Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக கிரிக்கெட்டில் இனம், நிறம், மதம் மற்றும் சாதி வெறி! – ஹரிகரன்

Featured Replies

தமிழக கிரிக்கெட்டில் இனம், நிறம், மதம் மற்றும் சாதி வெறி! – ஹரிகரன்

iyer

TNCA மற்றும் BCCI எனும் இரு அமைப்புகளுமே அரசுகளால் நடத்தப்படாத அமைப்புகள், அதுவும் இந்தியா முழுமைக்கும் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் BCCIக்கு கீழான மாநில அமைப்புகள் அனைத்துமே எந்த அரசின் கீழாகவும் இல்லாமல் தன்னிச்சையாக நடைபெறும் தனியார் அமைப்புகளே. ஆனால் இவைகளே இந்தியாவின் அடையாளமாகவும், மாநிலங்களின் அடையாளமாகவும் போட்டிகளில் பங்கேற்கின்றன நம் மக்களும் இதைப் பார்த்து குதுகலிக்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியில் 4 பேரை தவிர மற்ற அனைவரும் வெளிமாநில வெளிநாட்டினை சேர்ந்தவர்கள், ஆனால் அது தான் இங்கே சென்னைக்கான அணியாக கட்டமைக்கப்பட்டு நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ் என்று பாட்டு பாடிக் கொண்டிருக்கிறோம். சரி விளையாட்டை விளையாட்டாக பார்ப்போம் அதில் வேறு எதையும் தேடவேண்டாம் என்று யோசித்தால் அங்கு நடபெரும் இனவெறி, நிறவெறியை நாம் இப்படி கண்டுகொள்ளாமல் போக முடியாது.

TNCA எனும் அமைப்பின் மேல் மட்டத்தில் இருந்து கீழ் மட்டம் வரை அது ஆரம்பித்த காலமான 1938ல் எப்படி தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கம் இருந்ததோ அதே நிலையில் தான் இருக்கிறது இன்று வரை. அலுவலர்கள் மட்டுமல்ல விளையாட்டு வீரர்களுக்கும் இந்த தகுதி இருந்தாக வேண்டும், தமிழக அணிக்கு விளையாட கிரிக்கெட் விளையாடத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது, காலில் விளையாட்டு காலணியில் கயிறு இருக்கிறதோ இல்லையோ உடலில் தோளில் இருந்து இடுப்புவரை உருண்டோடும் குறுக்கு கயிறான பூணூல் இருந்தே ஆகவேண்டும். இதை தான் ஜீவா படத்தில் மிகவும் அற்புதமாக இது வரை ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கே தெரிந்த விசயத்தை ஊருக்கும் உலகிற்கும் தெரியும் வகையில் போட்டுடைத்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

india_tN

இதுவரை தமிழ் நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திய அணிக்காக விளையாடிவர்கள் மொத்தம் 21 பேர் இதில் எத்தனை பேர் என்ன சாதியினர் என்று பார்த்தோம் என்றால் அத்தனையும் அய்யர், அய்யங்காராகவே இருப்பார்கள். இதில் அய்யர்களை விட அய்யங்கார்களே அதாவது பார்த்தசாரதிகளும் சேசாத்ரிகளுமே அதிகமாக இருப்பார்கள். ஸ்ரீ வைஷணவத்தை பின்பற்றும் அய்யங்கார்களின் ஆதிக்கமே இங்கு அதிகம். இந்த 21 பேரில் இரண்டு பேர் தான் அய்யர் அல்லது அய்யங்கார் இல்லாதவர்கள். சரி அப்படியென்றால் மற்ற சாதியினர் கிரிக்கெட் விளையாடுவதில்லையா என்று கேட்டால் விளையாடுகிறார்கல் ஆனால் அவர்களுக்கான வாய்ப்பு என்பது எவ்வளவு நன்றாக விளையாடினாலும் பாராட்டு என்ற பெயரில் முதுகை தடவி பூணூல் இருக்கிறதா என்று பார்த்து தான் கொடுக்கப்படும்.

