Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றுத் தலைமை குறித்துப் பேச ஈபிஆர்எல்எவ்வுக்கு தகுதி உண்டா?

Featured Replies

மாற்­றுத் தலைமை குறித்­துப் பேச ஈபி­ஆர்­எல்­எவ்­வுக்கு தகுதி உண்டா?

சர­வ­ண­ப­வன் எம்.பி. காட்­டம்

 
மாற்­றுத் தலைமை குறித்­துப் பேச ஈபி­ஆர்­எல்­எவ்­வுக்கு தகுதி உண்டா?
  •  
  •  

அர­சி­யல் தலை­மை­யைக் குறை­கூ­று­வ­தற்­கும் மாற்­றுத் தலைமை பற்­றிப் பேசு­வ­தற்­கும் ஈபி­ஆர் எல்­எவ் கட்­சிக்கோ அதன் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­த­னுக்கோ வர­லாற்­றில் எந்­தத் தகு­தி­யா­வது இருக்­கி­றதா?

இவ்­வாறு காட்­ட­மா­கக் கேள்வி எழுப்­பி­யி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன். கூட்­ட­மைப்­பின் மற்­றொரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான சிவ­சக்தி ஆனந்­தன் .

மாற்­றுத் தலைமை குறித்து அண்­மை­யில் தெரி­வித்த கருத்­தைக் கண்­டித்து விடுத்த அறிக்­கை­யில் அவர் கொந்­த­ளிக்­கும் வாதங்­களை முன்­வைத்­துள்­ளார். அவ­ரது ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பிற்கு மாற்­றான தலைமை ஒன்று பற்­றிச் சிந்­திக்க வேண்­டிய காலம் வந்­துள்­ளது என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­தன் அண்­மை­யில் தெரி­வித்­தி­ருக்­கி­றார். கூட்­ட­மைப்­புக்­குள் இருந்­து­கொண்டே அவர் இத­னைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார். அவ­ருக்கோ அல்­லது அவ­ரது கட்­சிக்கோ கூட்­ட­மைப்­பின் தலை­மை­யு­டன் முரண்­பா­டு­கள் இருந்­தால் அத­னைக் கூட்­ட­மைப்­புக்­குள்­ளேயே பேசித் தீர்த்­துக்­கொள்­ள­வேண்­டும். அது­தான் கூட்­டணி தர்­மம்.

அது முடி­ய­வில்லை என்­றால் கூட்­ட­மைப்­பை­விட்டு அவ­ரும் அவ­ரது கட்­சி­யும் வெளி­யே­றிச் சென்று மாற்­றுத் தலைமை குறித்­துப் பேச­வேண்­டும். அதைச் செய்­யும் துணிவு அவர்­க­ளுக்கு ஒரு­போ­தும் கிடை­யாது. அவர்­கள் அப்­ப­டிச் செய்­ய­வும் மாட்­டார்­கள். உள்ளே இருந்­து­கொண்டே கல­கக் குரல் எழுப்­பு­வ­தன் ஊடா­கத் தமது நலன்­க­ளைத் தேடிக்­கொள்­வதே அவர்­க­ளின் அரு­வ­ருக்­கத்­தக்க பாணி.

சிவ­சக்தி ஆனந்­தனோ ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சியோ இவ்­வாறு சபை­கு­ழப்­பித் தனத்­து­டன் நடந்து கொள்­வது இன்று நேற்று நடப்­ப­தல்ல. அவர்­க­ளின் வர­லாறு முழு­வ­தும் அதைத்­தான் அவர்­கள் செய்து வந்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளின் கட்சி வர­லாற்றை நன்கு உற்­றுப் பாருங்­கள் அது புரி­யும்.

அவர்­கள் தமிழ் மக்­க­ளின் விடு­த­லைக்­காக என்று ஆயு­தம் தூக்­கி­னார்­கள். பின்­னர் எந்த மக்­க­ளுக்­காக ஆயு­தங்­க­ளைத் தூக்­கி­னார்­களோ அவர்­க­ளையே சுட்­டுக்­கொன்று ‘மண்­டை­யன் குழு’ என்று பெயர் வாங்­கி­னார்­கள். அந்த மக்­க­ளையே கடத்­தி­னார்­கள், அவர்­க­ளி­டமே கொள்­ளை­ய­டித்­தார்­கள். இவை­யெல்­லாம் விடு­த­லைக்­குத் தேவை­யா­னவை என்று சப்­பைக்­கட்­டுக் கட்­டி­னார்­கள்.

