Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரையிறுதிப் போட்டிகளில் மெக்ஸிக்கோ, போர்த்துக்கல்

Featured Replies

அரையிறுதிப் போட்டிகளில் மெக்ஸிக்கோ, போர்த்துக்கல்
 

image_8c329f478b.jpg

ஃபீபா கூட்டமைப்புகளின் கிண்ணத் தொடருக்கான (கொன்படரேஷன் கிண்ணம்) போட்டிகளில், நேற்று முன்தினம் இடம்பெற்ற இரண்டு போட்டிகளில், மெக்ஸிக்கோ, போர்த்துக்கல் அணிகள் வெற்றிபெற்றன. இதன்மூலம் இவ்வணிகள், அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளன.

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் இப்போட்டிகளில், குழு “ஏ”க்கான போட்டிகளே, நேற்று முன்தினம் இடம்பெற்றன.

கஸனில் நடைபெற்ற போட்டியில், மெக்ஸிக்கோ அணியும் போட்டிகளை நடத்தும் ரஷ்ய அணியும் மோதின.

போட்டியின் 25ஆவது நிமிடத்தில், ரஷ்யாவின் அலெக்ஸான்டர் சாமெடோவ், கோலொன்றைப் பெற்றுக் கொடுத்து, தனது அணிக்கு முன்னிலையை வழங்கினார். எனினும், 5 நிமிடங்களில், மெக்ஸிக்கோவின் நெஸ்டர் அரௌஜோ, தனது அணிக்கான கோலைப் பெற்றுக் கொடுத்து, கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்தினார்.

முதற்பாதி, அந்த நிலைமையிலேயே முடிவடைய, இரண்டாவது பாதி ஆரம்பித்த பின்னர், போட்டியின் 52ஆவது நிமிடத்தில், மெக்ஸிக்கோ அணியின் ஹிர்விங் லொஸனோ, கோலொன்றைப் பெற்றுக் கொடுத்தார். இதன்மூலம் மெக்ஸிக்கோ அணி, 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதுவே, போட்டியின் முடிவாகவும் அமைந்தது.

சென். பீற்றர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற அடுத்த போட்டியில், போர்த்துக்கல் அணியும் நியூசிலாந்து அணியும் மோதின.

போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய போர்த்துக்கல் அணி சார்பான முதலாவது கோலை, கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுக் கொடுத்தார். 33ஆவது நிமிடத்தில், தனக்குக் கிடைத்த பெனால்ட்டி உதையை, கோலாக்கியமையின் மூலமே, அந்தக் கோலை, அவர் பெற்றுக் கொடுத்தார்.

அந்தக் கோல் பெறப்பட்டு 5 நிமிடங்களில், பேர்ணாட் சில்வாவால், கோலொன்று பெறப்பட்டது. இதனால் போர்த்துக்கல் அணி, 2-0 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் பெரும்பாலான நேரங்களில், கோல்கள் பெறப்படாத போதிலும், 80ஆவது நிமிடத்தில், அன்ட்ரே சில்வாவும், 90ஆவது நிமிடத்தில் நானியும் கோல்களைப் பெற்று, 4-0 என்ற கோல் கணக்கில், போர்த்துக்கல் அணி வெற்றிபெறுவதை உறுதிப்படுத்தினர்.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/அரையிறுதிப்-போட்டிகளில்-மெக்ஸிக்கோ-போர்த்துக்கல்/44-199310

  • கருத்துக்கள உறவுகள்

மற்றைய  4 குழுக்களில் ஜேர்மனி, சிலி அரை இறுதிக்கு தெரிவாகி உள்ளன. செவ்வாய், புதன் கிழமையில் அரை இறிதி போட்டிகள் இடம்பெற உள்ளன.

  • தொடங்கியவர்
கொன்பெடரேஷன் அரையிறுதிகளில் ஜேர்மனி, சிலி
 

image_97bb0fdc3e.jpg

ரஷ்யாவில் இடம்பெற்றுவரும் பீபா கூட்டமைப்புகளின் (கொன்பெடரேஷன்) கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கு, நடப்பு உலகச் சம்பியன்களான ஜேர்மனி மற்றும் சிலி ஆகியன தகுதிபெற்றுள்ளன.  