உதரணமாக அனிருதா நமது முன்னாள் இந்திய கிரிகெட் வீரர் ஸ்ரீகாந்த் அவர்களின் மகன், வருங்கால விளையாட்டு வீரர்கள் என்று தெர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்த்ரேலியாவில் நடந்த போட்டிக்கு அனுப்பப்பட்டார் இந்தியா சார்பாக விளையாட, அப்பொழுது தேர்வு குழு உறுப்பினாராக இருந்தவர் ஸ்ரீகாந்து, இதை குறித்து வினாக்கள் எழுப்பப்பட்ட பொழுது கூட இருந்த தேர்வுகுழு உறுப்பினர்கள் மூவரும் ஸ்ரீகாந்தை காப்பாற்றினார்கள். ஆனால் அனிருத் விளையாடிய போட்டிகளும் அவர் அதில் எடுத்த ரன் மற்றும் விக்கெட்டுகளை விட அதிகமாக எடுத்தவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவது இல்லை. அதாவது ஒரு கிரிக்கெட்டர் டிவிசன்களில் விளையாடி தனது திறமையை நிருபிக்க வேண்டும். இதற்கு 1, 2, 3A, 3B, 4A, 4B, 5A, 5B, 6A, 6B என்று 10 டிவிசன்கள் இருக்கிறது, இதில் 135 அணிகள் உள்ளன இவற்றில் விளையாடும் வீரர்கள் அவர்களின் திறமைக்கு ஏற்ப ஒவ்வொரு டிவிசனிலும் விளையாடி முதல் டிவிசன் லீக் அணிகள் 12ல் தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாட வேண்டும். முதல் டிவிசனில் விளையாடுபவர்களே தமிழ்நாடு அணியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய அளவிளான ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாட தமிழ்நாடு சார்பாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ரஞ்சி கோப்பையில் அவர்களின் விளையாட்டுத் திறனின் அடிப்படையிலேயே இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இப்படி முதல் டிவிசன் லீக்கில் விளையாடும் வீரர்களில் இருந்து ரஞ்சிக் கோப்பை போட்டிக்கு தேர்ந்து எடுக்கப்படும் வீரர்கள் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே அதாவது பூணூல் போட்டவர்களாகவே இருப்பார்கள். மற்றவர்கள் எவ்வளவு நன்றாக விளையாடினாலும் ரஞ்சி போட்டிகளுக்கு அனுப்ப மாட்டார்கள், அப்படியும் திறமையை நிறுபித்து ஒரு சிலர் வந்தால் அவர்களை அணியில் எடுத்துக் கொள்வார்கள் ஆனால் ரஞ்சிக் கோப்பை போட்டிகள் அனைத்திலும் அனுமதிக்காமல் சப்ஸிடியுட்டுகளாக அமர வைக்கப்படுவார்கள், வருடத்திற்கு இரண்டு போட்டிகளில் அனுமதிக்கப்பட்டால் அதிகம். ரஞ்சிப் போட்டிகளில் விளையாடும் பொழுது இங்கே நடக்கும் முதல் டிவிசன் லீக் போட்டிகளிலும் கலந்து கொள்ள இயலாமல் இருப்பார்கள். அடுத்த வருடம் ரஞ்சி அணி தேர்ந்தெடுக்கும் பொழுது அதிக ரன் அடிக்கவில்லை என்று போட்டிகளில் விளையாடமலேயே தேர்வுக் குழுவினரால் ஆடாமலேயே தோற்கடிக்கப்படுகின்றனர், இப்படி பலரின் வாழ்க்கையை குதறியிருக்கிறார்கள்.

பிகே தர்மா

dharma

இரண்டு வருடம் முன்பு தனது 14 வயதில் டிவிசன் லீக் போட்டிகளில் விளையாட ஆரம்பித்து மிக வேகமாக முதல் டிவிசன் லீக் போட்டிகளில் விளையாடியவர் பிகே தர்மா என்பவர் தற்கொலை செய்து கொண்டார். இவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர், லட்சுமிபதி பாலாஜியின் உடல் நிலை சரியில்லாத பொழுது தமிழகத்துக்கு விளையாடினார். ஆனால், அதற்கு பிறகு நிலையாக தமிழக அணியில் இவரை வைத்துக் கொள்ளவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் அதுவும் காலையில் ஒரு போட்டியில் விளையாடிவிட்டு வீட்டுக்கு திரும்ப வந்தவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவரின் தற்கொலைக்கு காதல் என்று சொன்னார்கள் ஆனால் அதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை, 21 வயதில் ஒரு அருமையான விளையாட்டு வீரர் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

..

 

 

அடுத்து சடகோபன் ரமேஷ் மற்றும் திருகுமரன் என்ற கென்னி இருவரும் சம காலத்தில் விளையாடியவர்கள் 1999 ஜனவரியில் சடகோபன் ரமேஷ் இந்திய அணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு 2001 செப்டம்பர் வரையில் இருந்தார். இவர் என்ன விளையாடினார் என்பது நமக்கு நன்றாகவே தெரியும், ஆனால் 1999 நவம்பரில் இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் திருகுமரன். ஆனால் 2000 ஜூனுக்கு பிறகு திரும்பவும் இந்திய அணிக்கு தேர்ந்து எடுக்கப்படவில்லை அவருக்கான விளையாடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. தமிழகத்திற்காக 2007ம் ஆண்டு வரை விளையாடிவிட்டு அதாவது ஆடாமல் தோற்றுவிட்டு தனது ஓய்வை அறிவித்து விலகினார். இவரின் திறமையை உணர்ந்து அமெரிக்கா தனது தேசிய அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமித்துள்ளது, தற்பொழுது அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

