Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாத்மாக்களை புரியாததால்தான் கிட்டுகள் வேறு மொழியில் பேசினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகாத்மாக்களை புரியாததால்தான் கிட்டுகள் வேறு மொழியில் பேசினர்

in செய்திகள், முக்கிய செய்திகள் July 6, 2017

 

Inkaranesan.jpg

மகாத்மாக்களின் அகிம்சை மொழியை சிங்களப் பேரினவாதிகள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்த கொள்ள மறுத்தார்கள். இதனால்தான் ஆயுதப் போராட்டம் கருக் கொண்டது. கிட்டுகள் தோன்றி வேறுமொழியில் பேசத் தொடங்கினார்கள். என்று வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சாவற்கட்டு மகாத்மா மைதானத்தில் நேற்று நடைபெற்ற மகாத்மா முன்பள்ளியின் விளையாட்டு நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கிட்டு முன்பள்ளி என்ற பெயரே இராணுவத்தின் நெருக்குதல் காரணமாக மகாத்மா முன்பள்ளி என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. மகாத்மா காந்தியின் இலக்கும் கிட்டுவின் இலக்கும் ஒன்றுதான். அவரவர் தேசங்களின் விடுதலையே அவர்களின் இலட்சியங்களாக இருந்தது. ஆனால், இருவரும் தங்கள் இலட்சியங்களை அடைவதற்காக ஆட்சியாளர்களுடன் பேசிய மொழி வேறுவேறானது.
தமிழ்மக்களிடையே ஆயுதப் போராட்டம் முளை விட்டதற்கான காரணங்கள் இன்னமும் அப்படியே உள்ளன. அரசாங்கம் இடதுகையில் தூக்கிய கத்தியைத் தனது முதுகுக்குப் பின்னால் மறைத்து வைத்துக் கொண்டே இனி சமாதானம் என்று சொல்லி வலது கையால் எங்களுடன் கைகுலுக்கப் பார்க்கிறது. இதுபற்றி விழிப்புணர்வு எங்களுக்கு இல்லாவிடில் நாம் தொடர்ந்தும் எமாற்றப்படுவோம். ஆயுதங்களை நாம் மீளவும் தூக்க வேண்டாம். ஆனால், ஆயுதப் போராட்டம் நடைபெற்றதற்கான காரணங்களை ஆயுதப் போராட்டத்தின் அளப்பரிய தியாகங்களை யாரும் மறந்துவிடக் கூடாது. எமது இளைய தலைமுறையினரிடம் இவை எடுத்துச் சொல்லப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

http://www.vakeesam.com/மகாத்மாக்களை-புரியாததால.html

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி மகாத்மாவா?

23ம் புலிகேசியின் மாமா மகாத்மாவாக கூட இருக்கமுடியாது.

காந்தி எதில் மகாத்மா? மாமா கூட மகாத்மாவாக முடியும். ஏனெனில் ஒழுக்கமும் கட்டுக்கோப்பும் உடைய மாமா தான் கூட்டிக் கொடுக்கும் பெண்ணைத் தொழில் தருமம் கருதி தொடமாட்டான்.

ஆனால் காந்தி அவ்வாறு ஆக முடியுமா?  

சிறாரை புணர்த்துவிட்டு சத்திய சோதனை என்பதையும்,  மனித விழுமியதின் உன்னதமானதும் கட்டுக்கோப்பானதுமான காதல் உறவையும் எதிர் துருவங்களாக கூட கருதப்படுத்தமுடியாது.

கிட்டு காதல் உறவை கொண்டிருந்தார் அனால் அதில் மயங்கவில்லை.

ஏனையோருக்கான காந்தியின் போதனை பிரம்மச்சாரியம், தனக்கான சோதனைக் களம் சிறாரை புணர்ந்து  பாலியல் முடிச்சுக்களை அவிழ்த்தல் அல்லது ஏனையோருடன் பாலியல் பரிசோதனைகள்.

கிட்டுவின் போதனை நாட்டின் மற்றும் இனத்தின் விடுதலை, வரையறுக்கப்பட்ட பிரம்மச்சாரியம், சோதனைக் களம் சிங்களத்தின் சிம்ம சொப்பனம்.

மதிப்புமிக்க அமைச்சர் வரலாறை நன்றாக, ஆழமாக கற்க வேண்டும்.

அழுத்தத்தின் நிமித்தம் பெயர் மாற்றம் வேண்டுமெனில் அமைதியாக செய்வதே நல்லது.   

இவுண்மைகளை  நான் பறைசாற்றவில்லை. காந்தியே எழுத்தில் துலாம்பரமாக வெளியிடுகிறார்.

I write this in English.

The hounourable minister must raise the following point with Hindian representative.

"Why must one of the oldest, civilised and naturally formed Nation listen to the advice of power-transferred land controllling kleptocracy which itself call a pedophile its father?"

உண்மைகள் எப்போதும் கசக்கும்.

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.