Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெற்கில் மாத்திரமல்ல வடக்கில் இனவாதம் தலைதூக்கினாலும் அதனையும் எதிர்ப்போம் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு

Featured Replies

தெற்கில் மாத்திரமல்ல வடக்கில் இனவாதம் தலைதூக்கினாலும் அதனையும் எதிர்ப்போம்

DSC2239-57f23f76f89488b3ed787184ad5b98a930ff1e7f.jpg

 

அமைச்சர் மனோ கணேசன் தெரி­விப்பு
(எம்.சி.நஜி­முதீன்)

தெற்கில் மாத்­தி­ர­மல்ல வடக்கில் இன­வாதம் தலை­தூக்­கி­னாலும் அதற்­கெ­தி­ராக நாம் நட­வ­டிக்கை எடுப்போம். அந்­நி­லைப்­பாட்டில் எவரும் சந்­தேகம் கொள்ளத் தேவை­யில்லை. மேலும் சட்­டத்­திற்குப் புறம்­பாக எவரும் செயற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. இது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் பேச்­சு­வார்த்தை நடத்தி உறு­தி­யான நிலைப்­பாட்­டுக்கு வந்­துள்­ள­தாக அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார்.

 தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல் மற்றும் அர­ச­க­ரும மொழிகள் அமைச்சு ஏற்­பாடு செய்த “பெளத்த பக்தி கீதம்” இசைக்கும் நிகழ்வு நேற்று மாலை அர­ச­க­ரும மொழிகள் திணைக்­கள கேட்­போர்­கூ­டத்தில் நடைெ­பற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் வாழும் சகல இன, மதத்­த­வரும் சக­வாழ்வு மற்றும் புரிந்­து­ணர்­வுடன் வாழ வேண்டும். சகல இன, மதத்­த­வர்கள் மத்­தி­யிலும் சக­வாழ்வு உரு­வாகும் காலம் உத­ய­மா­கி­யுள்­ளது. எனினும் நாம் சக­வாழ்வை ஏற்­ப­டுத்த முனை­கின்ற வேளையில் மற்­று­மொரு கூட்டம் அதனை தடுப்­ப­தற்கு முயற்­சிக்­கி­றது. ஆயினும் அவர்கள் தொடர்பில் எமக்கு நன்கு தெரியும். அதனை அறிந்­து­கொண்­டுதான் எமது வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கிறோம்.

பொலி­ஸா­ருக்குரிய வச­திகள் செய்­து­கொ­டுத்து குற்றம் செய்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­கின்ற போதிலும் குற்றம் செய்­ப­வர்கள் தொடர்ந்தும் செய்­து­கொண்­டுதான் இருக்­கின்­றனர். எனினும் அவர்க­ளுக்குப் பயந்து பொலி­ஸாரின் பணி­களை நிறுத்தி விடப்­போ­வ­து­மில்லை. மாறாக புதிய சட்ட ஏற்­பா­டு­களை அமைத்து அதற்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுக்­கவும் தயா­ராக உள்ளோம்.

 மேலும் நாட்டில் அடிப்­ப­டை­வாதம் மற்றும் இன­வாத சிந்­த­னையில் செயற்­ப­டு­ப­வர்கள் தங்­களின் செயற்­பா­டு­களை கைவிட வேண்டும். அவர்கள் தற்­போது அதனைக் கைவிட்டு நகர்­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இன­வாதம் மற்றும் அடிப்­ப­டை­வாதச் சிந்­தனை தலை­தூக்­கு­வ­தற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. அது யாராக இருந்­தாலும் பர­வா­யி­ல்லை. வடக்கு, தெற்கு என எப்­பி­ர­தே­ச­மாக இருந்­தாலும் நாம் இன­வா­தத்­தையும் அடிப்­ப­டை­வா­தத்­தையும் முன்­னெ­டுத்துச் செல்­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை. அந்­நி­லைப்­பாட்டில் எவரும் சந்­தேகம் கொள்ளத் தேவை­யில்லை.

ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் அமைச்­ச­ர­வையும் அந்­நி­லைப்­பாட்­டி­லேயே உள்­ளனர். யாருக்கும் சட்­டத்­திற்­கு ­பு­றம்­பாகச் செயற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­பே­ா­வ­தில்லை. இது தொடர்பில் அமைச்­ச­ர­வையில் பேச்­சு­வார்த்தை நடத்தி உறு­தி­யான நிலைப்­பாட்டில் உள்ளோம். மேலும் நாட்­டி­லுள்ள ஏரா­ள­மானோர் இன­வாதம் மற்றும் அடிப்­ப­டை­வா­தத்தை நிரா­க­ரித்­துள்­ளனர்.

எனது அமைச்­சுக்கு அண்­மையில் சில குழுக்கள் வந்து எனக்கு சக­வாழ்வு தொடர்பில் ஆலோ­சனை வழங்­கத்­த­யா­ராகின. எனினும் அவர்­களின் நோக்கம் அது­வாக இருக்­க­வில்லை. நான் ஆவே­சப்­பட்டு அவர்­க­ளுடன் சர்ச்­சையில் ஈடு­ப­டுவேன் என்­பதே அவர்­களின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது. எனினும் நான் அவ்­வாறு செயற்­ப­ட­வில்லை. ஏனெனில் எனக்கு பெளத்த மதம் பற்றி நன்கு தெரியும். சாந்தி, சமா­தானம் காருண்யம் பற்றி பெளத்த மதம் குறிப்­பிட்­டுள்­ளது. எனவே அக்­கு­ழு­வினர் என்னைச் சந்­தித்­த­போது நான் தான் பெளத்­த­னாகச் செயற்­பட்டேன். அது தொடர்பில் நான் பெரு­மைப்­ப­டு­கிறேன்.

 ஆகவே எங்­களை உசுப்­பேற்றி மக்கள் மத்­தியில் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு எவ­ரா­வது எதிர்­பார்ப்­பார்­க­ளாயின் அவர்கள் அச்­சிந்­த­னையை கைவிட வேண்டும். அவ்­வா­றா­ன­வர்­களின் எதிர்­பார்ப்பு ஒரு­போதும் நிறை­வே­றப்­போ­வ­தில்லை. மேலும் இந்து மதத்­துக்கும் பெளத்த மதத்­துக்கும் மத்­தியில் நெருங்­கிய தொடர்­புள்­ளது. அதனை எவரும் மறுக்க முடி­யாது. அவ்­விரு சம­யங்­க­ளுக்­கி­டை­யி­லு­மான வேறுபாடுகள் பற்றியே நாம் சிந்திக்கின்றோம். அதனை விடுத்து அவ்விரு சமயங்களுக்கிடையில் உள்ள தொடர்புகள் பற்றியே நாம் சிந்திக்க வேண்டும்.

மேலும் எந்தவொரு சமயமும் இனவா தத்தையும் அடிப்படைவாதத்தையும் அனும

திப்பதில்லை. ஆகவே எவராவது இனவாத,

மதவாத அடிப்படையில் செயற்பாடுவார் களாயின் அவர்களை அச்சமயத்திலிருந்து நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-20#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.