Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணற்காடு சம்பவம்: அறிக்கையிட யாரும் வரவில்லை

Featured Replies

மணற்காடு சம்பவம்: அறிக்கையிட யாரும் வரவில்லை
 

image_cd57a0b0a0.jpgமணற்காட்டுப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால், இளைஞனொருவன் பலியான சம்பவம் தொடர்பில், அறிக்கையிடுவதற்கு, அந்த கன்டர் ரக வாகனத்தின் சாரதியாகப் பணியாற்றியவரோ அல்லது அந்தவாகனத்தில் பயணித்த நபர்களில் யாரேனும் ஒருவரோ, செவ்வாய்க்கிழமை வரையிலும் முன்வரவில்லையென, பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

பருத்தித்துறை, மணற்காட்டுப் பகுதியில், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி பயணித்த கன்டர் ரக வானத்தின் மீது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், துன்னாலையைச் சேர்ந்த 24 வயதான யோகராசா தினேஸ் என்ற இளைஞர் பலியானார்.  

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்ற, பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிடம், சம்பவத்தில் பலியான இளைஞனின் உறவினர்கள் உள்ளிட்ட 11 பேர், அறிக்கையிட்டுள்ளனர் என்று அப்பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மெவன் டி சில்வா தெரிவித்தார்.  

சட்டவிரோதமான முறையில், மணல் ஏற்றிச்செல்பவர்களை கைதுசெய்வதற்காக, கடந்த 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று சென்றிருந்த வேளையில், பொலிஸாரின் சமிக்ஞையை மீறி, கன்டர் ரக வாகனம் பயணித்துள்ளது. அதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இளைஞர் பலியானார். 

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் அந்த வாகனத்தில், எழுவர் இருந்தனர் என்றும், துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து, சாரதி உட்பட அனைவரும் தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இந்தச் சம்பவத்தையடுத்து, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரிலேயே பொலிஸ் விசேட விசாரணை பிரிவின் உதவிப் பொலிஸ் அதிகாரி கிங்சிலி குணசேகரவின் தலைமையிலான குழுவொன்று, பருத்தித்துறைக்குச் சென்றுள்ளது.  

அந்தக் குழுவின் விசாரணைகளை தொடர்பில் தேடியறிவதற்கும், விசாரணைக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேவன் டி சில்வா, அங்கு விரைந்துள்ளார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சகல நபர்களிடமும் அறிக்கையைப் பெற்றுக்கொண்டு, பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஆலோசனைகளை விசாரணைக்குழுவுக்கு, தான் வழங்கியுள்ளதாக பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மேவன் டி சில்வா தெரிவித்தார். 

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மணற்காடு-சம்பவம்-அறிக்கையிட-யாரும்-வரவில்லை/71-200493

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.