ஜேர்மனி, நேற்று முன்தினம் (25) இடம்பெற்ற தமது இறுதி குழுநிலைப் போட்டியில், 3-1 என்ற கோல் கணக்கில் கமரூனை வென்றமையைத் தொடந்தே, குழு பி-இல் முதலாவது அணியாக, கொன்பெடரேஷன் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. ஜேர்மனி சார்பாக, டிமோ வேர்னர் 2, கெரிம் டிமிர்பை 1 கோலைப் பெற்றனர். கமரூன் சார்பாகப் பெறப்பட்ட கோலை, லொஸோ அபுபக்கர் பெற்றிருந்தார்.  

இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற மற்றைய குழு பி போட்டியில், சிலியும் அவுஸ்திரேலியாவும் மோதியிருந்தன. இதில், இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு கோலைப் பெற்ற நிலையில், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இப்போட்டியில், அவுஸ்திரேலியா சார்பாகப் பெறப்பட்ட கோலை, ஜேம்ஸ் ட்ரொய்சி பெற்றதோடு, சிலி சார்பாகப் பெறப்பட்ட கோலை, மார்ட்டின் றொட்ரிகாஸ் பெற்றார். இதனையடுத்து, குழு பி-இல், இரண்டாவது அணியாக, அரையிறுதிப் போட்டிக்கு சிலி, தகுதி பெற்றது.  

அந்தவகையில், இலங்கை நேரப்படி, நாளை (28) இரவு 11.30க்கு இடம்பெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், குழு ஏ-இல் முதலிடம் பெற்ற சிலியை போர்த்துக்கல் சந்திக்கிறது.  

நாளை மறுதினம் (29) இடம்பெறவுள்ள மற்றைய அரையிறுதிப் போட்டியில், குழு பி-இல் இரண்டாமிடம் பெற்ற மெக்ஸிக்கோவை ஜேர்மனி சந்திக்கிறது. 

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/கொன்பெடரேஷன்-அரையிறுதிகளில்-ஜேர்மனி-சிலி/44-199387

  • தொடங்கியவர்

கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்து... போர்ச்சுக்கலை வீழ்த்தியது சிலி!

 

கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்துப் போட்டியில், இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது, சிலி அணி.

சிலி போர்ச்சுகல்

பல்வேறு கால்பந்துத் தொடர்களில் கோப்பையை வென்ற அணிகளுக்கிடையில், கான்ஃபெடரேஷன் கோப்பைக்கான கால்பந்துப் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடர், ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் போர்ச்சுக்கல், சிலி, ஜெர்மனி, மெக்ஸிகோ ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இதையடுத்து, போர்ச்சுக்கல்-சிலி அணிகளுக்கு இடையில் முதல் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது.

 

இதில், போர்ச்சுக்கல் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது, சிலி. ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. பெனால்டி சூட்டில் சிலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கலை வீழ்த்தியுள்ளது. பெனால்டியில் போர்ச்சுக்கல் அணி வீரர்கள் அடித்த 3 கோல்களையும் திறமையாகத் தடுத்து, சிலி அணிக்கு வெற்றி தேடித் தந்துள்ளார், அந்த அணியின் கோல் கீப்பர் க்ளாடியோ பிராவோ. இதையடுத்து, நாளை ஜெர்மனி-மெக்ஸிகோ அணிகளுக்கு இடையில் 2-வது அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

http://www.vikatan.com/news/sports/93732-chile-wins-over-portugal-in-confederation-cup-semi-finals.html

  • தொடங்கியவர்

Confed Cup Finale! DFB-Elf ballert Mexiko ab. Jubel über den Finaleinzug: Timo Werner, Lars Stindl und Leon Goretzka (v. li.) (Quelle: dpa/Christian Charisius)