அதா­வது எல்­லாத் தமிழ் இளை­ஞர்­க­ளும் மக்­க­ளுக்­கா­கப் போரா­டப்­பு­றப்­பட்­ட­போது தாமும் அதி­கா­ரங்­க­ளைப் பெற­வேண்­டும் என்­கிற சுய­ந­லத்­து­டன் ஆயு­தங்­க­ளைத் தூக்­கி­னார்­கள். அத­னால்­தான் அந்த ஆயு­தங்­க­ளைத் தமது மக்­க­ளுக்கு எதி­ரா­கவே பயன்­ப­டுத்தி அதி­கா­ரத்தை நிலை­நி­றுத்­தி­னார்­கள். அவர்­க­ளுக்­குத் தேவை­யாக இருந்­தது எல்­லாம் அவர்­க­ளின் சுய­ந­லத்தை நிறை­வேற்­றிக்­கொள்­வது மட்­டுமே.

அது போகட்­டும், கட்­சிக்­குள்ளே அவர்­கள் என்ன செய்­தார்­கள். ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சிக்­குள் இருந்த மூத்த தலை­வர்­கள் உட்­கட்சி மோதல்­க­ளா­லும் சகோ­த­ரப் படு­கொ­லை­க­ளா­லும் அழிக்­கப்­பட்­ட­போது தங்­க­ளைப் பாது­காத்­துக்­கொண்­டார்­கள். சிவ­சக்தி ஆனந்­த­னும் அவ­ரது தலை­வர் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ர­னும் தரு­ணம் வந்­த­போது தலை­மைப் பத­வி­க­ளைக் கைப்­பற்­றிக்­கொண்­டார்­கள். ஆக கட்­சிக்­குள்­ளும் அவர்­க­ளின் குறி­யாக இருந்­தது தமது சுய­ந­லனை நிறை­வேற்­றிக்­கொள்­ளும் திட்­டம் மட்­டுமே.

அதன் பின்­னர் எந்த மக்­க­ளின் விடு­த­லைக்கு என்று புறப்­பட்­டார்­களோ அந்த மக்­களை நட்­டாற்­றில் கைவிட்­டு­விட்டு இந்­தி­யா­வின் பின்­னால் சென்­றார்­கள். ஏன்? இந்­தி­யா­வி­ட­மி­ருந்து நலன்­க­ளை­யும் பணத்­தை­யும் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக. அந்­தப் பருப்பு இனி­மேல் வேகாது என்று தெரிந்­த­போது இலங்­கைக்கு ஓடி­வந்து கொழும்பு அர­சு­டன் சேர்ந்­து­கொண்­டார்­கள். சிங்­கள அர­சு­க­ளி­டம் இருந்து நலன்­க­ளைப் பெற்­றுக்­கொள்­வதை உறு­திப்­ப­டுத்­த­திக்­கொண்­டார்­கள். அதற்­கா­கத் தமிழ் மக்­க­ளை­யும் அவர்­க­ளின் ஒரே போராட்ட இயக்­க­மாக இருந்த விடு­த­லைப் புலி­க­ளை­யும் காட்­டிக்­கொ­டுப்­ப­தற்­கும் அவர்­கள் தயங்­க­வில்லை.

அப்­போ­தும் விடு­த­லைப் புலி­க­ளுக்­க◌ான மாற்று இயக்­கம் என்­று­தான் இவர்­கள் கூறிக்­கொண்­டார்­கள். எந்த தமிழ் மக்­க­ளுக்­கா­கப் போரா­டப் புறப்­பட்­டார்­களோ அதைக் கைவிட்டு, தமது நோக்­கத்­தைத் தூக்கி எறிந்­து­விட்டு, தமிழ் மக்­க­ளுக்­கா­கப் போரா­டிய இயக்­கத்­துக்கு மாற்று இயக்­கம் என்­றார்­கள். அதன் பய­னாக அவர்­க­ளுக்­குச் சிங்­கள அரசு அமைச்­சில் ஒரு பத­வி­யைக் கொடுத்­தது. பெற்­றுக்­கொண்டு பய­ன­டைந்­தார்­கள். அதா­வது அவர்­கள் உயர்த்­திய மாற்­றுக் குரல் அவர்­க­ளுக்கு ஓர் வரு­மா­னம் தரக்­கூ­டிய பதவி கிடைத்­தது.

