Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ? 3 பேரிடம் பேச்சுவார்த்தை

Featured Replies

இலங்கை அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் ? 3 பேரிடம் பேச்சுவார்த்தை

 

 

இலங்­கை அணியின் புதிய பயிற்­சி­யா­ள­ர் நியமனம் தொடர்பில் மூன்று பேரிடம் பேச்­சு­வார்த்தை நடத்தப்பட்டு வரு­வ­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. 

 

அதன்­படி பங்­க­ளாதேஷ் பயிற்­சி­யா­ள­ரான இலங்கை அணியின் முன்னாள் வீரர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வி­டமும், நியூ­ஸி­லாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டீபன் பிள­மிங்­கு­டனும், அவுஸ்­தி­ரே­லிய வீரர் டொம் மூடி­யுடனும் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

hathurusinghe--tom-moody--stephen-flemin

இந்­நி­லையில் இம்­மாத இறு­தியில் சிம்­பாப்வே அணி­யு­ட­னான 5 போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொட­ரிலும் ஒரே­யொரு டெஸ்ட் போட்­டி­யிலும் இலங்கை அணி விளை­யா­டு­கி­றது. இந்தத் தொட­ருக்­காக இடைக்­கால பயிற்­சி­யாளராக தற்­போ­தைய இலங்கை அணியின் களத்­த­டுப்பு பயிற்­சி­யா­ள­ரான நிக் போத்தஸ் நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும், அதே­வேளை ஒருநாள் தொட­ருக்­கான துடுப்­பாட்ட பயிற்­சி­யாள­ராக முன்னாள் வீரர் அவிஷ்க குண­வர்­தன மற்றும் டெஸ்ட் போட்­டிக்­கான துடுப்­பாட்ட பயிற்சியாளராக ஹஷான் திலகரத்ன ஆகியோர் நியமிக் கப்பட வாய்ப்பிருப் பதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

இதேவேளை, இலங்கைக் கிரிக்கெட் அணியின் பயிற்­சி­யா­ள­ராக செயற்­பட்டு வந்த கிரஹம் போர்ட் தன் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­த­தை­ய­டுத்து, புதிய பயிற்­சி­யா­ள­ராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜய­வர்­தன நிய­மிக்­கப்­ப­டலாம் என செய்­திகள் வெளி­யா­கின. 

இந்தத் தக­வலை மறுத்­துள்ள மஹேல தான் மும்பை இந்­தியன்ஸ் அணிக்கு பயிற்­சி­ய­ளிப்­ப­தி­லேயே தற்­போது கவனம் செலுத்­து­வ­தாக தெரி­வித்­துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21263

  • தொடங்கியவர்

இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நிக் போதஸ் நியமனம்

Published by Priyatharshan on 2017-06-27 18:06:00

 

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நிக் போதஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

nic.jpg

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட், பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்திருந்த நிலையில் நிக் போதஸுக்கு இந்த இடைக்கால பயிற்றுவிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த இடைக்கால பயிற்றுவிப்பாளர் பதவி இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நிக் போதஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ், கடமையாற்றி வந்த நிலையில் தற்போது அவர் இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21275

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.