ஜெர்மனி இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
Germany vs Mexico
FIFA Confederations Cup Semi-final
Thursday, June 29, 2:00 PM
Olimpiyskiy Stadion Fisht
9fWZTOYH8PoKSS211FJLLTUk+xfBbb53X2BgFwAA
Germany
4 - 1
FT
Mexico
vKKiwixVowlZvt5isRSSIboHtxby5tIceH9s+Xqa
  • தொடங்கியவர்

கொன்பெடரேஷன் இறுதியில் ஜேர்மனி - சிலி

Published by Priyatharshan on 2017-07-01 11:03:41

 

கொன்­பெ­ட­ரேஷன் கிண்ணக் கால்­பந்து இறுதிப் போட்­டியில் ஜேர்­மனி மற்றும் சிலி அணிகள் மோத­வுள்­ளன.

 

கொன்­பெ­ட­ரேஷன் கிண்ணக்கால்­பந்து போட்­டிகள் ரஷ்­யாவில் நடை­பெற்­று­வ­ரு­கி­ன்றன. 

இதில் ரஷ்யா, ஜேர்­மனி, அவுஸ்­தி­ரே­லியா உட்­பட 8 அணிகள் விளை­யா­டின. இப்­போட்­டிகள் இறுதிக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளன.

confederation-cup-germany-vs-chile.jpg

இதில் நடை­பெற்ற இரண்­டா­வது அரை­யி­றுதிப் போட்­டியில் ஜேர்­மனி மற்றும் மெக்­ஸிகோ ஆகிய அணிகள் மோதிக் கொண்­டன. 

தொடக்கம் முதலே அதி­ர­டி­யாக விளை­யா­டிய ஜேர்­ம­னியில் கோரெட்ஸ்கா முதல் பாதியின் 6ஆவது மற்றும் 8ஆவது நிமி­டத்தில் அடுத்­த­டுத்து இரு கோல்கள் அடித்தார். 

முதல் பாதியின் முடிவில் 2-–0 என்ற கோல் கணக்கில் ஜேர்­மனி முன்­னிலை பெற்­றது.

தொடர்ந்து சிறப்­பாக விளை­யா­டிய ஜேர்­மனி வீரர்கள் எதி­ர­ணி­யி­னரின் கோல் போடும் முயற்­சி­களை தடுத்­தனர். 

59ஆவது நிமி­டத்தில் ஜேர்­ம­னியின் வெர்னர் மற்­றொரு கோல் அடித்தார். பின்னர் 89ஆவது நிமி­டத்தில் மெக்­ஸி­கோவின் ஃபபியன் சுமார் 35 மீற்றர் தூரத்தில் இருந்து கோல் அடித்து அசத்­தினார். 

அதன்பின் 91ஆவது நிமி­டத்தில் ஜேர்­ம­னியின் யூனஸ் மற்­றொரு கோல் அடித்தார். முழு ஆட்­ட­நேர முடிவில் 4–-1 என்ற கோல் கணக்கில் ஜேர்­ம­னி வெற்றி பெற்று இறுதிப்போட்­டிக்கு முன்­னே­றி­யது.

நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஜேர்மனி மற்றும் சிலி அணிகள் மோதுகின்றன.

http://www.virakesari.lk/article/21387

  • கருத்துக்கள உறவுகள்

சிலியின் பந்து காப்பாளர் இறுதி போட்டி வரை கொண்டு வந்துள்ளார். இறுதி போட்டி எப்படி அமைகிறது என பார்க்கலாம்.

 

 

  • தொடங்கியவர்
 

கான்ஃபெடரேஷன் கோப்பை - ஜெர்மனி வரலாற்று வெற்றி

 

கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்துத் தொடரின் இறுதி ஆட்டத்தில், சிலியை வீழ்த்தி பட்டத்தை வென்றது ஜெர்மனி.