வடக்கு மாகாண சபை­யி­லும் அது­வே­தான் நடந்­தது. அவர்­கள் மாற்­றுக் கட்சி, மாற்­றுத் தலைமை என்று குரல் எழுப்பி ஒரு­வாறு அமைச்­சுப் பத­வி­யைப் பெற்­றுக்­கொண்டு விட்­டார்­கள். சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ர­னின் தம்பி இப்­போது அமைச்­ச­ரா­கி­விட்­டார். அவர்­கள் மாற்று அணி எனக் கிளம்­பி­ய­தன் பயனை அடைந்­து­விட்­டார்­கள்.

இப்­ப­டி­யே­தான் வர­லாறு முழு­மைக்­குமே அவர்­கள் நடந்­து­கொண்­டார்­கள். ஒரு கொள்கை அணி­யில் சேர்­வ­தும் பின்­னர் தங்­கள் நல­னுக்­கா­கப் பிரி­வ­தும், அதன் பின்­னர் தாம் முன்­னர் கொண்ட கொள்­கைக்கு முற்­றி­லும் முர­ணான பாதை­யில் பய­ணிப்­ப­து­டன் அது­தான் மாற்று என்று சொல்­வ­தும் அதற்­கூ­டா­கத் தங்­கள் சுய­ந­லன்­க­ளைப் பூர்த்தி செய்­து­கொள்­வ­தும் அவர்­க­ளின் வாடிக்கை, வழமை.
அதை­யே­தான் இப்­போ­தும் செய்­கி­றார்­கள். தமிழ் மக்­கள் இத­னைச் சரி­யா­கப் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

ஈபி­ஆர்­எல்­எவ் கட்­சி­யும் சிவ­சக்தி ஆனந்­த­னும் மாற்­றுத் தலைமை என்று கேட்­ப­தும் மாற்று அணி என்று பேசு­வ­தும் தமிழ் மக்­க­ளின் மீதுள்ள அக்­க­றை­யின் கார­ண­மாக அல்ல என்­பதை விளங்­கிக்­கொள்­ள­வேண்­டும். தமக்­குத் தேவை­யா­ன­வற்றை, தமது நலன்­களை நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்­கா­கவே அவர்­கள் இப்­ப­டித் தகி­டு­தத்­தம் ஆடு­கி­றார்­கள்.

இன்­னும் சொல்­லப்­போ­னால், நாளைக்கு கொழும்பு அர­சில் அமைச்­சுப் பதவி கிடைக்­கும் என்­றால் அத­னை­யும் பெற்­றுக்­கொண்டு அது­தான் மாற்று அணி, மாற்­றுத் தலைமை என்று அவர்­கள் தமி­ழர்­களை முட்­டாள்­க­ளாக்க முயல்­வார்­கள்.

எனவே தமிழ் மக்­கள் இது தொடர்­பில் விழிப்­பு­டன் இருந்து, இவ்­வாறு மாற்­றுத் தலைமை, மாற்று அணி என்று பேசு­ப­வர்­க­ளின் தலை­யில் இறுக்­கிக் குட்டி அவர்­க­ளைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குள் அடக்க ஒடுக்­க­மாக இருக்­கச் செய்­ய­வேண்­டும். இல்­லை­யேல் அவர்­கள் தமிழ் மக்­க­ளின் தலை­யில் மிள­காய் அரைத்­து­விட்டு தங்­கள் நலன்­க­ளைப் பார்த்­துக்­கொண்டு போய்­வி­டு­வார்­கள்.

ஈபி­ஆர்­எல்­எவ் கட்சி மாற்று அணி பற்­றிப் பேசியே மாகாண அமைச்­சுப் பதவி ஒன்­றைப் பெற்­றுக்­கொண்­ட­போ­தும் அது போத­வில்­லைப் போலுள்­ளது. அத­னால்­தான் சிவ­சக்தி ஆனந்­தன் மீண்­டும் மாற்­றுத் தலைமை பற்­றிப் பேச முனைந்­தி­ருக்­கி­றார். அது பற்றி மக்­கள் விழிப்­பு­டன் இருக்­க­வேண்­டும்.
இவ்­வாறு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஈ.சர­வ­ண­ப­வன் தெரி­வித்­துள்­ளார்.

http://uthayandaily.com/story/11402.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.