என ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் தெரி­வித்தார்.

 இன­வாத தாக்­கு­தல்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும்  சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டு­வ­தற்கும் பொலிஸார் அதி­கா­ரத்தை பிர­யோ­கிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் தாக்­கு­தல்கள் தொடர்­பாக  வின­விய போதே அமைச்சர் கேச­ரிக்கு மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

kabeer4.jpg

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இந்த நாட்டில் இன­வா­தத்தை தூண்­டு­வ­தற்கு இட­ம­ளிக்க முடி­யாது. அர­சாங்கம் என்ற வகையில் நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம். அண்மை கால­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு தாக்­கு­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. பல வர்த்­தக நிலை­யங்­களும் தொழிற்­சா­லை­களும் பள்­ளி­வா­சல்­களும் தாக்­கப்­பட்டும் தீயிட்டு கொழுத்­தப்­பட்டும் உள்­ளன. 

எனவே இந்த விடயம் தொடர்­பாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்­நா­யக்­க­விடம் பேசினோம். இதன்­பி­ர­காரம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டு­வ­தற்கு அர­சாங்கம் பூரண நட­வ­டிக்‍கை எடுக்கும் என்றும்  இதற்­கான பூரண அதி­கா­ரத்தை பொலி­ஸூக்கு வழங்­கி­யுள்­ள­தா­கவும் அமைச்சர் எம்­மிடம் குறிப்­பிட்டார்.

எனினும் இந்த விடயம் காலம் கடந்தும் நடந்­த­தாக தெரி­ய­வில்லை. எனவே பொலிஸார் சட்டம் ஒழுங்கை உரிய முறையில் பாது­காக்க வேண்டும். அதற்­கான பூரண அதி­காரம் பொலி­ஸா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே சட்டம் ஒழுங்கை பாது­காப்­ப­தற்கு அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

முஸ்­லிம்கள் மீதான தொடர் தாக்­கு­தல்­க­ளுக்கு காலம் கடந்தும் நட­வ­டிக்கை எடுக்­கா­த­மையின் கார­ண­மாக அர­சாங்­கத்தின் மீது நாம் நம்­பிக்கை இழந்­துள்ளோம். நாட்டில் வாழும் முஸ்­லிம்­களும் அர­சாங்­கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். ஆகவே அரசாங்கம் தொடர்ந்து காலம் தாழ்த்தாமல் இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனவாத தாக்குதல்களை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/article/20805

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.