Germany with  confederation cup


10-வது ஃபிஃபா கான்ஃபெடரேஷன் கோப்பை கால்பந்துத் தொடர், ரஷ்ய நாட்டின் மாஸ்கோ நகரில் நடந்துவருகிறது. நேற்றிரவு நடந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில், ஜெர்மனி-சிலி அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடந்த இந்த இறுதிப் போட்டியில், ஜெர்மனியின் லார்ஸ் ஸ்டின்டில், முதல்பாதியில் தனது அணிக்காக முதல் கோலை அடித்தார். அதன்பிறகு, இரண்டு அணிகளும் கடுமையாக முயற்சித்தும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
இதனால், ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் சிலியை வென்று கோப்பையைக் கைப்பற்றியது. நான்கு முறை உலகச் சாம்பியனான ஜெர்மனி வெல்லும் முதல் கான்ஃபெடரேஷன் கோப்பை இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஜெர்மனி அணி, வரலாற்றில் இடம்பிடித்துவிட்டதாக அந்த அணியின் பயற்சியாளர்  ஜோச்சிம் லோ தெரிவித்தார்.

அடுத்த ஆண்டு ரஷ்யாவில் கால்பந்து உலகக் கோப்பைத் தொடர் நடக்கவிருக்கும் நிலையில், தற்போதைய இளம் ஜெர்மனி அணியின் இந்த வெற்றி, அவர்களுக்குக் கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.

http://www.vikatan.com/news/sports/94122-germany-wins-the-confederation-cup-2017-title.html

  • தொடங்கியவர்

பிபா கான்பெடரேசன் கால்பந்து: மெக்சிகோவை வீழ்த்தி போர்ச்சுக்கல் 3-வது இடம்

 

 
 

ரஷியாவில் நடைபெற்று வரும் பிபா கான்பெடரேசன் கால்பந்து தொடரில் மெக்சிகோவை வீழ்த்தி 3-வது இடம் பிடித்துள்ளது போர்ச்சுக்கல்.

 
 
 
 
பிபா கான்பெடரேசன் கால்பந்து: மெக்சிகோவை வீழ்த்தி போர்ச்சுக்கல் 3-வது இடம்
 
ரஷியாவில் பிபாவின் கான்பெடரேசன் கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் சிலி, ஜெர்மனி, போர்ச்சுக்கல் மற்றும் மெக்சிகோ அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதில் மெக்சிகோ, போர்ச்சுக்கல் அணிகள் தோல்வியடைந்தன.

3-வது இடத்திற்கான போட்டியில் இரு அணிகளும் இன்று மோதின. தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். போர்ச்சுக்கலுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை ஆட்ரியன் சில்வா கோலாக்க தவறினார். அதன்பின் இரு அணி வீரர்களுக்கும் பல வாய்ப்புகள் கிடைத்தன. இதை இரண்டு அணி கோல் கீப்பர்களும் சமார்த்தியமான தடுத்தார்கள்.

201707022111419205_pepe04-s._L_styvpf.gi

ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் மெக்சிகோ வீரர் அடித்த பந்தை போர்ச்சுக்கல் வீரர் நேட்டோ காலில் பட்டு ஓன் கோலாக மாறியது. இதனால் மெக்சிகோ 1-0 என முன்னிலைப் பெற்றது.

பின்னர் போர்ச்சுக்கல் வீரர்கள் பதில் கோல் அடிக்க முயற்சி செய்தனர். ஆனால் பலன் அளிக்கவில்லை. 90 நிமிடத்தில் போர்ச்சுக்கல் கோல் அடிக்கவில்லை. காயம் மற்றும் ஆட்டம் தடை ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது. அதை பயன்படுத்தி 91-வது நிமிடத்தில் கேப்டன் பெபே கோல் அடித்தார். இதனால் 1-1 என போட்டி சமநிலையில் முடிந்தது.

நாக்அவுட் போட்டி என்பதால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. 104-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி ஆட்ரியன் சில்வா கோல் அடித்தார். இதனால் போர்ச்சுக்கல் 2-1 என வெற்றி பெற்று 3-வது இடத்தை பிடித்துள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/07/02211140/1094147/Portugal-secure-third-spot-in-Confed-Cup-with-win.vpf

