Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம் கட்சிகளை நம்பியது, நாங்கள்செய்த மிகப்பெறும் தவறு – நாமல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் முஸ்லிம்களை தங்களோடு வைத்திருக்க முஸ்லிம் கட்சிகளை நம்பியிருந்தமையே தாங்கள் செய்த மிகப் பெரும் தவறு. தற்போது அத் தவறை சரி செய்து முஸ்லிம் மக்கள் விடயங்களை முஸ்லிம் அரசியல் வாதிகளை விடுத்து நேரடியான பொறிமுறைகள் அமைத்து கையாண்டு கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார். நேற்று இடம்பெற்ற இளைஞசர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.. நேற்று 11-07-2017ம் திகதி கூட்டு எதிர்க்கட்சியின் இளைஞ்சர் மாநாடு இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்ட முஸ்லிம் இளைஞர்கள், முஸ்லிம் மக்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை கவிழ்க்க இடம்பெற்றுக்கொண்டிருந்த சூழ்ச்சியை அறியாது அதில் அகப்பட்டுக் கொண்டதாக மன வேதனையோடு கருத்துக்களை பரிமாறினார்கள்.

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ.. அன்று எமது ஆட்சிக் காலத்தில் முஸ்லிம் கட்சிகள் நகமும் சதையும் போல எம்மோடு ஒட்டிக்கொண்டிருந்தன. முஸ்லிம் கட்சித் தலைவர்கள் இலங்கை முஸ்லிம் மக்களுக்கு தேவையான அபிவிருத்திகளை வந்து கேட்பார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ எந்த வித சிறு தயக்கமுமின்று அவற்றை செய்து கொடுத்தார். இன்று முஸ்லிம் பகுதிகளை நன்கு அவதானித்து பாருங்கள். எந்த ஜனாதியின் ஆட்சிக் காலத்திலும் இடம்பெறாத அபிவிருத்திகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் இடம்பெற்றுள்ளதை அறிந்துகொள்ளலாம். இதன் காரணமாக முஸ்லிம் மக்கள் எங்களோடு எப்போதும் இருப்பார்கள் என நினைத்துக் கொண்டு எமது செயற்பாடுகளை அமைத்து கொண்டிருந்தோம்.

முஸ்லிம் தலைமைகள் கடந்த ஜனாதிபதித் தேர்தல் வந்ததும் தேர்தலின் இறுதி காலப்பகுதியில் திடீர் என ஓட்டம் பிடித்தார்கள். மிகக் குறுகிய காலத்தினுள் எங்களால் எதுவும் செய்ய முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளச் செய்திருந்தார்கள். முஸ்லிம் கட்சித் தலைமைகள் சில தற்போது எம்மை விமர்சித்து கொண்டிருப்பதாக அறிய முடிகிறது. இன்று விமர்சித்து கொண்டிருப்பது அவர்களது அமைச்சுப் பதவிகளை தக்க வைத்துக்கொள்வதற்காகும். அவர்கள் வெளியில் எங்களை விமர்சித்து கொண்டிருந்தாலும் அவர்களுக்கு எமது ஆட்சி பற்றி நன்றாகவே தெரியும். அவர்கள் தங்களுக்கு பலரிடம் நெருக்கமானவர்களிடம் வேறு வழியின்றியே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியை எதிர்க்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறியதாக பலர் எம்மிடம் கூறிக் கொண்டிருக்கின்றனர். இன்று நாங்கள் முஸ்லிம்களை முஸ்லிம் அரசியல் வாதிகளை கொண்டு நெருங்காது எம்மை நேரடியாக சந்திக்கும் பொறி முறைகளை அமைத்து செயற்படுகின்றோம். பல முஸ்லிம் அமைப்புக்கள் எம்மை வந்து சந்தித்துள்ளன.

எந்த வித சிறு எதிர்பார்ப்புமின்று பல முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் எம்மோடு இணைந்துள்ளதை பார்க்கும் போது அன்று முஸ்லிம் கட்சித் தலைமைகளை முஸ்லிம்களை தங்களோடு வைத்திருக்க நம்பியமை எவ்வளவு தவறு என்பதை உணர்த்துகின்றது. அரசியலமைப்பு மாற்றம் உட்பட பல விடயங்களில் முஸ்லிம்கள் சிறிதும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக முஸ்லிம் மக்களோடும் முஸ்லிம் சிவில் அமைப்புக்களோடும் இணைந்து செயலாற்றிக் கொண்டிருக்கின்றோம். கடந்த காலங்களில் இடம்பெற்ற தவறுகள் போன்று மீண்டும் எந்த வித சிறு தவறுகளும் இடம்பெற்று விடாது என கூறினார்.

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=148377 .

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.