Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெனிஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் விக்னேஷ்வரனுக்கு கடிதம்

Featured Replies

டெனிஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் விக்னேஷ்வரனுக்கு கடிதம்

 

டெனிஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு தமிழீழ விடுதலை இயக்கம் விக்னேஷ்வரனுக்கு கடிதம்
 

தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தாவினால் வட மாகாண முதலமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகத் தெரிவித்து வட மாகாண ஆளுநரிடம் சமீபத்தில் கையளிக்கப்பட்ட கடிதத்தில் வேறு சில உறுப்பினர்களோடு சேர்ந்து, தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர் பா.டெனிஸ்வரன் கையெழுத்திட்டமைக்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்சியின் நிலைப்பாட்டிற்கு புறம்பாகவும் மாறாகவும் பா.டெனிஸ்வரன் செயற்பட்டுள்ளார் என்பதால் கட்சியின் அமைப்பு விதிகளின் பிரகாரம், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சி தீர்மானித்துள்ளதாகவும் தமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வட மாகாண சபையில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதற்கான சகல தகுதிகளையும் அவர் இழந்துவிட்டிருப்பதாக கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், டெனிஸ்வரனை அமைச்சரவையில் இருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், அவருக்குப் பதிலாக தமிழீழ விடுதலை இயக்கத்தினால் பரிந்துரைக்கப்படும் வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரை அமைச்சராக நியமிக்குமாறு கோருவதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

http://newsfirst.lk/tamil/2017/07/107318/

 

 

 

விளக்கம் கோரிய தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு விதிகளை அனுப்பக்கோரி பா.டெனிஸ்வரன் கடிதம் 

 

 

விளக்கம் கோரிய தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு விதிகளை அனுப்பக்கோரி பா.டெனிஸ்வரன் கடிதம் 
 

வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகத்தினால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வட மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பா.டெனிஸ்வரன் கையெழுத்திட்டதன் மூலம், அவர் அங்கம் வகிக்கும் கட்சியின் அங்கீகாரம் இல்லாமல் தன்னிச்சையாகவும் கட்சிக்கு மாறாகவும் செயற்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கட்சியின் அமைப்பு விதிகளின் பிரகாரம், பா.டெனிஸ்வரனுக்கு எதிராக தமிழீழ விடுதலை இயக்கம் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கான காரணங்களை அவர் எழுத்து மூலம் இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ந.ஶ்ரீகாந்தாவினால், வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்திற்கு அவர் பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

தங்களால் கோரப்பட்டதற்கு அமைவாக விளக்கங்களை இரு வாரங்களுக்குள் அனுப்பி வைக்க தீர்மானித்தேன். இருப்பினும், நான் கடந்த 2013 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தல் முடிவடைந்த காலம் தொடக்கம் இன்று வரை பல தடவைகள் எமது கட்சியின் தலைமையிடம் கட்சியின் யாப்பு மற்றும் ஒழுங்கு விதிகளைத் தருமாறு கேரியிருந்தேன். எனினும் இதுவரையில் கிடைக்கவில்லை.

 

இது தொடர்பில் பல தடவைகள் கட்சியின் தலைமைக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமை அதிருப்தியையும் பல சந்தேகங்களையும் ஏற்படுத்துவதாக அமைகின்றது.

அடிப்படை உரிமை கிடைக்கும் வரையிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற எந்த ஒரு கட்சியும் தமது கட்சி சார்ந்த சுயநல அரசியலில் ஈடுபடாமல் ஒற்றுமையாக செயற்பட வேண்டுமென்ற அடிப்படையிலேயே எனது அனைத்து செயற்பாடுகளும் இன்றுவரை இருந்து வருகின்றது.

 

என வட மாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தனது பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கட்சியின் அமைப்பு விதிகளுக்கமைவாக விளக்கமளிப்பதற்கு, கட்சியின் அமைப்பு விதிகளை ஒரு வாரத்தினுள் தனக்கு கிடைக்குமாறு செய்யுமாறும் பா.டெனிஸ்வரன் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

http://newsfirst.lk/tamil/2017/07/விளக்கம்-கோரிய-தமிழீழ-வி/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.