முதலில் ஸ்ரீகாந்த் அவர்களின் மகன் அனிருதாவை பற்றி பார்த்தோம் அனிருதா 1987ம் ஆண்டு பிறந்தவர். இவருக்கும் 1990 ஆண்டு பிறந்தவரும் தமிழ்நாட்டிற்காக விளையாட அனுமதிக்கப்பட்டவருமான வேலூரை சேர்ந்த தாராபக் பெய்க் என்பவரின் போட்டிகளின் வித்தியாசங்களை பார்த்தாலே தெரியும், இருவரும் ஏறத்தால ஒரே காலகட்டத்தில் தான் முதல் டிவிசன் போட்டிகளில் விளையாடி வருகின்றனர் ஆனால் அனிருதா ஸ்ரீகாந்த் ரஞ்சி போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார், தாராபக் பெய்க் பாலி உமர் கோப்பை போட்டிகள் போன்றவற்றில் விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தாலும் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் அனுமதிக்கப்பட வில்லை. தற்பொழுதைய ரஞ்சி கோப்பை போட்டிக்காக அறிவிக்கப்பட்ட அணியிலும் பெய்க் பெயர் இல்லை. ரஞ்சிக்கோப்பைக்கான 14 பேர் கொண்ட அணியில் கிட்டத்தட்ட 10 பேர் பார்ப்பனர்களே, ஆனால் ஒரே ஒரு சந்தோசம் முதன் முதலாக இரண்டு கிருத்துவர்களுக்கு இடம் கொடுத்துள்ளனர். ஆமாம் தமிழ்நாடு கிரிக்கெட்டில் சாதியம் பார்ப்பது மட்டுமில்லை மதமும் தொடர்ந்து கடைபிடிக்கப் படுகிறது, தமிழ்நாட்டில் இருந்து இஸ்லாமியர்களோ கிருத்துவர்களோ இது வரை இந்திய அணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டதில்லை.

anibaik

இப்படி மிகச்சிறந்த பூணூல் திறமையுடைய அணியாக இருக்கும் தமிழ்நாடு கிரிக்கெட், 1935ல் இருந்து நடக்கும் ரஞ்சி கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டுள்ளது, ஆனால் தமிழக அணி இது வரை இரண்டு முறை தான் கோப்பையை வென்றுள்ளது. 1987-88ம் ஆண்டு போட்டியில் தான் கடைசியாக ரஞ்சிக் கோப்பையை தமிழ்நாடு பூணூல் அணி கைப்பற்றியது அதற்கு பிறகு 26 வருடங்களாக பூணூல் அணி கோப்பைக் கனவு மட்டுமே கண்டு கொண்டுள்ளது. மும்பை அதிகபட்சமாக 40 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது கிரிக்கெட்டை பொறுத்தவர மும்பை, டில்லி, கொல்கத்தாவிற்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு அணி உள்ளது ஆனால் ராஜஸ்தானிடம் எல்லாம் மரண அடி வாங்கி ஓடி வந்தது தான் பூணூல் அணியின் வரலாறு.

இந்திய அணியிலும் பார்ப்பனியம் காப்பாற்றப்பட்டாலும் அவ்வப்பொழுது கபில்தேவ், அசாருதீன், தோனி போன்றவர்களால் பார்ப்பனியம் உடைக்கப்படுகிறது ஆனால் தமிழ்நாட்டில் பார்ப்பனியம் தனது கால்களை ஆழமாகவும் நல்ல அகழமாகவும் வேரூண்றி நிற்கிறது, இதை வேருடன் புடுங்கி எரிய வேண்டிய தேவை உள்ளது. நிறவெறியை பாவித்த தென்னாப்ரிக்க அணி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஒதுக்கப்பட்டது போல் ஒதுக்கப்பட வேண்டும். ஜிம்பாபுவே கிரிக்கெட் அணியில் இருப்பது போல் இடஒதுக்கீடு முறை கொண்டுவர வேண்டிய தேவை TNCAவில் இருக்கிறது. அல்லது குஜராத்தில் மூன்று கிரிக்கெட் கழகங்கள் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் நமக்கான ஒரு கிரிக்கெட் கழகத்தை தொடங்க வேண்டியது உள்ளது TNCA ஆவாளுக்கு ஆனதாக தொடரட்டும் நம்மவர்கள் விளையாடும் வகையில் நமக்கான ஒரு கிரிக்கெட் கழகத்தை தொடங்க வேண்டும்.

தரவுகள்:

தமிழ்நாட்டில் விளையாடும் லீக் அணிகள்

http://www.tnca.in/LiveSite/allteams.aspx

தமிழ்நாட்டில் லீக்கில் விளையாடும் வீரர்கள் பற்றி அறிய

http://www.tnca.in/LiveSite/PlayerListMain.aspx

தமிழ்நாட்டின் 2013-14 ரஞ்சி கோப்பை அணி

http://www.wisdenindia.com/cricket-series/ranji-trophy-2013-14/Tamil-Nadu-FC-squad/59

தர்மாவின் தற்கொலை பற்றிய செய்தி

 http://www.thehindu.com/news/cities/chennai/failure-cant-be-reason-for-cricketers-suicide/article3516627.ece

 

http://tamilsnow.com/?p=24835

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.