Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐநா குழுவினர் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

Featured Replies

ஐநா குழுவினர் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

un.jpg

இலங்கைக்கு ஐந்து நாள் பயணமாக வருகை  தந்துள்ள ஐநாவின் மனித உரிமைகளுக்கும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்குமான சிறப்பு பிரதிநிதி பென் எமர்ஸன் நேற்று புதன்கிழமை  மாலை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையிலான நீதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்ட நடைமுறையில் மனித உரிமை நிலைமைகள் எவ்வாறு இருக்கின்றது என்பதை நேரடியாகக் கண்டறிவதற்காகவே பென் எமர்ஸன் இலங்கைக்கு வந்துள்ளார்.

முதலில்  பென் எமர்ஸன் தலைமையிலான ஐநா குழுவினர், அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அங்கு எட்டு வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் இந்தக் கைதிகளின் மனித உரிமைகளைப் பாதித்திருக்கின்றதா, நிலைமை என்ன என்பதை அவர்கள் கேட்டறிந்துள்ளனர்.

அதேவேளை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரையும் ஐநா விசேட பிரதிநிதி வவுனியாவில் சந்தித்து அவர்களின் நிலைமைகளைக் கேட்டறிந்துள்ளனர்.

விசேடமாக சிறை வாழ்க்கையின் பின்னர், அவர்களுடைய வாழ்க்கை நிலைமைகள் மனித உரிமை நிலைமைகள் என்பன குறித்து அவர்கள் கேட்டறிந்துள்ளனர்.

அதன் பின்னர், வவுனியா மேல் நீதிமன்ற மண்டபத்தில் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரீ.என்.ஏ.மனாப் மற்றம் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் மாவட்ட நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகளையும் பென் எமர்ஸன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் என, பிபிசி செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்தச் சந்திப்பின்போது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளில் மனித உரிமை நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிகின்றது.

இதேவேளை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் என கோரி, வவுனியாவில் நீதிமன்றத்திற்கு அண்மையில் ஏ9 வீதியில் 139 ஆவது நாளாக சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் ஐநா விசேட பிரதிநிதி பென் எமர்ஸன் தலைமையிலான குழுவினரைச் சந்திப்பதற்கு முயற்சித்த போதிலும். அது கைகூடவில்லை.

மேலும் நாளை வெள்ளிக்கிழமை   வரையில் இலங்கையில் தங்கியிருக்கும் பென் எமர்ஸன் தமது இலங்கை பயணத்தின்  இறுதியில் கொழும்பில் செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://globaltamilnews.net/archives/32706

  • தொடங்கியவர்

அர­சி­யல் கைதி­க­ளு­டன் ஐ.நா. நிபு­ணர் சந்­திப்பு

அவர்­க­ளின் நில­மை­கள் குறித்து ஒவ்­வொன்­றா­கக் கேட்­டறிவு

 
அர­சி­யல் கைதி­க­ளு­டன் ஐ.நா. நிபு­ணர் சந்­திப்பு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியையும் சந்தித்து கலந்துரையாடினார்.
 

ஐக்­கிய நாடு­கள் சபை­யின் சிறப்பு அறிக்­கை­யா­ளர் பென் எமர்­சன், அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லைக்கு நேற்­றுப் பய­ணம் மேற்­கொண்டு அங்கு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளைச் சந்­தித்­தார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தின் பாதிப்பு, சிறைச்­சா­லை­யில் மேற்­கொள்­ளப்­ப­டும் சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பி­லும் அவர் கேட்­ட­றிந்­தார்.

மனித உரி­மை­கள் மற்­றும் தீவி­ர­வாத எதிர்ப்பு தொடர்­பான ஐ.நா சிறப்பு அறிக்­கை­யா­ளர், பென் எமர்­சன், ஐந்து நாள்­கள் பய­ண­மாக இலங்­கைக்கு வந்­துள்­ளார். வவு­னி­யா­வுக்கு அவர் நேற்று மதி­யம் வருகை தந்­தார்.

வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­த­ரன் தலை­மை­யி­லான குழு­வி­னரை அவர் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னர். இந்­தந் சந்­திப்பு வவு­னியா நீதி­மன்­றக் கேட்­போர் கூடத்­தில் நடை­பெற்­றது. வடக்கு மாகா­ணத்­தின் மாவட்ட நீதி­ப­தி­க­ளும் இந்­தச் சந்­திப்­பில் கலந்து கொண்­ட­னர்.

சந்­திப்­பின் பின்­னர் அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லைக்கு பென் எமர்­சன் குழு­வி­னர் சென்­ற­னர். அங்கு தனி­யான அறை­யில், தமிழ் அர­சி­யல் கைதி­க­ளான எம்.சுலக்­சன், பி.அர­விந்­தன், என்.உமர்­கா­தப், ஆர்.ஜெகன், என்.சிவ­லிங்­கம் ஆகி­யோ­ரைத் தனித் தனி­யா­கச் சந்­தித்­துப் பேசி­னர்.

பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்­தால் ஏற்­பட்­டுள்ள பாதிப்பு, கைதி­க­ளின் மன­நிலை, அவர்­கள் மீதான சித்­தி­ர­வதை தொடர்­பில் அவர் தக­வல்­க­ளைத் திரட்­டி­னார்.
புத்­த­கக் கட்­டுக்­களை தலை­மேல் வைத்து கொட்­டன்­க­ளால் அடித்து துன்­பு­றுத்­தி­யமை உள்­ளிட்ட பல்­வேறு சித்­தி­ர­வ­தை­கள் தொடர்­பில் அர­சி­யல் கைதி­கள் அவ­ரி­டம் எடுத்­துக் கூறி­யுள்­ள­னர்.

இவ்­வாறு சித்­தி­ர­வதை மேற்­கொண்டு பல­வந்­தப்­ப­டுத்தி குற்­ற­ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் பெறப்­பட்­ட­தை­யும் அவர்­கள் தெரி­வித்­த­னர். இப்­படி பெறப்­பட்ட வாக்­கு­மூ­லத்தை அநு­ரா­த­பு­ரம் நீதி­மன்­றம் ஏற்­றுக் கொள்­கின்­ற­மை­யும் சிறப்பு அறிக்­கை­யா­ள­ரி­டம் அர­சி­யல் கைதி­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.

“அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தன்­னைக் கொலை செய்ய முயற்­சித்த தமிழ் அர­சி­யல் கைதியை பொது­மன்­னிப்­பில் விடு­தலை செய்­தி­ருந்­தார். கடந்த காலங்­க­ளில் கிளர்­சி­யில் ஈடு­பட்ட மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யி­ன­ருக்கு பொது­மன்­னிப்பு வழங்­கப்­பட்­டது. அவர்­கள் விடு­விக்­கப்­பட்­ட­னர்.

எமது பிரச்­சினை தற்­போது அர­சி­யல் மயப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. ஆகவே அர­சி­யல் கொள்கை முடிவு எடுத்து எம்மை விடு­விக்க வேண்­டும்” என்று தமிழ் அர­சி­யல் கைதி­கள் சார்­பில் சிறப்பு அறிக்­கை­யா­ள­ரி­டம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

http://uthayandaily.com/story/11220.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.