  • தொடங்கியவர்
சிலியை வீழ்த்தி முடிசூடியது ஜேர்மனி
 

image_fbccae1e7a.jpg

ரஷ்யாவில் இடம்பெற்றுவந்த, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் கூட்டமைப்புகளின் (கொன்பெடரேஷன்) கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில், சிலி அணியை வீழ்த்திய ஜேர்மனி, சம்பியன்களாக முடிசூடிக் கொண்டது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இறுதிப் போட்டியில், உலகச் சம்பியன்களான ஜேர்மனியும் கோப்பா அமெரிக்கத் தொடரின் சம்பியன்களான சிலியும் மோதியிருந்தமை, பலத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. எனினும், பலமான சிலி அணியை வீழ்த்திய ஜேர்மனி, தமது முதலாவது கூட்டமைப்புகளின் கிண்ணச் சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிக் கொண்டது.

போட்டியில் சிலி அணி, தமது வழக்கமான, அதி வேகமான விளையாட்டை வெளிப்படுத்தியது. குறிப்பாக அர்துரோ விடாலால், சிறப்பான பந்துப் பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கோல்களைப் பெறுவதற்கு, ஏனைய வீரர்கள் தவறினர்.

ஆரம்பத்திலிருந்தே, இரு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் விளையாடியிருந்தன. அலெக்ஸிஸ் சான்செஸ், தனக்குக் கிடைத்த பந்தை, கோல் கம்பத்துக்கு வெளியே அடுத்திருந்தார். ஜேர்மனி அணி, அதற்குப் பின்னர் உடனடியாக பதிலடி வழங்குவது போலச் செயற்பட்டது.

சிலி அணியின் மத்திய கள வீரரான மர்செலோ டியஸிடம் பந்தைப் பறித்த டிமோ வேர்னெர், அந்தப் பந்தை லார்ஸ் ஸ்டின்டெலிடம் வழங்க, போட்டியின் 20ஆவது நிமிடத்தில், அதை அவர் கோலாக்கினார்.

இரண்டாவது பாதியில் ஜேர்மனி அணி, ஓரளவு தடுப்பாட்டத்தையே வெளிப்படுத்திய நிலையில், சிலி அணியால், அதைத் தாண்டி, கோல்களைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கவில்லை.

இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஜேர்மனி அணி, சம்பியன் பட்டத்தைத் தட்டிக் கொண்டது.

இதில் குறிப்பாக, அதிகளவு வாய்ப்புகள் தவறவிடப்பட்ட போட்டியாக இது அமைந்தது. அதேபோல், காணொளி மூலமான முடிவு மீளாய்வு, இரண்டு முறை பயன்படுத்தப்பட்டது.

ஜேர்மனி அணியின் 21 வயதுக்குட்பட்ட அணி, ஐரோப்பிய 21 வயதுக்குட்பட்டோருக்கான சம்பியன்ஷிப் தொடரில், கடந்த வெள்ளிக்கிழமை சம்பியன் பட்டம் வென்றிருந்தது. தற்போது, இந்தத் தொடரையும், ஜேர்மனி அணி கைப்பற்றியுள்ளது. எனவே, அடுத்த உலகக் கிண்ணத் தொடரில், ஜேர்மனி அணியின் எதிர்காலம், பிரகாசமாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, றியோவில் வைத்து, 3 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பியன் பட்டத்தை வென்ற ஜெர்மனி அணியிலிருந்து, பல வீரர்கள் தற்போது இல்லாத நிலையிலேயே, இந்தச் சம்பியன் பட்டத்தை வென்றமை, முக்கியமானதாக அமைந்தது.

இதேவேளை, மூன்றாவது இடத்துக்கான போட்டியில், போர்த்துக்கல் அணியும் மெக்ஸிக்கோ அணியும் மோதின. இதில், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற போர்த்துக்கல் அணி, மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டது. வழக்கமான நேரத்தில், இரு அணிகளும் தலா ஒரு கோலைப் பெற்றிருந்த நிலையில், மேலதிக நேரத்தில் கிடைக்கப்பெற்ற பெனால்டி மூலமாக, அட்ரியன் சில்வா பெற்ற கோலே, போர்த்துக்கல் அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது.

http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/சிலியை-வீழ்த்தி-முடிசூடியது-ஜேர்மனி/44-199828

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.